இது ஒரு இடைச் செருகல்.
அதாவது,”நன்கடன்” முதல்
பகுதிக்கும்,அடுத்த பகுதிக்கும் இடையே செருகப் பட்ட ஒரு இலேசான பதிவு!
கைபேசி எவ்வாறு நம் வாழ்வின் இன்றியமையாத
அங்கமாகி விட்டது,நம் பண்பாட்டை எவ்வாறு பாதித்திருக்கிறது என்று நக்கலடிக்கும் பதிவு.
ஆங்கில மின்னஞ்சல் வருகையின் தமிழாக்கம்
ஐந்தாண்டுகளுக்கு முன் கோவிலுக்குச் சென்றேன்,எழுதி
வைத்திருந்தார்கள்-- ”கோவிலுக்குள் கைபேசி எடுத்து வரக் கூடாது”
இரண்டாண்டுகளுக்குமுன் அறிவிப்பில் சிறு
மாற்றம்-”கைபேசியை அணைத்து வைக்கவும்” (ஏற்கனவே நாம் எல்லோரும்
கைபேசியை எப்போ தும் அணைத்தபடியேதான் இருக்கிறோம்!)
சென்ற ஆண்டு அறிவிப்பு மேலும் மாறியது”கைபேசியை
ஓசை எழுப்பாத நிலையில் வைக்கவும்!”
ஆனால் நேற்றைய அறிவிப்போ............
”இறைவன் உருவின் அருகே நின்று ’தாமி’
எடுத்துக் கொள்ளக் கட்டணம் ரூ.100/=”
காலமாற்றம்!
ஸ்வாமிக்கும் சம்பாதிக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள்!
பதிலளிநீக்குஅவர் எங்கே சம்பாதிக்கிறார்?!
நீக்குநன்றி ஸ்ரீராம்
வணக்கம் அய்யா?? நீங்கள் எந்த கடவுளை சொல்கிறிங்க!! கோவிலில் இருப்பதா??? கோட்டையில் இருப்பதா??? கைபேசியை அணைத்தபடிதான்இருக்கிறேம் நல்ல ரசனை ரசித்தேன்!! நன்றி அய்யா
பதிலளிநீக்குதிருச்சி மலைக் கோட்டையில் பிள்ளையாரும்,தாயுமானவரும் இருக்கிறார்கள்.அவர்களைச் சொல்கிறீர்களா?!
நீக்குநன்றி
திருச்சி மலைக் கோட்டையில் பிள்ளையாரும்,தாயுமானவரும் இருக்கிறார்கள்.அவர்களைச் சொல்கிறீர்களா?!
நீக்குநன்றி
எங்கும் எதிலும் வணிக நோக்கும், விளம்பரமும் தான். அதற்கு வழிபாட்டிடமும் விதிவிலக்கல்ல. சரியான சிந்தனை.
பதிலளிநீக்குஉண்மை ஐயா.
நீக்குநன்றி
பதிலளிநீக்குஎன்றைக்கு கோவில்களில் இறைவனை தரிசிக்க கட்டணம் வைத்தார்களோ அன்றே ஆலயங்களில் வணிகமயமாக்கல் தொடங்கிவிட்டது.
Selfie க்கு தமிழில் தாமி என்பதை தெரிந்துகொள்ள உதவியமைக்கு நன்றி!
சரிதான்
நீக்குநன்றி ஐயா
சரிதான்
நீக்குநன்றி ஐயா
ஹாஹாஹாஹா ஸூப்பர் அருமையான நக்கல்தான் ஐயா...
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி
நீக்குமனிதனிடம் இருந்து கடவுளைப் பிரித்து விடலாம் ,செல்லை பிரிக்க முடியாது :)
பதிலளிநீக்குசரியே.
நீக்குநன்றி பகவான்ஜி
இதுதான் காலமாற்றமோ
பதிலளிநீக்குநன்றிஐயா
தம+1
நன்றி ஜெயக்குமார்
நீக்குவணக்கம் ஐயா!
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகை என் வலைத்தளத்திற் கண்டு மகிழ்வுற்றேன்!
மிக்க நன்றி ஐயா!
எங்கும் எல்லாமுமே வியாபாரமாகிவிட்டது.
கடவுள் மட்டும் விதிவிலக்கா என்ன?..
நகைச்சுவையோடென்றாலும் சிந்திக்க வைக்கும் பதிவு ஐயா!
வாழ்த்துக்கள்! தொடர்கின்றேன்!..
த ம 7
மகிழ்ச்சி எனதும்!
நீக்குநன்றி இளமதி
காலத்தின் கட்டாயம் என்று ஒரு சொலவடை உண்டு. தங்கள் பதிவைப் படிக்கும் போது எனக்கு அதுதான் நினைவுக்கு வந்தது. அதிலும் இந்த வரி நல்ல காமெடி!
பதிலளிநீக்கு//இரண்டாண்டுகளுக்குமுன் அறிவிப்பில் சிறு மாற்றம்-”கைபேசியை அணைத்து வைக்கவும்” (ஏற்கனவே நாம் எல்லோரும் கைபேசியை எப்போ தும் அணைத்தபடியேதான் இருக்கிறோம்!)//
த ம 10
அதுதானே நிலை!
நீக்குநன்றி செந்தில்குமார்