எனவேதான் ஏழாம் அறிவு ,வேலாயுதம் பற்றி எழுதுவதில் இவ்வளவு தாமதம்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து விட்டேன்!
இதோ----
மனிதர்கள் ஆறறிவு உள்ளவர்கள் என்று சொல்கிறோம்.
இந்த ஆறறிவுகள் எவை?
தொல்காப்பியர் சொல்கிறார்---
“ஒன்றறிவு அதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனனே”
மெய்,வாய்,மூக்கு,கண்,காது ஆகியவற்றோடு மனம் என்பதை ஆறாவது அறிவாகச் சொல்கிறார் தொல்காப்பியர்.
இதையே நாம் பகுத்தறிவு என்கிறோம்.
அப்படியானால் ஏழாம் அறிவு என்பது என்ன?
திரைப்படம் என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியாது.நான் பார்க்க வில்லை
காலத்தைக் கடந்தது முக்காலமும் அறியும் திறன்தான் ஏழாம் அறிவா?
அக்காலத்தில் ஞானிகளுக்கு ஞான திருஷ்டி இருந்ததுஎன்று சொல்வார்களே அதுதான் ஏழாம் அறிவா?
அப்படியென்றால் அது வேண்டவே வேண்டாம்! வருவதைத் தெரிந்து கொண்டால் பிரச்சினைகள்தான் அதிகமாகும்.ஒரு படத்தில் மற்றவர் மனதில் இருப்பதை அறியும் சக்தி பெற்று விவேக் கஷ்டப்படுவாரே,அது போல.
வேண்டாம் ஏழாம் அறிவு!
ஏழாம் அறிவைப் பற்றிப் பேசி விட்டோம்.
இனி வேலாயுதம்.
சூரபத்மன் என்ற அசுரன் தேவர்களையெல்லம் துன்புறுத்தி,இந்திரனையும் சிறைப் படுத்தி விட்டான்.
அவனை அழிப்பதற்காக முருகன் உருவானான்.
முருகன் போருக்குச் செல்லும்போது,அன்னை பார்வதி முருகனிடம் ஒரு சக்தி வேல் கொடுத்தாள்,சூரனைக் கொல்லும் ஆயுதமாய்.அதுதான் வேலாயுதம்.
சூரனையே பிளந்த ஆயுதம் வேலாயுதம்!
காக்க காக்க கனக வேல் காக்க!
ஏழாம் அறிவை வேண்டாம் என்கிறீர்கள்.மற்றவர் மனதில் இருப்பதை அறியவே மனிதன் விரும்புகிறான்.ஆனால் அடைந்துவிட்டால் கஷ்டம்தான்.
பதிலளிநீக்குநீங்கள் கூறுவது போல் எழாவது அறிவு என்பது ஞான திருஷ்டியினை குறிக்குமானால் அது இல்லாமல் இருப்பது தான் சுவாரசியம் .. உலகை அளிக்க அணு ஆயிதங்கள் தேவை இல்லை .இந்த அறிவே போதும் .. நிற்க வேலாயுததில் நடிகர் விஜய்யின் ஆற்றலை பார்த்தல் அந்த முருகனே அவருக்கு அடிமை ஆகி இருப்பார் . இரு நூறு KM வேகத்தில் போகும் ஒரு ரயிலில் சிறுது காயம் படாமல் தாவ அந்த முருக கடவுளே தயங்கி இருப்பார் . petrol இல்ல ஒரு வண்டியினை ஓட்டத்தான் முருகனால் முடியுமா .. பாருங்கள் வேலாயுத்தினை . வாசுதேவன்
பதிலளிநீக்குநான் எங்கேயாவது போயி மலையில் இருந்து குதிக்கப்போறேன் விடுங்கய்யா என்னை....
பதிலளிநீக்குபடம் விமர்சனம் சூப்பரா இருக்கும்னு வந்தா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
பதிலளிநீக்குபித்தரே!
பதிலளிநீக்குதங்கள் விமர்சனம் தான்
சரியானது!
நன்றி ஐயா!
புலவர் சா இராமாநுசம்
திரைப்படம் என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியாது.நான் பார்க்க வில்லை//எப்படி அய்யா இதெல்லாம்..
பதிலளிநீக்குமுதலில் 6 அறிவோடு மனிதனாக வாழ முயற்சிப்போம்
பதிலளிநீக்குபிறகு 7வது அறிவைப் பற்றி சிந்திக்கலாம் என்பது என் கருத்து அன்பரே..
பித்தரே
பதிலளிநீக்குதங்கள் விமர்சனமே
மிகவும் சரியானது!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் சென்னை பித்தரே..!
பதிலளிநீக்குஆஹா ஒரு முடிவோடுதான் கிளம்பி இருக்கீங்க போல..
நானும் ஏதோ படத்துக்குதான் விமர்சனம்ன்னு வந்தேங்க.. நல்லா பல்பு கொடுத்திட்டிங்க..
-:)
பதிலளிநீக்குஆறாவது அறிவே பலருக்கு வேலை செய்வதில்லை . இதில் ஏழாவது அறிவா ?
பதிலளிநீக்குஎப்படி எல்லாம் பதிவெழுத தங்களுக்கு ஐடியா கிடைக்கிறது. ?
வெல்டன் தல... ஆனா ஒரு சின்ன மிஸ்டேக்...
பதிலளிநீக்குவேண்டாம் ஏழாம் அறிவு!
சூரனையே பிளந்த ஆயுதம் வேலாயுதம்!
அப்படின்னு ரெண்டு பதிவு போட்டிருக்கலாம்... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....
அண்ணே மீ பாவம் விட்ருங்க...சாமி முடியல ஹிஹி!
பதிலளிநீக்குதலைப்பைப் பார்ததுமே சந்தேகப்பட்டேன். நீங்கள் ‘அவை’களைப்பற்றி எழுதமாட்டீர்களே என்று! நான் நினைத்தது சரியே.
பதிலளிநீக்குமொக்கை என்ற பிரிவின் கீழே எழுதியிருந்தாலும் சொல்லப்பட்ட செய்திகள் சாரமானவையே. வாழ்த்துக்கள்!
7ம் அறிவு பற்றி உங்கள் கேள்விகள் சிறப்பு
பதிலளிநீக்குநானும் பட விமர்சனம் என்று வந்தேன் இப்படி பல்பு கொடுத்துட்டீங்களே
பல்பு கொடுத்ததுக்கு பாராட்டுக்கள்
பதிலளிநீக்குசார் உங்க விமர்சனம் புல்லரிக்குது. இப்படியே எல்லா படத்துக்கும் இனி எழுதுங்க...
பதிலளிநீக்குஉனக்கெல்லாம் எதுக்கு இந்த வேலென்னு கலாய்க்கனும்னுதான் உள்ளே வந்தேன் வாத்யாரே!
பதிலளிநீக்குஆனா தப்சிட்டேபா தப்சிட்டெ.
என்ன ஒரு இனிய ஏமாற்றம்! மனிதன் மனிதமுடன் நடந்து கொண்டாலே போதும், எதற்கு ஏழாம் அறிவு என்ற முனைவரின் கருத்து சரியே... மிக ரசித்தேன் தங்கள் குறும்பை...
பதிலளிநீக்கு@shanmugavel
பதிலளிநீக்குஉண்மை.நன்றி.
@Vasu
பதிலளிநீக்குஅவர்தான் ஹீரோ!
நன்றி.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//நான் எங்கேயாவது போயி மலையில் இருந்து குதிக்கப்போறேன் விடுங்கய்யா என்னை....//
இதைப் படிச்சுட்டு எனக்கு சிரிப்பை அடக்க முடியலே!ஹா,ஹா,ஹா.
நன்றி மனோ.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு// படம் விமர்சனம் சூப்பரா இருக்கும்னு வந்தா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....//
:))
@புலவர் சா இராமாநுசம்
பதிலளிநீக்குநன்றி ஐயா!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
பதிலளிநீக்குநன்றி.
@முனைவர்.இரா.குணசீலன்
பதிலளிநீக்குசரியே.
நன்றி.
@காட்டான்
பதிலளிநீக்கு:)
நன்றி.
@ரெவெரி
பதிலளிநீக்கு:)) நன்றி.
@சிவகுமாரன்
பதிலளிநீக்குநன்றி
@Philosophy Prabhakaran
பதிலளிநீக்குதெரியாமப் போச்சே!
நன்றி.
@விக்கியுலகம்
பதிலளிநீக்கு:) நன்றி.
@FOOD
பதிலளிநீக்குநன்றி.
@வே.நடனசபாபதி
பதிலளிநீக்குநன்றி.
@K.s.s.Rajh
பதிலளிநீக்குநன்றி.
@மனசாட்சி
பதிலளிநீக்குநன்றி :)
@பாலா
பதிலளிநீக்குஹா,ஹா, நன்றி.
@சைதை அஜீஸ்
பதிலளிநீக்குநன்றி.
@கணேஷ்
பதிலளிநீக்குநன்றி.
சத்தியமா சினிமாவை பற்றி இருக்காது என்று நம்பி வந்தேன் ...அப்படியே
பதிலளிநீக்குஇருந்தது .....
இந்த தலைப்பு எப்படி
ஏழாம் அறிவும்,வேலாயுதமும்!காக்க காக்க தான் !
இது எப்படி இருக்கு ஐயா .. பழையபடம் ஆனாலும்
ஹா ஹா.. ஐயா உங்களுக்கு எட்டாம் அறிவு... அசத்திவிட்டீர்கள்.
பதிலளிநீக்குஏன் பாஸ்! எதுக்கு? எதுக்காக? :-)
பதிலளிநீக்குஎன்னது? அண்ணனுக்கே மைனஸா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பதிலளிநீக்கு@ரியாஸ் அஹமது
பதிலளிநீக்குதலைப்பு சூப்பர்.
நன்றி.
@மாய உலகம்
பதிலளிநீக்கு:) நன்றி.
சி.பி.செந்தில்குமார் கூறியது...
பதிலளிநீக்கு//என்னது? அண்ணனுக்கே மைனஸா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
பெரிய பதிவர் ஆயிட்டேன் போல!
நன்றி சிபி.
அட சென்னை பித்தன் ஐயா சினிமா விமர்சனம் எழுதி இருக்கிறாரே எனப் பார்க்க வந்தால் இந்த போடு போட்டு இருக்கீங்களே....
பதிலளிநீக்குஅட சென்னை பித்தன் ஐயா சினிமா விமர்சனம் எழுதி இருக்கிறாரே எனப் பார்க்க வந்தால் இந்த போடு போட்டு இருக்கீங்களே....
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ் சொன்னது…
பதிலளிநீக்கு//அட சென்னை பித்தன் ஐயா சினிமா விமர்சனம் எழுதி இருக்கிறாரே எனப் பார்க்க வந்தால் இந்த போடு போட்டு இருக்கீங்களே....//
:) நன்றி வெங்கட்