தொடரும் தோழர்கள்

சனி, செப்டம்பர் 26, 2015

தனி ஒருவன் - முடிவு!



கிருஷ்ணசாமி அந்த செக்கை மேஜை மீது வைத்து, அதன் மீது தண்ணீர் டம்ளரை பாரமாக வைத்து விட்டு தன் உரையை ஆரம்பிக்கத் தயாரானார்.  

அங்கு நிலவிய பரிபூரண அமைதியைக் கிழித்துக் கொண்டு அவரது கம்பீரமான குரல் அம்மாபெரும் கூட்டத்தின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது.

                 விழாவை அமைப்பதற்கு அரும்பாடுபட்ட குழுவிற்கு நன்றி தெரிவித்து உரையைத் தொடங்கினார்.  தமது 33 வருட உத்யோக அனுபவித்தின்போது தன்னை வெகுவாக பாதித்த சிலபல அனுபவங்களை அழகாக விவரித்தார்.  தனக்கு முன் பேசிய சிலர் தனது உத்யோக வெற்றியின் ரகசியம் எதுவாக இருக்கும் என்று கேள்வி எழுப்பி தங்கள் அனுபவத்தில் கண்ட சில காரணங்களை வரிசைப் படுத்தியதில் பல காரணங்கள் மிகையானவை என தான் எண்ணுவதாகக் குறிப்பிட்டார்.  


பிறகு தன் உத்யோக வெற்றியின் காரணம் என்னவாக இருக்கும் என்று தான் நினைப் பதை விளக்கினார். 

                  அந்தரங்க ஸுத்தி என்பது பொதுப் பணி புரியும் ஒவ்வொருவருக்கும் மிகமிக அவசியம்.  கண்டவற்றை, கேட்டவற்றை, படித்தவற்றை எல்லாவற்றையும் ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவெடுக்க, அந்தரங்க ஸுத்தி தான் ஆதாரம்.  தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற விருப்பு வெறுப்பு இன்றி எந்த ஒரு விஷயத்தையும் எவ்வித முன் தீர்மானமும் இல்லாமல் அணுகினால் அதன் காரணமாகக் கிடைக்கும் தீர்வு அப்பழுக்கு அற்றதாக இருக்கும்.  தன்னிச்சைப்படி காரியங்களை முடித்துக் கொள்ள முயற்சி செய்யாது, எது நியாயமோ அதை அரும்பாடுபட்டாவது கண்டு பிடித்து அதன் வழி நடப்பதே சத்தியம்.  தனது பணி என்ன, அதை எங்கே, எப்படி ஆரம்பித்து, எப்படி முடிப்பது என அறிந்து நியாயம் ஒன்றே குறிக்கோள் என்று செயல் பட்டால், எந்த விதத் தவறும் எந்தக் கணத்திலும் நடக்காது, அதற்கு என் உத்யோக வாழ்க்கையே எடுத்துக் காட்டுஎன்று குறிப்பிட்டார்.  


                 கடமையாற்றும்போது குறுக்கே வரும் ஆசைகளை, பேராசைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு சரியானவைகளையே செய்யும் வெறியுடன் செயல்பட வேண்டும் என்று அவர் ஆணித்தரமாக சொன்னபோது அவர் பேச்சின் தீவிரம், சத்தியம், உண்மை அங்கு கூடியிருந்தவர்களது அந்தரங்களை வெகுவாகத் தொட்டது.  


                தனக்கு அளிக்கப்பட்டுள்ள பண முடிச்சை Staff Benevolent Fundக்கு அப்படியே அளிப்பதாக அறிவித்து அந்த செக்கை endorse செய்து அதற்குரிய திகாரியிடம் அதை சேர்ப்பித்து தன் உரையை முடித்துக் கொண்டார்.


அவரது பேச்சு ஏற்படுத்திய பிரமிப்பலிருந்து விடுபட்ட ஊழியர்கள் கிருஷ்ணசாமி வாழ்க! வாழ்க! என்று நெஞ்சுருகி வாழ்த்தினர்.


                 ஒரு அரை மணி நேரம் மேடையிலேயே அமர்ந்திருந்து தன்னை வாழ்த்த வந்தவர் களையெல்லாம் சந்தித்து நன்றி கூறி விட்டு சுமார் 10 மணி அளவில் வீடு திரும்பினார்.

               இரவு 10.30 மணிக்கு காலிங் பெல் அடிப்பது கேட்டு, வந்தது யாராக இருக்கும் என்ற பரபரப்புடன் மாடியிலிருந்து ஹாலை நோக்கி வந்த கிருஷ்ணசாமிக்கு, ஹாலில் அன்னியச் செலாவணி ஜெனரல் மேனேஜரும், இரண்டாவது உயர் அதிகாரியும் காத்திருப்பது மிக்க வியப்பை அளித்தது.


               அயல் நாடுகளில் நிறுவப்படும் அன்னியச் செலவாணி கம்பெனியில் பணி புரிவதற்கான தேர்வின் முடிவுகளை நாளையே தாங்கள் அறிவிக்க விரும்புவதாக அவர்கள் அறிவித்தது, கிருஷ்ணசாமிக்கு ஓர் ஆனந்த அதிர்ச்சியைத் தந்தது.  நாளை காலை 11 மணிக்கு அதை ஆபிஸில் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டு படுக்கையில் படுத்த போது கிருஷ்ணசாமி மிக்க மன நிறைவடைந்தார்.  


