ஜெகனுக்கு 32 வயதிலேயே நீரிழிவு நோய் (அவரது பரம்பரை சொத்து) ஆரம்பித்ததால்,
சில ஆண்டுகள் உடற்பயிற்சிகளை சிரத்தையாக மேற்கொண்டு இரத்த இனிப்பை கட்டுப் படுத்த முயன்றார். ஸ்வாமிக்கும் நடைபயிற்சியின் மீது மோகம் உண்டாகையால் அவரும் ஜெகனும் தினமும் அறுபது நிமிடங்கள் மாலை வேளையில் நடந்தனர்.
இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் சற்று உயர்பதவியில் ஜெகன்தன் பணியாற்றி வந்தார். நல்ல லிஸினர். அந்த மாதிரி நபர் தான் ஸ்வாமிக்கு அப்போது தேவைப் பட்டது. இது தவிர ஸ்வாமிக்கு தன்னாலான எல்லா உதவிகளையும் ஜெகன் அளித்து வந்தார். ஜூலையில் ஸ்வாமி பம்பாய் புறப்பட்ட போது இருவரின் இரத்த இனிப்பும் நல்ல கட்டுப்பாட்டை அடைந்து உடல் நலனும் நன்கு தேறியிருந்தது. விடைபெறும் போது ஸ்வாமி தன் பம்பாய் விலாசத்தை ஜெகனிடம் விட்டுச் சென்றார்.
ஸ்வாமி புறப்பட்டுச் சென்ற இரண்டு நாட்களில் ஜெகன் அவரை ரொம்பவும் மிஸ் பண்ணி ஒரு கவிதையையே எழுதி விட்டார்.
இதோ நடைதுணை
இரத்த இனிப்பு அதிகமாக
நா இனிப்பை இழந்தது
மிச்ச இனிப்பை
எரிபொருளாக்கி
இனிய மாலைகள்
நடந்து கழிந்தன
தக்க தருணத்தில்
துணை வந்த அறிவு
அனுபவச் சுவையை
அள்ளித் தந்தது.
பிரிவின் துயரை
துடைத்தெறிய
புத்தாண்டே விரைந்து வா.
ஜெகன் அதை ஸ்வாமிக்கு தபாலில் அனுப்பி வைத்தார். ஒரு வாரத்தில் பதில் வந்தது. கவிதையை பாராட்டி, தான் செல்லப் போகும் நகரங்களின்விவரங்களை அட்டவணைப் படுத்தியிருந்தார். பின்னர் எல்லாநகரங்களிலிருந்தும் ஒவ்வொரு பிக்சர் போஸ்ட் அனுப்பியிருந்தார்.
திரும்பி வந்த ஸ்வாமி பிப்ரவரியில் பெசன்ட் நகரில் குடிபுகுந்தார்.
ஜெகனும் பதவி உயர்வு பெற்று கர்நாடகாவிற்கு சென்றார். 2௦12ல் ஓய்வுபெற்ற ஜெகன் ஸ்வாமியின் நட்பை புதுப்பித்துக் கொண்டார். 25வருடங்களின் நகர்வு ஸ்வாமியை மூப்பில் தள்ளியது. ஜெகனும் நடுப்பட்டஇருபத்தைந்து ஆண்டுகளில் தன் ஆரூயிர் நண்பன் ஒருவனையும் (சிறுவயதிலேயே) தன் பெற்றோர்களையும் இழந்திருந்தார். மூப்பு, பிணி,மரணம் என்பது காலத்தின் கட்டாயம் என்பதை நன்கு உணர்ந்தி ருந்தார்.தன்னிரக்கம் அவரை பாதிப்பதில்லை. முன்பு ஸ்வாமியின் பேச்சுக்களின் அனுபவித்த சுகம் குறைந்ததாக உணர்ந்தார். இருப்பினும் மாதம்இருமுறை சந்தித்து ஒரு மணி நேரம் அவருடன் கழித்து வந்தார்.
அன்று 2014 நவம்பரில் ஒரு புதன்கிழமை. ஜெகன்நாதனை எதிர்பார்த்துபெசன்ட் நகர் கடற்கரை நடைபாதையில் அமைந்த கிரானைட் அமர்வுச்சுவரில் தொண்ணூறு வயதான கிருஷ்ணஸ்வாமி காத்திருந்தார்.
அவரிடமிருந்து தான் ஏற்கனவே தொலைபேசியில் செய்தி வந்துவிட்டதே!
ஜெகன்னாதன் வந்து சேர்ந்ததும்,அவரை வாங்க என்று வரவேற்றார் கிருஷ்ணஸ்வாமி
எப்போதும் சாதாரணமாக கழியும் அந்த 60 நிமிடங்களை திடீர் என்றுஒருவர் பிரவேசித்து விறுவிறுப்பாக்கினார்.
--தொடரும்
தொடர்கின்றேன் அய்யா!
பதிலளிநீக்குநன்றி பூபகீதன்
நீக்குநீரிழிவு நோய் (அவரது பரம்பரை சொத்து) ஹாஹாஹா ரசித்தேன் ஐயா தொடர்கிறேன்
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி
நீக்குதொடர்கிறேன்! யார் அந்த ஒருவர் என்பதை அறிய...!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குஅங்கே ,இன்னொரு 32 ஆ ?
பதிலளிநீக்குஇருக்குமோ!
நீக்குநன்றி பகவான்ஜி
யாராக இருக்கும் . சூப்பர்
பதிலளிநீக்குசஸ்பென்சுடன் .............?
இன்று!
நீக்குநன்றி அபயா அருணா
யார், என்ன என்று அறிய நானும் ஆவலுடன்!
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குதொடர்கிறேன்
பதிலளிநீக்குநன்றி பாரதி
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
நன்றாக உள்ளது தொடருங்கள்.... த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குதொடர்கின்றேன் யார் அவர்????
பதிலளிநீக்குயாரப்பா அது....இதோ அடுத்த பதிவிற்கு...
பதிலளிநீக்கு