தொடரும் தோழர்கள்

திங்கள், செப்டம்பர் 28, 2015

’கிரேசி ’கரடி!

 பார்த்தசாரதி எழுதுகிறார்........!

ஆரண்ய காண்டம்” பதிவுக்கு வாசகர்களின் எதிர்வினை அன்று ”நடந்த நிகழ்ச்சிகளை சுற்றியே இருந்தன; இதனை நினைத்து கரடி தன்னிரக்கம் அடைந்து மனக்கலவரத்துடன் என்னை அணுகியது. 



நான்   கிணற்ரிலிருந்து வெளியில் வந்தேனா இல்லையா என்று எந்த ஒரு வாசகரும் கவலைப் படவில்லையே. ஏன்?”

சிறுவாரி அனுபவங்கள் தான் அதற்கு முக்கிய காரணம்.  நீ அந்த விறகு வெட்டிகளுக்காக வருந்தவில்லையா

இல்லாமல் இல்லை. நீங்கள் தான் எதை எதனுடன் முடிச்சுப் போடுவது என்று தெரியாமல் எனக்கு வரவேண்டிய அனுதாபத்தை இருட்டு அடையச் செய்துவிட்டீர்கள். நான் உங்கள் பதிவாளர் சென்னை பித்தனிடம் புகார் செய்யப் போகிறேன் என்று மிரட்டியது.

கொஞ்சம் பொறு. இப்பொழுது உன் கதைக்கு மூன்று முடிவுகள் தருகிறேன். எந்த முடிவு சரியாக இருக்கும் என்று நீயே தேர்ந்தெடு. 

சொல்லுங்க, பிடிச்சிருக்கா பார்க்கறேன் என்றது கரடி.

முடிவு 1.

இரவு வந்தது. அன்று அமாவாசை. நட்சத்திரங்களின் வெளிச்சம் மேகமூட்டத்தில் மறைந்திருந்தது. ஒரு நாகப்பாம்பு கிணற்றுக்கள் இறங்கியது. சரசரவென்று சத்தம் கேட்டு கரடி பயந்தது. கிணற்றுக்கடியில் இருந்த மறைவிடத்தில் சென்று ஒளிந்து கொண்டது. அப்போது நல்ல பாம்பு மாணிக்கத்தை கக்கியது. கரடிக்கு கண்கள் கூசின. பரம்பொருளை பார்த்த உணர்வு. சிறிது நேரத்தில் அருகிலிருந்த ஒரு பொந்தில் பாம்பு நுழைந்து மறைந்தது. கரடி மாணிக்கத்தை எடுத்து வாளியில் போட்டுவிட்டு ஏணி ஏறி கானகம் விரைந்தது. மாணிக்கத்தை, உணவு, தண்ணீர், ஏணி முதலியவற்றை வைத்து உதவிய கிழவன் எடுத்துக் கொள்ளட்டுமே என்று கருணை உள்ளத்துடன் அப்படி செய்தது கரடி. 

முடிவை கேட்ட கரடி, நாங்ககெல்லாம் பாம்பை பார்த்து பயப்பட மாட்டோம்”.

நீ என் கதையின் ஹீரோ. நான் நினைச்ச மாதிரி தான் கதையின் போக்கு இருக்கும் என்ற என் பதில் கரடியை கோபமூட்டியது. பிறகு சாந்தப்படுத்திக் கொண்டு வேறு முடிவுகளை கேட்க ஆர்வம் காட்டியது.

இடக்கு முடக்கா பேசாதே அப்ப தான் மத்த முடிவுகளை சொல்லுவேன் என்று கரடியை கண்டித்துவிட்டு முடிவுகளை சொல்ல ஆரம்பித்தேன்.

முடிவு 2.

உலர்ந்த கிணற்றில் நிலவிய குளிர்ச்சி கரடியை சற்று ஒய்வெடுக்கத் தூண்டியது. அப்ப வேட்டு வெச்ச மாதிரி ஒரு பெரிய சத்தம். கிணற்றின் ஒரு பக்கம் வெடித்துப் போய் வாயு வேகமாக பீரிட்டுக் கொண்டு வெளியானது. கொஞ்ச நேரத்தில் கரடிக்கு மயக்கம் வந்தது. விஷவாயுவாக இருக்குமோ?! உடனே கரடி தத்தித் தத்தி ஏணியிலே ஏறி கிணத்துக்கு வெளியே வந்து சற்று தூரத்துக்கு தள்ளாடி நடந்து வெளியே விழுந்தது. வெள்ளி  முளைக்கும் நேரம். வாளியிலே தண்ணியும் சாப்பாடும் வச்ச கிழவன் வந்து உதவி பண்ணியதால கரடி ஒரு மிருக வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அவசர வைத்தியம் பார்த்து கரடியை பிழைக்க வைத்து பின் அதை ஹைதராபாத் மிருக காட்சிச்  சாலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.

முடிவான முடிவு 2.

அமாவாசை. காரிருள். பேய்க் காற்று. கனக மின்னலுடன் சுறாவளி. கானகம் கரைப்புரண்டு வெள்ளக்காடாகியது. ஏணியில் ஏற முயலும் கரடி வழுக்கி விழுகிறது. கஷ்டப்பட்டு ஏறி வந்து நீச்சலடித்து தப்பி செல்ல முழு முயற்சி எடுக்கிறது. உத்தம வில்லன் படத்தில் வந்த உத்தமன் கமல்போல் சாகா வரம் பெற்றதா இந்த கரடி? அருவியில் இருந்து விழுந்து பரிசலில் மிதக்கிறது. 


கானகம் கடந்து பறிதவிக்கும் கரடி அடுத்த கானகத்தின் கரையில் ஒதுங்குகிறது. அந்த கானகத்தின் கரடி தலைவன் ஆணையின் பேரில் முதலுதவி அளிக்கப்பட்ட கரடி மயக்கம் தெளிகிறது. தலைவனின் அழகிய மகள் லஜ்ஜையுடன் அண்ணலை நோக்கினாள். அவரும் நோக்கினார்.

இந்த முடிவுகள் நன்றாகத் தான் இருக்கின்றன. ஆனால் சென்னைப் பித்தன் இதைவிட பிரமாதமான முடிவை தருவார் என தான் நம்புவதாக கூறி அவரிடம் விரைகிறது.

-தொடரும்

டிஸ்கி:அடக்கடவுளே!இந்தப் பார்த்தசாரதி நம்மளை இப்படி மாட்டி விட்டுட்டாரே!கரடி எப்ப வரப் போகுதோ?என்ன ஆகப் போகுதோ!ஜாம்பவானே ,காப்பாத்து!

21 கருத்துகள்:

  1. அந்த கரடி சொன்னதைத் தான் நானும் சொல்கிறேன். நிச்சயம் சென்னை பித்தன் அவர்கள் பிரமாதமான முடிவைத் தருவார். காத்திருக்கிறேன் அதைக் கேட்க/படிக்க.
    திரு பார்த்தசாரதி அவர்கள் மன்னிப்பாராக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குப் பிடித்தாலும்,கரடிக்குப் பிடிக்க வேண்டுமே!
      நன்றி ஐயா

      நீக்கு
  2. கரடி கதை நல்லாயிருக்கய்ய!! மூன்று முடிவுகள் அருமை!! எதனுடன் எதை முடிச்சு போடுவது???? அப்பட்டமான உண்மைகள்!!! நன்றி

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. பயமாயிருக்கிறதா.’காவலுடன்?! பயப்பட வேண்டாம்!
      நன்றி கில்லர்ஜி

      நீக்கு
  4. ஆரண்யகாண்டம் படிக்கவில்லை! அதனால் புரியவில்லை! படித்துவிட்டு வருகிறேன்!

    பதிலளிநீக்கு
  5. கரடி கிணற்றில் இருந்து வெளியேறியதா என்று ஒருவருக்கும் தோன்றவில்லைதான்! இந்த பதிவை படித்துவிட்டு அங்கே சென்று அந்த பதிவை படித்தபோதும் தோன்றவில்லை! மூன்று முடிவுகளும் சூப்பர்! ஆனால் கரடி ஏணி வழியாக ஏறுமா?

    பதிலளிநீக்கு
  6. பிரமாதமான முடிவிற்காகக் காத்திருக்கிறேன் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  7. ம்... ஐயாவின் முடிவுக்காக நாங்களும் காத்திருக்கிறோம்...
    விரைவாய் வாருங்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  8. அடுத்த முடிவைக் கொடுங்கள். அதையும் படித்து விடுவோம்!

    பதிலளிநீக்கு
  9. கரடி, கரடிவிடாமல் வரவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. நான்கு வருடம் கழித்து த ம மூன்றாம் இடத்தைப் பிடித்தாலும் பிடித்தீர்கள் ,கதைக்கும் முடிவுகள் மூன்றா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //டிஸ்கி 2. .இடம் என்பது ஒரு இடை நிகழ்வான விஷயம்என்று என் "முதலிடமும்,ரசமான பதிவும்" என்ற இடுகையில் சொல்லியிருந்தேன்.இப்போது கிரீடம் கழன்று விட்டது..pressure is off.// இது த ம முதல் இடத்திலிருந்து இறங்கியபோது(எனக்குப்பின் மோகன் குமார்) எனது 14-08-2912 இடுகையில் டிஸ்கி! முன்னால் இருப்பது மகிழ்ச்சியான செய்திதான்;ஆனால் அதற்கு அதிக முக்கியத்துவம் வேண்டாமே! அதிகம் எழுதுகிறேன் ;மூன்றில் இருக்கிறேன்;எழுதுவதைக் குறைத்துக் கொண்டால்,பின்னே போய்விடுவேன்! நன்றி.
      ஒரு ஜம்ப்தான் மீண்டும் நீங்க முதல்ல! வாழ்த்துகள்

      நீக்கு
    2. நீங்கள் முதலிடத்தில் இருந்ததை அறியாத நான் சின்னப் பையன்தான் ,மன்னியுங்கள் ஜி :)

      நீக்கு
  11. எல்லா முடிவுமே நல்லாத்தான் இருக்கு என்றாலும் சென்னைப்பித்தனின் முடிவு என்னவோ என்று ஆவலுடன் இருக்கின்றோம்...

    கீதா: " கானகம் கடந்து பறிதவிக்கும் கரடி அடுத்த கானகத்தின் கரையில் ஒதுங்குகிறது." அதான் நாங்க இங்க கரடிய தேடிக்கிட்டு இருந்தோம்...ஓ எங்க கானகம் ஏரியாவிலிருந்து உங்க கானகம் அடையாறுக்கு வந்துருச்சா..அடப் பாவமே எப்படித்தான் இந்த ராட்ஷச ஓஎம் ஆரைக் கடந்துச்சோ....பாவம்....சரி பத்திரமா பாத்துக்கங்க வந்து கூட்டிக்கிட்டுப் போறோம்... எங்க கானகத்துலருந்து நிறைய மாருதிகள் கூட உங்க ஏறியாவுக்கு நிறைய வருமே...!!!

    பதிலளிநீக்கு