தொடரும் தோழர்கள்

சனி, நவம்பர் 26, 2011

கட்சி கலைக்கப் படுகிறது!தலைவர் வருத்தம்!


தனது கட்சி கலைக்கப்படுவதாக தலைவர் செ.பி. அவர்கள்  இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.அவரது கட்சி பற்றிய தகவல்கள் முன்பே இங்கு வெளியிடப்பட்டன. பாருங்கள்!

அறிக்கையின் விவரம்-

//இந்த ஆண்டு சனவரி மாதம் மிகுந்த எதிர்பார்ப்புடன் எனது ”அனைத்திந்திய அண்ணா,பெரியார்,காமராஜ் ,ராஜாஜி, நேரு,ஆரிய,திராவிட முன்னேற்ற முற்போக்கு மறுமலர்ச்சி மக்கள் கழகம்” தொடங்கப்பட்டது.கட்சியின் அடிப்படைக் கொள்கையாக நேருவின் சோசலிஸம், காமராஜின் ஜனநாயக சோசலிஸம் ,ராஜாஜியின் தாராள மயமாக்கல்,பெரியார்,அண்ணாவின் சுயமரியாதைக் கொள்கைகள் எல்லாம் சேர்ந்த ஒரு அற்புதக் கலவையான ”அநேகாபெராயிசம்” உருவாக்கப் பட்டது.மிக நல்ல திட்டங்களை மக்கள் முன்,குறிப்பாகப் பதிவர்கள் முன் வைத்தேன்.எதிர்கால இந்தியாவின் சுபிட்சத்துக்கான தாரக மந்திரம் அநேகாபெராயிசம் என்பதில் எனக்கு இப்போதும் ஐயமில்லை.

பதிவர் வாரியம் ஒன்று அமைத்துப் பதிவர்களுக்கு வீடு கட்டித்தருதல், இலவசக் கணினி வழங்குதல் போன்ற பல நல்ல திட்டங்களை பதிவர்கள் முன் வைத்தேன்.

பின் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கிடலாம் எனத்தீர்மானித்து அது பற்றிக்  கட்சியின் ஆதரவாளரான நாஞ்சில் மனோ அவர்களுடன் கலந்தாலோசித்தேன்.

ஆனால் இன்று நாடு இருக்கும் நிலையைப் பார்த்தால் என் கட்சி இந்த ஊழல் சூழலில் நிலைத்து நிற்க இயலாது எனத் தோன்றி விட்டது!விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறி விட்டது .எந்தக்கட்சியும் அது பற்றி உண்மையான கவலை கொள்ளாமல் முதலைக் கண்ணீர் வடிக்கும் அவல நிலையைப் பார்க்கிறேன்.மக்கள் படும் இன்னல் என்னால் காணச் சகிக்கவில்லை.இயலாமையில் மனம் புழுங்குகிறேன்.

எனவே சில நாட்கள் இந்தத்துன்பங்களைக் காணாத தூரத்துக்குப் போய்விடத் தீர்மானித்திருக்கிறேன். ஸ்விட்சர்லாந்து சென்று சில நாட்கள் இருந்து வருவேன்.
அதற்கு முன் கட்சியைக் கலைக்கும் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.

நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி.

அநேகாபெராயிசம் வாழ்க! //

வெல்க தமிழகம்!

இந்த அறிக்கை வெளியிடும்போது கட்சியின் மற்ற இரண்டே உறுப்பினர்களான அவரது மகளும்,மகனும் உடன் இருந்தனர்!

31 கருத்துகள்:

  1. கட்சி கலைக்கப்படுகிறது என்ற செய்து கேட்டது முதல் செய்வது அறியாது திகைத்து நிற்கிறேன். ஏற்கனவே தங்களிடம் கேட்டுக்கொண்ட வாரியத் தலைவர் பதவியைத் தருவீர்கள் என நம்பியிருந்தபோது காலை ‘வாரி’ விட்டீர்களே!இருந்தாலும் ஒரு நைப்பசை திரும்பவும் கட்சி ஆரம்பிப்பீர்கள் என்று.
    காத்திருக்கிறேன் அந்த நாளுக்காக!

    பதிலளிநீக்கு
  2. ////////
    பதிவர் வாரியம் ஒன்று அமைத்துப் பதிவர்களுக்கு வீடு கட்டித்தருதல், இலவசக் கணினி வழங்குதல் போன்ற பல நல்ல திட்டங்களை பதிவர்கள் முன் வைத்தேன்.


    ////////////////


    சாமி வீடு கொடுக்குது... கணினி கெர்டுக்குது

    உடகே கட்சியில சேர்ந்து இதெல்லாம் வாங்கிடலான்னு வந்தா இப்படி கலச்சிட்டு போயிட்டா என்னங்க அர்த்தம்....

    தலைவர் ஒழிக..!

    பதிலளிநீக்கு
  3. பகல் வணக்கம்,ஐயா!கட்டிக்கிட்ட பாவத்துக்கு மனைவியும்,பொறந்த பாவத்துக்கு புள்ளையும் இருந்திருப்பாங்க!

    பதிலளிநீக்கு
  4. ச்சே கட்சியில் சேர்ந்து, சுவிஸ்ல அக்கவுண்ட் ஒப்பன் பண்ணலாம்னு இருந்த என் கனவு...?
    ---------வடை போச்சே....-------

    பதிலளிநீக்கு
  5. கட்சியின் ஆதரவாளரான நாஞ்சில் மனோ அவர்களுடன் கலந்தாலோசித்தேன்.//

    கண்டிப்பா கன்பார்ம் உங்களை திகார் நோக்கி போகவச்சிருவான் கவலையே படாதீங்க ஹா ஹா ஹா ஹா......

    பதிலளிநீக்கு
  6. ஐயா கட்சியைக் கலைத்தால் நம்ம தொண்டர்கள் கதி என்னாகிறது.

    பதிலளிநீக்கு
  7. எதேச்சதிகாரமாக எந்த வித தீர்மானமும் இயற்றாமல் கட்சியை கலைத்ததற்கு கண்டனம் தெரிவித்து வெளி நடப்பு செய்கிறேன்

    பதிலளிநீக்கு
  8. எதிர்கால இந்தியாவின் சுபிட்சத்துக்கான தாரக மந்திரம் அநேகாபெராயிசம் என்பதில் எனக்கு இப்போதும் ஐயமில்லை...

    மீண்டு வருக...

    பதிலளிநீக்கு
  9. //அநேகாபெராயிசம் வாழ்க! //

    வெல்க தமிழகம்!//

    ஹாஹா கலக்கறீங்க சார்!

    பதிலளிநீக்கு
  10. கட்சியின் இளைஞர் அணியில் சேரலாம் என்று வந்தால் நீங்க கட்சியை கலைச்சிடீங்களே பாஸ்

    பதிலளிநீக்கு
  11. @வே.நடனசபாபதி
    காலம் கனிந்து வந்தால் நடக்கலாம்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. //கவிதை வீதி... // சௌந்தர் // //
    இது ஒரு கட்சித் தொண்டருக்கு அழகல்ல!மீண்டும் தொடங்கினால் உங்களைக் ’கவனித்து’ விடலாம்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. @MANO நாஞ்சில் மனோ
    மீண்டும் தொடங்கினால் கொ.ப.செ. யாக இருப்பீர்களா?!

    பதிலளிநீக்கு
  14. @ MANO நாஞ்சில் மனோ
    சேரும்போதே இப்படியா?!

    பதிலளிநீக்கு
  15. @MANO நாஞ்சில் மனோ
    மிக நல்லவர்தான் நீங்கள்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. @suryajeeva
    உள்ளிருப்புப் போராட்டம் நடத்துங்கள்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. @இராஜராஜேஸ்வரி
    ஃபினிக்ஸ் பறவை போல் மீண்டும் உயிர்த்து வரும் அ.அ.பெ.கா.ரா.நே.ஆ.தி.மு.மு.ம.ம.க!
    அப்பா1மூச்சு வாங்குது!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  18. விலைவாசி ஏறினா என்னங்க.. அதுக்கேத்த மாதிரி நிதி திரட்டிட வேண்டியது தானே? கட்சியைக் கலைக்கலாமா?

    பதிலளிநீக்கு
  19. @K.s.s.Rajh
    .மீண்டும் வாய்ப்பு வரலாம்.நன்றி.

    பதிலளிநீக்கு
  20. @துரைடேனியல்
    இந்த வரலாறு காணாத ஆதரவைக் காணும்போது மீண்டும் தொடங்கலாம் எனத் தோன்றுகிறது!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  21. கட்சி போனால் என்ன ..கைவசம் எவ்வளவோ சரக்கு உள்ளதே ..அருமையான இடம் ..திரைக்கதை ஒன்றினை எழுதுங்கள் ..வாசு

    பதிலளிநீக்கு
  22. கட்சி கலைக்கப்படுகிறது!
    கவலைப் படாதீர்கள் பித்தரே!
    நாம் முதியவர் முன்னேற்றக்
    கழகம் என்ற புதிய கட்சி தொடங்கு
    வோம்

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு