தொடரும் தோழர்கள்

ஞாயிறு, அக்டோபர் 04, 2015

விடுமுறை,சிரிமுறை!

இன்று ஒரு மேலை நாட்டு நகைச்சுவைப் பகிர்வு....

ஒரு தேவாலயத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாகப் பணி புரிந்த பின் ஒரு பாதிரியார் வேறு ஓர் ஊருக்குப் பணியில் செல்லு முன் அவருக்கு ஒரு பிரிவுபசார விழா நடைபெற்றது.

அனைவரும் குழுமிய பின்னும் அன்று சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர் ஒருவர் வந்து சேரவில்லை.

பாதிரியார் சொன்னார்”அவர் வருவதற்கு நேரமாகும் போல் தெரிகிறது;அது வரை நான்  சில விஷயங்கள் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இப்போது என் மனம் அந்த நாளுக்குச் செல்கிறது.இங்கு பொறுப்பேற்ற அன்றே முதன் முதலாக  பாவமன்னிப்புக் கேட்டு ஒருவர் வந்தார்.

அவர் சொன்னார்”ஐயா நான் சிறு வயது முதலே வீட்டில் திருடி வந்தேன்,இப்போது அலுவலகத்திலே  ஒரு தொகை யைக் கையாடல் செய்து விட்டேன்.அந்தத் துணிச்சல் எனக்கு வரக்காரணம் முதலாளியின் மனைவியுடன் நான் கள்ள உறவு கொண்டிருப்பதுதான்.இதை அறிந்த ஒருவன் மிரட்டியபோது அவனைக் கொலை செய்து விட்டேன்.என் பாவங்களுக்காக ஆண்டவரிடம் நான் மன்னிப்பு வேண்டுகிறேன்”

நான் வழக்கம்போல் பாவ மன்னிப்பு அளித்தேன்.

அன்று நான் மிகவும் பயந்து போனேன்,இந்த ஊரில் இருக்கும் அனைவரும் இது போன்றவர்களாகவே இருப்பார்களோ என்று;ஆனால் நாள் செல்லச் செல்ல எனக்குப் புரிந்தது நீங்கள் அனைவரும்  எவ்வளவு  நல்லவர்கள் என்று.அந்த மனிதர் யார் என்பது எனக்கு இன்றளவும் தெரியாது”


பாதிரியார் பேசி முடித்ததும் அந்தத்தலைவர் வந்தார்.

பாதிரியாரைப் பாராட்டிப் பேச ஆரம்பித்த  அவர் சொன்னார் ’பாதிரியார் இங்கு வந்து சேர்ந்ததும் அவரிடம் முதலில் பாவ மன்னிப்புப் பெற்றவன் நான் என்ற பெருமை எனக்குண்டு.... ............!”

21 கருத்துகள்:

  1. சொல்லிச் சென்றவிதம் அருமை
    முடிவு நச்...
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அய்யா! சிரிக்காதவங்களுக்கும் பாவ மன்னிப்பு உண்டா! ஹாஹாஹா ....

    பதிலளிநீக்கு
  3. சிறப்பு விருந்தினர் .ஒரு அரசியல் தலைவர் என்றதுமே பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு பெற்றவர் அவராக இருப்பாரோ என்ற ஐயம் ஏற்பட்டது. ஏனெனில் அரசியல் தலைவர்களுக்கே சில சிறப்பு குணங்கள் உண்டு அல்லவா? எனது கணிப்பை உறுதி செய்துவிட்டீர்கள்.பதிவை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  4. ஆஹா நல்ல முடிவு,,,
    தாங்கள் சொன்ன விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  5. :) முடிவு பற்றி ஆரம்பத்திலேயே யூகிக்க முடிந்தும், மிகவும் ரஸித்துப்படித்தேன்.

    அவர் பெருமையாகச் சொல்லி முடித்த, கடைசி இரு வார்த்தைகளைத் தாங்கள் சொல்லிச்சென்ற விதம் மிகவும் அருமை. :) பகிர்வுக்கு நன்றிகள், சார்.

    பதிலளிநீக்கு
  6. ஹஹஹஹஹ் சிறப்பு விருந்தினர்தான் அந்த மனிதராக இருக்கும் என்று தோன்றியது.....ரசித்தோம்...

    பதிலளிநீக்கு
  7. "மாட்டிக்கிடாரடி மயிலைக்காளை....!"

    பதிலளிநீக்கு
  8. தலைவர் என்றால் சும்மாவா ,இழவு வீட்டுக்கு போனாலும் பொணமா தான்தான் இருக்கணும்னு நினைக்கிறவராச்சே:)

    பதிலளிநீக்கு
  9. நல்ல பதிவு. பெருமையின் சிறுமை! நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு