தற்போதைய நிலவரம்:
இருபது
வருடங்கள்
வீடு
ஸ்திரமாக
இருந்தது.
அம்மா
வேதவல்லி
தனது
90வது
வயதில்
(அதாவது
2000மாவது
ஆண்டு)
ஆச்சாரியன்
திருவடி
அடைந்தார்.
1984வது ஆண்டிற்கு பிறகு பதவி ஓய்வு பெற்றபிறகு பட்டாபிராமன், மனைவி ராஜியுடன்தன் வயதான தாயாரை மிகுந்த அக்கறையுடன் கவனித்து வந்தார்.
மாமியார் மருமகளுக்கு இடையே இருந்த குரோதம் மறைந்து ஒருவருக்கொருவர்
அனுசரணையாக
இருந்தனர்.
பட்டாபி
தம்பதிகள்
தன்
மகன்களுக்கு
இடையே
இருந்த
பேச்சின்மையை
களைந்து
மீண்டும்
உறவு
கொண்டு
அன்யோன்யமாயினர்,
எல்லோரையும்
அரவணைத்துச்
செல்லும்
மனப்பக்குவம்
ஏற்பட்டது.
1999 ஆம்
ஆண்டு
தன்
கொள்ளுப்
பேத்தி
திவ்யாயின்(1980ல் திவ்யாகுட்டி) திருமணம் வேதவல்லி பாட்டியின் ஆசியுடன் சாஸ்த்ரோத்திரமாக
நடைபெற்றது.
குடும்பத்தில்
இருந்த
எல்லோரையும்
நெருக்கமாக்கியது.
கிருஷ்ணசாமியின்
ஆடிட்
நிறுவனம்
பெரும்
வளர்ச்சியை
அடைந்தது.
மூன்று
தேசிய
மயமான
வங்கிகளின்
சென்னை
மண்டல
ஆடிட்டை,
நூற்றுக்கும்
மேற்பட்ட
ஆடிட்டர்களை
அமர்த்தி,
எல்லோரும்
போற்றும்
வகையில்
திறம்பட
நடந்து
வருகிறது.
டாக்டர் நரசிம்மன் நிரந்தரமாக யு.எஸ் ஸிலேயே செட்டிலாகி விட்டார். வருடம் ஒரு முறை மூன்று வாரம் இந்தியாவில் குடும்பத்துடன்
வந்து
தங்கி
தவறாமல்
ஓய்வெடுத்து
வந்தார்.
அந்த
மூன்று
வரங்களும்
வசந்த
காலங்கள்.
பாபு எழுத்தாளனாக மலர்ந்து அகில இந்திய அளவில் பாராட்டு பெறும் அளவிற்கு வளர்ந்து விட்டான். அம்மாவின் சம்மதத்துடன் ஒரு வங்காள அறிவு ஜீவியை காதல் மணம் புரிந்து இருவரும் கலை பணியாற்றி வருகிறார்கள்.
ஆமாம்
வீடு என்னாயிற்று!!,
வேதவல்லி அம்மையாரின் மறைவிற்கு பிறகு, “வேதவல்லி-ராமானுஜம்” அறக்கட்டளை ஒன்றை அமைத்து வீட்டை ஒரு சேவை மையமாக உருவாக்கிவிட்டார்கள். அந்த புண்ணியம் செய்த தம்பதிகளின் வாரிசுகள். 40,000 சதுரஅடியில் கட்டப்பட்ட அந்த சேவை மையம் 2005ல் முழு அளவில் செயல்பட ஆரம்பித்தது.
முதல் தளம்- மாற்றுத் திறனாளிகளுக்கான
பயிற்சி
பள்ளி,
குறிப்பாக
மனநலம்
பாதிக்கப்பட்டவர்களுக்காக
300க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பயனடைந்தார்கள்.
இரண்டாவது தளம் – அதிநவீன வசதிகள் கொண்ட மருத்துவ பரிசோதனை கூடம், நகரிலேயே பிரபலமானது.
மூன்றாவது தளம் – ஒரு பகுதியில், கல்யாணம் புதைகுழியாகி அதில் மூழ்கிக் கொண்டு அல்லறும் அபலை பெண்களுக்கு சட்டப்படி கிடைக்கவேண்டியதை
பெற்றுத்
தரும்
சட்ட
ஆலோசனை
மையம்.
அல்லறுறும்
ஆண்களுக்கும்
உதவியுண்டு!
இன்னொரு பகுதியில் ஐம்பதாயிரத்திற்கும்
மேற்பட்ட
அரிய
நூல்களை
உள்ளடக்கிய
ஒர்
ஒப்பற்ற
புத்தக
சாலை.
வேறெந்த நூலகத்திலும் கிடைக்காத இந்திய அந்நிய நூல்களை உள்ளடக்கியது. இந்த உயரிய சேவைகளுக்கு ஆகும் செலவுகளை அந்தந்த சேவை மையங்களே வருமானமாக ஈட்டுத் தருகின்றன. வசதியில்லாதவர்களுக்கு இலவச சேவைகளும் உண்டு நான்காவது தளத்தில் அந்த சேவை மையங்களை பராமரிக்கும் உயர் பராமரிக்கும் உயர் அதிகாரிகளின் குடியிருப்புகள்
உள்ளன.
சேவை
மைய
ஊழியர்கள்
அந்தந்த
துறையில்
தேர்ச்சி
பெற்றவர்கள்.
சேவை
மனப்பாங்கு
உள்ளவர்கள்.
கைநிறைய
சம்பளம்.
சேவை
மையம்
பத்தாண்டுகளில்
நன்கு
வளர்ந்து
மகத்தான
சேவையை
வழங்கி
வருகிறது.
அதன்
சிறப்பை
இந்தியா
டுடே
பத்திரிக்கை
விரைவில்
ஒரு
கட்டுரை
மூலம்
சிறப்பு
பதிவாக
வெளியிடப்போகிறது.
தவறாமல்
படியுங்கள்.
வீடு இன்னும் வாழ்கிறது!