தொடரும் தோழர்கள்

வியாழன், அக்டோபர் 15, 2015

என் பதிவுக்குக் கிடைத்த பரிசு!


                                       பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


திரு க.குமாரவேல் அவர்கள்  திரு பார்த்தசாரதி அவர்களின் நண்பர்;அண்டை வீட்டுக்காரர்.  பார்த்தசாரதி சொல்வார் ”அவர்பழகுவதற்கு இனியவர், பார்வைக்கு எளியவர் எந்த விதமான பந்தாவும் இல்லாதவர்” என்று.எனது “இருந்தும் இல்லாத உருவெடுத்தான்” பதிவு பிறந்த விதத்தை அவரிடம் சொல்லிப் படிக்குமாறு கேட்டிருக்கிறார் பார்த்தசாரதி அவர்கள்;படித்து விட்டு அவர் தெரிவித்த கருத்தை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

//நன்றாக இருக்கின்ற அத்தனையையும் கவனித்து உணர்ந்து ரசிக்கின்ற நண்பர் பார்த்தசாரதி அவர்களின் ஊக்கத்தின் பலனாக திரு சென்னைபித்தன் அவர்களினால் ஆக்கம் பெற்ற இப் பதிவு, என் தந்தை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் பாடல் வரிகள் எவ்வாறு பிறர் சிந்தனையைத் தூண்டி பல்வேறான விளக்கங்களயும் பெற வகை செய்கின்றன என்பதை தெளிவாகப் பதிவு செய்துள்ளது,எனது பாராட்டுகள்.//என் பதிவுக்குக் கிடைத்த ஒரு சிறந்த பரிசாக இதை உணர்கிறேன்.


நன்றி திரு.குமாரவேல் அவர்களே

19 கருத்துகள்:

 1. வணக்கம் அய்யா! அவரிடம் பாராட்டுகள் பெற்றமைக்கு வாழ்த்துங்கய்யா! அவர் சொன்னது அத்தனையும் உண்மை மிக்க மகிழ்ச்சி!
  நன்றி அய்யா!!!

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துகள் ஐயா மகிச்சியான விடயம் தொடரட்டும்....

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான பாராட்டு ஐயா! மேலும் பல பெற நானும் வாழ்த்துகிறேன்! உங்களின் சாக்லேட் பெண்களுக்கு நான் ஒரு முடிவு எழுதி உள்ளேன்! வாசித்து கருத்துச் சொன்னால் மகிழ்வேன்! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சுரேஷ்;நீங்கள் சொல்லாவிட்டாலும் உங்கள் பதிவவை நிச்சயம் படிப்பேன் .

   நீக்கு
 4. ஆமாம் இதை விட வேறென்ன பரிசு வேண்டும். வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு

 5. ப(பா)ட்டுக்கோட்டையாரின் புதல்வரே பாராட்டிய பின் வேறென்ன வேண்டும்?

  பதிலளிநீக்கு
 6. ஒரு தீப்பொறி ஊரையே எரிக்கும் என்பார்கள் .ஒரு வரிவிசுவரூபம் எடுத்து வாரிசு வரை சென்று விட்டதே,வாழ்த்துகள்:)

  பதிலளிநீக்கு
 7. அடேடே... வாழ்த்துகள் ஸார். சம்பந்தப்பட்டவர்களே பதிவைப் படித்த செய்தி கேட்பதே சந்தோஷம். அவர்கள் மகிழ்ந்து பதிலும் சொன்னால் பேரானந்தம்.

  பதிலளிநீக்கு
 8. அட! யாரைச் சென்றடைய வேண்டுமோ அவரைச் சென்றடைந்து மீண்டும் பரிசாக வந்தது எத்தனை சந்தோஷம்! வாழ்த்துகள்!!!

  பதிலளிநீக்கு