தொடரும் தோழர்கள்

சனி, நவம்பர் 05, 2011

நிழல் நிஜமாகிறது!

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்த் திரைப்படம் வந்தது அதன் பெயர்- தமிழ் இல்லை, இந்தி—தோஸ்த்.ரகுவரன்,சரத்குமார் நடித்தது.அதில் இன்சூரன்ஸ் பணத்துக்காக ரகுவரன் ,சரத்குமாரால் கொல்லப்பட்டது போல் ஒரு நாடகம் போட சரத்குமாருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்படுகிறது. விடுதலையாகி வரும் சரத்,ரகுவரனைப் பார்த்துவிட்டு  உண்மையைப் புரிந்து கொண்டு கடைசியில் தண்டனை கொடுத்த நீதிபதி முன்பே ரகுவரனைக் கொன்று விடுகிறார்.கேள்வி-ஒரே குற்றத்துக்கு இரண்டு முறை தண்டிக்க முடியுமா?


  ஓரளவுக்கு இது போல் ஒரு நிகழ்ச்சி உ.பி யில் நடந்திருக்கிறது.ஒருவரைக் கொன்றதாக மூன்று பேருக்கு செஷன்ஸ் நீதி மன்றம் ஆயுள் தண்டனை  வழங்க மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதி மன்றம், தண்டனையை  உறுதி செய்தது. அவர்கள் தண்டனை பத்தாண்டுகள் முடிந்து விட்ட நிலையில்,கொலை செய்யப் பட்டதாகக்  கருதப்பட்ட நபர் உயிரோடு திரும்பி வந்து, தான் இத்தனை ஆண்டுகள் இமாசலப் பிரதேசத்தில் வேலை பார்த்து வந்ததாகச் சொல்லியிருக்கிறார்.இப்போது அவர்கள் ஜாமீனில்(!)  விடப்பட்டிருக்கின்றனர்.மூவரும் உச்ச நீதி மன்றத்தில் தலா ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

 கம்பிகளுக்குப் பின் கழித்து விட்ட பத்தாண்டுகளை யாராலாவது திருப்பித்தர இயலுமா? ஆயுள் தண்டனைக்குப் பதிலாக மரண தண்டனை கொடுத்திருந்தால்? போன உயிரைத் திருப்பி வரவழைக்க முடியுமா?மரணதண்டனை என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு இந்த  ஒரு காரணம் போதாதா?

சொல்லுங்கள்!


42 கருத்துகள்:

  1. உண்மைதாங்க....


    குற்றவாளிகளுக்கு தண்டனைகள் தரலாம்....

    ஆனால் தண்டனை கொடுத்து ஒரு வரை குற்றவாளியாக்கிவிட கூடாது...

    உண்மையின் இது வன்மையாக கண்டிக்ககூடியது..

    பதிலளிநீக்கு
  2. இது வருந்தத்தக்கவிடயம்...அந்த மூவறும் இழந்துவிட்ட 10 வாழ்க்கையை திருப்பி அளிக்கமுடியாது சம்மந்தப்பட்டவர்களால்

    பதிலளிநீக்கு
  3. மரண தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனை தரலாம்...
    சரிதான்..
    குற்றங்களையும் குற்றவாளியையும் சரியான முறையில்
    குறுக்குவழியில் செல்லாது ஆராய்ந்து
    தீர விசாரித்து நீதி வழுவாது
    தண்டனைகள் இருக்க வேண்டும்.....

    பதிலளிநீக்கு
  4. அதுவும் ஜாமினிலா விட்டிருக்கிறார்கள்? நல்ல நீதி ஐயா இது!

    பதிலளிநீக்கு
  5. சிந்திக்க வேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு. இது நம் நாட்டு காவல் துறையின் ‘சீரிய’ பணியின் இலட்சணத்தைக் காட்டுகிறது. சிறையில் தங்களது சுதந்திரத்தையும், இளமையையும் கழித்த, அந்த அப்பாவிகளுக்கு அவைகளைத் திருப்பித்தர முடியாதது தான்.ஆனால் இந்த தண்டனைக்கு காரணமானவர்களைத் தண்டித்து இது போல் இனி நடக்காதிருக்க செய்யலாமே?

    பதிலளிநீக்கு
  7. அவலம்...

    இதன் பின்னணியில் பணம் படைத்த ஒரு நிலச்சுவாந்தார் இருந்ததாக நாளிதழில் படித்தேன்...

    எது உண்மையோ, அந்த மூன்று பேருக்கும் வாழ்வின் இனிய 10 வருடங்கள் சிறையில் அழிந்ததுதான் மிச்சம்.....

    பதிலளிநீக்கு
  8. நம் மனசாட்சியைவிட பெரிய தண்டனை தரும நீதிபதி உயர் நீதிமன்றத்தில் கூட கிடையாது என்று நான் எண்ணுகிறேன் அன்பரே..

    பதிலளிநீக்கு
  9. அன்பு நண்பரே...

    தங்கள் கருத்துடன் தொடர்புடைய..

    தண்டனைகள் தவறுகளைக் குறைப்பதில்லை!

    பயத்தால் மட்டும் குற்றங்களை முழுவதும் தடுத்துவிடமுடியாது!

    மனம் தரும் தண்டனையைவிட பெரிய தண்டனையை யாரும் கொடுத்துவிடமுடியாது!

    என்பதை எடுத்தியம்பும் கதை ஒன்று உங்களுக்காக.

    http://gunathamizh.blogspot.com/2010/06/blog-post_10.html

    காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  10. "தம்பி நீ பில்லா இல்ல" இதுபோல் நிறைய நடக்கின்றன ..நிரபராதிகள் ஒருபோதும் தண்டிக்கப் படக்கூடாது .

    பதிலளிநீக்கு
  11. உண்மையிலே சிந்திக்க வேன்டிய விஷயம் தான்..

    பதிலளிநீக்கு
  12. மூவரையும் ஜாமீனில் விடுதலை செய்திருப்பது கிறுக்குத்தனம் என்று தோன்றினாலும், கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நபர் அவர்தான என்று நிரூபிப்பதற்காக இருக்கலாம்..
    இன்னொன்று இது ராஜீவ் காந்தியை கொன்ற விடுதலைப்புலிகளுக்கான மறைமுக ஆதரவு கட்டுரை என்றால் ராஜீவ் கொல்லப்பட்டது இந்த உலகத்துக்கே தெரியும்..அதற்க்கு காரணம் பயங்கரவாத விடுதலைப்புலிகள்தான் என்று..
    அல்லது இவர்களை விடுதலை செய்ய ராஜிவ்காந்தி நேரில் வந்தாரா?

    பதிலளிநீக்கு
  13. @கவிதை வீதி... // சௌந்தர் //
    சரியே!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. @வே.நடனசபாபதி
    செய்ய வேண்டும்
    நன்றி.

    பதிலளிநீக்கு
  15. @வெங்கட் நாகராஜ்
    உண்மை.வில்லன் வேண்டாமா?
    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. @முனைவர்.இரா.குணசீலன்
    படிக்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  17. @மர்மயோகி
    இது மரண தண்டனைக்கெதிரான ஒரு பொதுக் கருத்தே!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  18. தங்கள் வாதம் மிகச் சரி
    விளக்கிச் செல்லும் விதம் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. எப்படி ஆனாலும் ஒரு நிரபராதி தண்டனை அடையும் நம் சட்டம், கேவலமானதுதான்!!!!

    பதிலளிநீக்கு
  20. இது போன்ற சம்பவங்கள் அரிதாக நடந்தாலும், அதற்காக மரண தண்டனையை ரத்து செய்வது சரி என்று படவில்லை. அஜ்மல் கசாப்பை ஒன்று விடுவித்து இருக்க வேண்டும் இல்லை தூக்கில் இட்டிருக்கலாம். அதை விடுத்து கோடிக்கணக்கில் செலவு செய்து அவனுக்கு பாதுகாப்பு அளித்து வருவது ஏன்? இழந்தது நம் மக்களின் உயிரை. இழப்பது நமது வரிப்பணத்தை. தெரிந்தே கொடூர கொலை புரிபவனுக்கு மரண தண்டனை சரியே.

    பதிலளிநீக்கு
  21. இது போன்ற நிகழ்சிகள் மிகவும் அபூர்வம் ..காவல் துறையின் மெத்தனமே காரணம். இறந்த போன நபரின் உடலை சந்தேகத்திற்கு இடமில்லாமல் பரிசோதனை செய்து இருந்தால் இந்த குழப்பம் வந்து இருக்காது .. ஒருவரை ஒரே குற்றத்திற்காக இரு முறை விசாரிக்க முடியாது என்பதை ஆங்கிலத்தில் " Double jeopardy " என்று கூறுவார்கள் . இதே பெயரில் வந்த ஒரு ஆங்கில படம் ஒன்றினை (இதே கருத்துகளை தாங்கி வந்த) ஒரு அருமையான ஆங்கில படம் ஒன்றினை நேற்று தான் தொலை கட்சியில் பார்த்தேன் .. நிற்க மரண தண்டனை ஒழிக்க பட வேண்டும் என்று இந்த ஒரு நிகழ்ச்சியினை வெய்த்து மட்டும் கூற இயலாது என்றே கருதுகிறேன் . பிறகு துளிர் விட்டு போகும் ..மும்பையில் நேற்று முன் தினம் நடந்த செய்தியை படித்தீர்கள் அல்லவா ... பெண்களை கேலி செய்து மன வேதனைக்கு ஆளாகியவர்களை தட்டி கேட்ட இரு இளம் வாலிபர்கள் மிகவும் கொடுரமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார்கள் . மும்பை நகரமே கொதித்து போய் கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று போராட்டத்தை துவங்கி உள்ளது ...
    மிகவும் யோசித்து எடுக்க வேண்டிய முடிவு இது ....வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  22. ஆழ்ந்து யோசிக்க வைத்து விட்டது உங்கள் பதிவு. எப்படியாயினும் மரண தண்டனை வேண்டாம் என்பதுதான் என் கருத்து.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் ஐயா,
    நலமா?
    மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் எனும் உண்மைக்கு ஆதாரமாக நல்ல தோர் உதாரணப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    பதிலளிநீக்கு