தொடரும் தோழர்கள்

புதன், நவம்பர் 23, 2011

ஸ்டார்ட் காமிரா! ஆக்‌சன் !( சென்ற இடுகையின் தொடர்ச்சி)

பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிக்கு வந்த பின் நாடகம் மட்டுமல்ல,வேறு எந்தக் கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. மீண்டும் மேடை ஏறப் பல ஆண்டுகள் ஆகி விட்டது.

வங்கிப் பணியில் இருக்கும்போது வங்கி மன மகிழ் மன்ற விழாவில் ஒரு நாடகத்தில் என்னை நடிக்கும்படிக் கேட்டுக்கொண்டனர்.ஆச்சரியமாக மீண்டும் அந்த நாடகத்தில்  இரு வேடங்களில் (!) நடிக்க வேண்டியதாயிற்று -ஒரு ‘தொண தொணப்பு‘க் கிழவனார்,மற்றும் காவல் துறை ஆய்வாளர்.நாடகம் தொடங்குமுன் ஆய்வாளர் வேடத்தில் நாடகம் நடந்த சபா (ஆர்.ஆர் சபா) அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்தவர்களை சிறிது மிரட்ட அவர்கள் நிஜமாகவே பயந்தது ஒரு சுவையான அனுபவம்.வழக்கம்போல் இந்த நாடகத்திலும் என் நடிப்பு பாராட்டப்பட்டது.(டம் டம் டம்).

மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி.சில ஆண்டுகளுக்குப் பின் ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது,என் நண்பர் ஒருவர் மூலமாக.தொடரின் பெயர் “சந்திரலேகா”.அத்தொடரில் என்னுடன் பிரபலமான பலர் நடித்தனர்.நிழல்கள் ரவி, மலேசியாவசுதேவன்,. சபிதா ஆனந்த், பி.ஆர்.வரலட்சுமி, பிர்யதர்ஷினி முதலியோர்.கதாநாயகனின் அலுவலக முதலாளியாக ஒரு பாத்திரம் ஏற்றேன்.கதாநாயகியாக நடித்த பிரிய தர்ஷினிஅப்போது கல்லூரியில் படித்து வந்தார்.


முதல் நாள் படப்பிடிப்பு ஏ.ஆர்.எஸ் தோட்டத்தில்.முதல் நாளே சிறிது உருக்கமான காட்சி.படப்பிடிப்பு முடிந்ததும் கதாநாயக நடிகர் “முதல் நாள் என்று சொல்கிறீர்கள்; ஆனால் மிக அனுபவமான நடிகர் போல நடிக்கிறீர்களே” என்று பாராட்டினார். மகிழ்வுந்தில் என்னைத் திரும்ப அழைத்து வந்த ஒருவர் “நான் மானிட்டரில் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஒரு இயல்பான ‘கெத்து’இருக்கிறது உங்களிடம்” என்று பாராட்டினார்.

பின் ஸ்ரீதேவி வீடு,ஏ.வி.எம்.ஸ்டுடியோ என்று நான்கைந்து நாள் படப்பிடிப்பு நடைபெற்றது.இயக்குனர் முதல் டச்-அப் பையன் வரை எல்லோரும் என் நடிப்பைப் பாராட்டினர்.

ஆனால் திடீரென்று படப்பிடிப்பு நின்று போனது.எந்தத் தொலைக் காட்சிக்காக தொடர் தயாரிக்கப்பட்டதோ அந்த சானல் மூடப்பட்டது. 

அத்தொடர் வெளி வரவில்லை.

 இயக்குனர் பெயர் தினகரன்.சானல்,ஜே.ஜே. 

 அதன் பின் நானும் பணி மாற்றலில் புனே,அலகாபாத் என்று போய் விட்டேன்.  
2001இல்  விருப்ப ஓய்வில் திரும்பி வந்த பின் ஏனோமுயற்சி செய்யும் எண்ணமே வரவில்லை.

என் கவனமும் ஆன்மீகம்,ஜோதிடம் என்று திரும்பி விட்டது.

எல்லாம் அவன் செயல்!

டிஸ்கி:-என் ஆன்மீகப்பதிவுக்கு இங்கே க்ளிக்குங்கள்
               


49 கருத்துகள்:

  1. அட அசத்தி இருக்கீங்க.... மீண்டும் முயற்சி செய்யலாமே.....

    பதிலளிநீக்கு
  2. அருமை சார். டிவி தொடர்களில் எல்லாம் நடித்திருக்கிறீர்களே. அந்த தொடர் வெளிவராமல் போனது துரதிஷ்டமே. சரி காலம் போடும் கணக்கை யார் மாற்ற முடியும்? மீண்டும் முயற்சி செய்யலாமே?

    பதிலளிநீக்கு
  3. படிப்புக்கும் நடிப்புக்கும் வயது ஒரு தடையே இல்லைங்க சென்னைப்பித்தன் சார்... இப்பக்கூட நீங்க முயற்சித்தால் ஒரு நல்ல நடிகரை நாங்கள் தொலைக் காட்சிகளில் காணக்கூடும்...

    பதிலளிநீக்கு
  4. >>வங்கிப் பணியில் இருக்கும்போது வங்கி மன மகிழ் மன்ற விழாவில் ஒரு நாடகத்தில் என்னை நடிக்கும்படிக் கேட்டுக்கொண்டன

    அண்ணே, எனக்கு மட்டும் தனியா ஜோடி யாரு?ன்னு சொல்லுங்க ஹி ஹி

    பதிலளிநீக்கு
  5. இப்போ கூட குறும்படங்களீல் சி பி ஐ ஆஃபீசராக நீங்க நடிக்கலாம்!!

    பதிலளிநீக்கு
  6. அட! போலீஸ் வேஷத்துல எல்லாம் கலக்கியிருக்கீங்க பாஸ்! :-)

    பதிலளிநீக்கு
  7. முயற்சி திருவினையாக்கும் என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார்.
    இப்போழுது புரிகிறது உங்களின் இளமையின் ரகசியம் என்ன என்று. better late than never என்பது போல அடுத்த சுற்று ஆரம்பியுங்கள், உங்களின் நடிப்புத்திறனோடு!
    all the best

    பதிலளிநீக்கு
  8. வங்கி மன மகிழ் மன்ற விழாவில் //
    ஒ.. இதெல்லாம் வங்கியில இருக்கா? சூப்பர்..

    பதிலளிநீக்கு
  9. இப்போதும் தங்கள் முயற்சி செய்யலாம். வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  10. ////ஆனால் திடீரென்று படப்பிடிப்பு நின்று போனது.எந்தத் தொலைக் காட்சிக்காக தொடர் தயாரிக்கப்பட்டதோ அந்த சானல் மூடப்பட்டது.

    அத்தொடர் வெளி வரவில்லை.

    இயக்குனர் பெயர் தினகரன்.சானல்,ஜே.ஜே.
    /////

    அட பிரமாதம் ஜயா அந்த டீவித்தொடர் வெளிவந்திருந்தால் புகழடைந்திருப்பீர்கள் என்ன செய்வது துரதிஸ்டம்

    மீண்டும் முயற்சியுங்கள் ஜயா வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. அந்த ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட ஃபோட்டோ இருந்தால் இணைங்க ஐயா..

    பதிலளிநீக்கு
  12. ஸ்டார்ட் காமிரா! ஆக்‌சன் !

    எல்லாம் அவன் செயல்!

    பதிலளிநீக்கு
  13. மீண்டும் முயற்சி செய்யுங்கள்
    நடித்தபோது புகைப் படம் ஏதேனும் எடுத்தீரா இருந்தால் அடுத்த பதிவிர் போடுங்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  14. பார் வேந்தே எனை பார் வேந்தே...அந்த நிகழ்வில் வரும் முத்துராமன் நடித்த பாத்திரம் உங்களுக்கானதே!

    பதிலளிநீக்கு
  15. நீங்கள் வங்கியின் மனமகிழ்மன்ற நாடகத்தில் நடித்ததும் சின்னத்திரையில் நடித்ததும் இதுவரை எனக்கு தெரியாத செய்திகள். ஒருவேளை ‘சந்திரலேகா’ தொடர் ஒளிபரப்பட்டு இருந்திருந்தால், உங்கள் புகழ் ‘ஜேஜே’ என உயர்ந்திருக்கும். எல்லாம் நன்மைக்கே! திரும்பவும் முயற்சிக்கலாமே?

    பதிலளிநீக்கு
  16. அடடா..
    தொடர் ஒளிபரப்பு ஆகாமல் போயிடுச்சே...
    பன்முகத்திறமையாலரான நீங்கள் இன்னும்
    முயற்சி செய்யலாம் ஐயா....

    பதிலளிநீக்கு
  17. குட்டி நடிகர் திலகத்தை தமிழகம் இழந்துவிட்டது...

    பதிலளிநீக்கு
  18. (மனசாட்சி)

    நல்ல வேளை நாங்க தப்பிச்சோம்...

    பதிலளிநீக்கு
  19. ஆஹா அழகான ஒரு நடிகரை திரையுலகம் மிஸ் பண்ணுருச்சே...!!!

    பதிலளிநீக்கு
  20. நீங்க மறுபடியும் முயற்சி பண்ணுங்க தல....

    பதிலளிநீக்கு
  21. விதி அப்படி இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். சொல்ல முடியாது நாளை பெரிய திரையில் தோன்றினாலும் ஆச்சரியம் இல்லை.

    பதிலளிநீக்கு
  22. பொதுவான பதில்,
    அனைவருக்கும்---
    பலர் சொல்லியிருக்கிறார்கள், இப்போதும் முயற்சி செய்யலாமே என்று,ஆனால் தொடரில் நடிக்கப் போனால் காலை 9 மணி முதல் மாலை(இரவு) வரை அங்கு இருக்க நேரும்.இன்று எனக்கு வீட்டில் இருக்கும் கடமைகள் அதை அனுமதிக்கவில்லை.இதனால் எனக்கு வருத்தமும் இல்லை. அனைவரின் அன்புக்கும் நன்றி.
    தனித்தனி நன்றிகள் தொடர்கின்றன!

    பதிலளிநீக்கு
  23. @சி.பி.செந்தில்குமார்
    ஜோடி இல்லாத ரோல்!

    பதிலளிநீக்கு
  24. மீண்டும் முயற்சி செய்யலாமே?

    பதிலளிநீக்கு
  25. பன்முகத்திறமை உங்களிடம் இருக்கிறது.தற்போது தொலைக்காட்சி தொடரில் முயற்சி செய்து பார்க்கலாமே!

    பதிலளிநீக்கு
  26. @செங்கோவி
    நாடகம் நடந்த ஆண்டு 1986-87 என நினைவு.படங்கள் இருந்தன.இப்போது எங்கு இருக்கின்றனவோ!
    தொலைக்காட்சித் தொடர் 1996.படங்கள் இல்லை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  27. @புலவர் சா இராமாநுசம்
    நன்றி.
    படம் இல்லை.

    பதிலளிநீக்கு
  28. @வே.நடனசபாபதி
    எல்லாம் நன்மைக்கே!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  29. இன்னும் நிறைய காலம் இருக்கிறதே சென்னை பித்தன்?

    பதிலளிநீக்கு
  30. FOOD கூறியது...

    // நல்ல நடிகரை நாம் இழந்துவிட்டோம்//
    :) நன்றி.

    பதிலளிநீக்கு
  31. அப்பாதுரை கூறியது...

    //இன்னும் நிறைய காலம் இருக்கிறதே சென்னை பித்தன்?//
    பார்ர்க்கலாம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு