“வாமதேவரே!”
”யார்! மிருகண்டு
முனிவரா? என்னைத் தேடி வந்தது என் பாக்கியம்”
”வாமதேவரே!உங்கள்
குமாரி யாழ்தேவி பூப்படைந்து விட்டாளே;மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?”
“ஆம்!
என் தகுதிக்கேற்ற இடமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்”
“அது
விஷயமாகத்தான் வந்தேன். எங்கள் குல அன்பு மணி விளக்கான என் மகன் மார்க்கண்டேயனுக்கு உங்கள் மகளைப் பெண் கேட்டு
வந்தேன்”
திகைக்கிறார்
வாமதேவர்
“என்ன
வாமதேவரே? பதிலே இல்லை”
“மிருகண்டு
முனிவரே ! உங்கள் மகன் வரம் பெற்று மூன்று
ஆண்டுகளாயிற்று;இன்னும் எத்தனை காலம் சென்றாலும் அவன் பதினாறு வயதுச் சிறுவனாகவே
இருப்பான்! யாழ்தேவிக்குத் தற்போது வயது 15.
முப்பது ஆண்டுகள் கழிந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து
பாருங்கள்.என் மகளுக்கு 45 வயது;மார்க்கண்டேயனுக்கு அதே 16.கணவன் மனைவியாக
எப்படிச் சேர்ந்திருக்க முடியும்?காண்பவர்கள் நகைக்க மாட்டார்களா?”
மிருகண்டு
சோர்ந்து போகிறார்.
வாமதேவர்
தொடர்கிறார்”தப்பாக நினைக்க வேண்டாம்.உங்கள் மகனுக்குத் திருமணம் செய்யும் ஆசையை
விட்டு விடுங்கள்.அவன் என்றும், பிரம்மச்சாரியாய்த்தான் இருக்க முடியும்.ஒரு வேளை
உங்களைக் காட்டிலும் சிறந்த மகரிஷியாகவும் ஆகலாம்”
......
......
இப்படித்தான் எங்கும்;நண்பர்கள்
விலக,சிறுவர்கள் புறக்கணிக்க,கன்னியர் நகைக்க, வாழ்க்கை நரகமாகிறது
ஆண்டுகள் ஓடுகின்றன!
ஆண்டுகள் ஓடுகின்றன!
இதோ.....
என்றும் பதினாறாய் இளமை வரம் பெற்ற மார்க்கண்டேயன்
அன்றொருநாள்
சிவனெதிரே வந்தான்!
மோனத்
தவத்தில் ஆழ்ந்திருந்த முக்கண்ணன்
இரு
கண் திறந்தவனைப் பார்த்தான்.
”மகனே!
”மகனே!
”எங்கு
வந்தாய் ?என்ன புதுப் பிரச்சினை?”
பணிந்தான்
மார்க்கண்டேயன் பரமனை
“என்ன
வரம் தந்தீர்?ஏன் தந்தீர் இந்த வரம்?”
பதினாறு
வயது இது பரிதாப வயது
சிறுவனும்
இல்லை,நான் குமரனும் இல்லை
இங்கும்
இல்லை அங்கும் இல்லாத ஒரு சோகம்!
நண்பர்கள்
வளர்கிறார்கள்,மணம் புரிகிறார்கள்
தந்தையாகிறார்கள், பாட்டனாகிறார்கள்;
வேடிக்கை பார்த்தபடி நிற்கிறேன்
நான்!
வேடிக்கை பார்த்தபடி நிற்கிறேன்
நான்!
என்னிலும் மிக இளையவர் கூட
இன்று
குடும்பம் குழந்தை என்று
நன்கு
அழுந்தி விட்டனர் வாழ்க்கையில்.
பலர்
இறக்கின்றனர்,பலர் பிறக்கின்றனர்
வாழ்க்கை
வட்டம் சுற்றுகிறது
நான்
நிற்கிறேன் மையப் புள்ளியாய்!
மாற்றமும்
இல்லை,முன்னேற்றமும் இல்லை!
ஓடி
விளையாடச் சிறுவர்கள் மறுக்கக்
கூடிக் களித்திடக்
கன்னியரும் வெறுக்க
என்ன
செய்வேன் நான்?
என்ன
பயன் இந்த வாழ்க்கை
சாகா
வரம் ஒன்று தந்தீர்
என்றும் பதினாறாக
என்றும் பதினாறாக
ஆனால்
நானோ செத்துச் செத்துப் பிழைக்கிறேன்
வேண்டாம்
இந்த வரம்;அல்ல அல்ல சாபம்!
வாழவிடும்
என்னை!
சிரித்தான்
சிவ பெருமான்
பதினாறு
வயதிலேயே
பல்லாண்டு
கழித்த பின் வந்ததோ இந்த ஞானம்
பதினாறிலேயே
கழிந்த ஆண்டுகள் பத்தேழு!
தந்தேன்
அவற்றை உனக்கு.!
……………….
மார்க்கண்டேயன் கிழவனானான்!
மார்க்கண்டேயன் கிழவனானான்!
இப்படிக்கூட ஒரு சிக்கல் உள்ளதோ மார்க்கண்டேயனுக்கு. நல்ல சிந்தனைப் பகிர்வு.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.நலந்தானே?
நீக்குசிக்கல் எங்கும் என்றும் உள்ளது என்று புரிகிறது ஐயா...
பதிலளிநீக்குஉண்மைதான் தனபாலன்.
நீக்குநன்றி
அருமையான தகவல் அய்யா! வரம் வேண்டும்போது பின்விளைவுகளை அறியமாட்டார்களா???? நன்றி
பதிலளிநீக்குவரம் கிடைக்கும்போது மகிழ்ச்சி!
நீக்குபின்!
நன்றி பூபகீதன்
இந்தச் சிந்தனை அற்புதம் ஐயா!
பதிலளிநீக்குமிக மிக அருமை!
வாழ்த்துக்கள்!
கருத்துக்கு நன்றி இளமதி.
நீக்குவித்தியாசமான பார்வை. அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குமாற்று சிந்தனை...அருமை.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
நீக்குஇது கூட நல்லாதான் இருக்கு,,,,
பதிலளிநீக்குநன்றிங்க!
நீக்கு
பதிலளிநீக்கு‘கிடைத்ததை பற்றடா கீழைக்காட்டு சித்தா’ என்று சும்மாவா சொன்னார்கள். மார்க்கண்டேயன் சும்மா இருந்திருக்கலாம். ( திரு பார்த்தசாரதி அவர்களின் ஐயம் தீர்ந்திருக்கும் என எண்ணுகிறேன்).
நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள்!
‘மாற்றமும் இல்லை,முன்னேற்றமும் இல்லை!’ என நடக்கப்போவதை சொல்லிவிட்டீர்கள்! இரசித்தேன்!!
வரம் சாபமானதே!
நீக்குநன்றி அய்யா!
புதிய கோணத்தில் தங்களின் பார்வை
பதிலளிநீக்குஅருமை ஐயா
நன்றி
தம+1
நன்றி ஜெயக்குமார்
நீக்குஹாஹாஹா ரசித்தேன் ஐயா உள்ளதும் போச்சடா நொள்ளைக்கண்ணா என்று ஆகி விட்டதோ...
பதிலளிநீக்குஆம்!
நீக்குநன்றி கில்லர்ஜி
நல்ல தகவல் அய்யா!
பதிலளிநீக்குத ம 9
நன்றி செந்தில் குமார்
நீக்குஅட வரமே சாபமாக ம்..ம் அருமையான வித்தியாசமான சிந்தனை பாராட்டுக்கள் ...!
பதிலளிநீக்குநன்றி இனியா
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
வித்தியாசமான சிந்தனையில் எழுதியுள்ளீர்கள் படித்து மகிழ்நதேன் வாழ்த்துக்கள் ஐயா. த.ம10
எனது பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உன் நினைவுக் கீற்றுக்கள்:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குஅடடா! பாவம் கிழவனாகிவிட்டானே! அருமையான கதை!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குஎன்னடா பதினாறுக்கு வந்த சோதனை
பதிலளிநீக்குநன்றி அபயாஅருணா
நீக்குஆமாம்... மாற்றம் இல்லாத வாழ்க்கை போர் தான்! அதுவும் வயது ஏறாமல் இருப்பது கொடுமை! வரம் கிடைத்தாலும் சில நாட்களில் வரமும் சுமையாகிவிடுகிறது!
பதிலளிநீக்குநன்றி வெங்கட்
நீக்குஹாஹஹ்ஹ செம. நல்ல சிந்தனை சார். அதுவும் சரிதானே எப்போதும் 16 என்றால் ஹும்...நீங்கள் மார்கண்டேயரைக் கிழவனாக்கிவிட்டீர்கள் என்று சொல்லுங்கள்...ஆனால் எதையும் அனுபவிக்காமலேயே பாவம் சார்...ஹஹஹஹ்ஹ
பதிலளிநீக்குகீதா: ஐயையோ வயது அரைக்கிழம் ஆனால் நான் எப்ப பார்த்தாலும் அடிக்கடிச் சொல்லுவது "நான் ஸ்வீ......ட் 16 " ஆக்கும் என்று...செபிகிட்ட வந்தா என்னை இன்னும் கிழவியாக்கிவிடுவீர்களோ ஹஹஹாஹ்ஹ் வுடு ஜூட்....
நகைச்சுவை ததும்பும் பின்னூட்டத்துக்கு நன்றி,இருவருக்கும்.
பதிலளிநீக்குஅருமையான, வித்தியாசமான சிந்தனை!
பதிலளிநீக்கு