காலனை உதைத்தவன் முக்கண்ணன்;
காலனைச் சிறு புல்லென மதித்து, காலருகே வா உன்னை மிதிக்கிறேன் என்று அழைத்தவன் பாரதி!
காலனை வெல்ல முடியவில்லை;ஆனால் காலத்தை வென்ற மகாகவிக்கு என் அஞ்சலிகள்.
****************
ஓர் அடர்ந்த காடு.
ஒரு நதி ஆவேசமாக ஓடிக் கொண்டிருக்கிறது
காட்டில் ஒரு மான்.
குட்டியை ஈன்றெடுக்கும் நேரம் நெருங்கி விட்டது.
அருகில் இருக்கும் ஒரு புல்வெளியை அடைந்து
விட்டால் நல்லது என நினைக்கிறது மான்.
அப்போது மேகங்கள் திரள்கின்றன.
வானம் கருக்கின்றது.
பெரிய மின்னல் தாக்கிக் காட்டில் மரங்கள்
பற்றி எரியத் தொடங்குகின்றன
மானுக்குப் பிரசவ வலி எடுத்து விட்டது.
இடது புறம் சிறிது தொலைவில்,ஒரு வேட்டைக்காரன்
தன் துப்பாக்கியுடன் தயாராகிக் கொண்டிருப்பதைக் காண்கிறது.
என்ன ஆகும் அந்த மானுக்கு?
காட்டுத்தீயில் கருகிச் சாகுமா?
வேட்டைக்காரனின் குண்டுக்கு மடியுமா?
வேங்கையின் பசிக்கு உணவாகுமா?
என்ன நடக்கும்?
எதைப்பற்றியும் இப்போது கவலைப்பட முடியாது
அதன் முழு கவனமும் சில விநாடிகளில் வெளிவரப்போகும்
தன் குட்டி மீதுதான்!
அப்போது…..
ஒரு மின்னல் வெட்டி,வேட்டைக்காரனின் பார்வையைப்
பறிக்கிறது
அவன் குறி தவறிக் குண்டு மானைக் கடந்து பாய்ந்து
வரும் புலி மேல் பாய்ந்து அதைக் கொல்கிறது.
மழை கொட்டத்தொடங்குகிறது
அப்பெருமழையில் காட்டுத்தீ அணைகிறதுது!
மான் குட்டியை ஈன்றெடுக்கிறது!
வாழ்க்கையில் இது போன்ற தருணங்கள் வருகின்றன.
முக்கியமான நேரத்தில் நாலாபக்கங்களிலிருந்தும்
புதிய பிரச்சைனைகள் முளைக்கின்றன.
அப்போதைய நமது நோக்கம் எதுவோ அதன் மீது கவனம்
சிதறாது இருத்தல் அவசிய மாகிறது.
சூழ்ந்து வரும் பிரச்சினைகளைத் தீர்க்க முயன்றால்,உடனடி
நோக்கம் நிறைவேறாது போகலாம்.
பிரச்சினைகளும் தீராது.
அந்த மானைப் பாருங்கள்!
அந்த மானைப் பாருங்கள்!
அதற்குத் தெரியும் தப்பி ஓட இயலாது என்று.
அச்சுறுத்தும் சூழ்நிலைகளை மாற்ற முடியாது
என்று
ஏதாவது செய்யப்போய் விளவு நாசத்தில் முடியலாம்.
வாழ்க்கையின் சூறாவளிகளில் நமக்கு உதவ அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை நமக்கும் வேண்டும்.
வணக்ம் ஐயா அற்புதமான விடயத்தை அழகாக இயற்கையோடு பிணைந்து தந்து விட்டீர்கள் மிகவும் அருமை வாழ்த்துகள் அழகிய மான்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குமகாகவியின் நினைவோடு மனந் தொட்ட கதை ஐயா!
பதிலளிநீக்கு//வாழ்க்கையின் சூறாவளிகளில் நமக்கு உதவ அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை நமக்கும் வேண்டும்.//
உண்மைதான்!..
மிக அருமை! வாழ்த்துக்கள்!
த ம 3
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இளமதி
நீக்குஅற்புதம் - கடைசி வரியைத் தவிர.
பதிலளிநீக்குஇல்லை. அப்படி இருந்தால் அவளாகவும் இருக்கலாம். இல்லையா?
இது ஆணாதிக்க சமுதாயம் அப்பாஜி!
நீக்குநன்றி
தன்னம்பிக்கையை மட்டும் தளரவிடக்கூடாது என்பதை சொல்லிச்சென்ற விதம் வெகுவாகக் கவா்ந்தது.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகலா
நீக்குமகாகவி நினைவுப் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் ஐயா
நீக்குஎந்த சூழ்நிலையிலும் நிதானத்தையும் தன்னம்பிக்கையும் இழக்ககுடாது!!! அந்தமான் அழகு நன்றி அய்யா!!!!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பூபகீதன்
நீக்குஎதுவென்றாலும் என்றும் நம்பிக்கை என்றும் வேண்டும்... அருமை ஐயா...
பதிலளிநீக்குநன்றி டிடி
நீக்குசில பயன்தரும் குறிப்புகள் : http://dindiguldhanabalan.blogspot.com/2015/09/Blog-Tips-1-3.html
பதிலளிநீக்குபார்க்கிறேன்
நீக்கு
பதிலளிநீக்குதேசியக் கவியின் நினைவு நாளில் தங்களோடு சேர்ந்து நானும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
பிரச்சினை என வரும்போது தப்பித்து ஓடாமல் எதிர்கொள்ளவேண்டும் என்ற கருத்தை சொல்லும் இந்த நிகழ்வு நமக்கெல்லாம் ஒரு பாடம். பகிர்ந்தமைக்கு நன்றி!
நன்றி ஐயா
நீக்குசில நம்பிக்கைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என் தளத்தில் ஒரு கதைப் போட்டி அறிவித்திருக்கிறேன் வருகை தரவும் பங்கெடுக்கவும் அழைக்கிறேன்
பதிலளிநீக்குபார்க்கிறேன்.வருகைக்கு நன்றி ஐயா
நீக்குUnflinching faith in Almighty !
பதிலளிநீக்குநன்றி வாசு
நீக்குஆஹா... மிக அருமையான கருத்து...
பதிலளிநீக்குநன்றி குமார்
நீக்கு#1998;இதே நாளில் புனே,ராஸ்தாபேட்டை #
பதிலளிநீக்குபாரதி எங்கே இந்த ஆண்டில் இருந்தார் :)
திரு சென்னை பித்தன் புனேவில் தான் பாரதி பற்றி உரையாற்றியதை சொல்கிறார்.
நீக்குபுரியும்படிச் சொல்ல எனக்குத் தெரியவில்லையோ?
நீக்குநன்றி பகவான்ஜி
நீக்குதன்னம்பிக்கை தரும் பதிவு. முகப்புத்தகத்தில் படித்திருக்கிறேன்.....
பதிலளிநீக்குநன்றி வெங்கட்
நீக்குபுனேயில் இருந்தீர்களா ,சொல்லவே இல்லே :)
நீக்குஇன்றைய வலைச்சரத்தில் தங்களின் வலைப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி சபாபதி சார்
நீக்குதன்னம்பிக்கை ஊட்டும் பதிவு சார்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குவலைச்சரம் பார்த்து வந்தேன். தொடர்வேன் சார்!
பதிலளிநீக்குமிக அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநம்பிக்கைதான் வாழ்க்கை அய்யா! ஒரு நல்ல பதிவை தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குமிக அருமை! தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு.,ஒரு நல்ல பதிவை தந்தமைக்கு நன்றி.........
பதிலளிநீக்குஒரு நல்ல பதிவை தந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்கு