தொடரும் தோழர்கள்

புதன், செப்டம்பர் 30, 2015

சிரிப்பதற்கு விடுமுறை வரை காத்திருப்பானேன்?!இன்றே நன்று!!

காலை கணவன் எழுந்தான்.

யோகா வகுப்புக்குச் செல்ல எண்ணினான்

அவன் தயார் செய்து கொண்டிருந்தபோது மனைவி கண் விழித்துப் பார்த்தாள்

அன்பே! என்னுடன் யோகாவுக்கு வருகிறாயா?” என்றான்

நான் குண்டாக இருக்கிறேன் என்று சொல்கிறீர்களா?” மனைவி

அய்யய்யோ!அப்படியில்லை.உனக்கு எழ விருப்பம் இல்லை என்றால் வேண்டாம்

அப்ப,நான் சோம்பேறி என்கிறீர்களா?”

நீ என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டே

ஓ!நான் உங்களை புரிஞ்சுக்கறதே இல்லை,அப்படித்தானே?”

நான் அப்படிச் சொல்லவில்லையே!

அப்படின்னா நான் பொய் சொல்றேனா?”

அடக்கடவுளே!நானும் யோகவுக்குப் போகாம இருக்கறதுதான் நல்லது

அப்படி வாங்க வழிக்கு!உங்களுக்குப் போக விருப்பமேயில்லை;ஆனா பழியை எம்மேல போடப்பாக்கறீங்க!?

கணவன் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பிக்கிறான்.

11 கருத்துகள்:

  1. இப்படித்தான் பல பேரு மாட்டிக்கிறாங்க!

    நல்ல சுவை! நன்றிய்யா!

    பதிலளிநீக்கு
  2. கடைசி வரியை முன்னாடியே செய்ய வேண்டியது தானே,,,
    அருமை ஐயா,

    பதிலளிநீக்கு
  3. ஹா.. ஹா.... ஹா.... மிகவும் ரசித்தேன்.
    ஃ பான்ட் சைஸ் மாறி இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
  4. ‘கணவன் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பிக்கிறான்.’

    உடனே மனைவி என்னுடன் பேசுவதே உங்களுக்கு பிடிக்கவில்லையா? என்று தொடர்ந்திருப்பாரே.
    இந்த (கு) தர்க்கத்திற்கு முடிவே இல்லை. பதிவை இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. ஹாஹா.... நல்லாத் தான் மாட்டிக்கிட்டு முழிக்கிறார்!

    பதிலளிநீக்கு
  6. ஹஹஹஹஹஹஹ்ஹ ரொம்ம்ம்ம்ம்பவே ரசித்தோம்......

    பதிலளிநீக்கு