இதேபோல் இராமாயண இதிகாசத்தில் சிறிது டிங்கரிங் செய்து புதுமைப்பித்தன் அவர்கள் “சாப விமோசனம்” என்ற சிறுகதை ஒன்று எழுதினார்.
அற்புதமான கதை!
அந்தக் கதையைக் கவிதை வடிவில் தந்திருந்தேன் எனது பதிவில்,2011 இல்.
அதை மீண்டும் இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.
அகலிகை ஏன் கல்லானாள்?
--------------------------------
காத்திருந்தது அந்தக் கல் காலம் காலமாய்
சாத்திரம் போற்றும் நாயகன் காலுக்காய்
வேதமறிந்த முனிவன் தன் கோபத்தில்
பேதையின் நியாயம் மறந்து சபித்தனன்
இந்திரனின் வஞ்சகத்தால் மனம் கல்லாச்சு
சொந்த மணாளனின் சாபத்தால் உடலும் கல்லாச்சு!
வந்தான் ஒரு நன்னாளில் தசரதன் மைந்தனங்கு
தந்தான் மீண்டும் உரு பேதை அகலிகைக்கு
அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காய் வருந்தினான்
எவளுக்குமே இக்கதி வருவது தவறென்றான்.
ஆண்டுகள் பல கடந்தன,அகலிகை காத்திருந்தாள்
மீண்டும் அப்புண்ணியனைக் கண்களால் காண்பதற்கு
இலங்கையில் போர் வென்று திரும்பும் வழியினிலே
கலங்கிப் பின் மனம் தெளிந்த சீதையுடன் அங்கு வந்தான்
நடந்த நிகழ்வுகளைத் தனித்திருந்த போது வினவ
மடந்தை சீதையும் அனைத்தும் உரைத்தனளே.
தீக்குளித்த கதை கேட்டாள் அகலிகை உடலெல்லாம்
தீயினால் சுட்டது போல் கொடுந்துன்பம் எய்தினாள்
”இராமனா சொன்னான் உன்னைத் தீக்குளிக்க
இராமலே போனதோ நியாயம் அவனிடமும்
தன் மனைவி என்றதுமே நியாயம் வேறாயிற்றோ
என்ன கொடுமையிது ”என்றே அரற்றினாள்
கண் சிவந்தாள்,உள்ளம் மறுகினாள்,உடல் இறுகினாள்
பெண்ணவள் மீண்டும் கல்லாக மாறினாள்!
(கரு;புதுமைப் பித்தனின் ‘சாப விமோசனம்’ சிறுகதை)
இதுவும் சரி தான்...!
பதிலளிநீக்குநன்றி டிடி
நீக்குhttp://dindiguldhanabalan.blogspot.com/2015/10/Pudukkottai-Experience-1.html
பதிலளிநீக்குஅற்புதம்.
பதிலளிநீக்குபுதுமைப் பித்தனின் ஆன்மா புன்னகைப் பூத்திருக்கும்..
நன்றி மோகன் ஜி
நீக்குபுதுமைப் பித்தன் அவர்களின் மாறுபட்ட சிந்தனையில் உதித்த நல்லதொரு கதையை திரும்பவும் நினைவில் கொண்டு வர உதவிய தங்களின் கவிதைக்கு (மீள் பதிவாயினும்) பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குநன்றி சபாபதி சார்
நீக்குஅருமை அய்யா! கல் "லான கவிதை!
பதிலளிநீக்குநன்றி பூபகீதன்
நீக்குகதை கவிதை யானது அருமை. தாங்கள் கவிதையிலும் அசத்திவிட்டீர்கள்
பதிலளிநீக்குநன்றி முரளி
நீக்குஅருமையோ அருமை ஐயா!
பதிலளிநீக்குதங்கள் கவிதையும் மிகச்சிறப்பு!
வாழ்த்துக்கள்!
நன்றி இளமதி
நீக்குஅருமை அய்யா!
பதிலளிநீக்குத ம 6
நன்றி செந்தில்
நீக்குஅவ்வப்போது கவிதையும் வரட்டுமே!
பதிலளிநீக்குஉங்கள் ஆசியில் நடக்கட்டுமே!
நீக்குநன்றி ஐயா
அட! அவரது கதை இங்கு கவிதை செபியின் உபயம்! அருமையான உபயம்! எல்லாவற்றிலும் புகுந்து விளையாடுகின்றீர்கள் சார்..
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குசீதை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்பது ஆணாதிக்கவாதியாக ராமன் இருப்பதை அறிந்து அகலிகை கல்லானது சரியே :)
பதிலளிநீக்குசரிதான்
நீக்குநன்றி பகவான் ஜி
அருமையாக சொன்னீர்கள்! சிறப்பான கவிதை! நன்றி!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குகவிதை நன்று ஐயா...
பதிலளிநீக்குஅருமை.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்கு