கதையைத் தொடருமுன் காபி பற்றிச் சில
வரிகள்;என் அனுபவங்கள்
நான் சென்னையில் கல்லூரி விடுதியில்
இருந்த நாட்களில்,காலையில் சீக்கிரம் எழுந்து விடுவேன்; அந்நேரத்தில் விடுதியில் காபி கிடைக்காது.
எனவே மைலாப்பூர் குளத்துக்கு நடப்பேன்.
அங்கு,தெற்கு மாட வீதியில் ஓர் உடுப்பி
ஓட்டல் இருந்தது.
காலை 5.00க்கெல்லாம் அங்கு
அமர்ந்திருப்பவர்கள் முன் ஒரு டவரா டம்ளரில் சூடான காபியை வைத்து விட்டுச் சென்று
விடுவார் பணியாள்.
ஆகா!காபி என்றால் அது காபி.!அமுதம்.
மெல்ல ருசித்து ரசித்துச் சூட்டோடு
குடிக்கையில் மெல்ல மெல்ல அந்த அமுதம் தொண்டைக் குழியைத் தாண்டி உள்ளே இறங்கும்
போது ஏற்படும் அந்தப் பரவசம்!இன்னும் நிற்கிறது நினைவில்.
மதுரையில் எங்குமே ”நினைவில் நிற்கும்
காபி”தான்;அப்படித்தான் எழுதியிருப்பார்கள்.
ஒரு காலத்தில் காலேஜ் ஹவுஸ் காபிக்குப்
பேர் போனதாக இருந்தது.
நரசுஸ் தங்கள் காபிப்பொடி ரகம் ஒன்றுக்கு CH(college house) என்றே பெயரிட்டிருந்தனர்.
இன்னும் எழுதலாம் எவ்வளவோ காபி புராணம்
ஆனால்சூடாக ஒரு கப் காபி உடனே வரணும்!
இனி கதை தொடர்கிறது
கேட்டுக்கு வெளியே நின்ற ஸ்கூட்டரை கிளப்ப 2 நிமிடங்கள் ஆனது.
அப்போது ராமசாமி அவர் மனைவியிடம் “கிருஷ்ணன் போயாச்சு,” காபி கொண்டா குடிக்கலாம்” என்று ஆணையிட்டதைக் கேட்டு கிருஷ்ணன் திக்குமுக்காடிப் போனார்.
அவருக்கு காபி சப்ளை பண்ணும் பையன் அவனுடைய முதலாளியால் கிருஷ்ணனுக்காக ஸ்பெஷல் பாலில் ஏற்றுமதி க்வாலிடி காப்பிக்கொட்டையிலிருந்து நன்கு வறுத்து அறைக்கப்பட்ட பொடியில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பதமாக தயாரிக்கப்பட்ட டிக்காக்ஷனில் கலக்கப்பட்ட காபியை 3.30 மணியிலிருந்து பிளாஸ்கில் வைத்துக் கொண்டு காத்திருப்து 3.40க்கு தனது உடமைகளை எடுத்துக் கொள்ள தன் இருக்கைக்குப் போன போது தான் கிருஷ்ணன் அறிந்தார். அருமையான காப்பியை பருகி பரவசமடைந்தார்.
மோப்பக் குழைந்தை அனிச்சம் புத்துயிர் பெற்று மலர்ந்தது, முதலாளியின் விருந்தோம் பலால்.
கதாசிரியர்:பார்த்தசாரதி
என் கவிதை
--------------
நீயில்லாத காலைகள்!
-------------------------------
நீ இல்லாத என் காலைகள்
விடிதலே இல்லாத நாட்களின் தொடக்கம்
நிம்மதியில்லை,சுறுசுறுப்பில்லை
நாள் முழுதும் ஒரு வெறுமையே மிஞ்சும்!
நீ எனக்கு வேண்டும் எழுந்தவுடன்
என் கையில் ஏந்த வேண்டும் உன்னை
உன் மணத்தை நான் முகர வேண்டும்
மெல்ல மெல்ல,ருசித்து ருசித்து
என் நா உன்னைச் சுவைக்க வேண்டும்
ஆகா! இதுவன்றோ சொர்க்கம்!
பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கே!!
ஒரு இடத்தில் விட்டால் மற்றொரு இடத்தில் பிடிக்கலாம் என்பது உண்மை என்பது போல் ராமசாமி வீட்டில் கிடைக்காத காஃபி முதலாளியின் விருந்தோம்பலில் கிடைத்துவிட்டது!
பதிலளிநீக்குஅன்று வறுத்த காப்பிக்கொட்டையின் பொடியிலிருந்து வடிப்பான் மூலம் இறக்கப்பட்ட வடிசாற்றை புதுப்பாலில் கலந்து தரப்பட்ட காஃபி போன்று இருந்தது கதை. ருசித்து இரசித்தேன்! திரு பாரத்தசாரதிக்கு வாழ்த்துக்கள்!
காஃபியை பற்றிய கவிதை அருமை. விட்டால் காஃபியாயணம் எழுதிவிடுவீர்கள் போல் இருக்கிறதே!
காபியின் மணம் இன்னும் தொடரலாம்!
நீக்குநன்றி ஐயா
ரசித்தேன் ஐயா...
பதிலளிநீக்குநன்றி டி டி
நீக்குகாபிக் கவிதை சூப்பர் .ஒரு கப் பில்டர் காப்பி குடித்தது போல் இருக்கிறது
பதிலளிநீக்குநல்ல ரசனை!பில்டர் காபி ரசனையைச் சொன்னேன்!
நீக்குநன்றி முரளி
ஹாஹாஹா ஸூப்பர் கவிதை அருமை ஐயா
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி
நீக்குஆஹா! அருமையான காபி கதை! காபி கவிதை! காபி புராணம்! நன்றி அய்யா!!
பதிலளிநீக்குகாபி குடித்து விட்டு எழுதியது!
நீக்குநன்றி
பேஷ் பேஷ் கவிதை ரொம்ப நன்னாருக்கே!!அய்யா...
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குகவிதையும் நன்று கதையும் நன்று ரசித்தேன் காபி இல்லாத காளைகள் கடன் பட்டார் நெஞ்சம் போல் தான் இருக்கும் இல்லையா .....நன்றி
பதிலளிநீக்குஒரு காலத்தில் பெட்காபி கூடக் குடித்ததுண்டு!
நீக்குநன்றி இனியா
//“கிருஷ்ணன் போயாச்சு,” காபி கொண்டா குடிக்கலாம்” என்று ஆணையிட்டதைக் கேட்டு//
பதிலளிநீக்குஇப்படிக் கூட இருப்பார்களா!
//விடிதலே இல்லாத நாட்களின் தொடக்கம்//
விடிதலே இல்லாத இரவுகளின் தொடர்ச்சி!
அனைத்தையும் ரசித்தேன்.
மிக்க நன்றி ஸ்ரீராம்
நீக்குஅந்த காலத்தில் CH,இப்போ அந்த இடத்தில் விசாலம் காபி ,விலாசம் வேண்டாம் ..மதுரைக்கு வாங்கோ ,நானே வாங்கித் தர்றேன் :)
பதிலளிநீக்குகோரிப்பாளையம்தானே?
நீக்குநன்றி
கவிதை கதை இரண்டுமே காபியாக ருசித்தது!
பதிலளிநீக்குகாபி புராணம் கவிதை கதை எல்லாமே பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு....
பதிலளிநீக்கு