இந்த நாடகம் எழுதி முடித்த பின் இதை மேடையேற்றலாமா என யோசித்தோம்.ஆனால் நண்பர் ஒருவர் தொலைக்காட்சி நாடகமாக்கலாம் என்று ஆலோசனை சொல்லி சென்னைத் தொலைக்காட்சயில் தயாரிப்பாளராக இருந்த அவரது நண்பர் ஒருவரைப் பார்க்கச் சொன்னார். நண்பர் பார்த்தசாரதி அவரைப் பார்த்து நாடகத் தயாரிப்பு பற்றிப் பேசினார். அவரும் நாடகத்தைப் படித்துப் பார்த்தபின்,கொள்கையளவில் ஏற்றுக் கொண்டார். எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. யார் நடித்தால் நாடகம் சிறப்பாக இருக்கும் என்பது பற்றிப் பேச்சு வந்தது.முதல் பையனாகப் பூர்ணமும், கடைசிப்பையனாக நிழல்கள் ரவியும், வயதான பெண்மணியாகச் சௌகாரும் நடிக்கலாம் என்ற எண்னினோம், இரண்டாவது மகன் கிச்சாமியாக எங்களில் ஒருவரான,மனமகிழ் மன்ற நாடகத்தில் இரு வேடங்களில் நடித்துக் கலக்கிய,ஒருவரைப் போடலாம் எனத் தீர்மானித்தோம்! அவர் யார் என்பதைப் பின்னர் சொல்கிறேன்.
காட்சி - 2
காட்சி - 2
பட்டாபி மறு நாள்
அதி காலை ஒரு ஆட்டோவில் வந்து இறங்குகிறார்.
அம்மா “என்னடா இந்த விச ஆட்டோவில் வந்து இறங்குற.
கார் தடபுடல் எல்லாம்
என்ன ஆச்சு”
பட்டாபி “எப்போழுதும்
ஆபீஸ் விஷயமா வருவேன். இந்த தடவை
சொந்த விவகாரம் ஆச்சே. ஆமா ஏன்
இப்படி இளச்சி போயிட்டே.
உடம்புக்கு ஒன்னும் இல்லையே?”
அம்மா “ஒன்னும்
வரமாட்டேங்கறது தான் கவலை. சரி
பல் தேச்சுட்டுவா. காபி போட்டு தரேன்”
பட்டாபி காபி
சாப்பிட்டுக்கொண்டே “இந்த ருசி வேறெந்த காபிலெயும் வரமாட்டேங் கறதே ஏன்?”
அம்மா “என் பிள்ளைக்கு இவ்வளவு
தைரியம் வந்துடுத்தே. ஏதேது. ராஜி காதிலே
விழுந்தா, உன்னை இதுக்காகவே
விவாகரத்து பண்ணிடுவா.”
பட்டாபி
“கிருஷ்ணருக்கு சகுனி
மாதிரி உனக்கு எப்போதும் என் ஆம்பிடையா
ஞாபகம்தான்”
அம்மா
“அது சரி, பசங்கள்ளாம் செளக்கியமா இருக்காளா. பசங்கள்ளாம்னா
என்ன! பெத்தது மூணு அதுலே
ரண்டு பேர, ராஜி பேச்சைக்
கேட்டுண்டு, ஸ்நாந ப்ராப்தி இல்லாம ஆக்கிண்டாச்சு. எனாக்கென்ன உன் பாடு அவ பாடு...ம்.. பேத்தி
திவ்யா குட்டி எப்படி இருக்கு.
அதுக்கு மூணு வயசு ஆகியிருக்குமே!”
பட்டாபி “அது
ஸ்கூலுக்கு வேற இப்ப போறது. உனக்கு காட்டணும்னுதா
இந்த போட்டோவை ஞாபகமா
கொண்டுவந்தேன்”
அம்மா “ நம்பாத்து ஜாடையே அப்படியே கொண்டிருக்கு இந்த குட்டி”
பட்டாபி சிரித்துக்கொண்டே “ உன்
சம்மந்தி அம்மா இதை ஒத்துப்பாளோ”
அம்மா
“ அவ கெடக்கறா.
திவ்யா குட்டிக்கு நம்மாத்து
ஜாடைதான். துளிக்கூட
சந்தேகமே இல்ல. கிச்சாமியும் பாபுவும்
வரட்டும். கேக்கலாம்”
பட்டாபி “நச்சு கடுதாசி போட்டுண்டு இருக்கான்லேயோ”
அம்மா “ மாசம் தவறாம ஒன்னு
வந்துடறது. இத பாரு லேடஸ்டா வந்தது. அவன் கை
அட்சரம்தான் மணி மணியா என்ன
அழகா இருக்கு. உனக்கு லெட்டர்
போடறானா?”
பட்டாபி “ அடிக்கடி
போன்ல பேசிடறான்”
அம்மா “எனக்கு
என்னமோ இந்த வீட்டை விக்கறது
பிடிக்கல”
பட்டாபி “இவ்வளவு
பெரிய வீட்டை மெயிண்டெய்ன் பண்ணறது கஷ்டமாச்சே”
அம்மா
“டெல்லிலெ
உக்காந்துண்டு அதை பத்தி பேசாதே. பராமரிக்கறது
நான். “
பட்டாபி “இப்ப
நல்ல ஆஃபர் வந்திருக்கே”
அம்மா
“ அடுத்தது ஒண்டி
ஆளுக்கு இவ்வளவு பெரிய வீடா?....இந்த லைன்லே உன் பேச்சு
போகும். கட்டிக்கொண்டவ
சொல்லித்தந்த பாடம்”
பட்டாபி “ சரி
சரி ..
நான் போய் பக்கத்துக் கடைலெ
பேப்பர் வாங்கிண்டு வந்துடறேன்”
அம்மா “நீ தான்
டெல்லி மேட்டுக்குடி ஆச்சே.
காத்தாலெ பேப்பர் இல்லாட்டா
சப்த நாடியும் ஒடுங்கிடுமே. நான்
போய் சமையல ஆரம்பிக்கறேன்.தினமணி வாங்காதே.
கொஞ்ச நாழி கழிச்சி நம்மாத்துக்கே
கொண்டு வந்து போடுவான்.”
(நாளை தொடரும்)
----------
வீடு என்பது எது?கேள்வியைக் கேட்டதும் மாலனின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது...
வீடென்று எதனைச் சொல்வீர்?
அது இல்லை என் வீடு
ஜன்னல் போல் வாசல் உண்டு
எட்டடிச் சதுரம் உள்ளே
பொங்கிட மூலை ஒன்று
புணர்வது மற்றொன்றில்
நண்பர்கள் வந்தால்
நடுவிலே குந்திக் கொள்வர்
தலை மேலே கொடிகள் ஆடும்
கால்புறம் பாண்டம் முட்டும்
கவி எழுதி விட்டு செல்ல
கால் சட்டை மடித்து வைக்க
வாய் பிளந்து வயிற்றை எக்கிச்
சுவரோரம் சாய்ந்த பீரோ
வாவ்! நன்றி மாலன்!
=
தொடர்கிறேன் ஐயா
பதிலளிநீக்குதம +1
நன்றி ஜெயக்குமார்
நீக்குதொடர்ந்து வருகிறேன். நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்கு//இரண்டாவது மகன் கிச்சாமியாக எங்களில் ஒருவரான,மனமகிழ் மன்ற நாடகத்தில் இரு வேடங்களில் நடித்துக் கலக்கிய,ஒருவரைப் போடலாம் எனத் தீர்மானித்தோம்! அவர் யார் என்பதைப் பின்னர் சொல்கிறேன்.//
பதிலளிநீக்குஅவர் வேறு யாருமில்லை.அது நீங்கள் தான்! என்ன சரிதானே!
தொடர்கிறேன்.
நீங்க சொன்னா சரியாத்தானே இருக்கும்!
நீக்குநன்றி சார்
தொடர்கிறேன்.....
பதிலளிநீக்குநன்றி வெங்கட்
நீக்குஐயா!.. உங்கள் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுத்து வந்து படித்திட முடியவில்லை!..
பதிலளிநீக்குஇதன் முதற் பகுதியும் படிக்கவில்லை.
இப்போ என் வரவை மட்டும் பதிந்து போகிறேன்.
மீண்டும் வந்து படித்துப் பின்னூட்டம் தருகிறேன்!
வாழ்த்துக்கள்!
த ம +1
வருகைக்கு நன்றி இளமதி
நீக்குமாமியார் மருமகள் அன்பு எப்போதும் எட்டாம் பொருத்தம் போலும் நாடகத்திலும். மாலன் கவிதை அழகு வீடு பலருக்கு கனவு மாளிகை.தொடர்கின்றேன்.
பதிலளிநீக்குநன்றி நேசன்
நீக்குகவிதை ஸூப்பர் தொடர்கிறேன்...
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி
நீக்குகவிதை அருமை அருமை!!! தொடர்கிறேன் அய்யா நன்றி!!!
பதிலளிநீக்குநன்றி பூபகீதன்
நீக்குமாலன் கவிதையும் சூப்பர்!
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குஅடடா நடிக்க வேறு செய்வீர்களா :)
பதிலளிநீக்குஅருமை ஐயா...
பதிலளிநீக்குதொடர்கிறேன்...
கதையும் கவர்கிறது! கவிதையும் அசத்தியது! அருமை!
பதிலளிநீக்கு