தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜனவரி 23, 2011

மயிலை சட்டமன்றத்தொகுதி வேட்பாளர் அறிவிப்பு!

மயிலை சட்டமன்றத்தொகுதி வேட்பாளர் நேற்று அறிவிக்கப் பட்டார்.அனைத்திந்திய அண்ணா,பெரியார்,காமராஜ் ,ராஜாஜி, நேரு,ஆரிய,திராவிட முன்னேற்ற முற்போக்கு மறுமலர்ச்சி மக்கள் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மயிலை சட்டமன்றத்தொகுதி வேட்பாளராக திரு.சென்னை பித்தன் அவர்கள் போட்டியிடுவார் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதையடுத்து,டுபாகூர் டைம்ஸ் நிருபர்,திரு.பித்தன் அவர்களைப் பேட்டி காணச் சென்றார்.அங்கே,வீட்டு வாசலில்,கூட்டமாகப் பலர் காத்திருந்தனர்.அருகில் நின்றவரிடம் விசாரிக்க அவர் சொன்னார் ”நாங்கள் எல்லோரும் தமிழ்ப் பதிவர்கள்.திரு சென்னை பித்தன் அவர்களும் ஒரு தீவிரமான பதிவர் எனவே அவர்களை வாழ்த்தி, எங்கள் ஆதரவை அவருக்குத் தெரிவிப்பதற்காகக் குழுமியிருக்கிறோம்” என்று .நிருபர் யோசித்தார்;தினம்,தினம் பெருகி வரும் தமிழ்ப் பதிவர் எண்ணிக்கையைப் பற்றி அவர் அறிவார்!! அத்தனை பதிவர்களும் ஆதரவு தெரிவித்தால் சென்னை பித்தன் வெல்வது எளிது என்று தீர்மானித்தார்!!

அப்போது வீட்டின் உள்ளிருந்து வந்த ஒருவர் சொன்னார் ”பதிவர்களுக்கெல்லாம் காலை உணவுக்கு ஐயா ஏற்பாடு செய்திருக்கிறார்.அனைவரையும் உணவருந்த அழைக்கிறேன்” என்று.உடனே நிருபர் தவிர மீதி அனைவரும் சென்று விட்டனர். நிருபருக்கும் பசிதான்.போகலாமா என யோசித்தார்.ஆனால் கடமை முக்கியம் என்பதால்,பேட்டிக்குப் பின் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம் என்று இருந்து விட்டார்.மற்றொருவர் வெளி வந்து ,இவரை யாரென்று கேட்டு உள்ளே அழைத்துச் சென்றார்.

உள்ளே,ஒரு குளுகுளு அறையில்,மாலைக் குவியலின் நடுவே பித்தன் அமர்ந்திருந்தார்.பச்சை,வெள்ளை,சிவப்பு,கருப்பு,மஞ்சள்,ஆகிய வண்ணங்களில் கரை போட்ட வேட்டி;வெண்மையான கதர் சட்டை; தோளிலும்,வேட்டி போன்றே பல வண்ணக் கரை போட்ட மேல் துண்டு.

”நான் டுபாகூர் டைம்ஸ்.நிருபர்”
“மகிழ்ச்சி;அமருங்கள்”
“நீங்கள் மயிலைத்தொகுதியில் போட்டியிடுவதுபற்றி......”
“கட்சி மேலிடத்தின் கட்டளை”
"மேலிடம் என்றால்...?”
”நான்,என் மகள்,மகன் அடங்கிய ஒரு குழு இருக்கிறது”
“கட்சி பற்றி நான் முன்னால் கேள்விப் பட்டதில்லையே?”
”.புதிய கட்சிதான், ஆனால் புதுமை நிறைந்தகட்சி.”
“உறுப்பினர்கள்......”
“சேர்க்கை நாடு முழுவதும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.ஆயிரக் கணக்கான இளைஞர்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்”
”கட்சியின் கொள்கை.......”
“கட்சியின் பெயரிலேயே இருக்கிறது.நேருவின் சோசலிஸம், காமராஜின் ஜனநாயக சோசலிஸம் ,ராஜாஜியின் தாராள மயமாக்கல்,பெரியார்,அண்ணாவின் சுயமரியாதை கொள்கைகள் எல்லாம் சேர்ந்தது எங்கள் கொள்கை.கொள்கை விளக்கக் கையேடு ஒன்று தயாராகிகொண்டிருக்கிறது..’அநேகாபெராயிஸம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம். எதிர் கால இந்தியாவின் சுபிட்சத்துக்கான கொள்கை இதுதான்.வேறொன்றில்லை!”

“!!!!!!!!!!!!!!!”

”உடனடித்திட்டங்கள் ஏதாவது........”

”எனது முதல் முயற்சி, என் தலைமையில்,தமிழ்ப் பதிவர் வாரியம் ஒன்று அமைப்பது.பதிவர்களுக்கு வீடு கட்டித்தர அரசு முன் வர வேண்டும்.அதில் மூத்த பதிவர்களுக்கு முன்னுரிமை-மூத்த என்றால் பதிவுலகில் அல்ல,வயதில்.(அப்போதுதானே எனக்கு நல்லது!)

“நல்ல திட்டம்தான்!வேறுதிட்டங்கள்.....?”


“பல உள்ளன.பதிவர்களுக்கு இலவசக் கணினி வழங்குவது,சிறந்த பதிவுகளுக்கு(என்புகழ் பாடும்) பரிசளிப்பது,பதிவர்களுக்கு மேலவையில் ஒரு இடம் ஒதுக்குவது இப்படிப்பல.”

”புரட்சிகரமாகச் சிந்திக்கிறீர்கள்”
“எனக்குப் பாராட்டே பிடிக்காது. பதிவுலகக் கவிஞர் மாதவன் என்பவர்(உண்மையில் அப்படி யாரும் இல்லை என நம்புகிறேன் -செ.பி.)ஒருவர் என்னைப் பாராட்டி ஒரு
பாட்டெழுதியுள்ளார்.இதோ பாருங்கள்”
நிருபர் பார்க்கிறார்
ஆதவன்
--------
நீ ஆதவன்
அறிவில் ஆதவன்
அழகில் ஆதவன்
ஆற்றலில் ஆதவன்
ஈகையில் ஆதவன்
எழுத்தறிவில் ஆதவன்
உயர்வில் ஆதவன்
கருணையில் ஆதவன்
புத்தியில் ஆதவன்.
உன் அருள் பெற்ற நான்
ஒரு மா தவன்!”
நிருபர் வார்த்தைகளைச் சேர்த்துப் படித்துப் பார்க்கிறார்-அறிவில்லாதவன்................என்று.--சிரிப்பு வருகின்றது.
நிருபர் சொன்னார்”கவிதை பொருத்தமாகத்தான் இருக்கிறது!”

அப்போது பதிவர்களெல்லாம் காலை உணவு முடித்து விட்டு வரவும்,பேட்டியை முடித்துக் கொள்ளலாம் என்று பித்தன் அவர்கள் கூற,நிருபர் புறப்பட்டார்
“அப்ப நானும் டிஃபன் சாப்பிட்டு விட்டுப் புறப்படுகிறேன்”
பதிவர்களை உணவுக்கு அழைத்துச் சென்றவர் சொன்னார் ”டிஃபனா?எல்லாம் காலியாகி விட்டதே!”

நிருபர் ஏமாற்றத்துடன் புறப்பட்டார்.

32 கருத்துகள்:

 1. ஆஹா...அருமை தலைவரே....உங்களுக்கு தமிழ்மணம், இன்ட்லி உட்பட எல்லா வாக்குசீட்டிலும் ஓட்டு போட்டுட்டேன் வாத்தியாரே.....நீங்க ஜெயிச்சுருவீங்க....கள்ள வோட்டு இருந்தால் அதுல ஒன்னு போடலாம் இல்லையே நான் செய்றது?

  பதிலளிநீக்கு
 2. கள்ள ஓட்டுப் போட்டு ஜெய்க்க வச்சிடறேன்

  பதிலளிநீக்கு
 3. அண்ணாதே எங்க அஞ்சா நெஞ்சன், அறிவுலக ஆதவன், பகுத்தறிவு பகலவன், சீர்திருத்த செம்மல்.தமிலு நாட்டின்
  வப்புதல்வன் எங்கள் சென்னை காதலன்- (அட அத்தான் எங்க அணாத்தே பெருங்கறேன் ) வால்க! வால்க!!
  பதிவருங்கோ அல்லாரும் பொஞ்சாதி புள்ள குட்டிங்கோ கூட இட்டாந்து எலேஷன்ல நம்ம அண்ணாதே ய கெலிக்க வெசீங்கன்னா அல்லாருக்கும் ஒரு கம்பூடறு போட்டி இலவசமா தந்திகினுவாறு.அப்பாலக்கி வூடும் தர்வாரம்.
  தண்ணி அடி பார்டிங்கோ கவலை பட வேணாம். ஒருநாளைக்கி ஒரு குவாட்ரு கட்டிங்கு மார்பியஸ் ...அட அத்து இன்னா பேரு கண்ணு?? Morpheus ...ஆஅங் அத்து, ப்ரீயா குடுத்துகினுவாறு.
  அல்லாரும் நம்ம அண்ணாத்த கி ஓட்டு போடுங்கோ! ஆக்காங் !! இன்னா வர்ட்டா.!!!

  பதிலளிநீக்கு
 4. நாடோடி மன்னன படம் பார்ப்பது போல் இருந்தது. அநேகாபெராயிஸம் ... கொள்கை பரப்பு செயலாளர் பதவி எனக்கு அருள வேண்டுகிறேன். கட்சியின் பெயர் அருமை. பாட்டில் இன்னும் ஒரு வரி விட்டுப்போன வரி இதோ
  " நீ கற்பனையில் ஆதவன்" கட்சி கொடி பற்றி ஒன்றும் காணோமே... உதிரத்தில் பிறக்குமா?! பலவிதமான அணிகளை எதிர்பார்க்கலாம் போல ... கூட்டணி எந்த கட்சியுடன் என " குடும்ப குழுவை" கூட்டி முடிவு எடுத்து அறிக்கை விடும் நாளை எதிர்பார்கிறேன்
  !
  வருங்கால இந்தியாவே வருக ! இலவச பணியை துவங்குக ....
  இல்லாதவர்க்கு,இருப்போர்க்கு இரு வேளை இலவச உணவு வழங்கி,
  அனைவரையும் ஏழையாக மாற்றுக ...

  வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 5. ரஹீம் கஸாலி அவர்களே!
  வாக்குச் சாவடிக்கு முதலில் வந்து வாக்களித்த உங்களுக்கு இலவசக் கணினி வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப் பரிந்துரைக்கிறேன்!(வீடு வழங்க முன்னிரிமை அளிப்பதற்கு உங்க வயசு பத்தாது!)இப்பவே ஜெயிச்ச மாதிரிதான் உணர்கிறேன்!
  மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 6. எல் கே கூறியது...

  //கள்ள ஓட்டுப் போட்டு ஜெய்க்க வச்சிடறேன்//
  நல்ல ஓட்டுல இந்த நாட்டுல ஜெயிக்க முடியாதுன்னு முடிவு பண்ணீட்டீங்க!
  வருகைக்கு நன்றி1

  பதிலளிநீக்கு
 7. மாணிக்கம் தம்பி!படா ஷோக்காச் சொல்லிக்கினீங்க!அது இன்னாது மார்ஃபியஸ்?புச்சாக்கீது!எதுனாலும் சரி;தம்பி சொன்னாக் கொடுக்கத் தாவலை? குடுத்துட்லாம்!

  ரொம்ப டான்க்ஸ் தம்பி!

  பதிலளிநீக்கு
 8. வாசு,
  நீங்கதான் நம்ப அ.பெ.கா.ரா.நே.ஆ.தி.மு.மு.ம.ம.கழகத்தின் கொ.ப.செ.-பிடியுங்கள் பதவியை!
  கட்சிக் கொடி,தேர்தல் சின்னம், கூட்டணி பற்றியெல்லாம்,தலைமை விரைவில் முடிவெடுக்கும். காத்திருங்கள்!
  வருங்கால இந்தியாவின் தாரக மந்திரமே ’அநேகாபெராயிசம்’தான்!
  வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 9. எதிர்கால மற்றும் நிரந்தர முதல்வர் அவர்களே!நீண்ட நெடுங்காலமாக எதிர்பார்த்திருந்த ஒரு மகிழ்ச்சியான செய்தியை தந்தற்கு நன்றி!

  சக பதிவன் என்ற முறையில் என்னுடைய நிபந்தனையற்றஆதரவை தருகிறேன் என்றும்,அதற்காக தாங்களே விரும்பி(!) தர இருக்கின்ற பதிவர் வாரியத்தின் மிக சிறிய பதவியான, தலைவர் பதவியையும் ஏற்பதோடு, தங்களது Discretionary Quota வில் தர இருக்கின்ற, அண்ணா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறு குடிலையும் தயக்கத்தோடு ஏற்பேன் என்றும் இதன் மூலம் அறிவிக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 10. அநேகாபெராயிஸம்"

  :))

  கலக்கிட்டீங்க சார்..

  உங்க கிட்ட டியூஷன் படிக்க வரலாமான்னு..:))

  பதிலளிநீக்கு
 11. நடனசபாபதி அவர்களே!
  வாரியத்தலைவர் பதவி உங்களுக்கே!தலைவர் என்ற முறை யில் உங்களுக்கான ‘சிறு குடில்” ஒதுக்கீடு சம்பந்தமான கோப்பில் பரிந்துரைசெய்து நீங்கள் அனுப்பினால் கையொப்பம் இட்டு அனுப்பி விடுகிறேன்!காலம் கனியட்டும்,ஆகட்டும் பார்க்கலாம், வெங்காயம்!
  உங்கள் வருகைக்கும்,என்னை நிரந்தர முதல்வர் ஆக்கியதற்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 12. பயணமும் எண்ணங்களும் கூறியது...

  //அநேகாபெராயிஸம்"

  :))

  கலக்கிட்டீங்க சார்..

  உங்க கிட்ட டியூஷன் படிக்க வரலாமான்னு..:))//
  :-D ’அநேகாபெராயிஸம்’ பற்றி டியூஷன் என்றால் வேறு ஆளே கிடையாது !
  வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 13. .//கொள்கை விளக்கக் கையேடு ஒன்று தயாராகிகொண்டிருக்கிறது..//
  நூறு பிரதி எனக்கு அனுப்புங்க! கொள்கையைப் பரப்பி விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 14. அறியாதவன் அவர்களே!உங்கள் வேண்டுகோளை என் செயலருக்கு அனுப்பி விட்டேன்!தயாரானதும் கையேடு அனுப்பப் படும்!

  பதிலளிநீக்கு
 15. //அநேகாபெராயிஸம்’
  தமிழ்ப் பதிவர் வாரியம்
  டுபாகூர் டைம்ஸ்//
  இந்த ரீதியில் போன பதிவுலகம் மட்டுமல்ல நிஜ அரசியலிலும் உங்கள யாராலுல் அசைச்சுக்க முடியாது...

  .

  பதிலளிநீக்கு
 16. //அல்லாருக்கும் ஒரு கம்பூடறு போட்டி இலவசமா தந்திகினுவாறு.அப்பாலக்கி வூடும் தர்வாரம்.//

  மெய்யாலுமா வாத்தியாரே... உனி ஆரு இன்னா சொன்னாகாட்டியும் எ ஓட்டு உனக்குத்தான்.. நீ போயி தகரிமா தூங்கு வாத்தியாரே..

  பதிலளிநீக்கு
 17. பாரத்... பாரதி... கூறியது
  //இந்த ரீதியில் போன பதிவுலகம் மட்டுமல்ல நிஜ அரசியலிலும் உங்கள யாராலுல் அசைச்சுக்க முடியாது...//
  உடன் பிறப்பே!உன் போன்றோர் ஆதரவு இருக்கும் வரை என்னை யாரால் அசைக்க முடியும்?
  /அல்லாருக்கும் ஒரு கம்பூடறு போட்டி இலவசமா தந்திகினுவாறு.அப்பாலக்கி வூடும் தர்வாரம்.//

  //மெய்யாலுமா வாத்தியாரே... உனி ஆரு இன்னா சொன்னாகாட்டியும் எ ஓட்டு உனக்குத்தான்.. நீ போயி தகரிமா தூங்கு வாத்தியாரே..//

  சொன்னதைச்செய்வோம்;செய்வதையே சொல்வோம்!

  வருகைக்கும்,கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி,பாரதி.உங்கள் பொன்னான வாக்குகள் எனக்கே!

  பதிலளிநீக்கு
 18. உண்மையிலேயே டுபாக்கூர் டைம்ஸ்தான்.. ஏமாந்தது நிருபர் மட்டுமா..?
  ஹி..ஹி.. அருமை தோழா...


  முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

  பதிலளிநீக்கு
 19. கவிதை காதலன் கூறியது....
  //உண்மையிலேயே டுபாக்கூர் டைம்ஸ்தான்.. ஏமாந்தது நிருபர் மட்டுமா..?
  ஹி..ஹி.. அருமை தோழா...//
  இனிய ஏமாற்றம்தானே தோழா!நாளை எ(இ)துவும் நடக்கலாம்!
  வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 20. அருமை ஆதவரே.
  உங்களுக்கே என் ஓட்டு.
  அநேகாபெராயிசம்- ரெஜிஸ்டர் பண்ணி உரிமை வாங்கிருங்க யாராவது சுட்டுரப் போறாங்க.
  போடுங்கம்மா ஓட்டு

  பதிலளிநீக்கு
 21. சிவகுமாரன் கூறியது...

  //அருமை ஆதவரே.
  உங்களுக்கே என் ஓட்டு.
  அநேகாபெராயிசம்- ரெஜிஸ்டர் பண்ணி உரிமை வாங்கிருங்க யாராவது சுட்டுரப் போறாங்க.
  போடுங்கம்மா ஓட்டு//
  உடன் பிறப்பே!ஓட்டுக்கு நன்றி.அநேகாபெராயிசத்தை நாட்டுடைமையாகி விட்டேன்.என் ஆட்சியின் ஆஸ்தானக் கவிஞருக்கு மீண்டும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. எல்லாம் சரி; ஒரு ஓட்டுக்கு எத்தனை கொடுப்பீங்க? கலர் டிவி உண்டா? இலவச தமிழ் சினிமா உண்டா? சிங்கில் டீயாவது உண்டா? எல்லாம் விவரமா சொல்லுங்க.

  பதிலளிநீக்கு
 23. அப்பாதுரை கூறியது...

  // எல்லாம் சரி; ஒரு ஓட்டுக்கு எத்தனை கொடுப்பீங்க? கலர் டிவி உண்டா? இலவச தமிழ் சினிமா உண்டா? சிங்கில் டீயாவது உண்டா? எல்லாம் விவரமா சொல்லுங்க.//
  இந்த நாட்டில் ஏழைகள் இருக்கும் வரை,இலவசங்கள் தொடரும்!! வருகைக்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 24. "மேலிடம் என்றால்...?”
  ”நான்,என் மகள்,மகன் அடங்கிய ஒரு குழு இருக்கிறது”//

  எப்படியும் கடைசியில் அங்கே தானே முடிக்கிறீங்க. வித்தியாசமான பதிவு.

  பதிலளிநீக்கு
 25. இனியவன் கூறியது...

  // "மேலிடம் என்றால்...?”
  ”நான்,என் மகள்,மகன் அடங்கிய ஒரு குழு இருக்கிறது”//

  எப்படியும் கடைசியில் அங்கே தானே முடிக்கிறீங்க. வித்தியாசமான பதிவு.//
  அங்கேதானே முடிச்சாகணும்!அவர் மட்டும் இல்லையென்றால்,அநேகப்
  பதிவர்களுக்கு எழுத விறுவிறுப்பான செய்தியே இல்லாமல் போய்விடுமே!
  நன்றி இனியவன்!

  பதிலளிநீக்கு
 26. // பதிவுலகக் கவிஞர் மாதவன் என்பவர்(உண்மையில் அப்படி யாரும் இல்லை என நம்புகிறேன் -செ.பி.) //

  பதிவுலக -- யெஸ்.
  மாதவன் -- யெஸ்.
  கவிஞர் -- நல்லவேளை, இது நானில்லை.

  பதிலளிநீக்கு
 27. நகைச்சுவை பதிவுதான். ஆயினும் நகைச்சுவை மூலம் சில உண்மைகளை உரைக்கவைக்கு இயலும் எனத் தெரிகிறது இப்படி:-

  1. தமிழகத்தில் தொன்றுதொட்டு வரும் கொளகைப்பிளவுகள் (OUT OF PREJUDICES, JUST FOR THE PLEASURE OF BEING DIFFERENT FROM OTHER GROUPS, OR TO HURT OTHER GROUPS) சேரவேண்டும்; ஒரு ஒருங்கினைந்த அடையாளம் பெற்று ஒன்று சேரவேண்டும். This becomes obvious from the name of your party.

  2. பதிவர்கள் என்போர் இக்கேடுகெட்ட தமிழ்சமூகத்திலிருந்தால் (பிச்சைக்கார சமூகம்) முளைத்தெழுகிறார்கள். அவர்களும் ஏதாவது தமக்குப் போடப்படுமா என்று ஏங்குபவர்கள்தான்.

  Very good post. More from you I look forward to.

  பதிலளிநீக்கு
 28. பதிவுலகக் கவிஞர் இல்லாத மாதவன் வர்களே!
  வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 29. Jo Amalan Rayen Fernando கூறியது...

  //நகைச்சுவை பதிவுதான். ஆயினும் நகைச்சுவை மூலம் சில உண்மைகளை உரைக்கவைக்கு இயலும் எனத் தெரிகிறது //
  Very good post. More from you I look forward to.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு