தொடரும் தோழர்கள்

வியாழன், அக்டோபர் 29, 2015

சிக்கன் பிரியாணி! 1

உபேந்த்ரா வளர்ந்து வரும் வங்கியின் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட மதராஸ் மண்டலத்திற்கு பொது மேலாளராக 1980ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றார். அப்போது அந்த மண்டலத்தில் 75 கிளைகள் இருந்தன. இந்த வங்கி பெரிய வங்கி களுடன் போட்டியிடும் அளவிற்கு வளர முடியாமல் போனதற்கு பல காரணங்கள் உள்ளன. அவைகளை களைந்து மாநில அளவில் குறைந்த பட்சம் 6வது இடத்தையாவது பிடிக்க வேண்டும் என்ற நோக்குடன் நிறுவப்பட்ட புதிய அலுவலகம் இது. 


உபேந்த்ரா கெட்டிக்காரர் தான். ஆனால் இதற்கு முன்னால் அவர் வகித்த பதவிகள் வியாபார அபிவிருத்தியை சார்ந்தவை அல்ல. வங்கியின் கேப்பிட்டல் மற்றும் வைப்பு நிதிகளின் கணிசமான பகுதிகளை இருப்பு வங்கி (RBI) முடக்கி விடும். 80களில் இருந்த எஸ்.எல்.எர்., சி.ஆர்.ஆர், விகிதங்கள் கிட்டத்தட்ட 40  சதவிதங்களை தாண்டி விடும். சுருக்கமாக, 100 ரூபாய் வைப்பு நிதி கிடைத்தால் வங்கி 60 ரூபாய்களைத் தான் கடனாக கொடுக்க முடியும் எஞ்சிய 40 ரூபாய்களை இருப்பு வங்கி ரிஸ்கில்லாத அரசாங்க முதலீடுகளில் முடக்கி விடும். (இதில் வங்கியில் ரொக்கமாக இருக்கும் பணமும் அடக்கம்) வாடிக்கையாளரின் நலமும் இந்த முறையால் காக்கப்படும். பெரும்பாலான வங்கிகளில் இந்த நுட்பமான வேலைகளை துல்லியமாக பணியாற்ற பம்பாயில் தனி அலுவலகங்களை அமைக்கும். அத்தகைய பிரத்யேக அலுவலகத்தில் தலைமை பதவியேற்று சக்கைப்போடு போட்டவர் உபேந்த்ரா. 

மதராஸ் மண்டலம் இதற்கு முன்பு ஆந்திரா மண்டலத்தின் கண்காணிப்பின் கீழ் முடங்கி கிடந்தது. கடன் வசதிகளை அவரகளின் சம்மதத்துடன் தான் வழங்க முடியும். கிளை மேலாளருக்கு இந்த கடன் வழங்கும் அதிகாரம் கூட மண்டல மேலாளருக்கு இல்லை. இந்த மந்த நிலையை மாற்றத்தான் புதிய மண்டலங்கள் அதிக அதிகாரங்களுடன் உருவாகின. தற்பொழுது மிகப் பெரிய கடன்களுக்கு மட்டுமே ஆந்திரா அதிகாரிகளை அணுகினால் போதும். (நம் சிக்கன் பிரியாணி கதைக்கு இந்த வங்கியின் நடை முறையைப் பற்றி இவ்வளவு அறிந்து கொண்டால் போதும்).


80களில் வங்கிக் கணக்குகள் ஜனவரியில் தொடங்கி டிசம்பரில் முடியும். கணினிள் இல்லாத காலம் அது. வியாபார இலக்குகளை கிளை மேலாளர்கள் டிசம்பருக்குள் எட்ட வேண்டும். பதவி உயர்வு நல்ல போஸ்டிங் இத்யாதிகளுக்கு வியாபார அபிவிருத்தி ஒரு முக்கிய காரணி. 


நமது நாயகன் (இல்லை இல்லை உத்தம வில்லன்) நாமக்கல் கிளையின் மேலாளர் நரசிம்மன். சாத்வீகமான குடும்பத்தில் பிறந்தவர். மனைவி நாமகிரி. ஆச்சாரமிக்கவர். பூஜை

புனஸ்காரங்களைத் தவறாமல் செய்வார். நாமகிரி தூய உள்ளத்தால் அவர்கள் இல்லம் தெய்வம் வாழும் வீடாக திகழ்ந்தது.

உபேந்த்ரா பார்ப்பதற்கு S.V.ரங்காராவ் மாதிரி கௌரவமாக தோற்றம் அளிப்பார். பறந்த நெற்றி உயரமான தோற்றம் கண்ணாடி அணிந்த கண்கள். அவரது தோற்றத்தை பொலிவூட்டும். ஆனால் சில சமயங்களில் அகெளரவமாக நடந்து கொள்வார். (இந்த கதையில் அவருக்கு GuestRole தான்) தன் திறமையை மற்றவர்கள் ஆச்சர்யப்படக் கூடிய அளவில் வெளிப்படுத்தும் ஆற்றலும் திறமையும், உபேந்த்ரா பெற்றிருந்தார். 


