தொடரும் தோழர்கள்

வியாழன், அக்டோபர் 08, 2015

கனிக்காகத் தொங்கியவன்!


நேற்று மாலை ஸ்வாமியை ஒருவர் காண வந்தார்.மிகவும் மன உளைச்சலில் இருப்பதாக அவர் முகமே சொல்லிற்று.அவரது அமைதியின்மைக்குக் காரணம் அவரது அச்சம்.எந்த செயலைச் செய்யும் முன்னும் அவர் இச்செயல் எப்படி முடியுமோ, தவறாகிப்  போனால் நம்மைப் பார்த்து எல்லோரும் நகைப்பார்களோ என்ற அச்சத்தின் காரணமாக அவரால் சரியாகச் செயலாற்ற முடிவதில்லை.


ஸ்வாமி அவரிடம் சொன்னது”உன் அச்சத்தை நீ விடாத வரை உன்னால் எதையும் செய்ய இயலாது.அச்சந்தவிர்.ஸ்வாமி உனக்கு ஒரு கதை சொல்லும் “. 


கதையைக் கேட்ட அவர் சிறிது மனம் தெளிந்தவராகக் காணப்பட்டார்


இதோ அந்தக்கதையை நீங்களும் கேளுங்கள்........


ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க்கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள்  இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சிலபழங்களைப் பறித்துத் தின்றான்.

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில்  இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்றபோது அவனது  எடை தாங்காமல் கிளை முறிந்து விட்டது.   விழாமல் அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்கலானான்

 
குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே அச்சத்தில் இருந்த அவன் மேலும் அஞ்சி,கண்களை மூடிக் கொண்டு"யாராவது காப்பாற்றுங்கள்' என்றுதிரும்பத் திரும்ப அலற  ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து  வழுக்கத் தொடங்கியது. 

தற்செயலாக  அப்போது அந்தப்பக்கம் ஒரு முதியவர்  வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். 


அவன்மேல் ஒருசிறிய கல்லை விட்டெறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்த வனுக்கு சினம் வந்தது."பெரியவரே, உதவச்சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில் லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறியகல்லை எடுத்து அவன்மேல் எறிந்தார். சினம் அதிகமான இளைஞன் பெரு முயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மை அடித்து நொறுக்கி விடுவேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒருகல்லை அவன்மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறிவிட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரிடம். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்று கேட்டு விட்டு அவரை இழித்துப் பேசினான்.


பெரியவர் அமைதியாகச்  சிரித்துக் கொண்டே"தம்பி..நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் ”உதவியா?கல்லால் அடிப்பது உதவியா?” எனக் கேட்டான். பெரியவர் விளக்கினார்.  "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ அச்சத்தில் உறைந்து போயிருந் தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான்கல்லை எறிந்ததும் அச்சம் மறையத் தொடங்கி என்னைப் பிடித்துத் தண்டனை தர வேண்டும் எனும் எண்ணம் வலுப்பெற்றது


நீ யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் அச்சம் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லிவிட்டுத் தன்வழியே அவர் போய்விட்டார்...


எனவே அச்சத்தை விட்டுத் துணிவுடன் செயலாற்றுங்கள். வெற்றி நிச்சயம்.

(ஸ்வாமி பித்தானந்தா) 



29 கருத்துகள்:

  1. வணக்கம் அய்யா! அருமை அய்யா! பல திறமை இருந்தும் பலர் வெளிச்சத்திற்கு வராததற்கு இந்த அச்சமும் ஒரு காரணம்! லாரன்சு நடித்த ஒரு படத்தில் இந்த காட்சி உண்டு! நன்றியய்யா!!

    பதிலளிநீக்கு
  2. அந்தக் கல் எங்கே இருக்கிறது என்று

    தேடுகிறேன்.



    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதற்கு?என் மீது எறியவா?ஏன் இந்தக் கொலவெறி?
      நன்றி ஐயா

      நீக்கு
  3. கதை நல்லாருக்கு. இதுனாலதான், உறவினர்களுக்கு ஜோஸ்யம் பார்ப்பதும், உறவினர்களுக்கு மருத்துவம் பார்ப்பதும் தவறாகவே முடிகிறது.

    உங்கள் ஆசிரம அட்ரெஸ் கொடுத்தால் பக்த கோடிகள் உணவு சமயத்தில் வருவதற்கு சௌகரியமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிரமத்துக்கான நேரம் இன்னும் வரவில்லை!யாராவது இனமாக ஐந்து கிரௌண்ட் நிலம் சென்னையில் கொடுத்தால் ஆரம்பித்து விடலாம்;சிஷ்ய கேடிகள்,மன்னிக்க ,கோடிகள்தான் உதவ வேண்டும்!
      நன்றி நெல்லைத் தமிழன்

      நீக்கு
  4. அச்சம் தவிர்க்க உதவிய பாங்கு அசத்தல்.நல்லதொரு பகிர்வுங்க அஜித்.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான குட்டிக்கதை! தங்கள் பாணியில் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. எப்போதுமே சாமியார்கள் கர்ணபரம்பரைக் கதையைத்தான் தங்கள் பாணியில் சொல்வார்கள்!
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  7. வணக்கம்
    ஐயா

    நல்ல கதை படித்துமகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம8

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. இன்று முதல் நானும் பித்தானந்தாவின் சிஷ்யகோடி :)

    பதிலளிநீக்கு
  9. அருமையான கதை! அது சரி அது யார் பித்தானந்தா சென்னைப்பித்தன் தானோ...அப்படினா எங்களுக்கு ஒரு துண்டு போட்டுடறோம் நு சொல்லுங்க..செபியிடம்..ஹஹ்

    பதிலளிநீக்கு
  10. கதையும் கவிதையும் தன்வசத்திற்கு வளைக்கத்தான் என்பதை அருமையாக விளக்கியுள்ளீர்கள். தங்களுக்காக தயார் செய்த வளையல் இது சுவாமிஜி.
    தொண்டு பல, வேண்டு சில
    கண்டு நினை, உண்டு மற
    இதைத் தொட்டு, தொடர்ந்து "தகுதியானவரிடம்" பரிசாய் அளித்தால் நன்றாக இருக்கும்.
    பரிசளிப்பீர்களா? அளித்தால் யாருக்கு கிட்டும் அந்த வளையல் சுவாமிஜி?

    பதிலளிநீக்கு