தொடரும் தோழர்கள்

சனி, நவம்பர் 19, 2011

பரல்கள்!

சென்ற பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் வே,நடனசபாபதி அவர்கள் ஒரு புதிர் வாக்கியம் கொடுத்து விடை தெரியுமா எனக் கேட்டிருந்தார்.

“பத்துரதன் புத்திரனின் மித்திரனின்
சத்துருவின் பத்தினியின்
காலெடுத்துத் தேய்”.           இதுதான் அந்த வாக்கியம்.

இதன் விடை,விளக்கமாக--

பத்துரதன் புத்திரன் --தசரதன் மகன்,இராமன்.
அவன் மித்திரன் ------சுக்கிரீவன்
அவன் சத்துரு----------வாலி
அவன் பத்தினி---------தாரை
காலை எடுத்தால்------தரை---இதுதான் விடை!!
-------------------------------------------------------------------------
 
 தெரிந்தால் சொல்லுங்கள்!

1)ஒவ்வொரு விதிக்கும் ஒரு விலக்கு உண்டு என்பது விதியானால்,அந்த விதிக்கும் விலக்கு உண்டா?

2)ஆலயத்தின் உச்சியில் இடிதாங்கி வைப்பது நம்பிக்கையின்மையைக் காட்டவில்லையா?

3)தொலைபேசியிலும்,கணிப்பொறியிலும் எண்கள் வரிசை மாறி இருப்பதேன்?

-----------------------------------------------------------------------------------------------
நடத்துனர் பயணிகளிடம் டிக்கட் வாங்கி விட்டார்களா எனப் பார்த்துச் சீட்டுக் கொடுத்து வந்தார்.

பயில்வான் போல் உடலுடன்.பெரிய மீசையும்,முரட்டுத்தொற்றமுமாக ஒருவன் சீட்டு எடுக்கவில்லை எனத் தெரியும்.ஆனால் அவனிடம் பயந்தவாறே கேட்டார்.”இருக்குது” என அழுத்திச் சொல்லி விட்டான். தினமும் இது நடந்தது.

ஒரு முடிவுக்கு வந்தார்.

ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்து,உடலை வலுப்படுத்திக் கொண்டார். சிறிது கராத்தேயும் கற்றுக் கொண்டார்.

சில மாதங்களுக்குப் பின் ஒரு நாள் அவனிடம் கேட்டார் “டிக்கட் எடுத்தாச்சா”

”இருக்குது”  வழக்கம்போல் பதில்.

”இருந்தாக்காட்டு” என்றார் நடத்துனர்.

அவன் தன் பையில் இருந்து பஸ் பாசை எடுத்துக் காட்டினான்!


மேலாண்மைப் பாடம்
“முதலில் பிரச்சினை என்று ஒன்று இருக்கிறதா என்பதை முடிவு செய்யுங்கள்,இல்லாத பிரச்சினைக்குத் தீர்வு தேடுவதை விடுத்து!!”

 --------------------------------------------------------------


”திருமணமாகாத மகள் வந்து சொன்னாள்

அம்மா நான் கர்ப்பம் என்று

அம்மா முறையிட்டாள் கடவுளிடம்

”அய்யோ ஆண்டவா ஏன் இப்படிச் செய்தாய்?”

அவனுக்கும்  கோபம் வந்தது!”




49 கருத்துகள்:

  1. செய்திகள் அனைத்தும் அருமை


    கடவுள் ரொம்பவே பாவம்

    பதிலளிநீக்கு
  2. பல்சுவைப் பகிர்வு நன்றி.....

    கடைசி கவிதையில் கடவுள் கோபப்பட்டதிலும் நியாயம் இருக்கிறது....

    பதிலளிநீக்கு
  3. ////“பத்துரதன் புத்திரனின் மித்திரனின்
    சத்துருவின் பத்தினியின்
    காலெடுத்துத் தேய்”. இதுதான் அந்த வாக்கியம்.

    இதன் விடை,விளக்கமாக--

    பத்துரதன் புத்திரன் --தசரதன் மகன்,இராமன்.
    அவன் மித்திரன் ------சுக்கிரீவன்
    அவன் சத்துரு----------வாலி
    அவன் பத்தினி---------தாரை
    காலை எடுத்தால்------தரை---இதுதான் விடை!!
    ////

    அட அருமையாக இருக்கே

    பதிலளிநீக்கு
  4. ////திருமணமாகாத மகள் வந்து சொன்னாள்

    அம்மா நான் கர்ப்பம் என்று

    அம்மா முறையிட்டாள் கடவுளிடம்

    ”அய்யோ ஆண்டவா ஏன் இப்படிச் செய்தாய்?”

    அவனுக்கும் கோபம் வந்தது!”
    /////
    ஹா.ஹா.ஹா.ஹா........

    பதிலளிநீக்கு
  5. நல்ல பல்சுவை அடங்கிய தொகுப்புக்கள் ஜயா பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. பாருபா!
    சாமிக்கு கோவம் வராமே இன்னா செய்யும்?

    அப்புறம் அந்த கண்டக்டர் பாவம்பா... செம பல்புபா

    கோவில்லே இடிதாங்கிக்கு போய்ட்டே... கதவுக்கு பூட்டு போடுறாங்கபாருபா
    கோவிலாவது பர்வால்லேபா, உண்டியல் கீது செலெ கீது வெல ஒயர்ந்த நக கீது. ஓகேபா
    ஆனா இந்த பள்ளிவாசலெ பூட்டுராங்கபாருபா செமெ காமடி போ!

    பதிலளிநீக்கு
  7. பல தகவல்கள் அருமை ஐயா
    த.ம 6

    பதிலளிநீக்கு
  8. ஐயா
    இவை பரல்கள் மட்டுமல்ல
    நவரத்தினங்கள்!!!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  9. பலசுவைத் தொகுப்பு அருமை
    வாழ்த்துக்கள்
    த.ம 8

    பதிலளிநீக்கு
  10. /“முதலில் பிரச்சினை என்று ஒன்று இருக்கிறதா என்பதை முடிவு செய்யுங்கள்,இல்லாத பிரச்சினைக்குத் தீர்வு தேடுவதை விடுத்து!!”
    //
    உண்மைதான்

    பதிலளிநீக்கு
  11. ஆமாங்க யாரோ பண்ண தப்புக்கு ஆண்டவனை இழுத்தா கோவம் வராதா?

    பதிலளிநீக்கு
  12. 1)ஒவ்வொரு விதிக்கும் ஒரு விலக்கு உண்டு என்பது விதியானால்,அந்த விதிக்கும் விலக்கு உண்டா?

    ஒவ்வொரு வினைக்கும் அதற்க்கு சமமான எதிர் வினை உண்டு என்பது இதற்க்கு விடையாகுமா?

    பதிலளிநீக்கு
  13. @K.s.s.Rajh
    இது போல் உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
  14. @சைதை அஜீஸ்
    மனிதன் மோசமானவன்.எனவே அவனுக்குப் பய்ந்து பூட்டுகிறார்கள்! இயற்கைக்குமா?!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  15. @கோகுல்
    எனக்குக் கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. இரசித்தேன்
    சிரித்தேன்
    சிந்தித்தேன்..

    அருமை ஐயா..

    பதிலளிநீக்கு
  17. பல்சுவை விருந்து வழக்கம் போல் ருசித்தது. படித்தேன், படி தேன்! மகிழ்ந்தேன். நன்றி நவில்கிறேன்...

    பதிலளிநீக்கு
  18. எனது புதிருக்கு விடை அளித்தமைக்கு நன்றி.தங்களுக்கு தெரியும் என்றாலும் அனைவருக்கும் தெரியட்டும் என்பதால் அந்த புதிரைப் போட்டேன்.

    அந்த பதிவைப்பார்த்துவிட்டு பதிவுலக நண்பர் ஒருவர் சரியான விடையை எழுதிவிட்டு சொல்லியிருக்கிறார்.” என் போன்ற சின்னப் பயலுக்கே தெரியும்போது பெரியவர் சென்னைப் பித்தனுக்குத் தெரியாமல் இருக்குமா...” என்று!!!!!

    வழக்கம்போல் பரல்கள் மின்னியது உண்மை.

    பதிலளிநீக்கு
  19. மாணிக்கப் பரல்கள் ஒவ்வொன்றும்!..
    கடவுளுக்கு கோபம் வந்துதே பாருங்க
    அத இப்பதான் உணர்வுபூர்வமாக
    உணர முடிஞ்சுது .ஹா...ஹா...ஹா...வாழ்த்துக்கள் ஐயா இது எப்புடி உங்களாலமட்டும்
    முடியுது .அருமை !.......வாருங்கள் என் தளத்திலும் நீங்கதான் ஒரு நீதி சொல்ல வேண்டும் .காத்திருக்கின்றது
    ஆக்கம் .கருத்து நல்ல ஸ்ரோங்கா இருக்க வேணும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ..எலா ஓட்டும் போட்டாச்சு .

    பதிலளிநீக்கு
  20. ஃஃஃஃஃஆலயத்தின் உச்சியில் இடிதாங்கி வைப்பது நம்பிக்கையின்மையைக் காட்டவில்லையா?ஃஃஃஃஃ

    அட ஆமாங்க ஆனால் ஆலயத்தின் ஒவ்வொரு அமைப்பிலும் ஒவ்வொரு விளக்கம் இருக்கிறது உண்மைதானே..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

    பதிலளிநீக்கு
  21. கல்க்கிட்டீங்க - மேலாண்மைப் பாடமும் அவனுக்கும் கோபம் வருவதும் அருமை. மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு