தொடரும் தோழர்கள்

சனி, செப்டம்பர் 19, 2015

என்றும் வாழும்!-வீடு--இதற்கு முடிவில்லை!



தற்போதைய நிலவரம்: இருபது வருடங்கள் வீடு ஸ்திரமாக இருந்தது. அம்மா வேதவல்லி தனது 90வது வயதில் (அதாவது 2000மாவது ஆண்டு) ஆச்சாரியன் திருவடி அடைந்தார்.

1984வது ஆண்டிற்கு பிறகு பதவி ஓய்வு பெற்றபிறகு பட்டாபிராமன், மனைவி ராஜியுடன்தன் வயதான தாயாரை மிகுந்த அக்கறையுடன் கவனித்து வந்தார்

மாமியார் மருமகளுக்கு இடையே இருந்த குரோதம் மறைந்து ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருந்தனர். பட்டாபி தம்பதிகள் தன் மகன்களுக்கு இடையே இருந்த பேச்சின்மையை களைந்து மீண்டும் உறவு கொண்டு அன்யோன்யமாயினர், எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் மனப்பக்குவம் ஏற்பட்டது

1999 ஆம் ஆண்டு தன் கொள்ளுப் பேத்தி திவ்யாயின்(1980ல் திவ்யாகுட்டி) திருமணம் வேதவல்லி பாட்டியின் ஆசியுடன் சாஸ்த்ரோத்திரமாக நடைபெற்றது. குடும்பத்தில் இருந்த எல்லோரையும் நெருக்கமாக்கியது

கிருஷ்ணசாமியின் ஆடிட் நிறுவனம் பெரும் வளர்ச்சியை அடைந்தது. மூன்று தேசிய மயமான வங்கிகளின் சென்னை மண்டல ஆடிட்டை, நூற்றுக்கும் மேற்பட்ட ஆடிட்டர்களை அமர்த்தி, எல்லோரும் போற்றும் வகையில் திறம்பட நடந்து வருகிறது

டாக்டர் நரசிம்மன் நிரந்தரமாக யு.எஸ் ஸிலேயே செட்டிலாகி விட்டார். வருடம் ஒரு முறை மூன்று வாரம் இந்தியாவில் குடும்பத்துடன் வந்து தங்கி தவறாமல் ஓய்வெடுத்து வந்தார். அந்த மூன்று வரங்களும் வசந்த காலங்கள்.

பாபு எழுத்தாளனாக மலர்ந்து அகில இந்திய அளவில் பாராட்டு பெறும் அளவிற்கு வளர்ந்து விட்டான். அம்மாவின் சம்மதத்துடன் ஒரு வங்காள அறிவு ஜீவியை காதல் மணம் புரிந்து இருவரும் கலை பணியாற்றி வருகிறார்கள்

ஆமாம் வீடு என்னாயிற்று!!, 

வேதவல்லி அம்மையாரின் மறைவிற்கு பிறகு, “வேதவல்லி-ராமானுஜம்அறக்கட்டளை ஒன்றை அமைத்து வீட்டை ஒரு சேவை மையமாக உருவாக்கிவிட்டார்கள். அந்த புண்ணியம் செய்த தம்பதிகளின் வாரிசுகள். 40,000 சதுரஅடியில் கட்டப்பட்ட அந்த சேவை மையம் 2005ல் முழு அளவில் செயல்பட ஆரம்பித்தது

முதல் தளம்-   மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சி பள்ளி, குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 300க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பயனடைந்தார்கள்.

இரண்டாவது தளம்அதிநவீன வசதிகள் கொண்ட மருத்துவ பரிசோதனை கூடம், நகரிலேயே பிரபலமானது.

மூன்றாவது தளம்ஒரு பகுதியில், கல்யாணம் புதைகுழியாகி அதில் மூழ்கிக் கொண்டு அல்லறும் அபலை பெண்களுக்கு சட்டப்படி கிடைக்கவேண்டியதை பெற்றுத் தரும் சட்ட ஆலோசனை மையம். அல்லறுறும் ஆண்களுக்கும் உதவியுண்டு!

இன்னொரு பகுதியில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்களை உள்ளடக்கிய ஒர் ஒப்பற்ற புத்தக சாலை.

வேறெந்த நூலகத்திலும் கிடைக்காத இந்திய அந்நிய நூல்களை உள்ளடக்கியது. இந்த உயரிய சேவைகளுக்கு ஆகும் செலவுகளை அந்தந்த சேவை மையங்களே வருமானமாக ஈட்டுத் தருகின்றன. வசதியில்லாதவர்களுக்கு இலவச சேவைகளும் உண்டு நான்காவது தளத்தில் அந்த சேவை மையங்களை பராமரிக்கும் உயர் பராமரிக்கும் உயர் அதிகாரிகளின் குடியிருப்புகள் உள்ளன. சேவை மைய ஊழியர்கள் அந்தந்த துறையில் தேர்ச்சி பெற்றவர்கள். சேவை மனப்பாங்கு உள்ளவர்கள். கைநிறைய சம்பளம். சேவை மையம் பத்தாண்டுகளில் நன்கு வளர்ந்து மகத்தான சேவையை வழங்கி வருகிறது. அதன் சிறப்பை இந்தியா டுடே பத்திரிக்கை விரைவில் ஒரு கட்டுரை மூலம் சிறப்பு பதிவாக வெளியிடப்போகிறது. தவறாமல் படியுங்கள்.



வீடு இன்னும் வாழ்கிறது!


18 கருத்துகள்:

  1. //அதன் சிறப்பை இந்தியா டுடே பத்திரிக்கை விரைவில் ஒரு கட்டுரை மூலம் சிறப்பு பதிவாக வெளியிடப்போகிறது.//

    ஆஹா... சபாஷ். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அய்யா!! வீடு இன்னும் வாழ்கிறது!!! வாழவேன்டும்! நல்ல வீடு நல்ல இல்லம்!!! நன்றி

    பதிலளிநீக்கு
  3. அருமையான சமூக சேவை. பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. முடிவில் தந்த செய்தி இனித்தது ஐயா

    பதிலளிநீக்கு


  5. நாம் பிறந்து வளர்ந்து வாழும் வீட்டிற்கும் நமக்கும் ஒரு உணர்வு பூர்வ தொடர்பு உள்ளதை வெகு அழகாக படம் பிடித்து (நாடகமாக்கி) காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! வீடு என்றும் நிலைத்து இருக்கும் உருமாறினாலும்!

    பதிலளிநீக்கு
  6. வீடு இன்னும் வாழ்கிறது...... மகிழ்ச்சியான செய்தி.

    பதிலளிநீக்கு
  7. ஆரம்ப பகுதிகளை படிக்கவில்லை! படித்துவிட்டு வருகிறேன்!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ஐயா !

    இப்படித்தான் இப்படித்தான் வாழனும் இதுதான் மனிதப் பிறவி தந்த கடவுளுக்கு செய்யும் சேவை அந்த வீடும் ஒரு கோவில்தான் பகிர்வுக்கு நன்றி ஐயா !

    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. நாம் வாழும் வீடு
    நம் உதிரத்தோடு கலந்தது அல்லவா
    அருமை ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  10. அட ஆரம்பத்தில் இருந்து வாரவேண்டும் போல் இருக்கே. வாசித்து முடிக்க முயற்சிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  11. வீடு இன்னும் வாழ்கிறது ஆஹா! மிக மிக மகிழ்வான ஒரு செய்தி..அதுவும் அந்தக் கடைசிச் செய்தி...அந்த வீடு இன்னும் பல வருடங்கள் வாழ வேண்டும்....

    பதிலளிநீக்கு
  12. வீடு இனி இந்தியாடுடுடேவில் அலங்கரிக்கும் பாக்கியம் வரலாறு! சந்தோஸம் உங்கள் வலையில் தொடர் பதிவுகளில் முழுமையாக தொடர வீடு ஒரு முகவரியாக இருந்திச்சு ஐயா! நன்றி இப்படியான பலதை தொடர்ந்து எழுங்கள் ஓய்வின் பொழுது!ராஜி பற்றி இப்போது பற்றி மனம்விட்டு பேசியதில் சந்தோஸம் பட்டபிரான் வாழ்க சிறப்புடன்!

    பதிலளிநீக்கு