தொடர்கிறது--
கேள்வி.4-யாருக்குக் கொடுப்பது?
கேள்வி.4-யாருக்குக் கொடுப்பது?
பல நேரங்களில் நாம் நம்மிடம் கேட்கும் நபர் பெறத் தகுதியானவர் அல்ல என்ற ஒரு தவறான அபிப்பிராயத்தை நாமே உருவாக்கிக் கொண்டு கொடுப்பதைத் தவிர்க்கிறோம்.அது தவறான அணுகு முறையாகும்.எனவே கொடுக்கும்போது இது போன்ற முன் முடிவுகள் எடுக்காமல் கொடுக்க வேண்டும்.
கேள்வி.5-எப்படிக் கொடுக்க வேண்டும்?
யாருக்குக் கொடுக்கிறோமோ அவர் சிறுமைப்படும் விதத்தில் கொடுக்கக் கூடாது.கொடுப்பதில் அளவற்ற பெருமை காட்டி வாங்குபவரைச் சிறுமைப் படுத்தக் கூடாது.
கொடுக்கும்போது கூடப் பெறுபவர் கைதாழ்ந்தும் தன் கை உயர்ந்தும் இருக்கலாகாது என்னும் எண்ணத்தில் ,கர்ணன் கொடுக்க வேண்டிய பொருளைத் தன் கையில் வைத்து நீட்டப் பெறுபர் அதை எடுத்துக் கொள்வராம். சொல்வார்கள்”வலது கை கொடுப்பது,இடது கைக்குத் தெரியக்கூடாது” என்று. தான் கொடுப்பதை விளம்பரப்படுத்திப் பெருமை தேடாமல் பிறர் அறியாமல் கொடுப்பதே சிறந்தது.
கேள்வி.6- கொடுத்தவர் மன நிலை எப்படி இருக்க வேண்டும்?
இப்படிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்ததே என மகிழலாம்.ஆனால் நான் கொடுத்தேன் என்ற கர்வம் இருக்கலாகாது.கொடுத்து விட்டோமே என்ற வருத்தமும் இருக்கலாகாது.
ஆனால் ஏகலைவன் வருத்தம் வேறு விதமானது
ஏகலைவன் தனது வலது கைக் கட்டை விரலை துரோணருக்குக் குரு தக்ஷிணையாகக் கொடுத்த கதை நம் எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அதற்குப் பின் நடந்த ஒரு நிகழ்ச்சி அறியப்படாத ஒன்று.
ஏகலைவன் இறக்கும் நேரத்தில் அவனிடம் கேட்கப்பட்டது,அவன் தனது கட்டை விரலை வெட்டிக் கொடுத்ததற்காக எப்போதாவது வருந்திய துண்டா என்று.அவன் சொன்னான்”ஆம் .ஒரே ஒரு முறை வருந்தினேன். குருக்ஷேத்ரப் போரில், அஸ்வத்தாமன் இறந்தான் என்ற பொய்ச் செய்தியால், மனமுடைந்து,போரிடுவதை நிறுத்தியிருந்த ஆச்சாரியாரை பாண்டவர்கள் கொல்வித்தபோது வருந்தினேன்,என் வலது கைக் கட்டைவிரல் இல்லையே என்று.இருந்திருந்தால்,என் குருநாதரை யார் கொன்றிருக்க முடியும்?”
இந்த வருத்தம் முன்பே கொடுத்துவிட்டதால் ,மேலும் கொடுக்க இயலாமல் போய்விட்டதே என்னும் வருத்தம்.ஆக்க பூர்வமான வருத்தம்
கேள்வி.7-என் மக்களுக்கு நான் எவ்வளவு விட்டுச் செல்ல வேண்டும்?
வாரென் பஃபெட் அழகாகச் சொன்னார்”அவர்களுக்கு ஏதாவது செய்வதற்குத்தேவையானதை விட்டுச் செல்லுங்கள்.எதுவுமே செய்யாமல் இருப்பதற்குத் தேவையானதை அல்ல!”
ஆம்!அவர்களிடமிருந்து உழைப்பென்னும் உன்னதமான பொருளைப் பறித்து விடக்கூடாது.
கடைசியாக கபீர் அவர்களின் அழகிய கூற்றுடன் முடிக்கிறேன்.—
“உங்கள் வீடு செல்வத்தால் நிறையும்போதும்,நீங்கள் பயணிக்கும் படகு தண்ணீரால் நிறையும்போதும்,இரண்டு கைகளாலும் அள்ளி எடுங்கள். இறையுங்கள்.அதுவே நன்மை பயக்கும்”
டிஸ்கி:-இதை எழுதி முடித்ததும் ஒரு குறள் நினைவுக்கு வந்தது.யாராவது இதையும் சொல்வார்களோ? :))
”சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்” !!
இயன்ற அளவு செய்யலாமே!
இயன்ற அளவு செய்யலாமே!
விவேகானந்தர் கொடுப்பது நம் கடமை. அதற்காக பெருமைப்படவோ, கர்வபடவோ கூடாது என்று கூறுகிறார். அருமையான பதிவு.
பதிலளிநீக்குமுதல் வாசகன்
பதிலளிநீக்குஅண்ணே, பதிவு ஓக்கே, டைட்டில் இன்னும் நல்லா வெச்சிருக்க;லாம்னு தோணுது ( அதிக பிரசிங்கித்தனமான கமெண்ட்டோ?அவ்வ்)
பதிலளிநீக்குயாருக்கும் கொடுத்து விட்டோம் என்று பெருமை கொள்ளக் கூடாது. பெறுபவர் சிறுமையாக நினைக்குமளவு நடந்து கொள்ளவும் கூடாது. அழகான, அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள். கபீர்தாசரின் வாக்கியங்களுடன் சொல்லியிருந்தது அருமை. மிகமிகமிக ரசித்தேன். உங்களிடமிருந்து கற்றதும் பெற்றதும் ஏராளம். அனைத்திற்கும் நன்றி... நன்றி... நன்றி...
பதிலளிநீக்குஉங்கள் இரு பதிவுகளையும் படித்தேன்... பாத்திரமறிந்து கொடு என்பதும் வழக்கம் என்பதால்... என்னிடம் இருக்கும் சின்ன உத்தியை உங்களிடம் பகிர்கிறேன்... அதிகமாக கேட்பவர்களுக்கு அப்படியே கொடுத்து விடுவேன்... அஞ்சு பத்து என்று கேட்க்கும் பிச்சை காரர்களுக்கு என் உதவி ஒன்றே ஒன்று தான்... அருகில் இருக்கும் ஓட்டலில் நான்கு இட்லி வாங்கி தருவது.... பசி இருப்பவன் உண்பான்.. பசி இல்லாதவன் என்னிடம் திரும்பி வரவே மாட்டான்..
பதிலளிநீக்குரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ஒரு பெண் என்னிடம் பணம் கேட்டால்..
சின்ன பெண் என்பதால் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்தேன்...
அவள் முகத்தில் ஒரு சிரிப்பு.. வாங்கி கொண்ட பின் யோசித்தால்..
பிஸ்கட் பாக்கெட்டை திரும்ப என்னிடம் கொடுத்து விட்டு பணம் மட்டும் கொடு என்றாள்..
பாலா கூறியது...
பதிலளிநீக்கு//விவேகானந்தர் கொடுப்பது நம் கடமை. அதற்காக பெருமைப்படவோ, கர்வபடவோ கூடாது என்று கூறுகிறார். அருமையான பதிவு.//
நன்றி பாலா.
சி.பி.செந்தில்குமார் கூறியது...
பதிலளிநீக்கு// முதல் வாசகன்//
நன்றி சிபி.
சி.பி.செந்தில்குமார் கூறியது...
பதிலளிநீக்கு//அண்ணே, பதிவு ஓக்கே, டைட்டில் இன்னும் நல்லா வெச்சிருக்க;லாம்னு தோணுது ( அதிக பிரசிங்கித்தனமான கமெண்ட்டோ?அவ்வ்)//
இன்னும் நிறையக் கற்றுகொள்ள வேண்டும் போலிருக்கிறதுஎன்ன வௌத்துருக்கலாம்?”கொடுத்துச் சிவந்த கரம்!”
நன்றி.
கணேஷ் கூறியது...
பதிலளிநீக்கு//யாருக்கும் கொடுத்து விட்டோம் என்று பெருமை கொள்ளக் கூடாது. பெறுபவர் சிறுமையாக நினைக்குமளவு நடந்து கொள்ளவும் கூடாது. அழகான, அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள். கபீர்தாசரின் வாக்கியங்களுடன் சொல்லியிருந்தது அருமை. மிகமிகமிக ரசித்தேன். உங்களிடமிருந்து கற்றதும் பெற்றதும் ஏராளம். அனைத்திற்கும் நன்றி... நன்றி... நன்றி...//
நன்றி கணேஷ்.
suryajeeva கூறியது...
பதிலளிநீக்கு//உங்கள் இரு பதிவுகளையும் படித்தேன்... பாத்திரமறிந்து கொடு என்பதும் வழக்கம் என்பதால்... என்னிடம் இருக்கும் சின்ன உத்தியை உங்களிடம் பகிர்கிறேன்... அதிகமாக கேட்பவர்களுக்கு அப்படியே கொடுத்து விடுவேன்... அஞ்சு பத்து என்று கேட்க்கும் பிச்சை காரர்களுக்கு என் உதவி ஒன்றே ஒன்று தான்... அருகில் இருக்கும் ஓட்டலில் நான்கு இட்லி வாங்கி தருவது.... பசி இருப்பவன் உண்பான்.. பசி இல்லாதவன் என்னிடம் திரும்பி வரவே மாட்டான்..
ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ஒரு பெண் என்னிடம் பணம் கேட்டால்..
சின்ன பெண் என்பதால் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்தேன்...
அவள் முகத்தில் ஒரு சிரிப்பு.. வாங்கி கொண்ட பின் யோசித்தால்..
பிஸ்கட் பாக்கெட்டை திரும்ப என்னிடம் கொடுத்து விட்டு பணம் மட்டும் கொடு என்றாள்..//
நீங்கள் செய்வதே சரி.நானும் இயன்றவரை உண்பதற்கு ஏதாவது வாங்கித் தருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன்-பிஸ்கட், பன், என்று ஏதாவது.
நன்றி சூரியஜீவா.
//”சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
பதிலளிநீக்குசொல்லிய வண்ணம் செயல்” //
நாங்கள் சொல்ல நினைத்ததை, நீங்களே கடைசியில் அய்யன் வள்ளுவர் வாக்கைச் சொல்லி எங்கள் வேலையை சுலபமாக்கிவிட்டீர்கள்.
பணம் ஈட்டுவதையே குறிக்கோளாக உள்ள தற்கால வாழ்க்கை முறையில், ஈத்துவக்கும் இன்பம் பற்றிய பதிவு தேவையானதுதான். வாழ்த்துக்கள்!
அருமையாக விளக்கிஉள்ளீர்கள்
பதிலளிநீக்குவணக்கத்துடன் :
ராஜா
விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..
கேள்விகளுக்கு அழகிய பதில்கள்..
பதிலளிநீக்குஇன்று சொல்வதற்க்கு மட்டுமே ஆட்கள்.. செய்வதற்கு அல்ல
ஏகலைவன் ஆதங்கம் இதுவரை அறியாத ஒன்று
பதிலளிநீக்குஅறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
மனம் கவர்ந்த பதிவு
த.ம 5
// உங்கள் வீடு செல்வத்தால் நிறையும்போதும்,நீங்கள் பயணிக்கும் படகு தண்ணீரால் நிறையும்போதும்,இரண்டு கைகளாலும் அள்ளி எடுங்கள். இறையுங்கள்.அதுவே நன்மை பயக்கும்”//
பதிலளிநீக்குஆகா ! அருமையான எடுத்துக்
காட்டு!
செல்வர்க்கு அழகு செழுங்கிளைத் தாங்குதல்!
த ம ஓ 6
புலவர் சா இராமாநுசம்
அண்ணே ஏகலைவன் போல் இன்றும் பலர் இருக்கிறார்கள்...இன்னா செய்தாரை......அவர் நாண நன்னயம் செய்து விடல் - சரியாத்தான் சொல்றனா!
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு சார்.
பதிலளிநீக்குபகிர்வும் குறளும் அருமை!.மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
பதிலளிநீக்குவே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு//”சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்” //
// நாங்கள் சொல்ல நினைத்ததை, நீங்களே கடைசியில் அய்யன் வள்ளுவர் வாக்கைச் சொல்லி எங்கள் வேலையை சுலபமாக்கிவிட்டீர்கள்.
பணம் ஈட்டுவதையே குறிக்கோளாக உள்ள தற்கால வாழ்க்கை முறையில், ஈத்துவக்கும் இன்பம் பற்றிய பதிவு தேவையானதுதான். வாழ்த்துக்கள்!//
நன்றி சபாபதி அவர்களே
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
பதிலளிநீக்கு//அருமையாக விளக்கிஉள்ளீர்கள்
வணக்கத்துடன் :
ராஜா//
நன்றி ராஜா.
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
பதிலளிநீக்கு// கேள்விகளுக்கு அழகிய பதில்கள்..
இன்று சொல்வதற்க்கு மட்டுமே ஆட்கள்.. செய்வதற்கு அல்ல//
நன்றி சௌந்தர்
Ramani கூறியது...
பதிலளிநீக்கு// ஏகலைவன் ஆதங்கம் இதுவரை அறியாத ஒன்று
அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
மனம் கவர்ந்த பதிவு
த.ம 5//
நன்றி ரமணி.
புலவர் சா இராமாநுசம் கூறியது...
பதிலளிநீக்கு// உங்கள் வீடு செல்வத்தால் நிறையும்போதும்,நீங்கள் பயணிக்கும் படகு தண்ணீரால் நிறையும்போதும்,இரண்டு கைகளாலும் அள்ளி எடுங்கள். இறையுங்கள்.அதுவே நன்மை பயக்கும்”//
// ஆகா ! அருமையான எடுத்துக்
காட்டு!
செல்வர்க்கு அழகு செழுங்கிளைத் தாங்குதல்!
த ம ஓ 6//
நன்றி ஐயா.
விக்கியுலகம் கூறியது...
பதிலளிநீக்கு//அண்ணே ஏகலைவன் போல் இன்றும் பலர் இருக்கிறார்கள்...இன்னா செய்தாரை......அவர் நாண நன்னயம் செய்து விடல் - சரியாத்தான் சொல்றனா!//
நீங்க சொன்னாச் சரிதான்!
நன்றி விக்கி.
கோவை2தில்லி கூறியது...
பதிலளிநீக்கு//அருமையான பகிர்வு சார்.//
நன்றி ஆதி வெங்கட்.
அம்பாளடியாள் கூறியது...
பதிலளிநீக்கு// பகிர்வும் குறளும் அருமை!.மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .//
நன்றி அம்பாளடியாள்
கொடுப்போம் கொடுப்போம் கொடுத்துக்கொண்டே இருப்போம்...!!
பதிலளிநீக்குசி.பி.செந்தில்குமார் கூறியது...
பதிலளிநீக்குமுதல் வாசகன்//
ஹா ஹா ஹா ஹா வடை போச்செடா அண்ணே ஹி ஹி....
மிக நல்ல தமிழாக்கம் சார். ஆங்கிலத்தில் படித்ததை விட உங்கள் அழகு தமிழில் படித்தது நன்றாக இருக்கிறது....
பதிலளிநீக்குஅருமையான பதிவு சார் ..
பதிலளிநீக்குபகிர்விற்கு நன்றி
தருபவரை 'தருமத்தின் தாய்' என்றார் கண்ணதாசன்.
பதிலளிநீக்குநல்ல பதிவு.
@MANO நாஞ்சில் மனோ
பதிலளிநீக்குநன்றி
@MANO நாஞ்சில் மனோ
பதிலளிநீக்குநன்றி
@வெங்கட் நாகராஜ்
பதிலளிநீக்குநன்றி.
@jayaram thinagarapandian
பதிலளிநீக்குநன்றி.
@அப்பாதுரை
பதிலளிநீக்குநன்றி.