தொடரும் தோழர்கள்

சனி, நவம்பர் 26, 2011

அப்படிப் போடு!

சூப்பர் மார்க்கெட்டில் காய்கறிப் பகுதியில் இருந்த பையனிடம் ஒரு பெரியவர் வந்தார்.

“ஒரு அரைக்கட்டு பாலக் கீரை வேண்டும்”என்றார்.

பையன் சொன்னான்”ஒரு கட்டாகத்தான் வாங்க வேண்டும் .அரைக் கட்டெல்லாம்  விற்பதில்லை.”

அவர் கேட்கவில்லை.பையனிடம் தகராறு செய்தார்,

பையன் பார்த்தான்.”நான் போய் மேலாளரைக் கேட்டுச் சொல்கிறேன்” என்று  சொல்லி மேலாளர் அறைக்குப் போனான்.மேலாளர் ஒரு பெண்.

“ மேடம், ஒரு கிழட்டு முட்டாள் வந்து அரைக்கட்டுக் கீரை கேட்டுக் கழுத்தறுக் கிறான்” என்று சொல்லி விட்டுத் திரும்பிப் பார்த்தான்.அந்தப் பெரியவரும் அவன் பின்னாலேயே அங்கு வந்திருந்தார்.

பையன் மேலாளரிடம் சொன்னான்”மேடம்,மீதிப்பாதியை இந்தப் பெரியவர் வாங்கிக் கொள்கிறாராம்.”

மேலாளர் புரிந்து கொண்டு அரைக் கட்டுக் கொடுக்கச் சொல்லி விட்டார்.

சிறிது நேரம் கழித்து மேலாளர் பையனைக்கூப்பிட்டார்.

“மிகப் புத்திசாலித்தனமாக நிலைமையை சமாளித்தாய்.உனக்கு எந்த ஊர்?

“இல்லாதபுரம்”என்றான் சிறுவன்

(நான் ஏதாவது ஊர்ப் பேரைச் சொல்லி யாரிடமாவது வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாமே!)

”ஏன் ஊரை விட்டு வந்தாய்”மேலாளர்

“அங்கே  இருக்கிறவரெல்லாம் ஒண்ணு  அலுவகத்தில் நல்ல வேலையில் இருக்கிறார்கள்,  இல்லை பொறுக்கியாய்  ஊர் சுற்றுகிறார்கள்”

“அப்படியா?என் கணவர் அந்த ஊர்தான்”என்றார் மேலாளர்.

பையன் கேட்டான்”எந்த அலுவலகத்தில் வேலை பார்த்தார்?”

52 கருத்துகள்:

  1. நல்லா இருந்துச்சுங்க... மால்குடி என்ற ஊரை பற்றி கேள்வி பட்டிருக்கீங்களா? இல்லாதபுரம் பக்கத்தில இருக்கும்

    பதிலளிநீக்கு
  2. சமாளிப்பிகேசன் அப்பிடின்னு சொல்றாங்களே அது இதுதான் போலிருக்கு ,ஹா ஹா ரசித்தேன் ,

    பதிலளிநீக்கு
  3. தமிழ் மணம் இணைக்க வில்லையா ஐயா ?

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வு... சமாளிப்பு பிரமாதம்....

    பதிலளிநீக்கு
  5. ஹா ஹா ஹா ஹா கொஞ்சமா சொன்னாலும் சும்மா ஜிவ்வுன்னு இருக்கு தல....!!!

    பதிலளிநீக்கு
  6. இரவு வணக்கம்,ஐயா! அந்தப் பெரியவர் நீங்க இல்லியே?ஹி!ஹி!ஹி!பையன் வேலையைக் காப்பாத்திட்டான்!

    பதிலளிநீக்கு
  7. இல்லாதபுரத்துக்காரர்
    சாம்ர்த்திய சாலிதான்..

    மீதிப் பாதியை வைத்தே சமாளிக்கத்தெரிகிறதே !

    //பையன் கேட்டான்”எந்த அலுவலகத்தில் வேலை பார்த்தார்?”///

    அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. பேசுவது எல்லோருக்குமே வரும்
    ஆனால் சமயத்தில் இதுபோல் சமாளித்தல் என்பது
    சிலரால்தாம் முடியும்
    அருமையான பதிவு
    த.ம 8

    பதிலளிநீக்கு
  9. அந்த பையன் எந்த ஊரிலிருந்து வந்திருப்பான் என எனக்குத்தெரியும். ஆனால் சொல்லமாட்டேன். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  10. ம்.. நல்லாதான் இருக்கு..!! பகிர்வுக்கு நன்றி..!!

    பதிலளிநீக்கு
  11. இல்லாதபுரம் இதுவரை எவரும்
    செல்லாத சொல்லத புரம்
    அருமை!

    த ம ஓ 14

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  12. பையன் ரொம்ப விவரமான ஆள்தான்! நன்று.

    பதிலளிநீக்கு
  13. @வே.நடனசபாபதி
    ரகசியமாய்ச் சொல்லுங்கள்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஐயா,
    நலமாக இருக்கிறீங்களா?

    டைம்மிங் காமெடியோடு கூடிய நகைச்சுவைப் பேச்சுக் கலந்த
    கதையினைத் தந்திருக்கிறீங்க.

    ரசித்தேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  15. Presence of mind என்று கூறுவார்களே அது இது தான் . நான் என்றோ படித்த ஒரு சம்பவம் ஒன்றினை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
    ஞாபக மறதி அதிகமாக உள்ள ஒரு பேராசிரியர் திருமண ஆனா புதிதில் தேன்நிலவு கொண்டாட சென்றார் . திரும்பி வர விமான நிலையம் வந்தார்கள் .
    தனக்கு திருமணம் ஆனதே அவருக்கு மறந்துவிட தனக்கு மட்டும் ஒரு ticket எடுத்தார் . வெகுண்டு எழுந்த புது மனைவி " என்ன தேன் நிலவு முடிந்த பின் என்னையே மறந்து விட்டீர்களா " என்று கேட்டார் . நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்ட பேராசிரியர் மிகவும் சாதுர்யமாக , " Honey , என்ன விந்தை பார்த்தாயா ...நீ அருகில் இருக்கும் பொது நான் என்னையே மறந்து விட்டேனே ! " என்றார் ..எப்படி !
    அது சரி அந்த மேலாளர் அவர்களின் கணவர் நல்ல வேலையில் இருப்பவரா அல்ல பொறுக்கியா?! வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  16. @PUTHIYATHENRAL,

    யார் தேச துரோகி , வெளிநாட்டு கிறிஸ்தவர்களுடன் சேர்ந்துகொண்டு, இந்தியாவுக்கு எதிராகவும், தேச வளற்சிக்கு எதிராகவும் போராடும் மக்களா, அதை சப்போர்ட் செய்யும் உங்களைப்போன்ற முஸ்லிம்களா. இல்லை மற்றவர்களா?

    பதிலளிநீக்கு
  17. @PUTHIYATHENRAL, இந்த புதிய தென்றல் என்னும் தளம் முஸ்லிம்களால் நடத்தப்படுவது. ஹிந்துக்களுக்கு எதிரானது. இந்தியாவை துண்டாட துடிக்கும் அரேபிய கைகூலிகள் நடத்தும் தளம். அதை புறக்கணிக்கவும்.

    பதிலளிநீக்கு
  18. அந்த சின்னப் பையன் நீங்களா?...அப்போ எல்லாரும்
    சொன்னதுபோல் நீங்கதான் புத்திசாலி .பாராட்டுக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .....

    பதிலளிநீக்கு
  19. எல்லா ஓட்டும் போட்டாச்சு வாழ்த்துக்கள் ஐயா ..

    பதிலளிநீக்கு
  20. சமாளிப்பு பிரமாதம்... வாழ்த்துக்கள்...தொடர்ந்து கலக்குங்க...

    பதிலளிநீக்கு