தொடரும் தோழர்கள்

புதன், நவம்பர் 09, 2011

புகைப்பட நிபுணர்!

//தல... தலைப்பை பார்த்துட்டு நீங்க எடுத்த புகைப்படங்கள்ன்னு நினைச்சு ஆவலா வந்தேன்...//
    

இது எனது நேற்றைய புகைப்படப்பதிவுக்கு வந்த அன்பான பின்னூட்டங்களில் ஒன்று.இது என் பழைய நினைவுகளைக் கிளறி விட்டது.இது தொடர்பாக நான் முன்னர் எழுதிய பதிவொன்றை இப்போது மீள் பதிவாகத் தருவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.இதோ பதிவு---

”சமீபகாலமாக சில பதிவுகளில் கண்ட புகைப்படங்கள் என்னுள் ஒரு பொறாமையை ஏற்படுத்துகின்றன.எத்தனை ஆண்டுகளானலும் என்னால் ஆளுமைப்படுத்தமுடியாத ஒன்று புகைப்படக்கலை.


நான்   பட்டப்படிப்புப் படித்து வந்த போது ஒரு வீட்டு விசேடத்துக்காக என் நண்பர் ஒருவரிடம் காமிரா இரவல் வாங்கிப்(agfa foldable)  படம் எடுத்துத்தள்ளினேன்.கடைசியாக எல்லாப்படங்களிலும் உருவங்கள் பாதியாகவோ அல்லது கலங்கியோதெரிந்தன.


எனது அடுத்த முயற்சி சென்னையில் பட்ட மேற்படிப்பு படிக்கும்போது. நண்பர்களுடன் மாமல்லபுரம் சென்ற போது என் நண்பர் காமிராவை என் கையில்  கொடுத்து அனைவரையும் சேர்த்து ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னார்.யானை முன்னால் அவர்கள் நின்ற படத்தில் அவர்கள் தலைகள், யானையின் தலை மட்டுமே தெரிந்தது.அதன் பின் எங்கு சென்றாலும் காமிரா என் கைக்கு வராமல் பார்த்துக்கொண்டனர்.


பின்னர் சென்னையில் பணி புரியும்போது பர்மா பஜாரில் ஒரு யாஷிகா காமிரா வாங்கினேன்.குடும்பத்துடன் காஷ்மீர் செல்லும்போது டில்லி செங்கோட் டையில் காமிராவை கீழே போட்டு அது சிறிது வாய் பிளந்து கொள்ள பயணத்தில் ஒரு படமும் எடுக்கவில்லை.அதோடு முடிந்தது என் புகைப்பட நிபுணராகும் ஆசை.அந்தக் காமிரா எங்கோ கிடக்கிறது.


என் காமிரா ராசி நான் படம் எடுக்கும்போது மட்டுமன்றி நான் எடுக்கம்படும்போதும் இயங்குகிறது.


துபாய் சென்ற போது என் மருமகன் பல இடங்களில் என்னையும் என் மகளையும் ‘க்ளிக்கினார்.புறப்படுவதற்கு முன் தினம் பிரிண்ட் எடுத்த போது அதில் ஒன்றுமே இல்லை.மிகப் பழைய ஃபிலிம் என்று ஸ்டூடியோக் காரர் சொல்லிவிட்டார்.


காமிராவுக்கு என்னிடம் என்ன விரோதமோ தெரியவில்லை.”

இப்போது---ஒரு சோனி டிஜிடல் காமிராவால் சுட்டுத் தள்ளுகிறேன். இந்த மாதிரிக் காமிராக்களை வைத்து ஒரு குழந்தை கூடப் படமெடுக்குமே!!

46 கருத்துகள்:

  1. அந்த கேமிராக்கள் கொடுத்து வச்சது அவ்வளவு தான்..விடுங்க ஐயா.

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம்... நானும்கூட புகைப்படங்களுக்கு ராசி இல்லாதவன் தான். உங்கள் கட்டுரையைப் படித்து, நம்மைப் போல் ஒருவர் என்று ஆறுதலைடைந்தேன்...

    பதிலளிநீக்கு
  3. ஆமாம் சார். நானும் உங்கள் கட்சிதான். நம்மை காப்பதற்காகவே தற்போது டிஜிகேம் வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  4. தங்ளோடு என்னையும்
    சேர்த்துக் கொள்ளுங்கள்
    பித்தரே!
    நம்ம இராசியும்
    அப்படித்தான்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  5. ஹலோ நாங்களும் ஆட்டையில இருக்கோம் சார்.. கவலைப்படாதீங்க

    பதிலளிநீக்கு
  6. நமக்கு படம் பாக்கத்தான் தெரியும்

    பதிலளிநீக்கு
  7. நல்ல படம் எடுப்பதை விட நல்ல படங்களைத் தேடிப்பிடித்து வெளியிடுவது மிகக் கடினம். அந்த பணியை நன்றாகவே செய்து இருக்கிறீர்கள்.அதற்கு பிடியுங்கள் என் பாராட்டுக்களை!

    பதிலளிநீக்கு
  8. எனக்கும் டிரைவிங்குக்கும் ராசி இல்லாத மாதிரி உங்களுக்கு இப்பிடியா ஹா ஹா ஹா ஹா...!!!

    பதிலளிநீக்கு
  9. செங்கோவி கூறியது...
    அந்த கேமிராக்கள் கொடுத்து வச்சது அவ்வளவு தான்..விடுங்க ஐயா.//

    ஹா ஹா ஹா ஹா இதுதான் சூப்பரு...!!!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ஐயா,
    நீங்கள் என்ன தான் கமெராவின் செயல் என்று கூறினாலும்,
    படத்தினை ஒரு நல்ல லொக்கேசனில் வைத்து எடுக்கும் திறமை உங்கள் கைகளுக்குத் தானே உண்டு ஐயா.

    பதிலளிநீக்கு
  11. எனக்கும் புகைப்படம் எடுப்பதில் ஓரு அலாதிப்பிரியம்....ஆனால் சொதப்பியது கிடையாது.......

    உங்களுக்கும் கேமராவுக்கும் ராசி இல்லை போல ஜயா

    பதிலளிநீக்கு
  12. ஹா ஹா சந்தானத்துக்கும் போனுக்கும் செட்டாவதது போல்.. உங்களுக்கு கேமரா செட்டாவலை போலருக்கு...

    பதிலளிநீக்கு
  13. வாங்க நம்ம செட்டுக்கு கணேஷ்,நன்றி.

    பதிலளிநீக்கு
  14. @பாலா
    கட்சிக்கு இன்னொரு ஆளா!நன்றி.

    பதிலளிநீக்கு
  15. @புலவர் சா இராமாநுசம்
    ஐயா வேற சேந்துட்டாங்க!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. லிஸ்ட் பெரிசாகுதே.
    நன்றி ரமேஷ் பாபு.

    பதிலளிநீக்கு
  17. இப்ப டிஜிடல் காமிராதானே!அதனால் ஓகே!
    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  18. @MANO நாஞ்சில் மனோ
    எத்தனை கார் மேல் இடிச்சீங்க?!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  19. @நிரூபன்
    அது இல்லாததால்தான் பிரச்சினையே!

    பதிலளிநீக்கு
  20. அப்படிச் சொல்லுங்க ராஜேஷ்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  21. காமிராவுக்கு என்னிடம் என்ன விரோதமோ தெரியவில்லை//

    -:)

    என்னை புகைப்படம் எடுக்கு முன் பல நேரங்களில் காமரா பழுதாகிவிடும்...இதனால் தான் என்னவோ எனக்கு மற்றவரை எடுக்கப்பிடிக்கும்...

    பதிலளிநீக்கு
  22. நல்ல அனுபவம் தான் உங்களுக்கு

    த.ம 9

    பதிலளிநீக்கு
  23. :) அப்படி எடுத்த புகைப்படத்தினை இந்தப் பகிர்வில் சேர்த்திருக்கலாமே....

    பதிலளிநீக்கு
  24. அந்த பின்னூட்டத்தை போட்ட பயபுள்ள நான்தான்... Indiblogger சந்திப்பில் அனைவரும் வெளியே டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது நீங்கள் வெளியே வந்ததாகவே தெரியவில்லை... உள்ளே சிலர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.... நீங்களும் அப்படித்தான் என்று நினைத்துக்கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  25. ரெவெரி கூறியது...

    காமிராவுக்கு என்னிடம் என்ன விரோதமோ தெரியவில்லை//

    -:)

    // என்னை புகைப்படம் எடுக்கு முன் பல நேரங்களில் காமரா பழுதாகிவிடும்...இதனால் தான் என்னவோ எனக்கு மற்றவரை எடுக்கப்பிடிக்கும்...//

    நன்றி ரெவெரி.

    பதிலளிநீக்கு
  26. கோகுல் கூறியது...

    //கேமிராவால் நொந்த பதிவர்?//
    :) நன்றி கோகுல்

    பதிலளிநீக்கு
  27. M.R கூறியது...

    //நல்ல அனுபவம் தான் உங்களுக்கு

    த.ம 9//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  28. வெங்கட் நாகராஜ் கூறியது...

    // :) அப்படி எடுத்த புகைப்படத்தினை இந்தப் பகிர்வில் சேர்த்திருக்கலாமே....//
    அதெல்லாம் எங்கே போச்சோ!

    பதிலளிநீக்கு
  29. Philosophy Prabhakaran கூறியது...

    //அந்த பின்னூட்டத்தை போட்ட பயபுள்ள நான்தான்... Indiblogger சந்திப்பில் அனைவரும் வெளியே டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது நீங்கள் வெளியே வந்ததாகவே தெரியவில்லை... உள்ளே சிலர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.... நீங்களும் அப்படித்தான் என்று நினைத்துக்கொண்டேன்...//

    நீங்களெல்லாம் ஒரு குழுவாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தீர்கள். நான் தனியாக இருந்தேன்.what business has an old man in such a young group?!:)
    நான் எடுத்த சில புகைப் படங்களை அன்றைய பதிவிலேயே வெளியிட்டிருந்தேன். நான் இருக்கும் இரு படங்கள் தவிர மற்றவை நான் எடுத்தவையே.பாருங்கள் http://chennaipithan.blogspot.com/2011/10/blog-post_09.html

    நன்றி பிரபா.

    பதிலளிநீக்கு
  30. உங்களுக்கு இப்படி, எனக்கு என்னன்னா என்னை அழகா படம் எடுக்கணும்னா ஒரு நல்ல போடோக்ராபர் ஐ தேடுவேன்... வேற யார் எடுத்தாலும், அதை அப்படியே தூக்கி பரண்ல போட்டுட வேண்டியது தான்...

    பதிலளிநீக்கு
  31. அதுசரி...
    ஒவ்வொருத்தருக்கு ஒன்னொன்னு
    ஒத்துவரலை...
    அழகா சொல்லியிருகீங்க ஐயா...

    பதிலளிநீக்கு