”கடவுளே! என்னை ஏன் இச்சுமையைச் சுமக்கச் செய்தாய்?இது நான் சாப்பிடும் பொருளல்ல.மிகக் கனமாகவும் இருக்கிறது.ஆனால் இதுதான் நீ விரும்புவது என்றால்,உனக்காக நான் இதை நிச்சயம் செய்வேன். ”
படத்தில் ஒரு எறும்பு கனமான ஒரு பொருளைத் தூக்கிச் செல்கிறது.அது ஒரு விழி வில்லையைச்(contact lens) சுமந்து செல்கிறது.மேலே உள்ள வாக்கியம் அது சொல்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இது என்ன?
இதன் பின்னே ஒரு சம்பவம் இருக்கிறது.
அந்தப் பெண் சிரமப்பட்டு மலையேறிக் கொண்டிருந்தாள்.பாதிக்கு மேல் கடந்த பின் ஒரு பாறையில் நின்று இளைப்பாறினாள்.அவளுக்கு மூச்சு வாங்கியது.
அப்போது அவள் பாதுகாப்புக் கயிறு கண்ணில் பட்டு விழி வில்லை கீழே விழுந்து விட்டது.அவள் பயந்தாள்.ஏனெனில் அதுவின்றி அவள் பார்வை தெளிவாக இருக்காது.பாறை மேல் விழுந்திருக்குமா என்று பார்த்தாள்.தெரியவில்லை.
அவள் பிரர்த்தனை செய்துகொண்டே ஒருவாறாக உச்சியை அடைந்தாள். அங்கு சென்றபின் அவள் உடையில் எங்காவது ஒட்டியிருக்கிறதா எனப் பார்த்தாள்.இல்ல,அவளுக்கு மிக வருத்தமாக இருந்தது.மலை உச்சியிலிருந்து அழகிய இயற்கையை நன்கு அனுபவித்துப் பார்க்க முடியவில்லையே என்று.
பின் நண்பர்களுடன் கீழே இறங்க ஆரம்பித்தாள்,”கடவுளே!இந்த மலையின் இண்டு இடுக்குகளைக் கூட நீ அறிவாய்.என் விழி வில்லை எங்கே இருக்கிறது என்றும் நீ அறிவாய்.அது கிடைக்க அருள் செய்”எனப் பிரார்த்தித்தவாறே .
அவர்கள் பாதிதூரம் இறங்கியதும்,எதிரே ஒரு குழு வரக் கண்டார்கள். அக்குழுவில் ஒருவன் இவர்களைப் பார்த்து உங்களில் யாராவது விழி வில்லையைத் தவற விட்டு விட்டீர்களா எனக்கேட்டான்.பெண்ணுக்கு மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.அதை விட அதிசயம் அவன் சொன்ன செய்தி.
அவன் சொன்னான்”ஒரு பாறை மீதிருந்த குச்சியின் மேல் ஒரு கட்டெறும்பு இதைச் சுமந்தபடி ஊர்ந்து கொண்டிருந்தது!”
இந்த நிகழ்ச்சியை அப்பெண் சித்திரக்காரரான் தன் தந்தையிடம் சொல்ல அவர் வரைந்த சித்திரம்தான் இது.
இந்நிகழ்விலிருந்து வாழ்க்கையின் தத்துவம் ஏதாவது புரிபடுகிறதா?
தீவிரமான பிரார்த்தனை கண்டிப்பாய் பலன் தரும் என்பது நான் புரிந்து கொண்டது. சரிதானா சார்..?
பதிலளிநீக்குஅருமையான கருத்தைக் கொண்ட கதை
பதிலளிநீக்குநாம் செய்ய வேண்டியதை மட்டும் சரியாகச் செய்துவிட்டு
மீதம் உள்ளதை அவனிடம் மட்டும்விட்டுவிட்டால் போதும்
எந்த ரூபத்திலாவது அவன் நமக்கு செய்ய வேண்டியதை
மிகச் சரியாகச் செய்வான்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்க
பிரபஞ்சத்திலெ நட்க்ற அல்லாத்துக்கும் வொரு ரீசன்கீது நைனா!
பதிலளிநீக்குஅல்லாமே ஒரு கட்டளையெ தாவுதீர செய்றோம்பா.
பல சமயத்லெ இன்னாசெய்றேன்னு தெர்யாம்லே அல்லாத்தெயும் மாஞ்சு மாஞ்சு செய்வோம்பா.
நம்மொ ப்ராப்லம்தான் நமக்கு பெர்ஸாபடும். ஆனா பாரு வாத்யாரே, நம்ம கஸ்டத்த கொஞ்சம் அப்பாலே வச்சிட்டு ரோஸித்தேன்னு வை. அல்லாமே புஸ்ஸுன்னு போய்டும். பிரிஞ்சுதா?
கலக்கல் பாஸ்!
பதிலளிநீக்கு//தீவிரமான பிரார்த்தனை கண்டிப்பாய் பலன் தரும் என்பது நான் புரிந்து கொண்டது. சரிதானா //
பதிலளிநீக்குGanesh sir solvathu correct endru ninaikkireaan...
நல்ல கருத்து..
பதிலளிநீக்குஎல்லாம் அவன் செயல்...
பிரார்த்தனைக்கு உடனே பதில் கிடைச்சிருக்கு ஆனால் அவள் மழை உச்சியில் இருந்து அழகை கண்டு களிக்க முடியவில்லையே...!!!
பதிலளிநீக்குகார்ட்டூன் பல கதைகள் சொல்லுகிறது தல....!!!
பதிலளிநீக்குநல்ல கருத்து சொல்லும் கதை!!ம்ம் எங்க இருந்து தான் கண்டு பிடிக்கிறீங்களோ!!
பதிலளிநீக்குகடவுள் இருக்கிறார் இல்லை என்று விவாதிப்பதை விடுத்து, நம்மை விடவும் மேலான ஒரு சக்தி உண்டென்று நம்புங்கள்!கடவுள் தெரிவார்!எறும்பு சுமந்தது கண் விழியை அல்ல, நம் விதியை!
பதிலளிநீக்குஐயா..
பதிலளிநீக்குமுடியல...
ஒரு படத்தை வச்சி.. அதுக்கு ஒரு கதைக்கட்டி அப்படியே பில்டப்பு கொடுத்து...
நான் கிளம்புறேன்ம்பா...
கடவுள் உங்களுக்கும் அருள் புரியட்டும்
பதிலளிநீக்குஅவள் இயற்கை அழகை இரசிக்க முடியாமல் போனதும், பின் அவளது விழி வில்லை கிடைத்ததும் ‘எல்லாம் அவன் செயல்’.
பதிலளிநீக்குகொண்டு வந்த அந்த எறும்பை கடவுளாய் பார்க்காமல்? அது தான் மனிதனோ ?
பதிலளிநீக்குவருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பதிலளிநீக்குபொருந்துவன போமின் என்றால் போகா
-இதைதான் ஔவையார் சொல்லியிருக்கிறார் போலும்.
இந்நிகழ்விலிருந்து வாழ்க்கையின் தத்துவம் ஏதாவது புரிபடுகிறதா?
பதிலளிநீக்கு>>
புரிகிறது...,
த ம 8
பதிலளிநீக்குநல்ல கருத்து சொல்லும் கதை...
பதிலளிநீக்குகணேஷ் கூறியது...
பதிலளிநீக்கு//தீவிரமான பிரார்த்தனை கண்டிப்பாய் பலன் தரும் என்பது நான் புரிந்து கொண்டது. சரிதானா சார்..?//
அதுவும்தான்.
நன்றி.
Ramani கூறியது...
பதிலளிநீக்கு//அருமையான கருத்தைக் கொண்ட கதை
நாம் செய்ய வேண்டியதை மட்டும் சரியாகச் செய்துவிட்டு
மீதம் உள்ளதை அவனிடம் மட்டும்விட்டுவிட்டால் போதும்
எந்த ரூபத்திலாவது அவன் நமக்கு செய்ய வேண்டியதை
மிகச் சரியாகச் செய்வான்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்க//
நன்றி ரமணி.
சைதை அஜீஸ் கூறியது...
பதிலளிநீக்கு//பிரபஞ்சத்திலெ நட்க்ற அல்லாத்துக்கும் வொரு ரீசன்கீது நைனா!
அல்லாமே ஒரு கட்டளையெ தாவுதீர செய்றோம்பா.
பல சமயத்லெ இன்னாசெய்றேன்னு தெர்யாம்லே அல்லாத்தெயும் மாஞ்சு மாஞ்சு செய்வோம்பா.
நம்மொ ப்ராப்லம்தான் நமக்கு பெர்ஸாபடும். ஆனா பாரு வாத்யாரே, நம்ம கஸ்டத்த கொஞ்சம் அப்பாலே வச்சிட்டு ரோஸித்தேன்னு வை. அல்லாமே புஸ்ஸுன்னு போய்டும். பிரிஞ்சுதா?//
கரீட்டுப்பா!
டாங்க்ஸ்.
ஜீ... கூறியது...
பதிலளிநீக்கு//கலக்கல் பாஸ்!//
நன்றி ஜீ.
சே.குமார் கூறியது...
பதிலளிநீக்கு//தீவிரமான பிரார்த்தனை கண்டிப்பாய் பலன் தரும் என்பது நான் புரிந்து கொண்டது. சரிதானா //
//Ganesh sir solvathu correct endru ninaikkireaan...//
சரி.சைதை அஜீஸ் சொல்வதும்.
நன்றி.
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு// நல்ல கருத்து..
எல்லாம் அவன் செயல்...//
நன்றி கருன்.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு// பிரார்த்தனைக்கு உடனே பதில் கிடைச்சிருக்கு ஆனால் அவள் மழை உச்சியில் இருந்து அழகை கண்டு களிக்க முடியவில்லையே...!!!//
என்ன செய்ய.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு// கார்ட்டூன் பல கதைகள் சொல்லுகிறது தல....!!!//
நன்றி மனோ.
மைந்தன் சிவா கூறியது...
பதிலளிநீக்கு//நல்ல கருத்து சொல்லும் கதை!!ம்ம் எங்க இருந்து தான் கண்டு பிடிக்கிறீங்களோ!!//
நன்றி சிவா.
Yoga.S.FR கூறியது...
பதிலளிநீக்கு// கடவுள் இருக்கிறார் இல்லை என்று விவாதிப்பதை விடுத்து, நம்மை விடவும் மேலான ஒரு சக்தி உண்டென்று நம்புங்கள்!கடவுள் தெரிவார்!எறும்பு சுமந்தது கண் விழியை அல்ல, நம் விதியை!//
நன்றி.
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
பதிலளிநீக்குஐயா..
முடியல...
ஒரு படத்தை வச்சி.. அதுக்கு ஒரு கதைக்கட்டி அப்படியே பில்டப்பு கொடுத்து...
நான் கிளம்புறேன்ம்பா...
போயிட்டு வாங்க.
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
பதிலளிநீக்கு//கடவுள் உங்களுக்கும் அருள் புரியட்டும்//
நன்றி.
வே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு//அவள் இயற்கை அழகை இரசிக்க முடியாமல் போனதும், பின் அவளது விழி வில்லை கிடைத்ததும் ‘எல்லாம் அவன் செயல்’.//
ஆம். நன்றி ஐயா.
suryajeeva கூறியது...
பதிலளிநீக்கு//கொண்டு வந்த அந்த எறும்பை கடவுளாய் பார்க்காமல்? அது தான் மனிதனோ ?//
.சரிதான்.கடவுள் ஏதோ ஒரு உருவத்தில் தான் வருவார்!
நன்றி suryajeeva
சாகம்பரி கூறியது...
பதிலளிநீக்கு// வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா
-இதைதான் ஔவையார் சொல்லியிருக்கிறார் போலும்.//
நன்றி சாகம்பரி.
ராஜி கூறியது...
பதிலளிநீக்குஇந்நிகழ்விலிருந்து வாழ்க்கையின் தத்துவம் ஏதாவது புரிபடுகிறதா?
>>
//புரிகிறது...,//
நல்லது!
ராஜி கூறியது...
பதிலளிநீக்கு//த ம 8//
நன்றி ராஜி.
ரெவெரி கூறியது...
பதிலளிநீக்கு// நல்ல கருத்து சொல்லும் கதை...//
நன்றி ரெவெரி.
அருமையான ஒரு வாழ்க்கைத் தத்துவம் நிறைந்த பகிர்வு .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ......
பதிலளிநீக்குவாழ்க்கையின் தத்துவம் புரிந்து கொண்டேன்
பதிலளிநீக்குத.ம 9
கடவுளின் கருணை.
பதிலளிநீக்குநம்பிக்கை கொண்டோரின் பிரார்த்தனைக்கு அவன் செவி சாய்க்கிறான்.
பதிலளிநீக்குஅருமை சார்.
இது எல்லாம் லூசுத்தனமான கிறிஸ்துவ கதைகள். ஏன் அந்த ஆண்டவன் அந்த லென்ஸை முதலில் தொலைக்கவைக்க வேண்டும் . பின் வேண்டிய பின்பு எரும்பு மூலம் குடுகக வேண்டும்? கடவுள் என்ன லூசா?/
பதிலளிநீக்குமலை உச்சிக்கு சென்று இயற்க்கை அழகை ரசிக்க முடியாமல் சென்றதும்.. உழைப்பு விரயமாகிட்டதாக வருந்தினாய்.. இறைவனை பிறார்த்தித்தாய்... மனித உருவில் மீண்டும் உனக்கு கிடைத்தது.. மீண்டும் இயற்கை அழகை காண முயற்சி செய்... அதற்கான நேரம் இப்பொழுது தான் வந்திருக்கிறது.. இதில் மூன்று அம்சங்கள் அமைந்திருக்கிறது... 1. பிரார்த்தனை கண்டிப்பாக பலிக்கும்...
பதிலளிநீக்கு2. உழைப்பு வீணாகாது..
3. நேரம் அமையும் பொழுது தான் நல்லது நடக்கும்.
11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநல்ல கருத்தினை அழகாய்ச் சொல்லிப்போன பதிவு... வாழ்த்துகள்....
பதிலளிநீக்குகடவுள் மிகவும் கருணையானவர்...இதுபோல் அனுபவம் எனக்கு நிறய உண்டு....என்வாழ்வில் நான் துயருற்ற நேரத்திலெல்லாம் என் முருகன் எனக்கு கைகொடுத்து காப்பாற்றியுள்ளார்....
பதிலளிநீக்குகற்பனையோ, உண்மையோ, மிகவும் அருமையாக உள்ளது ஐய்யா...
பதிலளிநீக்குநன்றி அம்பாளடியாள்.
பதிலளிநீக்குநன்றி ரமேஷ்.
பதிலளிநீக்குநன்றி இராஜ ராஜேஸ்வரி.
பதிலளிநீக்குநன்றி சிவகுமாரன்.
பதிலளிநீக்குநன்றி Tamilan.
பதிலளிநீக்குநன்றி ராஜேஷ்.
பதிலளிநீக்குநன்றி ஆஃபீசர்!
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
பதிலளிநீக்குநன்றி thiyagarajan.
பதிலளிநீக்குநன்றி தமிழ்கிழம்.
பதிலளிநீக்குவணக்கம் ஐயா, நல்லவர்களை இறைவன் கைவிடான் எனும் உண்மையினை இக் கதை எனக்கு உரைத்து நிற்கிறது.
பதிலளிநீக்கு