தமிழ் இந்துவில் என் வலைப்பூ பற்றிய அறிமுகத்தில் ’இவர் பதிவர்களில் கபாலி ’என்று குறிப்பிட்டிருந்தனர்.
அது கபாலி பற்றிய என் நினைவுகளைக் கிளறி விட்டது.
அந்தக் காலத்தில் நான் அறிந்த கபாலிகள்……..
மந்தைவெளியில்
இருந்த ஒரு திரையரங்கம் கபாலி.மயிலை காமதேனுவில் கூட நான் படம் பார்த்திருக்கிறேன்;ஆனால்
கபாலி நான் சென்று படமே பார்த்ததில்லை என்ற பெருமை பெற்றது.
இன்று
காமதேனுவும் இல்லை;கபாலியும் இல்லை
அடுத்த
கபாலி,அப்போதே மயிலையில் பிரபலமாக இருந்த அரசியல் பிரமுகர்; டிகே கபாலி.திமுக சார்பில் 1977 இலும் அதிமுக
சார்பில் 1980 இலும் மயிலைத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர்.
ஆனால்
அன்று இன்றும் என்றும் என் உள்ளத்தில் உறையும் நண்பர் வேறோர் மயிலை கபாலி
அவர்
பற்றி நான் முன்பு எழுதிய ஒரு பதிவு இதோ …
//கபாலியை நான் முதல் முதல் சந்தித்தது 1964 ஆம்
ஆண்டில்தான்.
முதல் பார்வையிலேயே அவர் என்னை அவர்பால்
ஈர்த்து விட்டார்.
அவர் மனைவி கற்பகமும் அவருக்கேறவர்தான்.
சாந்தமான புன்னகை தவழும் முகம்;அருள் பொழியும் கண்கள்.
வாழ்வில் முதல் முறையாக வீட்டை விட்டுத்
தனியாக விடுதியில் தங்கிப் படிக்கும் எனக்கு உற்ற துணைவர்களாக,நல்ல நண்பர்களாக அமைந்தனர் அந்தத் தம்பதி.
என் இரண்டாண்டு கால விடுதி வாழ்க்கையில்
வாரம் ஒரு முறையாவது அவர்களைச் சந்திக்காமல் இருந்ததில்லை.
முந்தைய சந்திப்புக்குப் பின் இடைப்பட்ட
காலத்தில் எனக்கு நடந்த நல்லது கெட்டது எல்லாவற்றையும் அவர்களுடன் பகிர்ந்து
கொள்வேன்.
அவர்கள் மாறாத புன்னகையுடன் கேட்டுக்
கொண்டிருப்பர்.
என் பிரச்சினைகளை அவர்கள் முன்
கொட்டுவேன்.
அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலே
மனம் அமைதி பெறும்;பிரச்சினை
தீர்க்க வழி கிடைக்கும்.
அவர்கள் வாய்திறந்து பேச வேண்டியதே
இல்லை.
அவர்கள் முன் பல இனிய நிகழ்வுகள்;அந்நிகழ்வுகளின் அழிக்க முடியாத நினைவுகள்
இன்று வரை.
சில நேரங்களில் என மன அலைபேசியில் கபாலி
அழைப்பார். விரைவேன்; பார்ப்பேன்
;மகிழ்வேன்.
அதைத் தொடர்ந்து ஏதாகிலும் பிரச்சினை
வரும்;ஆனால் வந்த வேகத்தில்
மறையும்!
காலவேகத்தில் முதுமையின் கோடுகள் என்
உடலில் விழுந்து விட்டன;
ஆனால் கபாலியும் கற்பகமும் இன்னும் அதே
இளமையுடன் இருக்கின்றனர்; என்றும்
இருப்பர்!
சென்னையிலேயே இருந்தும் கூட அடிக்கடி
அவர்களைச் சென்று பார்க்க முடிவதில்லை,
ஆனால் என் மனத்தில் அவர்கள்
இருக்கிறார்கள்,என்னை
வழி நடத்துகி றார்கள்.
நண்பனாய்,வழிகாட்டியாய்,நல்லாசிரியனாய்…அனைத்துக்கும் மேல் என் தெய்வமாய் இருக்கிறார்கள்.
கற்பகாம்பாள் உடனுறை கபாலீச்வரா போற்றி!//
கபாலீஸ்வரரைப் போற்றிப் பாபனாசம் சிவன்
பாடிய மோகன ராகக் கீர்த்தனை ”கபாலி” எனக்கு மிகவும் பிடிக்கும்
தற்போது
லேடஸ்ட் கபாலிதான் எல்லார் எதிர்பார்ப்புமாக இருக்கிறது. சூப்பர்ஸ்டாரின் கபாலி
படம்தான் அது
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் கபாலிதான்.. ஐயா நீங்கள்.. த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்
நீக்குஆஹா! அருமை அய்யா! காபலிஸ்வரரில் ஆரம்பித்து, இந்த கபாலி யில் முடித்தது வெகு அருமை! கோடுகளை விட உங்கள் அனுபவ சுவடுகள் அற்புதமே அய்யா! நன்றி
பதிலளிநீக்குமிக்க நன்றி பூபகீதன்
நீக்கு''''ஆனால் கபாலி நான் சென்று படமே பார்த்ததில்லை என்ற பெருமை பெற்றது'''' ஹாஹாஹாஹ ரசித்தேன் ஐயா தங்களது கபாலியை நானும் அறிவேன் புகைப்படம் ஸூப்பர்
பதிலளிநீக்குநமது ஏரியாவில் பார்க்க முடியவில்லையே......
