தொடரும் தோழர்கள்

சனி, அக்டோபர் 31, 2015

சிக்குன்னு சிக்கிக்கிச்சு சிக்கன்!



இரவு மணி ஏழு
சென்னைபித்தனைத் தொலைபேசியில் அழைத்தார் பார்த்தசாரதி
கணினி முன் இருப்பதாகச் சொன்னார் செ.பி.
அப்போது பார்த்தசாரதிக்குக் குதிரை கனைக்கும் சத்தம் போல் கேட்டது
என்ன கனைப்புச் சத்தம் கேட்கிறது, நீங்கள் குதிரைவளர்க்கிறீர்களாஅல்லது பக்கத்தில் வேறு யாராவதா?
நாய்,பூனை,ஆடுதான் ஒருவர் வளர்த்தார் அது அனைவரும் அறிந்ததுதானே!
சாப்பிட்டாகி விட்டதா
சாப்பிடும் நேரம்தான்
இட்லிதானே?!
சிரித்தார் செ பி.

பார்த்தசாரதி தூங்கும்போது பாதித் தூக்கத்தில் குதிரை கனைக்கும் சத்தம் கேட்டது. சிக்கன் பிரியாணிக் குதிரைதான்!கனைத்தது;கட்டுக்கடங்காமல் குதித்தது

நீதானா அது?ஏன் கனைக்கிறே?
மீண்டும் கனைப்பு,இம்முறை குச்சியில் கட்டிய காரட்டைப் பார்த்து.
நீ எதுவும் பேசாம அடம் பிடிச்சா,நான் தேசிங்கு ராஜனைக் கூப்பிடப்போகிறேன்
”யாரு?நம்ம வாத்தியாரையா?அவர் நிம்மதியா கடற்கரையில் உறங்கட்டும்” குதிரை பேசிற்று!

”சரி!நான் இந்தக்காரட்டை எத்தனை நாள்தான் பாத்துக்கிட்டே இருப்பேன்.தள தளன்னு ஃப்ரெஷா இருக்கு.அவுத்துக் கொடுங்க.நீங்க வேற டைரக்சன் பிழை பண்ணியிருக்கீங்க!கேரட் சிக்கனாக மாறி  குச்சியில் தொங்க”ன்னு எழுதிட்டு கேரட்டைத் தொங்க விட்டுச் சிக்கனைத் தனியாப் போட்டிருக்கீங்க!எழுத்துக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லையே” என்றது

அப்படிப் பண்ணச் செலவாகுமே;நாங்க என்ன ஷங்கரா? என்றார்

சரி நானே பண்ணிக்கிறேன்;முதல்ல கேரட்டைகுடுங்க என்று வாங்கிக் கடித்து விழுங்கியது,எப்புடி? கேரட்,குச்சி பாலிசி நொறுங்கிப்போச்சா என்று கெக்கெலித்தது.இப்ப சிக்கனை எடுத்துக் கயிற்றிலே கட்டுங்க என ஆணையிட்டது 

அபச்சாரம்!அநாச்சாரம்! சிக்கனையெல்லாம் கையாலேயே தொட மாட்டேன்!

ஓ நீங்களும் அந்த நாமகிரி டைப்பா?சிக்கன் பிரியாணின்னு அருமையா கதை மட்டும் எழுதலாமோ?எல்லாம் ஹிட்டுக்காகத்தானே?

பின்ன துட்டா கிடைக்கப் போகுது?

சரி!நீங்க கண்ணை மூடிக்குங்க.நான் பத்து எண்ணிட்டுப் பெரிசாக் கனைப்பேன்;அப்பத் திறங்க என்றது

கண் திறந்தால் எல்லாம் மாயா!

காலை எழுந்தவுடன் செ பி யிடம் சொன்னால் விழுந்து விழுந்து சிரித்தார்

பிறகு மாலை 5 மணிக்குப் போன் செய்து புதுப்பதிவு  பாருங்க,அசந்து போயிடுவீங்க என்றார்

அந்த மாயக் குதிரையின் விஷமம் திகைக்க வைத்தது!



டிஸ்கி:மேலாளர் நரசிம்மன் பேசாமல் வெங்காயத்தையே(சாம்பார்) குதிரை முன் கட்டித் தொங்க விட்டிருக்கலாம்..சிக்கனைக் கட்டி(காட்டி) எதுவும் நடக்கவில்லை

பகவானே!மீண்டும் பார்த்தசாரதி!

21 கருத்துகள்:

  1. அடடே கேரட் சிக்கனாக மாறி விட்டதே எல்லாம் மாயா...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    எல்லாம் மாயா.....அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் ஐயா.. த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே ஒன்றாக (சிக்கன்) காண்போமே...!

    :))

    பதிலளிநீக்கு
  4. உங்கள் பதிவுகளுக்கு எப்படித்தான் இந்த திரைப்படத் தலைப்புகள் பொருந்துகிறதோ என எண்ணி வியக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  5. கடைசியில் ,என் நினைப்பு தானா :)

    பதிலளிநீக்கு