ஒரு
நாடு.
வறுமையில்
வருந்திப் பணவீக்கத்தால் தள்ளாடும் நாடு
மக்கள்
எல்லோருக்கும் ஏதாவது ஒரு கடன் பாக்கி
ஒருநாள்,ஒரு
பயணி அந்த நாட்டில் ஒரு ஊருக்கு வருகிறார்.
ஒரு
தங்கும் விடுதிக்குச் சென்று ஆயிரம் ரூபாயை மேலாளர் மேசை மீது வைத்து விட்டு,அறையைப் பார்த்து
விட்டு வருகிறேன் என்று போகிறார்.
அந்த
மேலாளர் அந்தப்பணத்தை எடுத்துச் சென்று விடுதிக்கு அரிசி கொடுத்தவனின் கடன் தீர்க்கிறார்
அவன்
அதை அரிசி மில்லுக்குக் கொடுத்துக் கடனைத் தீர்க்கிறான்.
அரிசி
மில்காரன் அதை விவசாயிக்குக் கொடுத்துக் கடனை அடைக்கிறான்
விவசாயி
அதை உரக்கடைக்காரனிடம் கடனுக்காக்கொடுக்கிறான்.
கடைக்காரன்
தன் பணியாளின் சம்பள பாக்கிக்காக அதைக் கொடுக்கிறான்
பணியாள்
அதே விடுதிக்குச் சென்று தன் சாப்பாட்டுக் கடனை அடைக்கிறான்
மேலாளர்
அதை மேசை மீது வைத்து விடுகிறார்!
இப்போது
அந்தப் பயணி திரும்பி வந்து அறை பிடிக்கவில்லை எனச் சொல்லி பணத்தை எடுத்துக் கொண்டு
போய் விடுகிறான்.
அவர்கள்
அனைவரும் கடன் தீர்ந்த மகிழ்ச்சியில் நாளையை நம்பிக்கையோடு எதிர் நோக்குகிறார்கள்.
இதுவே
இன்றைய,வணிகம்!
இன்றைய
பொருளாதாரம்!
கடன் தீர்ந்த மகிழ்ச்சியில் என்று சொல்வதை விட,
பதிலளிநீக்குகடனுக்கான வட்டியைக் கொடுத்துவிட்ட நிம்மதியுடன்
திரும்புவதே இன்றைய நிலை.
நாளைய வரவை இன்றே அனுபவிக்க நாம் தரும் கட்டணம் தானே வட்டி.
நியாயமானதாக இருக்கும் வரை நல்லது தான்.
சுப்பு தாத்தா.
நன்றி ஐயா
நீக்குஎல்லாருக்குமே கடன் தீருகிறது அதே சமயம் தீரவும் இல்லை! அருமையாக எளிமையாக சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குஇன்றைய பொருளாதாரத்தை
பதிலளிநீக்குஎளிமையாய் விளக்கியவிதம் அருமை
நன்றி ரமனி
நீக்குவணக்கம் அய்யா! பணத்தை நாம துறத்துறமா! இல்ல அது நம்மல துறத்துதா! அருமை நல்ல தத்துவம் அய்யா!
பதிலளிநீக்குநன்றி பூபகீதன்
நீக்குவாவ்.. பத்து வரியில் ஓர் மிகப்பெரிய விஷயத்தை அசால்ட்டாக சொல்லீட்டீங்க.
பதிலளிநீக்குநன்றி ஆவி
நீக்குஎன்னவொரு சுற்று...! உண்மை நிலை (நிலைமை...!)
பதிலளிநீக்குநன்றி தனபாலன்
நீக்கு20 நொடிகளில், 2 மணி நேர தரமான திரைப்படத்தை காண்பித்துவிட்டீர்கள். அருமையான சிந்தனை, அழகான கோர்வை.
பதிலளிநீக்குஅற்புதமான விளக்கம்.
மிக்க நன்றி
நீக்குமதிப்பு எதுவும் கூட்டப் படாமலே பணம் ஏகத்துக்கும் கைமாறி அவரவர் தேவையைப் பூர்த்தி செய்யும் மாய பிம்பம்
பதிலளிநீக்குவிடயம் நன்று ஐயா
பதிலளிநீக்குகொடுத்த பணத்தை திரும்ப வாங்குவதற்குள் எல்லாருக்கும் கடன் தீர்கிறது... நல்ல கதை ஐயா...
பதிலளிநீக்குகைக்கு கை மாறும் பணமே :)
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கிறியள்
பதிலளிநீக்குநல்வழி காட்டல்
தொடருங்கள்
http://www.ypvnpubs.com/
சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள். நாம் கொடுத்தது நமக்குத் திரும்பி வரும்வரை சரிதான்!
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஸார்.
பதிலளிநீக்குWhat is probably known as Multiplier effect ....
பதிலளிநீக்குஒரு சிக்கலான விஷயத்தை ஒரு சிறு எடுத்துக்காட்டு மூலம் விளக்கியமைக்கு நன்றி! கலைவாணர் அவர்களும் இதுபோன்று ஒரு திரைப்படத்தில் (பணம்?) சொல்லியிருப்பார்.
பதிலளிநீக்குபணம் என்னும் மாயை..... பெரிய விஷயத்தினை சிறிய பகிர்வு மூலம் எடுத்துரைத்தது நன்று.
பதிலளிநீக்குஅட! அருமையான ஒரு சுற்று..பரவாயில்லை யாரும் இந்தச் செயின் சுற்றில் பாக்கி வைக்கவில்லை. யார் கையையும் கடிக்கவும் இல்லை...இப்படித்தான் பணம் புழங்குகின்றது...அருமை...
பதிலளிநீக்கு