கபாலியை அறியாதவர் யார்?
நீக்குநன்றி கில்லர்ஜி
அருமை!.. அருமை!
பதிலளிநீக்குகபாலி பற்றி மிக அருமையாகக் கூறினீர்கள் ஐயா!
இந்தியா வந்தபோதெல்லாம் அந்தக் கபாலிஸ்வரரைக் கண்டு வந்திருக்கின்றேன்.
இனிவரும்போது நிச்சயம் வலையுலகக் கபாலியான உங்களைக் காணவேண்டும்!
வாழ்த்துக்கள் ஐயா!
த ம 3
என் அப்பன் கபாலி அருளால் நீங்கள் அடுத்தமுறை வரும்போது உங்களைக் காண வாய்ப்புக் கிட்டுன் என நம்புகிறேன்
நீக்குநன்ரிம்மா
என்னே என்னப்பன் கபாலியின் பெருமை..........அற்புதம்.
பதிலளிநீக்குகபாலின்னா சும்மாவா?
நீக்குநன்றி கும்மாச்சி
கபாலி நினைவுகள் ,உங்களிடம் சரக்கு காலி ஆகவில்லை நிறைய இருக்கிறது என்பதை உணர்த்துகிறது :)
பதிலளிநீக்குகருத்து புரிகிறது!
பதிலளிநீக்குஅதற்கு நன்றி
அருமை அருமை ஐயா
பதிலளிநீக்குநன்றி
தம +1
நன்றி ஜெயக்குமார்
நீக்குஇனிமையான நினைவுகள். வேறு வகையில் இந்தத் தலைப்பில் ஒரு பொருத்தம். கணினியில் சின்னதாக மதுரை மணியின் 'காண கண்கோடி' கேட்டுக் கொண்டே பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்தபோது தலைப்பு கண்ணில் பட்டதும், ஆஹா மோகன ராகம் என்று தோன்றியது!
பதிலளிநீக்குவழக்கம் போல தம +1
கபாலி..... தமிழ் இந்துவில் நீங்கள். வாழ்த்துகள் ஜி!
பதிலளிநீக்குதமிழ் இந்துவில் தங்கள் பதிவு தொடங்கி தாங்கள் சந்தித்த கபாலிகளைப் பற்றிப் பகிர்ந்த விதம் அருமையாக இருந்தது. சிவபெருமானைக் காணுங்கள் என்ற பொருள் நிலையில் தேவாரத்தில் கபாலி காண் என்ற சொல் பயன்பாட்டைக் காணமுடிகிறது.
பதிலளிநீக்குசென்னையில் உங்களுக்கு பிடித்த மற்றும் நீங்கள் அடிக்கடி செல்லும் இடம் மயிலை கபாலீஸ்வரர் கோவில் என்று தெரியும். கபாலீஸ்வரர் உடனுறை கற்பகாம்பாள் ஆகியோரின் பக்தனான தங்களை அறிந்தோ அறியாமலோ தமிழ் இந்துவில் பதிவர்களின் கபாலி என்று குறிப்பிட்டிருந்தாலும் பொருத்தமான பட்டமே. அடையார் அஜீத் என்ற பட்டப் பெயர் தங்களுக்கு நடிகர் அஜீத் திரை உலகில் இருக்கும் வரை இருக்கும். ஆனால் கபாலி என்ற பெயரோ காலம் காலமாய் தொடரும். எந்த ஒரு நிகழ்வையும் சுவாரஸ்யமாக பதிவிடும் தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குகபாலி பாலிப்பாய்!! இவர்கள் இருவருமே எங்களுக்கும் மிக மிக நெருங்கிய நட்புத் தம்பதிகள்! அழகான தம்பதியரைப் பற்றி அழகியலுடன் ஒரு பதிவு!
பதிலளிநீக்குகீதா: கபாலி ..மோஹனம்......நம்பிக் கெட்டவர் எவரையா .....திரு மயிலையின் இறைவனை..ஹிந்தோளம்...டிகேஜே அருமையாகப் பாடியிருப்பார் அட்சர சுத்தமாகத் தமிழ் புரியும்படி.....கற்பகம் அம்மாவின் பெயரிலும் பல பாடல்கள் உள்ளன இல்லையோ...
கீதா: கற்பகவல்லி நின் பொற் பாதங்கள் பிடித்தேன் ...அருமையான ராக மாலிகை...
பதிலளிநீக்கு