தொடரும் தோழர்கள்

வெள்ளி, அக்டோபர் 02, 2015

காந்தியை மறக்கவில்லை!








காந்தியை மறக்கவில்லை நாங்கள்!

ஊழல் தலை விரித்தாடுகிறது

கையூட்டு கரை புரண்டு ஓடுகிறது

ஆனாலும்

காந்தியை மறக்கவில்லை நாங்கள்

கைமாறும் ஒவ்வொரு நோட்டிலும்

காட்சி தந்து அவர் சிரிக்கையில்

எப்படி மறக்க முடியும் எங்களால்?!

இதையெல்லாம் பார்த்து  

வெட்கி வேதனைப்பட்டு அவர்

முகத்தைத் திருப்பிக் கொள்ள வேண்டாமோ?!

பார்த்துச் சிரித்துக் கொண்டே இருக்கிறாரே

என்ன மனிதர் இவர்?

ஓ! அவர் மகானோ! 

அதை மறந்தே போனோம் நாங்கள்!




பாழ்பட்டு நின்ற தாமோர்
     பாரத தேசந் தன்னை 
வாழ்விக்க வந்த காந்தி
     மஹாத்ம!நீ வாழ்க! வாழ்க!

 

40 கருத்துகள்:

  1. அவரை இன்றாவது நினைவு கூர்வோம் ஐயா

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அய்யா! காந்தி மகானை பற்றிய கவிதை அருமை!
    என்ன மனிதர் இவர்?

    ஓ! அவர் மகானோ!

    அதை மறந்தே போனோம் நாங்கள்!

    உண்மை! நன்றி

    பதிலளிநீக்கு
  3. ஓ இவர் தான் மகானோ? சூப்பருங்க ஐயா.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா
    நினைவு கூர்ந்த விதம் சிறப்பு ஐயா..வாழ்த்துக்கள் த.ம 4
    எனதுபக்கம் பத்திரிகை தகவல் கவிதை அனைத்தையும் கண்டு கழிக்க வாருங்கள்
    Jரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நீ தந்த பிரியம்.:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. போட்டிக்கு எழுதப்பட்டதா. மகான்கள் விருப்பு வெறுப்பு அற்றவர்கள்.
    கவிதை நன்றாக உள்ளது.

    ஜெயகுமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தப்போட்டிக்கும் எழுதப்படவில்லை;இது காந்தி பிறந்தநாளுக்காக!
      நன்றி

      நீக்கு
  6. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்! ஐயா!

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. தேசம் இருக்கிறது;காந்தி இல்லை!
      நன்றி தமிழ் இளங்கோ ஐயா

      நீக்கு
  8. மகாத்மா பார்த்துவிடுவாரோ என்ற பயத்தில்தான் பணத்தாட்களை மடித்து வாங்குகிறார்களோ? அருமையான கவிதை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் இருக்கும் நோட்டுக் கூட மடித்திருந்த நோட்டுதான்!
      நன்றி ஐயா

      நீக்கு
  9. கவிதை அற்புதம் சார். எனது பதிவான காந்தி ஜெயந்தியை பார்வையிட வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  10. காந்தியை மட்டுமல்லாமல், சாஸ்திரியையும், காமராஜரையும் கூட நினைவு கூர வேண்டிய நாள் இன்று!

    பதிலளிநீக்கு
  11. உணர்வுகளை மிக அழக்காக காட்டி உள்ளீர்கள் ஐயா அருமை !
    காந்தியை நினைவில் கொள்வோம் .

    பதிலளிநீக்கு
  12. காந்தி பிறந்த நாளில் கனன்றிட்ட கவிதை மிகச் சிறப்பு ஐயா!
    அண்ணலின் நினைவுகளுடன் வாழ்த்துக்கள்!

    த ம +1

    பதிலளிநீக்கு
  13. காந்தியை நினைவில் கொள்வோம்...
    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  14. ரூபாய் நோட்டில் தன் படம் வருவதைக் கூட விரும்பி இருக்கமாட்டார் ,காந்திஜி உயிரோடு இருந்தால் :)

    பதிலளிநீக்கு
  15. ரூபாய் நோட்டில் மட்டும் வாழராறு காந்தி என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. அருமை ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோட்டில் இருப்பதால்தான் காந்திக்கு மதிப்பு!
      நன்றி முரளி

      நீக்கு
  16. காந்தியா??!! யாரப்பா அது? நல்ல டமாசுப்பா....எங்கேயோ எப்போதோ காந்தினு ஒரு இங்கிலீசு படம் பார்த்த ஞாபகம்....அவரு இந்த ஊருதானா? ம்ம்ம் அமெரிக்காகாரர்னு நினைச்சுட்டோம் அங்கயும் சிலை இருக்குதாம்ல....ஆமாம் வருஷத்துக்கு ஒரு முறை இவருக்கு மாலை எல்லாம் போடுறாங்களே..போட்டு ஃபோட்டோ, செல்ஃபி எல்லாம் எடுத்துக்கறாங்களே....தினம் தினம் அவர் மரித்துக் கொண்டிருப்பதாலோ....

    கவிதை அருமை ஐயா....

    பதிலளிநீக்கு