மதுரை விசாலம் காப்பி பத்தி மதுரைக்காரத் தம்பி
சொன்னாங்க.
நான் நெனக்கேன் அவுக கோரிப்பாளையத்தில
இருக்கற கடை பத்தித்தான் சொல்லியிருப் பாங்கன்னு
நெசமாவே காப்பி நல்லாத்தேன் இருக்கும்
ஆனா அது நல்லாயிருக்கறத்துக்குக் காரணம்
வேறெ ஏதோ சொல்வாய்ங்களே அது நெசமானு தம்பிதான் சொல்லணும்.
நான் வட மாநிலங்களில் பணி புரிந்தபோது ஆய்வுக்காகக்
கிளைகளுக்குச் செல்கையில் கையில் ஒரு திடீர்க் காபி சீசா எடுத்துச் செல்வேன்.ஏதோ
ஆலையில்லா ஊருக்கு இலுப்பப்பூ சர்க்கரை! பில்டர் காபியாகுமா அது?பால் வரவழைத்துப்
போட்டுக் குடித்து விடுவேன்/ அப்படி ஒரு காபி மோகம்!
அதெல்லாம் ஒரு காலம்..............
இப்போது காபி பற்றி மேலும் பார்த்தசாரதி
என்ன கதைக்கிறார் என்று பார்ப்போம்
பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு,பதவி ஓய்வு பெற்று ,மீண்டும் சென்னையில் குடி புகுந்தார்
கிருஷ்ணன்.ஒரு நாள் மாலை மணி 4 இருக்கும்
அவர் உஸ்மான் சாலை போத்தீஸிலிருந்து,
பேருந்து நிலையம் நோக்கி நடந்து கொண்டிருந்தபோது ,யாரோ கூப்பிட்டது போல் உணர்ந் தார். ஒரு பல்தள மாளிகையிலிருந்து
,70 வயது மதிப்புள்ள பெரியவர்தான் அழைத்தது. சற்று
உற்றுப் பார்த்தபோது அவர் காபி ராமசாமி என்பது தெரிந்தது.சற்று
அழுக்கான சட்டை,இரண்டு நாட்களாகச் சவரம் செய்து கொள்ளாத முகம்,அதில் அபரிமிதமான கவலை அமர்ந்து கொண்டி ருந்தது.
கிருஷ்ணன் அவரைப் பார்த்துக் கேட்டார்”பாத்து
ரொம்ப நாளாச்சே.எப்படி இருக்கீங்க?”
“ஒண்ணும் சரியில்லை.ரத்தக்கொதிப்பு
அதிகமாகி அவஸ்தைப் படுகிறேன்.போன வாரம்தான் அப்போலோவில் அட்மிட் ஆகி ட்ரீட்மெண்ட்
எடுத்துக்கிட்டேன்” அவர்
”அதுக்குள்ளே ஏன் இங்கெல்லாம் வந்து
சிரமப் படறீங்க?”
"என் தலை விதி!”என்னை ஒருத்தன் நல்லா ஏமாத்திட்டாம்பா”
"என் தலை விதி!”என்னை ஒருத்தன் நல்லா ஏமாத்திட்டாம்பா”
“அடப் பாவமே ;உங்களை ஏமாத்திட்டானா?!”
”இதோ இங்க 5வது மாடில ஒரு போர்ட்
இருக்கே.அவன் தங்கத்தை ஒட்டு மொத்தமா வாங்கி விக்கறவன்.மூணு வருசத்துக்கு முன்னாடி
அவன் ரியல் எஸ்ட்டேட்ல கால வச்சான்.அவங்கிட்ட சிங்கப்பூர்ல இருக்கிற எம்
பொண்ணுக்காக ஒரு ஃப்ளாட் வாங்கினேன்,எங்கிட்ட நெறையப் பணம் இருக்குன்னு ஒளறிக்
கொட்டினேன்.லக்ஷ்மி பூஜையன்னிக்கு ரெண்டு கிராம் தங்கக் காசோட வீட்டுக்கு வந்து
நமஸ்காரம் பண்ணினான்.அருமையான பெரிய இனிப்புப் பாக்கெட் வேற!அவங்கிட்டப் பணம் டெபாசிட்
பண்ணினா30 பெர்சண்ட் வட்டி மாசாமாசம் கொடுப்பதாகச் சொன்னான்;மாட்டிண்டுட்டேன்! 15
லட்சம் டெபாசிட்டாக் குடுத்தேன் வட்டியையும் அவன் கிட்டயே இன்வெஸ்ட் பண்ணினதால மூணு வருசத்தில 25 லட்சமாச்சு.”
”பெரிய டெபாசிட்டர்னு என் மேல ரொம்ப
மரியாதை.புதுக் கணக்கு அன்னிக்கு,எனக்கு ஒரு சூட்பீஸ்,என் மனைவிக்கு ரெண்டு பவுன்ல
வளையல் எல்லாம் கொடுத்தான்!ஆறு மாசம் சிங்கப்பூர் போய் என் பொண்ணோட இருந்துட்டு வந்தேன்.டிக்கட்
அவன்தான் வாங்கிக் குடுத்தான்.அப்புறம்தான் தெரிஞ்சது அவன் ரியல் எஸ்டேட்
வியாபாரம் படுத்துப் போச்சுன்னு. வட்டியை முதலோடு வரவு வச்சாலும்,கணக்கிலதான் இருந்ததே தவிர கண்ணில பாக்க முடியலே!எம் பொண்ணோட
ஃப்ளாட்டும் அவங்கிட்டதானே இருக்கு.எட்டு மாசமா வாடகை பாக்கி.”வருத்தத்துடன்
சொன்னார் ராமசாமி
ஐயோ பாவம். எறும்பு மாதிரிப் பணம்
சேர்த்து எல்லாத்தையும் கூவத்துல போட்ட மாதிரி ஆயிடுத்தே என அங்கலாய்த்தார்
கிருஷ்ணன்.ஏதாவது வக்கீல் நோட்டீஸ் அனுப்பலாமே என்றார்.
”வீட்டை வேணா மீட்டுடலாம்.கடன் கொடுத்த
வங்கி அவனோட அடமானம் வச்ச நிலத்தை யெல்லாம் வித்து லோனுக்கு வரவு வச்சிடுத்துஅதனால
என்ன பண்ணினாலும்,அவங்கிட்ட மாட்டியிருக்கிற 25 லட்சம் போனது போனதுதான்.இத்தனை
வயசுக்கப்பறம் அதை சம்பாதிக்க முடியுமா” கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்த்து
நிலைமையைச் சரியாக்க,”காபி சாப்பிடலாமா”
என்றார் கிருஷ்ணன்.அருகில் இருந்த சரவண பவனுக்குள் நுழைந்து காபி ஆர்டர் செய்தனர் .மத்தவங்களுக்குக்
காபி கூடக் குடுக்காம ,அது போல கஞ்சத்தனமா இருந்து சேர்த்த எல்லாப் பணத்தையும்
இப்படி இழந்துட்டு நிக்கறாரே என்று வருத்தப்பட்டார் கிருஷ்ணன்.
அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது.......
கிருஷ்ணனின் எதிர்பார்ப்பைப்
பொய்ப்பித்து, காபி பில்லை பலவந்தமாகத் தானே கொடுத்தார் ராமசாமி.
இது எப்படி இருக்கு!
எப்படி நிகழ்ந்தது இது?
உளவியல் ரீதியான காரணம் என்ன
சொல்லுங்களேன்!
ஆறுதல்...?
பதிலளிநீக்குஅப்படியா?
நீக்குநன்றி டிடி
விடாது கருப்பு! அய்யயோ காபி
பதிலளிநீக்குதப்பா நினைச்சிற கூடதுனு குடுத்திருப்பாரோ!! இல்லனா மட்டமா?????
ஏன் காபிக்கு இவ்வளவு பயம்?
நீக்குநன்றி பூபகீதன்
மனிதர்கள் உயர் நிலையில் (அப்படி இருப்பதாக நினைத்துக்கொண்டு)
பதிலளிநீக்குஇருக்கையில் மற்றவர்கள் அவர்களுக்கு சமமாகத் தெரிய மாட்டார்கள். எனவே விருந்தோம்பலை எதிர்பார்க்க இயலாது. ஆனால் அவர்களுக்கு கஷ்டம் என்று ஒன்று வரும்போது கண்ணு தெரிபவர்கள் எல்லாம் நண்பர்களாகத் தெரிவார்கள். அதுவும் தன்னோடு பணிபுரிந்தவர் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களிடம் தங்கள் கவலைகளை பகிர்ந்துகொள்ளும்போது மறந்துபோன விருந்தோம்பல் தானே வரும். அதுதான் இங்கே நடந்திருக்கிறது.
அதுவும் ஒரு விதத்தில் சரிதான்
நீக்குநன்றி சார்
விரக்தி. குற்ற உணர்வு. மன மாற்றம். ஆனால் பாவம் காபி தராததற்கு இவ்வளவு பெரிய தண்டனை வந்திருக்க வேண்டாம்.
பதிலளிநீக்குவெகு நாட்களுக்கு முன்னர் ஒரு சிறுகதை படித்தேன். தலைப்பு ராயர் காபி க்ளப் என்றோ, வேறு ஏதோ. அந்தக் காபிக்கடையில் காபி அவ்வளவு வாசனையாக இருக்கும். என்ன காரணம் என்றே தெரியாது. பலரும் போட்டியிட்டுத் தோற்றுப் போவார்கள். ஒருநாள் விவரம் கசியும். இலேசாக சீயக்காய்த் தூள் கலக்கிறார்கள் என்று! அப்புறம் வியாபாரம் படுத்து விடும். அதுவரை வியாதி வராதவர்களுக்கெல்லாம் இந்தச் செய்தி தெரிந்ததும் வியாதி வர ஆரம்பித்து விடும். கடை மூடப்பட்டு விடும்.
எப்பவோ படித்தது, குமுதத்தில் என்று நினைவு!
இராஜாஜி எழுதிய சபேசன்ஸ் காபி என்ற ஆங்கில சிறுகதையில் இப்படி வரும். பதினொன்றாம் வகுப்பு துணைப்பாடத்தில் நான் படித்துள்ளேன்.
நீக்குநல்ல ஞாபக சக்தி சுரேஷ் உங்களுக்கு! நன்றி.
நீக்குநான் மதுரைக்காரரைக் கேட்ட கேள்விக்கான பதில் போல!
நீக்குநன்ரி ஸ்ரீராம்
இதுதானே மாகி நூடில்சுக்கு நடந்தது.
நீக்கு--
Jayakumar
நடன சபாபதி ஐயா கூறியது போல உயரத்தில் இருக்கையில் கீழே இருப்பவர்களை உதாசீனம் செய்வதும் தாழ்ந்ததும் தன்னிலை உணர்ந்து எல்லோரையும் நண்பர்களாக எண்ணுவதும் உண்மைதான்!
பதிலளிநீக்குஓகே
நீக்குநன்றி சுரேஷ்
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
பதிலளிநீக்குகொடுத்துப் பழகியவர்களும் அப்படியே....
நன்றி ரமணி
நீக்குஒரு வெண்ணை கடையில் திருட்டு நடந்து , திருடன் பாதி திறந்த வெண்ணை டின்னை வைத்து விட்டு போய் விடுவான். அடுத்த நாள் கடை திறந்த முதலாளி வெண்ணையை வீட்டுக்கு அனுப்பி இனிப்பு செய்ய சொல்வார்.. இங்கும் அதே மன நிலை. எவன் எவனோ நம் பணத்தை தின்கிறான். நாமும் நமக்கு பிடிததவர்களுடன் நம்முடையதை டின்போமே என்ற எண்ணமே.
பதிலளிநீக்குஆகா
நீக்குநன்றி
இறுக்கி இறுக்கி வெச்சு மொத்தமா போனப்புறம் காபியாவது காக்டெயிலாவது...,
பதிலளிநீக்குபூதம் புதையலை காத்த கதை தான்...
அதானே! நன்றி
நீக்குமேன்மக்கள் மேன்மக்களே..
பதிலளிநீக்குநன்றி
நீக்குமனிதர்கள் பலவிதம்
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅருமையான உளவியல் பதிவு.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குமேன் மக்கள் மேன்மக்கள்தான்
பதிலளிநீக்குதம +1
நன்றி ஜெயக்குமார்
நீக்குஅடச்சீ ,இத்தனை நாளா நான் குடிச்சது சீயக்காய் காபியா :)
பதிலளிநீக்குராமசாமியின் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குதோ?
விசாலத்தில வேற ஏதோ சொல்வாங்க!
நீக்குநன்றி
காபித் தூளில் மரத்தூள் கலப்பதாகக் கேட்டதுண்டு டீத்தூளில் ஏதோ ஒருகொட்டைத் தூள்...அந்தக் கொட்டையின் பெயர் மறந்துருச்சே.. ஓகே மறந்தா என்ன...ஏதோ ஒண்ணு .கலப்பது போல்.....
பதிலளிநீக்குஎல்லாத்துலயும் ஏதோ கலப்படம்...ராமசாமி பாவம்...தண்டனை அதிகம்.....அடிபட்ட மனசு இல்லையா அதான் வாங்கிக் கொடுத்துருப்பாரோ...