சுந்தர் என்ற அதிகாரியை, தனக்கு முந்தைய மண்டல மேலாளரின் பரிந்துரைப் பேரில் நம்பிக்கைக்கு பாத்திரமான இடத்தில் வைத்துக் கொண்டார். வளர்ச்சியின் குறியீடுகளை கணக்கீட்டு அலசுவதில் சிறப்பான தேர்ச்சி பெற்றவர் சுந்தர். அவர் முழுத் திறமையும் காட்டி மேலாளர் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்படுத்த திறமையாக செயலாற்றினார். சுந்தரை உற்றுப்பார்த்தால் பாதாள பைரவி N.T.ராமாராவ், சாயல் தோன்றி மறையும். எடுப்பான நாசி. அகலமாக நெற்றி. கண்ணாடி போட்டால் சிவப்பு பாக்யராஜ். 


அசோகன் என்பவரை மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமித்தார். நல்ல பர்சனாலிட்டி. மடிப்பு கலையாத முழுக்கைச் சட்டையை நன்கு தைக்கப்பட்ட பேண்டில் அழகாக இன்ஸர்ட் பண்ணியிருப்பார். தோல் பெல்ட் இத்தாலியன் ஷூ வெளியில் போனால் ரே-பான் சன் கிளாஸ் ஆபீஸ் பெட்டியில் நாட்போட்ட டைதயாராக இருக்கும். வேண்டியபோது அணிவார். பெண்கள் போல் அந்நிய நாட்டு டால்கம் பௌடர் பெட்டியில் இருக்கும். சென்டின் மணம் சற்று தூக்கலாக வீசும். பேசினால் மெல்லிய பூண்டு வாசனை இழை யோடும்.  சுவிங்கம், சுபாரி மென்று சமாளிப்பார். 
முதலில் பழகுவதற்கு சுவாரஸ்மாக தோன்றினாலும் அந்த நிலை சில நாட்களிலேயே மாறிவிடும் கெட்டிக்காரனின் பொய்யும் புளுகும் எவ்வளவு  நாளைக்கு?


அந்த வருடம் எல்லோரும் திறம்பட செயல்பட்டதால் மண்டலத்தின் ஒட்டு மொத்த வியாபார இலக்குகளில் முக்கிய காரணிகள் நவம்பர் 3வது வாரத்திலேயே எட்டி யாகிவிட்டது. கணக்கர்களின் தொழிற்சங்கமும் ஆபீஸர்களின் சங்கமும் பிரச்சனைகளை கிளப்பாமல் ஒத்துழைத்தனர். அடுத்த வருடத்திய வியாபார இலக்குகளை டிசம்பர் 1 வாரத்திற்குள் நிர்ணயித்துவிட உபேந்த்ரா விரும்பினார். சுந்தர் தேனீ போல் செயல்பட ஆரம்பித்தான். டிசம்பர் 15க்குள் ஒவ்வொரு கிளை மேலாளரையும் நேரடியாக சந்தித்து, நிகழ் வருடத்திய வளர்ச்சியை பரிசீலித்து, அடுத்த வருடத்திய இலக்குகளை நிர்ணயிக்க உத்தேசம். மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இதற்கான மீட்டிங்கள் நடத்த முடிவாயிற்று. இந்த நான்கு நகரங்களை சுற்றி 52 கிளைகள் இருந்தன. 


மீதி 23 கிளைகளின் இலக்குகளை மதராசில் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்வதாக உத்தேசிக்கப்பட்டது. இந்த பணிக்காக உபேந்த்ரா ,சுந்தர், அசோகன்மூவரும் உபேந்த்ரா வின் காரிலேயே பயணிப்பதாக திட்டம். முக்கியமான சில சிறுநகரங்களில் வாடிக்கை யாளர்களையும் சந்திப்பதாக உத்தேசம். கரூர் ,நாமக்கல் ,ஈரோடு ,திருப்பூர், ஆகிய கிளைகள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டன .நாமக்கல் கிளை வாடிக்கையாளர்களின் சந்திப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்த நரசிம்மன் அதை தன் வளர்ச்சிக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். உபேந்த்ராவின் நம்பிக்கைக் குரியவராக ஆக வேண்டும் என்ற தணியாத தாகத்தை தீர்க்க விழைந்தார்.உடனே  எஸ்.டி.டியில் அசோகனை தொடர்பு கொண்டு திட்டம் தீட்டினார். 


ஹலோ யார்அசோகனா, நான் நரசிம்மன் பேசறேன். எப்படி இருக்கீங்க?  நீங்களும் பாஸோட நாமக்கல் வரங்கே இல்லையா”. 

 நானும் சுந்தரும் வரோம். அன்னிக்கு காத்தால திருச்சிலேந்து கரூர், அங்கே 11 மணிக்கு புறப்பட்டு 1 மணிக்குள்ள நாமக்கல்” 

சரி, சரி,

லஞ்ச நாமக்கல்ல வச்சுக்கிற மாதிரி, பிளான் 

ஜமாய்ச்சுடலாம்.

பாஸுக்கு சிக்கன்னா ரொம்ப பிடிக்கும். நாமக்கல்ல பெரிய கோழிப் பண்ணை முதலாளி களெல்லாம் நம்ம வாடிக்கையாளர்களாச்சே. 

எங்க வீட்ல தான் சாப்பாடு. சிக்கன் பிரியாணி எல்லாம் வேணாம்.

அசோகன் பதிலுக்கு ஒரு தனி ரூம்ல சிக்கன் வரவழைச்சு சர்வ் பண்ணிடப்பா. அப்ப தான் அவர் குஷியாயிடுவார்.

முடியாதுப்பா. என் ஓய்ஃப் ஒத்துக்க மாட்டா. வடை பாயாசத்தோட சைவ உணவு தான் அவ பரிமாற விரும்புவா”.

நாமக்கல் சிக்கன்னா அவருக்கு நாக்கு ஊறும்பா.

அந்த சுந்தர் வேற வரான். அவன் அசைவம் எல்லாம் ……

அவனா முக்கியம் உனக்கு என்று கோபத்துடன் சொல்லிவிட்டு அப்பறம் ன் இஷ்டம் என்று அசோகன்முடித்தான்.

இரவு நாமகிரியிடம் இதைப் பற்றி நரசிம்மன் பிரஸ்தாபித்த போது அவள் திரும்பி படுத்துக் கொண்டு தலையணையை நனைத்தாள். பிறகு காலை எழுந்து என்ன இரண்டு நாள் எங்க அண்ணா ஆத்துக்கு அனுப்பிடுங்கோநான் திருப்பூர்லே இருந்துட்டு வரேன். இந்த கண்றாவி எல்லாம் முடிஞ்சவுடனே உங்க வாய்க்கும்  வீட்டுக்கும் டெட்டால் போட்டு சுத்தம் பண்ணிட்டு கூப்பிடுங்க வரேன் என்றாள். நரசிம்மன் புழுவாக நெளிந்தான். அதே சமயம் பதவி உயர்வு என்ற கேரட் சிக்கனாக மாறி குச்சியில் தொங்க அதை குதிரையில் பறந்து துரத்தினார். 


----தொடரும்……..

26 கருத்துகள்:

 1. செம ஸ்டார்டிங்க்
  விழுந்துள்ள நாட் அற்புதம்
  தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு

 2. நரசிம்மன் கோழி பிரியாணியை உபேந்திராவிற்கு ‘படைத்தாரா?’ அவருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்ததா? என அறிய காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. விறுவிறுப்பாய் இருக்கிறது அய்யா? அடுத்து என்னாகும் என ஆவலை தூண்டுது! அனுபவ கதையாய்யா! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் அனுபவம்;கொஞ்சம் கற்பனை!
   நன்றி பூபாலகிருஷ்ணன்.!

   நீக்கு
 4. சிக்கன் பிரியாணி உண்ண மட்டுமல்ல , பதவி உயரவும் பயன்படுமோ?

  பதிலளிநீக்கு
 5. சிக்கன் பிரியாணியைத் தொடர்கின்றோம்....

  கீதா: சாப்பிடுவதற்கல்ல....அந்தச் சிக்கன் பிரியாணி என்ன சாதித்தது என்று அறிய...

  பதிலளிநீக்கு
 6. எப்படி சமாளித்தார்? அறிய ஆவல் அதிகரிக்கிறது! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
 7. குதிரை எதையோ சிம்பாலிக்கா சொல்லுதே ,சீக்கன் பிரியாணி கண்ணுக்கு எட்டியும் வாய்க்கு எட்டாதோ :)

  பதிலளிநீக்கு
 8. கதையை விட வர்ணனையை அதிகம் ரசித்தேன் ஐயா ஸூப்பர் பிரியாணி தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 9. சிக்கல் புரிகிறது. சிக்கன் என்ன ஆச்சு என்று பார்க்கத்......


  .

  தொடர்கிறேன்! :))

  பதிலளிநீக்கு
 10. ஆவலோடு தொடர்கிறேன் அய்யா!
  த ம 9

  பதிலளிநீக்கு
 11. வடை பாயாசம் நல்ல உணவு தானே..?
  என்ன ஆகும் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு