தொடரும் தோழர்கள்

செவ்வாய், அக்டோபர் 06, 2015

சாக்லெட் பெண்கள்-2மாலினி வாசற்கதவைத் தாழிட்டாள்

அந்த அறைக்குள் நுழைந்தாள்

சுற்றும் முற்றும் பார்த்தாள்.

எதுவும் கண்ணில் படவில்லை.

பீரோ கதவின் பிடியை அமுக்கிப் பார்த்தாள்.

பீரோ பூட்டப்பட்டிருந்தது.

மேசைக்கு வந்தாள்

மேலறையில் அதைப்பார்த்தாள்

(எனக்கு மனசுக்குள் ஒரு சின்ன ஆசை;இங்கே தொடரும் போட்டு விடலாமா என்று!)

ஒரு சாக்லெட் டப்பா!

அதை எடுத்தாள்.

வெளிநாட்டு சாக்லெட்.

டப்பாவின் மேலுறை பிரிக்கப்பட்டே இருந்தது.

வியாபரத்துக்காக ஒரு சாம்பிளுக்காக வாங்கியிருக்கிறாரோ என நினைத்தாள்.

எவ்வளவு தேடியும் வேறு எதுவும் கிடைக்கவில்லை.

அறைக்கு வெளியே வந்து கதவைச் சாத்தினாள்.............

இரவு மணி 10

தொலை பேசி ஒலித்தது.

சுமா எடுத்தாள்

ரகுநந்தன்
“சுமா நான் வர இன்னும் ரெண்டு மனி நேரம் ஆகும்போலிருக்கிறது””

சாக்லெட் வாங்கிட்டீங்களா?”

இல்லம்மா;சீட்டை விட்டு எந்திரிக்கவே முடியலை.நாளைக்குக் காலையில ஸ்கூலுக்குப் போகும்போது வாங்கிடலாம்”

தொலை பேசி இணைப்பைத் துண்டித்த சுமா யோசித்தாள் 
காலையில் எழுந்த்தும் சாக்லெட் எங்கே என்றுதானே கேட்பாள் மைத்ரி 

என்ன சொன்னாலும் சமாதானம் ஆக மாட்டாளே என்ன செய்வது.

வெளியே சென்றாள்.

குடியிருப்புக் காவலாளியிடம் தெருக்கோடிக் கடை திறந்திருக்கிறதா என்று பார்க்கச் சொன்னாள்  

இல்லை

அவளுக்குச் சமீபத்தில் அறிமுகமான அவளது முகநூல் நண்பியின் ஞாபகம் வந்தது
பலனியைக் கையில் எடுத்தாள்.

....தொடரும்27 கருத்துகள்:

 1. பீரோவுக்குள்ளேதான்
  டுவிஸ்ட் இருக்குன்னு பட்சி சொல்லுது
  பார்ப்போம்

  பதிலளிநீக்கு
 2. என்னமோ நடக்குது? மர்மமா இருக்குது?

  தொடர்கிறேன் அய்யா!

  பதிலளிநீக்கு
 3. நான் சொன்னதுபோல் குழந்தை மைத்ரி கேட்ட இன்பசைபண்டத்திற்கும் மதன் லாலின் வணிகத்திற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. காத்திருக்கிறேன் சரி பார்க்க!

  பதிலளிநீக்கு
 4. நான் சொன்னதுபோல் குழந்தை மைத்ரி கேட்ட இன்பசைபண்டத்திற்கும் மதன் லாலின் வணிகத்திற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. காத்திருக்கிறேன் சரி பார்க்க!

  பதிலளிநீக்கு
 5. என்னமோ ஏதோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு....ஐயையோ இது வேறு அல்ல...தொடரின் மர்ம முடிச்சு மூளையில பத்திக்கிச்சுனு...சுமா செல்லுவது மாலினி விட்டிற்கோ...அவர்கள் வீட்டில் அந்த பீரோ, சாக்கலேட்டில்தான் ஏதோ இருக்கு....

  பதிலளிநீக்கு
 6. 2-ம் முடிச்சு போடுற மா3 தெரியுது.... பார்ப்போம்

  பதிலளிநீக்கு
 7. தொடர்ந்து மர்மமா சரி சரி தொடர்கிறேன் ..!

  பதிலளிநீக்கு