              கிருஷ்ணசாமி நினைத்தது போல் அவர்கள் நல்லெண்ணத்துடன் ஒன்றும் வரவில்லை.  பதவி ஓய்வு பெறுவதற்கு முன் எப்படியும், கிருஷ்ணசாமி வெளி நாட்டிற்கு ஆபிஸர்களை அனுப்புவதற்கான லிஸ்டைப் பற்றி பிரஸ்தாபிப்பார் என்று அவர்கள் நன்கு அறிவர்.  அதை சமாளிக்க ஒரு திட்டம் தீட்டியிருந்தனர்.  


             அவர்களுக்கு எப்படியோ கிருஷ்ணசாமிக்கு டெல்லியிலிருந்து அளிக்கப்பட வேண்டியிருந்த பதவி பற்றிய விவரம் எட்டியிருந்தது.  அரசாங்க அதிகாரியின் உறவினரை லிஸ்டில் சேர்த்தால் தான் அந்த சேர்மன் பதவி இவருக்கு என்ற விவரமும் அவர்கள் அறிவர்.  அந்த விஷயத்தை வைத்து கிருஷ்ணசாமியை தங்களது எண்ணங் களுக்கு பணிய வைக்க ஒரு திட்டம் தீட்டியிருந்தனர்.  அதாவது 20 நபர்களுக்கான லிஸ்டின் முதல் 19 இடங்களை Merit Orderன் படி பூர்த்தி செய்து விட்டு, 20 வது இடத்தை மட்டும் கிருஷ்ணசாமியின் இச்சைக்கு விட்டுவிட வேண்டியது.  ஒரு வேளை கிருஷ்ண சாமி அந்த 20 வது இடத்தை டெல்லி அதிகாரியின் உறவினருக்கு  கொடுப்பாரேயானால் பிறகு அவரை கட்டாயப்படுத்தி தங்களுக்கு வேண்டியபடி லிஸ்டை மாற்றிக் கொள்வது என்று முடிவு செய்திருந்தினர்.  மறு நாள் கிருஷ்ணசாமிக்கு சத்திய சோதனை ஒன்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  


            இந்த விஷயங்களையெல்லாம் அறியாத கிருஷ்ணசாமி தனது கீழ் அதிகாரிகளின் திடீர் இரவு விஷயத்தைப்  பற்றி வியந்தவாறே மறு நாள் காலை அலுவலகத்தை நோக்கி நடந்தார். அவர் இருக்கையில் அமர்ந்த ஐந்து நிமிடங்களுக்கெல்லாம், அந்த லிஸ்டுடன் கிருஷ்ணசாமியின் அறைக்கு வந்தனர்.  லிஸ்டை சமர்ப்பித்தனர்.  20 பேர்கள் இருக்க வேண்டிய லிஸ்டில் 19 பேர்கள் தான் இருப்பது குறித்து, கிருஷ்ணசாமி அவர்களிடம் வினவியபோது, அவர்கள் அசட்டுச் சிரிப்புடன், டெல்லி உயர் அதிகாரியின் உறவினர் பெயரைச் சொல்லி, சேர்மன் விரும்பினால், அந்தப் பெயரை 20 வது பெயராக சேர்த்துக் கொள்ளலாம் என முன் மொழிந்தனர்.  அடி வயிற்றிலிருந்து வந்த சினத்தை கஷ்டப்பட்டுக் கொண்டு அடக்கிக் கொண்டு, பஸ்ஸரை அழுத்தி பியூன் மூலம் இண்டர்வியூ லிஸ்ட் அடங்கிய பைலை எடுத்து வர ஆணையிட்டார். 


           அந்த பைலில் இருந்த Merit Order லிஸ்டின் படி முதல் 19 பெயர்கள் அந்த அதிகாரிகள் கொடுத்த லிஸ்டில் சரிவர இடம் பெற்றுள்ளதா என உறுதி செய்து கொண்டு, Merit order ல் இருபதாவதாக இடம் பெற்ற ஊழியரின் பெயரை அந்த லிஸ்டில் தன் கையாலேயே பூர்த்தி செய்து, லிஸ்டை அங்கீகரித்து கையெழுத்திட்டார். 


           திரு கிருஷ்ணசாமியின் அந்தரங்க ஸுத்தியின் ஒளியில் அந்த இருபது ஊழியர் களின் எதிர்காலம் பிரகாசித்தது.


--பார்த்தசாரதி

10 கருத்துகள்:

  1. சூப்பர் அய்யா! இந்த மாதிரி நல்வங்க இப்ப யாராச்சும் இருக்காங்களா????? ஒரு கைகையெழுத்து 20பேர்வேலை
    ஒரு கையெழுத்து, போதை இல்லாமல் இருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  2. இன்றைய தேவை இவர் போன்ற மனிதர்கள்தானே
    அருமை
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  3. இந்த மாதிரி நல்ல மனிதர்கள் நிறைய தேவை......

    பதிலளிநீக்கு
  4. இவ்வகை மனிதர்களாலேயே உலகம் இயங்குகிறது

    பதிலளிநீக்கு

  5. நான் நினைத்ததுபோல் தான் நடந்திருக்கிறது. ஏனெனில் திரு கிருஷ்ணசாமி போன்றவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். இது ஒரு நடந்த நிகழ்வு என எண்ணுகிறேன். பதிவை எழுதிய திரு பார்ததசாரதி அவர்களுக்கும் இதை பகிர்ந்த தங்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
  6. ஓஓ

    தொடர் பதிவோ..,

    முந்தைய பகுதிகளையும் படித்துவ ருகிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு