நான்: எப்ப வந்தே அருண்?எத்தனை நாள் தங்குவாய்?
அருண்:மூன்று வாரம் விடுப்பு. அதுவே அதிகம்!
நான்:ரெண்டு வருடம் கழித்து வந்திருக்கே!அப்பா,அம்மாவோட கொஞ்ச நாள் இருக்க வேண்டாமா?இங்கு என்ன இல்லை? அமெரிக்கா மாதிரி பெரிய மால்கள் இருக்கின்றன. விலையும் குறைவு.
அருண்: உண்மைதான். நல்ல கடைகள் இருக்கின்றன .விலையும் குறைவுதான் .நல்ல உணவு விடுதிகள் இருக்கின்றன.ஆனால் சாலைகளும், போக்குவரத்தும் படு மோசம்.
நான்:சரிதான்.ஆனால் அது மிகச் சிறிய விஷயம்.கொஞ்சம் அனுசரித்துப் போக வேண்டியதுதான்.
அருண்;நான் ஏன் இந்தப் போகுவரத்து நெரிசலோடும்,மசத்தனமான கூட்டத்தோடும்,குப்பையோடும் அனுசரித்துப் போக வேண்டும்?
நான்: அதை விடு.அப்பா அம்மா எப்படியிருக்காங்க?அம்மாவுக்கு உடம்பு சரியில்லையெனக் கேள்விப்பட்டேனே?
அருண்;பரவாயில்லை.மருத்துவர் மருந்து கொடுத்திருக்கிறார்.அப்பா கவனித்துக் கொள்கிறார்.
நான்:அவருக்கும் வயதாகி விட்டது. எப்படி சமாளிப்பார்?அதுவும் நீ அருகில் இல்லாததே இருவருக்கும் பெரிய குறையாக இருக்கும்.
அருண்:அவர் கொஞ்சம் அனுசரித்துப் போக வேண்டியதுதான்.
நான்: சரி யு.எஸ்.ஸில் எல்லாம் எப்படி இருக்கிறது.உங்கள் சாப்பாடெல்லாம் எப்படி? இதே இட்லி,தோசை,உப்புமாதானே!இதுதான் மிக நல்ல உணவு.
அருண்:இல்லை.தினம் காலை பெட்டியில் அடைக்கப்பட்ட தானிய வகைகள் சாப்பிடுவோம்.மதிய உணவுக்கு இடையீட்டு ரொட்டி எடுத்துச் செல்வேன் இரவு குளிர் பதனப் பெட்டியில் வைக்கப்பட்ட சமைத்த உணவைச் சூடு படுத்திச் சாப்பிடுவோம்!தினம் சமைப்பதெல்லம் முடியாது.வாரம் ஒரு முறைதான் சமையல்.
நான்:இதெல்லாம் உடல் நலத்துக்கு உகந்ததல்லவே?
அருண்;என்ன செய்ய,அனுசரித்துப் போக வேண்டியதுதான். புரதச் சத்துக்காக அவ்வப்போது அசைவமும் சாப்பிடுவோம்.
நான்:நீங்கள் சைவம் ஆயிற்றே!இப்போதெல்லாம் பல அசைவ உணவு சாப்பிடுபவர்களே ,சைவத்துக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
அருண்;இருக்கும் இடத்துக்குத் தக்கபடி அனுசரித்துப்போக வேண்டியதுதான்.
நான்:சென்னையிலே வளர்ந்தவன் நீ.அங்குரொம்பக் குளிரோ?
அருண்: ஆமாம்.கடுங்குளிர் ,பனிப்பொழிவு எல்லாம்தான்.ஆனால் வீட்டில் மின் வெப்பமூட்டி இருக்கிறது.அதிகம் வெளியே போக மாட்டோம்.அனுசரித்து நடக்கக் கற்றுக் கொண்டோம்!
நான்: உன் மனைவியும் வேலை பார்க்கிறாளல்லவா?
அருண்:ஆமாம்.இருவரும் சம்பாதித்தால்தான் வசதியாக இருக்க முடியு.வீட்டுக்குக் கடன் வாங்கியிருக்கிறோம்.காலை 8 மணிக்குபோனால் மாலை 6மணிக்கு வருவோம்.பள்ளியில் படிக்கும் எங்கள் மகன் வந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ, கணினியில் விளையாடிக்கொண்டோ இருப்பான்.பசித்தால் குளிர் பதனப் பெட்டியிலிருந்து ஏதாவது எடுத்துச் சாப்பிடுவான்.
நான்:அங்கு கலாசாரம் எல்லாம் வேறாயிற்றே.பையன் அந்தக் கலாசாரத்தில் வளர்ந்தால் கவலை இல்லையா?
அருண்:அதெல்லாம் அவன் இஷ்டம்.யாரும் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை.அனுசரித்துப் போக வேண்டியதுதான்.
நான்:அங்கு நீ என்ன வேலை பார்க்கிறாய்?இந்தியாவில் இதே மாதிரி வேலை கிடைக்காதா?
அருண்:அங்கு மென் பொருள் துறையில்தான் இருந்தேன்.சமீபத்தில் வேலை போய் விட்டது. இப்போது ஒப்பந்த அடிப்படையில் ஒரு வேலை கிடைத்திருக்கிறது.எப்படியோ அனுசரித்துப்போக வேண்டியதுதான்.
நான்:உனக்கு இந்தியாவிலேயே நல்ல வேலை கிடைக்குமே. இப்போதெல்லாம் நல்ல சம்பளமும் கிடைக்கிறது,மென்பொருள் துறையில்.
அருண்:உண்மைதான்.நல்ல சம்பளம் கிடைக்கும்.அதிகம் சேமிக்கவும் முடியும்.ஆனால் அந்தக் கூட்டம்,போக்குவரத்து நெரிசல் ,குப்பை...சே . நான் ஏன் அனுசரித்துப்போக வேண்டும்?தலை எழுத்தா?
நான்:சரி பார்ப்போம்!
இனிய காலை வணக்கம் ஐயா,
பதிலளிநீக்குநலமா?
ஒரு காலத்தில் தன் நாட்டில் உள்ள நிலமைகளை உணர்ந்து அனுசரித்துப் போக வேண்டும் என்று சொல்லியவர், பின்னர் வெளி நாட்டிற்குப் போனதும், தன் நாட்டை அனுசரித்துப் போக முடியாது என்று சொல்லுவது வேதனையளிக்கிறது.
இவர்களை போல் உள்ளவர்களை அனுசரித்து போக வேண்டியதுதான்
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குநன்றி ஐயா.
இப்படியும் இருக்கிறார்கள் ...ஹூம் ...அனுசரித்து போகவேண்டியதுதான் !
பதிலளிநீக்குதோபார்பா இவனெ,
பதிலளிநீக்குநம்ம வூட்டு கொயந்த ஒண்ணுக்கு இருந்தா அட்ஜஸ் பண்ணமாட்டானா ஆனா அங்கே இங்க்லீஸ்காரேன் மூஞ்சிலே துப்பினாலும் அட்ஜஸ் பண்ணி தொடச்சிகீனு போவானாம்.
இது புலி வால் புட்ச்ச கதேதான் நைனா. விட்டாலும் கஸ்டம் விடாக்காட்டியும் கஸ்டம்தான்பா
அதானே அனுசரித்து போக வேண்டியதுதானே. தமிழ்மணம் 4
பதிலளிநீக்குஆம். அதிக வருமானத்திற்கு ஆசைப்படும் மனம் படைத்தவர்கள் இப்படித்தான் தங்களை சமாதானம் செய்து கொள்வார்கள். நாம்தான் இவர்களை அனுசரிக்க வேண்டும் (மனச்சாட்சி சொன்னதுபோல)
பதிலளிநீக்குஅவருக்கு வேண்டியதை மட்டும் அவர் அனுசரிப்பார் அதுவும் அமெரிக்காவில்... நம் நாடு என்று வரும்போது அனுசரிக்க மனமில்லை. இதுபோன்ற அனுசரிக்கத் தெரியாதவர்களால் வெளி நாட்டில் இருக்கும் எல்லா இந்தியர்களும் இப்படித்தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். அனுசரிக்கத் தெரிந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.... வாழ்த்துக்கள்.
புறக்குடியிருப்பாளர் என்று தலைப்பிலேயே அருமையா சொல்லிடீங்க. எங்கும் அனுசரித்து போகவேண்டியது காலத்தின் கட்டாயம்.
பதிலளிநீக்குநேர்முகம் யதார்த்தம் !
இப்படியும் சிலர் .. நல்ல பதிவு அய்யா ..
பதிலளிநீக்குஇன்று என் வலையில்
பதிலளிநீக்குபேஸ்புக் ல அக்கௌன்ட் இருக்க ? அப்ப இது உங்களுக்குதான் ..
@நிரூபன்
பதிலளிநீக்குநன்றி.
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநம்மவர்கள் வெளிநாட்டில் எந்த வேலையையும் செய்யத் தயாராய் இருப்பார்கள். ஆனால் நம் ஊரில் மட்டும் கௌரவம் பார்ப்பார்கள். இது தெரிந்த கதைதான். இவர்கள் எப்போதும் திருந்தப் போவதில்லை. இவர்களை நினத்து நாம் கவலைப்படத் தேவையில்லை. ‘நிச்சயம் ஒரு நாள் ‘கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்’ செய்யப்போகிறார்கள்.
காலை வணக்கம் நிரூ!நீங்களும் நலமென நம்புகிறேன்.
பதிலளிநீக்கு@மனசாட்சி
பதிலளிநீக்குசரி.
நன்றி.
@Rathnavel
பதிலளிநீக்குநன்றி.
@koodal bala
பதிலளிநீக்குநன்றி.
@சைதை அஜீஸ்
பதிலளிநீக்குநன்றி.
@ராஜி
பதிலளிநீக்குநன்றி.
@கணேஷ்
பதிலளிநீக்குசரிதான்.
நன்றி.
சே.குமார்
பதிலளிநீக்குஉண்மை.
நன்றி.
@Kousalya
பதிலளிநீக்குநன்றி.
@"என் ராஜபாட்டை"- ராஜா
பதிலளிநீக்குநன்றி.
"என் ராஜபாட்டை"- ராஜா
பதிலளிநீக்குபார்க்கிறேன்.
தாய் நாட்டு மக்களின் வரிப் பணத்தில் படித்து விட்டு வேறு எவனுக்கோ குடை பிடிப்பவனை...
பதிலளிநீக்குகசப்பான உண்மை. அருமையா சொல்லி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஅந்தக் கூட்டம்,போக்குவரத்து நெரிசல் ,குப்பை...சே . நான் ஏன் அனுசரித்துப்போக வேண்டும்?தலை எழுத்தா?//
பதிலளிநீக்குநான் மும்பை போயி இறங்கியதும் இந்த நெரிசலை கண்டு ரெண்டு நாள் ஒருமாதிரியாக இருக்கும் அப்புறம் அனுசரித்து போயிருவேன் ஹி ஹி...
நேர்முக உரைக்கு தலைப்புலையே மொத்தத்தையும் சொல்லிட்டீங்க...
பதிலளிநீக்குஇதான் இன்றைய யதார்த்தம்
பதிலளிநீக்குஇப்படியும் மனிதர்கள், அடச்சே...
பதிலளிநீக்குஅனுசரித்துப்போக வேண்டியதுதான். நிதர்சனப் ப்கிர்வு..
பதிலளிநீக்குஅனுசரித்துப்போக வேண்டியதுதான். நிதர்சனப் ப்கிர்வு..
பதிலளிநீக்குஇந்த மாதிரி இருப்பவர்களையும் அனுசரித்து போக வேண்டியது தான்
பதிலளிநீக்குத.ம 10
உண்மைதான்.நல்ல சம்பளம் கிடைக்கும்.அதிகம் சேமிக்கவும் முடியும்.ஆனால் அந்தக் கூட்டம்,போக்குவரத்து நெரிசல் ,குப்பை...சே . நான் ஏன் அனுசரித்துப்போக வேண்டும்?தலை எழுத்தா? //
பதிலளிநீக்குஅவர் எத்தனையோ விசயங்கள் உதாரணத்திற்கு அவரது மகன் விசயத்திலேயே அசால்ட்டாக அனுசரித்து போகிறவர்... இதை அனுசரிக்க முடியவில்லை என்றால்... நமது நாட்டின் நிலைமை எவ்வளவு மோசமாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.. ஆம் இங்கே போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த வேண்டும்... மக்கள் தொகையை கணக்கில் கொண்டு.. அதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டும்.... மொத்தத்தில் அரசாங்கம் நம் நாட்டை சீர்திருத்தும் பணியில் தீவிரம் காட்ட வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே!
நல்ல பகிர்வுஅனுசரித்து போக வேண்டியதுதான்
பதிலளிநீக்குமனமிருந்தால் அனுசரித்துப் போக முடியும்னு அழகாச் சொல்லியிருக்கீங்க..
பதிலளிநீக்குஉங்கள் வீட்டில் என்னுடைய வீட்டில் இப்படி சிலர் இருக்கதான் செய்கிறார்கள்.
பதிலளிநீக்குஅங்கிருந்து வந்ததால் நாம்தான் அவர்களை போய் பார்க்க வேண்டுமாம் இப்படியும் சிலர்
சிலருக்கு அமெரிக்கா கௌரவச் சின்னம்
நமக்கு அசௌகரியம்
ஆம் அருமையான மதிப்பீடு
வெளிநாட்டு வாழ்க்கையில எதையெல்லாம் அனுசரிச்சுப்
பதிலளிநீக்குபோறாங்கப்பா. ஆனா இதைமட்டும் அனுசரிக்க என்ன !.....
(மனசாட்சி )
பகட்டு வாழ்வுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்
என்று அருமையாகச் சொன்னீர்கள் ஐயா .வாழ்த்துக்கள் மிக்க
நன்றி பகிர்வுக்கு .......
வணக்கம் ஐயா,நானும் வெளி நாட்டிலேயே இருப்பதால் கருத்துரைக்க முடியவில்லை!அனுசரித்துப் போக வேண்டியது தான்.
பதிலளிநீக்கு@சென்னை பித்தன்
பதிலளிநீக்குநன்றி.
@suryajeeva
பதிலளிநீக்குநன்றி.
@பாலா
பதிலளிநீக்குநன்றி.
@MANO நாஞ்சில் மனோ
பதிலளிநீக்குநீங்க எங்கேயும் அனுசரித்துப் போகத் தெரிந்தவர்!
@MANO நாஞ்சில் மனோ
பதிலளிநீக்குநன்றி.
@K.s.s.Rajh
பதிலளிநீக்குநன்றி.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
பதிலளிநீக்குநன்றி.
@இராஜராஜேஸ்வரி
பதிலளிநீக்குநன்றி.
@M.R
பதிலளிநீக்குநன்றி.
@மாய உலகம்
பதிலளிநீக்குநன்றி.
@மாலதி
பதிலளிநீக்குநன்றி.
@செங்கோவி
பதிலளிநீக்குநன்றி.
@அ. வேல்முருகன்
பதிலளிநீக்குநன்றி.
@FOOD
பதிலளிநீக்குநன்றி.
@அம்பாளடியாள்
பதிலளிநீக்குநன்றி.
@Yoga.S.FR
பதிலளிநீக்குநன்றி.
உங்கள் நேர்முகம் உண்மை சம்பவமாய் இல்லாமலிருக்ககடாவதாக...
பதிலளிநீக்கு@ரெவெரி
பதிலளிநீக்குநன்றி.
உண்மையான உண்மையை
பதிலளிநீக்குஉண்மையாக சொல்லியிருக்கிறீர்கள்...'நன்று ஐயா....
வெளி நாட்டு வாழ்கையில் மட்டுமல்ல இங்கும் தான் தினமும் பலவிதமான சோதனைக்கு இடையில் மக்கள் அனுசரித்து போய் கொண்டு இருக்கிறார்கள் .." adjust " பண்ணிக்கங்க சார் ! வாசுதேவன்
பதிலளிநீக்கு