தொடரும் தோழர்கள்

வெள்ளி, அக்டோபர் 23, 2015

இதுக்கும் மேல என்ன வேணும்?!மனசே சரியில்லை.

என்ன செய்வதென்று புரியவில்லை

மின்னஞ்சல் கணக்கைத் திறந்தேன்

உருப்படியாக எதுவும் இல்லை

மின்னஞ்சல் குப்பைகளைத் திறந்தேன்


ஆகா!

எனக்கு வீட்டுக் கடன்,மகிழ்வுந்து வாங்கக்கடன்,சும்மாக் கடன்(!) அதோடு கட்டணம் இல்லாமல் கடன் அட்டை எல்லாம் வழங்க நாலைந்து வங்கிகள் விருப்பம் தெரிவித் திருந்தன.எவ்வளவு மதிப்பு நமக்கு!

கொஞ்சம் தேறியது மனம்

கோகாகோலா லாட்டரி,ஏதோ வேறு லாட்டரியில் இரண்டு கோடி வென்றிருப்பதாகத் தகவல்;அதைத் தவிர யாரோ வெளிநாட்டுப் பணக்காரர் எனக்காக 10 கோடி வேறு விட்டுச் சென்றிருக்கிறாம்!  ஆகா  வேறு என்ன வேண்டும்!

இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சி!

சில வேலை வாய்ப்பு நிறுவனங்கள் எனக்கான நல்ல வேலை காத்திருப்பதாகச் சொல்லி யிருக்கிறார்கள்.சிலர் வீட்டிலேயே இருந்து சம்பாதிக்கவும் வழி சொல்கிறார்களாம். 

வாழ்க்கை நம்பிக்கை நிறைந்ததுதான்!

கடைசியாக நாலைந்து தனியான பெண்கள் என் விவரங்களல் கவரப்பட்டு என்னைச் சந்திக்க விரும்புகினறனராம்!

ஓ!வாழ்க்கை எவ்வளவு இன்பமயமானது!

இதுக்கும் மேல என்ன வேணும்?!


(இது கூட ஒரு மின்னஞ்சலின் தழுவல்தான்)

32 கருத்துகள்:

 1. மின்னஞ்சலின் தழுவல் சற்றே யோசிக்கவைக்கும் போலுள்ளது.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் அய்யா! இதுக்க. மேல என்ன வேண்டும்! மனக்குப்பைகளால் சிலர் நிம்மதியில்லாமல் தவிப்பாங்க! மின்னஞ்சல் குப்பைகளால் நல்லது நடந்திருக்கே அனுபவி அய்யா அனுபவிங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது போன்றை மின்னஞ்சல்கள் வாடிக்கையாகி விட்டன பூபகீதன்
   நன்றி

   நீக்கு
 3. ஹா.... ஹா.... ஹா... ஸ்வீட் எடுங்க... கொண்டாடுங்க!

  பதிலளிநீக்கு
 4. அது ஏனுங்க எனக்கு மட்டும் இந்த மாதிரி ஒண்ணும் நடக்கமாட்டேங்குது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் வேண்டும்என்றால் ஃபார்வர்ட் பண்ணுகிறேன்!
   நன்றி ஐயா

   நீக்கு
 5. பொழுது போகவில்லை என்றால் மின்னஞ்சலைத் திறந்தால் போதும் போல. ஆனால் அந்த இன்மயமான நேரம் எல்லாம் தற்காலிகம் தான் என்பது தங்களைப் போன்றோருக்கு தெரியாதா என்ன?

  பதிலளிநீக்கு
 6. ஹ...ஹா... ஹ...ஹா... இப்போது தான் உங்களுக்கு இப்படி வருகிறதா....?

  பதிலளிநீக்கு
 7. என்ன ஐயா சொல்கிறீர்கள்..:0

  அம்மாடியோவ்.. இப்படியெல்லாமா மின்னஞ்சல்கள் வருகிறது.!

  யோசிக்க வேண்டியிருக்கிறதே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெல்லாம் அழித்து விட்டுப் போக வேண்டிய்துதான்!
   நன்றிம்மா

   நீக்கு
 8. ---எல்லாமே மின் அஞ்சலில் வரும்போது...
  இதுக்கும் மேல என்ன வேணும்?!ன்னு கேட்டா.... இந்த மாத போன் பில் மட்டும் கட்ட வேண்டும் என்பேன் அய்யா...

  பதிலளிநீக்கு
 9. உங்க வயசுக்கே இப்படின்னா..எங்கள மேரி பொடியன்களுக்கு எப்படி இருக்கும்..? என் ப்ரோபைல் படத்தை பாத்துட்டு கண்ணாலம் பண்ணிக்கலாமான்னு வெருப்பேத்துறாங்க வெளி நாட்டு பொண்ணுங்க மை லார்ட்...!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க என்ன வாலிபன்னு நினைப்பா?வளர்ந்த பையன் இருக்கான்ல?! :))
   நலந்தானே கக்கு!
   நன்றி

   நீக்கு
 10. உண்மைதான் ஐயா! இப்படி சில மின்னஞ்சல்கள் நமக்கு சில்லறை சந்தோஷத்தை தருவதில் முந்திக்கொள்கின்றன! முதலில் போட்ட கமெண்ட் மொபைல் மூலம்! இது கணிணி மூலம்! நன்றி!

  பதிலளிநீக்கு
 11. ஆகா
  இதுபோன்ற மின்னஞ்சல்கள் வரத் தொடங்கிவிட்டதா
  தம+1

  பதிலளிநீக்கு
 12. சுவாரஸ்யமான பகிர்வு. எங்களுக்கும் வருகிறது. முதல் வேலையாக குப்பைக் கூடைக்குள் தள்ளிவிடுகிறோம்! :)

  பதிலளிநீக்கு
 13. வணக்கம்
  ஐயா

  கவனம் தேவை ஐயா இப்படி மின்னஞ்சல் வந்தால் த.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 14. இந்த மாதிரி வருகிறதென்றால் ,நீங்க பெரிய மனுஷன் ஆகிட்டீங்க அர்த்தம் :)

  பதிலளிநீக்கு
 15. ஹும் எனக்கும் கூட இப்படியெல்லாம் வருகின்றது சார். யாஹூவில் நிறைய வரும். ஜிமெயிலில் கூட பணம் கேட்டு வரும். நமக்கு கோடி விழுந்துள்ளது என்று வரும். பெண்கள் கூப்பிடுவது எல்லாம் யாஹூவில் தான் ஜிமெயிலில் இல்லை...பரவாயில்லை சார் இந்த வயதிலும் உங்களுக்கு அனுப்பியிருக்கின்றார்களே அதான் அந்தக் கடைசி வரிகள் வாழ்க்கை இன்பமானதுதான்...அஹஹஹ் ஹும் நான் பொண்ணுன்றதுனால எனக்கு இப்படி அழைப்புகள் இல்லை போலும்..ஹஹ்ஹ

  கீதா

  பதிலளிநீக்கு