ஆரம்பமாகப்
போகிறது
நேரம்
நெருங்கி விட்டது
பின்னோக்கி
எண்ணத் தொடங்க வேண்டியதுதான்
பத்து
ஒன்பது
எட்டு
..
..
ஒரு
முக்கியமான செயல் நடக்கும் முன் பத்திலிருந்து பின்னோக்கி எண்ணுவது வழக்கம்
பத்து
ஒரு முக்கிய எண்.
தமிழில்
பத்துப்பாட்டு முக்கிய இடம் பெறுகிறது
பத்துப்பாட்டு
நூல்கள் எவை?
முருகு
பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து
அதாவது
திருமுருகாற்றுப்படை,பொருநராற்றுப்படை,சிறுபாணாற்றுப்படை,பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு,மதுரைக்காஞ்சி,நெடுநல்வாடை,குறிஞ்சிப்பாட்டு,பட்டினப்பாலை, மலைபடுகடாம்
என்பன
திருமாலின்
அவதாரங்கள் பத்து....
மீன்,ஆமை,பன்றி,வாமனன்,நரசிம்மம்,பரசுராமர்,இராமர்,பலராமர்,கிருட்டிணர்,கல்கி
என்பன(கல்கியா?யார்?அம்மா பகவானா?!)
பணம்
பத்தும் செய்யும் என்பார்கள்
அந்தப்பத்து
எவை?
சிலர்
சொல்வார்கள், மன அமைதி,
ஆரோக்கியம், நிம்மதி,மதிப்பு,மரியாதை, மகிழ்ச்சி, திருப்தி, துணிவு, தன்னம்பிக்கை, நிறைவு என்று.
ஆனால்
பத்து என்பது ஒரு குறியீடு மட்டுமே,’எண்ணில் அடங்காத’ என்பதே அதன் பொருள் என்றும்
சொல்லப்படுகிறது
பசி
வந்திடப் பத்தும் பறந்துபோம் என்பர்.அந்தப் பத்து எவை? இதோ இப்பாடல் விளக்குகிறது!
மானங்
குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!
மானம், குடிப்பிறப்பு, கல்வி,
ஈகை, அறிவுடமை, தானம்,
தவம், உயர்வு, தொழில்,
முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய
மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்தும் காணாது
போய்விடும்!
பத்துப்பாத்திரம் விளக்குவது என்பது சிரமான செயல்;ஆனால் அதை
ஊதித்தள்ளி விட்டார் தன் தசாவதாரம் திரைப் பட்த்தில் உலகநாயகன்!
பத்து எண்றதுக்குள்ளே------
முக்கியமாகச் சில
ஒன்று –இறைவன் ஒருவன்
இரண்டு-அவனே சிவனும் சக்தியுமாகின்றான்
மூன்று-பிரம்மா,விஷ்ணு ,சிவன்
நான்கு-வேதங்கள்
ஐந்து-புலன்கள்
ஆறு-சுவைகள்
ஏழு-சுரங்கள்
எட்டு-திசைகள்
ஒன்பது-உணர்ச்சிகள்(ரசங்கள்)
பத்து எண்ணுக்குள்ளாக சிவபெருமானைப் பற்றிஅழகாகச் சொல்கிறார்
திருமூலர்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுர்ணந் தெட்டே”
இதற்குப் பொருள் நான் சொல்லப் போவதில்லை;அறிய வேண்டும் என்று விரும்பினால்
இங்கு சென்று பாருங்கள்
சின்னப் பதிவுதான்
பத்து எண்றதுக்குள்ளே படித்துக் கருத்துச் சொல்லி ஓட்டும் போட்டு
விட்டுப் போய் விடுங்கள்
கவுண்டவுன் ஆரம்பம்
பத்து
ஒன்பது
......
.....
பத்தை வைத்து பல விளக்கங்கள் அருமையாகச் சொன்னீர்கள் அதோடு வடிவேலுவின் நகைச்சுவையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மாமிக்கு பத்து போட்ட ....
பதிலளிநீக்குசொக்கன் தளமும் சென்று விளக்கம் தெரிந்துவந்தேன்.
ஹா ஹா! அதுவும் ஒரு நல்ல பத்தே!
நீக்குநன்றி சசிகலா.
பத்து எண்றதுக்குள்ளே வந்து படித்துக் கருத்து மட்டும் சொல்லிட்டுப் போயிட்டீங்க!
வணக்கம் அய்யா! பத்து எண்றதுக்குள்ள "தலைப்பை பார்த்ததும் சினிமாவை பற்றிய பதிவு என்று பார்த்தேன்! உள்ளே பார்த்தால்.. பத்தை பற்று அருமையான முத்துகள்! திருமாலில் ஆரம்பித்து கவுன்டண் .,அருமை அய்யா!! அருமை அய்யா!!!
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி பூபகீதன்
நீக்குபகல் பத்து பற்றியும் எழுதியிருக்கலாம். பத்துகள் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இத்தோடு போதும் என விட்டுவிட்டீர்கள் போலும். பத்தோடு பதினொன்றாக இல்லாத முத்தான பதிவு இது.பாராட்டுகளும் வாழ்த்துகளும்! ( திரைப்படம் பற்றி எழுதியிருக்கிறீர்கள் என நினைத்து வருபவர்களுக்கு சத்தான பாடம்!)
பதிலளிநீக்குஎவ்வளவோ எழுதலாம்;ஆனால் பதிவு நீண்டு விடும்!
நீக்குநன்றி ஐயா
10க்குள் இவ்வளவு விடயங்களா ? அருமை ஐயா
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி
நீக்குநான் தனித்தனியாகப் படித்திருந்த செய்திகளை ஒரே இடத்தில் தொகுத்துக் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குசொல்லவே வேண்டாம். வந்தால் தம வாக்களிக்காமல் செல்வதில்லை! இப்போதும்!
நன்றிகள் ஸ்ரீராம்
நீக்குரொம்பவே ரசித்தேன் ஐயா...
பதிலளிநீக்குநன்றி டிடி
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
நல்ல கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குபத்து - அத்தனையும் முத்து....
பதிலளிநீக்குரசித்தேன் ஐயா.
நன்றி வெங்கட்
நீக்குஇலக்கியப் பத்து அருமை
பதிலளிநீக்குநன்றி பாரதி
நீக்குபத்தை வைத்து இத்தனை செய்திகள்...
பதிலளிநீக்குஅருமை.... ரசித்தேன் ஐயா...
நன்றி குமார்
நீக்குநீங்கள் எண்ணவே வேண்டாம் முதலில் வாக்கு ,அடுத்துதான் படிப்பே :)
பதிலளிநீக்குதெரியுமே!
நீக்குநன்றி பகவான் ஜி
நீக்குஐயா.. பத்திலேருந்து ஆரம்பிச்சு இன்னும் ஒண்ணுன்னு
பதிலளிநீக்குசொல்லிடலே இல்ல..! அப்பாடி வந்துட்டுட்டேன்...:)
இப்போதானே 8 (தமிழ்மண வாக்கு) போய்கிட்டு இருக்கு!.:))
பத்தைப் பற்றி அருமையான தொகுப்பு ஐயா!
மேலும் இணைப்பும் தந்துள்ளீர்களே.. பார்க்கின்றேன்!
சிறப்பு! வாழ்த்துக்கள்!
நன்றிம்மா
நீக்கு
பதிலளிநீக்குபத்து எண்றதுக்குள்ளே ஒட்டும் போட முடியவில்லை..கருத்தும் சொல்ல முடியவில்லை அய்யா...இணைய வேகம் அப்படி.....
மெள்ள எண்ண வேண்டியதுதான்!
நீக்குநன்றி ஐயா
ஓரளவு அறிந்திருக்கிறேன் அவற்றை தொகுத்தளித்து சிறப்பு. நன்றி ! ஐயா !
பதிலளிநீக்குநன்றி இனியா
நீக்குஒரு பத்தை எதிர்பார்த்து பல பத்துகளைக் கண்டேன். நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குமிக சிறப்பான விளக்கம்! பத்து என்ற எண்ணை வைத்து பாதுகாக்க வேண்டிய ஓரு பதிவை தந்து அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபத்தின்மேல் ஏன் இந்தப் பித்து !
பதிலளிநீக்குபத்தின்மேல் ஏன் இந்தப் பித்து !
பதிலளிநீக்குபத்தும் ஒரே இடத்தில்....அறிந்திருந்தாலும் அனைத்தையும் ஒரே இடத்தில் தந்துவிட்டீர்களே! அருமை.
பதிலளிநீக்குகவுண்டவும் எவ்வளவோ சென்றிருக்கும்....பத்திற்குள் வர இயலவில்லை எங்களால்...
அருமையான விளக்கங்கள் ஐயா! இன்னும் இப்படி சிறு பதிவு தொடர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு