//காதலிலே
தோல்வியுற்றான் காளையொருவன்
கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான்? காலம்
கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான்?
கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான்? காலம்
கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான்?
அன்பு மயில்
ஆடலுக்கு மேடையமைத்தான்
துன்பமெனும் நாடகத்தை கண்டு ரசித்தான்
இன்பத்தினை விதிக்கு இரை கொடுத்தான்
இருந்தும் இல்லாத உருவெடுத்தான் //
துன்பமெனும் நாடகத்தை கண்டு ரசித்தான்
இன்பத்தினை விதிக்கு இரை கொடுத்தான்
இருந்தும் இல்லாத உருவெடுத்தான் //
கல்யாண பரிசு படத்துக்காக
பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல்.
கடைசி வரி”இருந்தும் இல்லாத உருவெடுத்தான்” என்னை சிந்திக்க வைத்தது
சில பேரை எப்படி இருக்கீங்க
என்று கேட்டால் சொல்வார்கள்”ஏதோ உயிரோட இருக்கேன்”.
இருக்கிறார்கள்;அவ்வளவே
இருக்கிறார்கள்;அவ்வளவே
இருப்பது வேறு வாழ்வது வேறு
அவன் வாழ்வில் இழந்ததுதான்
எத்தனை?
காதலித்த பெண்ணின்
அவசர புத்தியால் படிப்பை இழந்தான்.
காதலியின் சகோதரி
ஆசையால் தன் காதலை இழந்தான்
மனைவியின்
சந்தேகத்தால் நிம்மதி இழந்தான்;
மீண்டும் அவள்
கிடைப்பாள் என்று எண்ணும்போது அவளையும் இழந்தான்.
இழப்பதற்கு எதுவுமே
இல்லை என்ற நிலையில் அவன் வாழ்வில் என்ன இருக்கிறது?
அவன் கோழை
அல்ல,தற்கொலை செய்து கொள்ள!
ஆனால் இனி வாழ
மாட்டான்
இருப்பான்
இருந்தும்
இல்லாதவனாக!
மன்மதனும் இருந்தும்
இல்லாமல் போனவன்தானே?
பஞ்ச மலர்க்கணைகளை
பரமன் மீது தொடுத்துப் பரமனின் நெற்றிக்கண் பார்வையால் சாம்பலாகிப் பின் உயிர்
பெற்று மனைவிக்கு மட்டுமே தெரியும் வரம் பெற்றவன்
எனவே இருந்தும்
இல்லாதவன்!
இறைவனை இருக்கிறான்
என்று சொல்வோரும் உண்டு;இல்லையென்று சொல்வோரும் உண்டு.
அவன் எங்கும்
நிறைந்தவன்; நிறைந்து இருப்பவன்.
அவன் இருக்கிறான் என்று நம்புபவர்கள் கூட அவனைக் காண முடிவதில்லை!
அவர்களுக்கும் அவன் இருந்தும் இல்லாத உருவெடுத்தவனாக இருக்கிறான்
அவன் இருக்கிறான் என்று நம்புபவர்கள் கூட அவனைக் காண முடிவதில்லை!
அவர்களுக்கும் அவன் இருந்தும் இல்லாத உருவெடுத்தவனாக இருக்கிறான்
அவன் நம்முள்ளே இருக்கிறான்
என்பதை உணர்ந்தவர் எத்தனை பேர்?
அங்கு இருக்கிறான்,இங்கு உறைகிறான் என்று அங்கும் இங்குமாய் அலைபவர்தாம் எத்தனை?
திருமூலர்
சொல்கிறார்.....
”மாடத் துளானலன் மண்டபத் துளானலன்
கூடத் துளானலன் கோயி லுளானலன்
வேடத் துளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத் துளேநின்று முத்திதந் தானே”--
இறைவனிடம் என்ன வேண்டிக் கொள்கிறோம்.? இன்னும் காடு,கழனி
வாங்க வேண்டும்,சொத்து பெருக வேண்டும் இது போன்ற உன் பல ஆசைகளைப்
பூர்த்தி செய்ய வேண்டும் என்றுகேட்கிறோம் அல்லவா?. அனைவருமே
அப்படித்தான். ஆனால் இறைவன் நம் வீட்டு மாடத்திலும் மண்டபத்திலும், கூடத்திலும், கோவிலிலும்,வேடம் அணிந்த
ஆஷாடபூதிகளிடமும் இல்லை. ஆசையை விட்டவர் யாரோ அவருடைய நெஞ்சத்தில் இருக்கிறான்.
நெஞ்சம் என்பது ஆசைகளால் நிரம்பியிருந்தால் அந்த ஆசைகள் மூலம் வரும் மற்றவை--கோபம், பொறமை, வெறுப்பு இப்படிப் பலவும்- நிரம்பி அதனால் ஏற்படும் குப்பைகளும் சேர்ந்து
நிரம்பியிருக்கும்.ஏற்கனவே நிரம்பியிருக்கும் ஒரு இடத்தில் எப்படி வேறு ஏதாவது புக
முடியும்.எனவே மனதை ஆசைகளற்றுத் தூய்மை யாக வைத்துக் கொண்டால் அந்தக் காலி
இடத்தில் இறைவன் அமர்ந்து கொள்வான்”
ஆம்!அவன் இருக்கிறான்!ஆனால் இருந்தும்
இல்லாதவனாக இருக்கிறான்!
டிஸ்கி:நேற்று நண்பர் பார்த்தசாரதி பாடலின் இந்த வரியைக்
குறிப்பிட்டு,எவ்வளவு அருமையான வரி;இதை
அடிப்படையாக வைத்து ஏதாவது எழுதுங்கள் என்றார்.ஏற்றுக் கொண்டேன்.விளைவு இப்பதிவு!
இப்படி எதையாவது சொல்லி உசுப்பேத்தி
விடறாரு அவர்!
நண்பர் பார்த்தசாரதிக்கு மிக்க நன்றி! இல்லையென்றால் இத்தனை சிறப்பான பதிவு கிடைத்திருக்குமா? ஒரு பாடலின் வரிகளை வைத்து இத்தனை விளக்கங்களை உங்களால் தரமுடிவது கண்டு வியக்கிறேன்! அருமை! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉங்கள் வழ்த்துகள் எனக்கு ஊக்கம் தருவன.
நீக்குநன்றி சுரேஷ்
(பார்த்தசாரதிக்குச் சொல்லி விட்டேன்!)
வணக்கம் அய்யா! இந்த பாடலை கேட்டதுகூட இல்லை! ஆனால் தங்கள் விளக்கத்தால் கேட்க ஆசை வருகிறது! அனுபவ சிறப்பான விளக்கம்! நண்பருக்கு நன்றிகள்!
பதிலளிநீக்குநன்றி அய்யா!!!
பாடல் காட்சியையும் பாருங்கள்.ஸ்ரீதர் கலங்க வைத்திருப்பார்
நீக்குநன்றி பூபகீதன்
அருமையான அற்புதமான பதிவு சார். வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குமிக்க நன்ரி சாரதாம்மா
நீக்குஅருமையாகச் சொன்னீர்கள்
பதிலளிநீக்குபடத்தின் இடைவேளையில்
இருவரும் பிரிகையில் கன்னியொருத்தி என
முடியும்படி பாடல் இருக்கும்
இதைக் கூட பட்டுக் கோட்டையார் சொல்லிச்
செய்ததாக ஸ்ரீதர் சொல்லியதாக நினைவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
ஆம்!பெண் குரல் பாடல் அது! பாடல் காட்சிகளைப் படமாக்குவதில் ஸ்ரீதர் முத்திரை பதித்தவர்
நீக்குநன்றி ரமணி
விளக்கம் அருமை! உண்மை!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா
நீக்குநல்ல கருத்தை முன் வைத்தீர்கள் ஐயா அருமை.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி கில்லர்ஜி
நீக்குபட்டுக்கோட்டையார் பாடலில் தொடங்கி திருமூலர் வரை. ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குஅருமையான விளக்கம்
பதிலளிநீக்குநன்றி பாரதி
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
இறுதியில் சொல்லி முடித்த விதம் சிறப்பு ஐயா த.ம 9
தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டி கலந்து கொள்ளுங்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குபோட்டிகளுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்!
அகாலமாய் மறைந்திராவிட்டால் பட்டுக் கோட்டையின் சாதனை எவ்வளவாய் இருந்திருக்கும் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ”இருந்தும் இல்லாத உருவெடுத்தான்” எனும் ஒரு வரிக்கு திருமூலரைக் கூட ஜமா சேர்த்துக் கொண்டு ஜமாயத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஇப்படியான வைர வரிகளை வைத்து இன்னமும் சில பதிவுகள் எழுதுங்கள் .
பட்டுக்கோட்டை தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்து விட்டவர்’அந்த சிம்மாசனத்தை பின் வந்த எவரும் தொடக்கூட இல்லை என்பதே என் கருத்து
நீக்கு//இப்படியான வைர வரிகளை வைத்து இன்னமும் சில பதிவுகள் எழுதுங்கள் //
ஆகா! முடிந்தால் அது என் பாக்கியம்!
நன்றி மோகன் ஜி
உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது ஒரு வரியை வைத்து இப்படி எழுத முடியுமா என்பது இது போன்ற பகிர்வுகள் தொடர வேண்டும் என்பதே என் விருப்பமும்.
பதிலளிநீக்குநன்றி சசிகலா.உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற நிச்சயம் முயற்சி செய்வேன்
நீக்கு‘ஒரு வரியை வைத்து இப்படி எழுத முடியுமா?’ என்று திருமதி சசிகலா அவர்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறார். திரு சென்னை பித்தனால் முடியாததுண்டோ? என் வயதொத்த ‘இளைஞர்களுக்கு’ பிடித்த படமான கல்யாண பரிசில் இடம் பெற்ற பாட்டில் வரும் வரியான இருந்தும் இல்லாதவனைப்பற்றி இவ்வளவு விளக்கமாக வேறு யாரால் சொல்லமுடியும்.பாராட்டுக்கள் திரு சென்னை பித்தன் அவர்களே!
பதிலளிநீக்குஅன்பின் மிகுதியால் பாராட்டும் மிகுந்து விட்டது!
நீக்குநன்றி ஐயா
அடுத்து ,இருந்தும் இல்லை என்று போனால் ஊரென்ன சொல்லும் என்ற வரிகளைப் பற்றி சிந்திக்க வேண்டுகிறேன் :)
பதிலளிநீக்குஇது வேறயா?ஏதாவது இருக்கறதாச் சொல்லக்கூடாதோ?
நீக்குநன்றி பகவான்ஜி
நல்ல பதிவு சார், ஒரு வரியைப் பிடித்துக்கொண்டு அற்புதமாக ஆன்மிகம் வரை எழுதிவிட்டீர்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்ரி கும்மாச்சி!
நீக்குபார்த்த சாரதி ஓர் அருமையான பதிவுக்கு சாரதி ஆகிவிட்டார்
பதிலளிநீக்குபார்த்தசாரதிக்கு ஒரு ஓ போடுங்க!!! நல்ல நண்பர் உங்களை உசுப்பேத்துபவர்...ஒரு வேளை அவர்தான் உங்கள் மனமோ?!! நம் மனம் தானே நம்மை உசுப்பேத்துவதும், எழுத வைப்பதும் ...அந்த மனமும் மூளைதானே....செபி அண்ட் பாசா சேம்??!! ஹஹஹ்
பதிலளிநீக்குஅந்தப் பார்த்தசாரதிக்கும் செபி க்கும் மிக்க நன்றி...ஏன் பட்டுக்கோட்டையில் ஆரம்பித்து திருமூலரிடம் கொண்டு சேர்த்ததற்கு....அருமை அருமை...
ரொம்ப அழகாக எழுதுகின்றீர்கள் ஐயா. பல சமயங்களில் நீங்கள் எல்லோரும் தூண்டுகோலாகவும்...சற்று பொறாமை (நல்ல பொறாமை...) எழவும் செய்கின்றீர்கள்...உங்களைப் போன்றெல்லாம் எழுத முடியவில்லையே என்று....ஹஹ்