தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜனவரி 18, 2011

சீச்சீ,சிறியர் செய்கை செய்தான்!

”கோயிற் பூசை செய்வோர்-சிலையைக்
கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன்-வீட்டை
வைத்தி ழத்தல் போலும்,
ஆயிரங்க ளான-நீதி
யவையு ணர்ந்த தருமன்
தேயம் வைத்தி ழந்தான்-சிச்சீ
சிறியர் செய்கை செய்தான்.”

”நாட்டு மாந்த ரெல்லாம்-தம்போல்
நரர்க ளென்று கருதார்
ஆட்டு மந்தை யாமென்-றுலகை
அரச ரெண்ணி விட்டார்.”

(பாரதியின் பாஞ்சாலி சபதம்-அடிமைச்சருக்கம்)
நாட்டின் முடி சூடிய மன்னன் தருமன்.அவனுக்கே அவனது நாட்டின் மீது இருக்கும் உரிமை ஒரு கோவிற் பூசாரி,ஒரு வீட்டு வாசற்காவலன் போன்றதுதான்.நாட்டைப் பணயமாக வைக்க எந்த உரிமையும் இல்லை.அது மிகவும் சிறியவர் செயல்,இழிந்த செயல்;எனவே சிச்சீ என்கிறான் பாரதி.

ஆனால்,இன்றைய,மக்களால்,மக்களுக்காக நடத்தப் படும் மக்களாட்சியில் என்ன நடக்கிறது?


முடிசூடா மன்னர்கள்,ராசாக்கள்,நாட்டுக்கு,நாட்டு அரசுக்கு,நாட்டு மக்களுக்கு, லட்சக்கணக்கான கோடிகள் இழப்பை ஏற்படுத்துகின்றனர்,சுய லாபத்துக்காக!
அதை மேலும் சில மன்னர்கள் நியாயப் படுத்துகின்றனர்!
எதனால்?
பாரதி அழகாகச் சொல்கிறான் பாருங்கள்-
“”நாட்டு மாந்த ரெல்லாம்-தம்போல்
நரர்க ளென்று கருதார்
ஆட்டு மந்தை யாமென்-றுலகை
அரச ரெண்ணி விட்டார்.”

அய்யா பாரதி! தருமன் செயலைப் பொறுக்க முடியாமல்,’சிச்சீ” என்ற நீ,இன்று இங்கு இருந்தால் என்ன சொல்வாய் அய்யா?

19 கருத்துகள்:

  1. நல்ல பதிவு. நீங்கள் கூறிய அதே கருத்துக்களையே இங்கு வலையில் நிறைய காணலாம். பெரும்பாலும் அரசியல் சமூக நிகழ்வுகள் பற்றிய பதிவுகளில் உள்ள அவலம் இதுதான். என்ன செய்வது? நம் மக்கள் மாக்களாக இருக்கும் வரை இதே நிலைதான்.

    பதிலளிநீக்கு
  2. பாரதி இருந்தால் பாடியே எரித்து இருப்பான் இவர்களை

    பதிலளிநீக்கு
  3. கக்கு - மாணிக்கம் கூறியது...
    //நம் மக்கள் மாக்களாக இருக்கும் வரை இதே நிலைதான்.// அதுதான் அவர்களுக்கு வசதி,பாரதியின் சொற்களில் அதுதான்ன்ன்ன்ன்னெ அவர்கள் நினைப்பதும்!
    //ஆட்டு மந்தை யாமென்-றுலகை
    அரச ரெண்ணி விட்டார்.”
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,நண்பரே!

    பதிலளிநீக்கு
  4. எல் கே கூறியது...

    // பாரதி இருந்தால் பாடியே எரித்து இருப்பான் இவர்களை//
    சரியாகச் சொன்னீர்கள் நண்பரே! இங்கின்றில்லையே அறம் பாட ஒரு கவிஞன்!
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  5. நாட்டின் முடி சூடிய மன்னன் தருமன்.அவனுக்கே அவனது நாட்டின் மீது இருக்கும் உரிமை ஒரு கோவிற் பூசாரி,ஒரு வீட்டு வாசற்காவலன் போன்றதுதான்

    இப்ப சொன்னால் ஆட்டோ வீட்டுக்கு வந்துடுமே?

    பதிலளிநீக்கு
  6. எரி தழல் கொண்டு வரச்சொல்லியிருப்பான், ஆனால் இந்த வித்தைக்காரர்கள் நெருப்பையும் ஏமாற்ற கற்றவர்கள் என்பதை அறியாமல்..

    பதிலளிநீக்கு
  7. //இப்ப சொன்னால் ஆட்டோ வீட்டுக்கு வந்துடுமே?//
    முதலில் ஆட்டோ வரும், பின்பு 108 ஆம்புலன்ஸ் வரும்..

    பதிலளிநீக்கு
  8. ஜோதிஜி,
    பாரதி சொன்னதைத்தானே நான் சொன்னேன்!ஆட்டோ பாரதி வீட்டுக்குத்தான் போகணும்!
    வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. பாரத்... பாரதி... கூறியது..
    //ஆனால் இந்த வித்தைக்காரர்கள் நெருப்பையும் ஏமாற்ற கற்றவர்கள் என்பதை அறியாமல்..//
    அதுவும் சரிதான்!
    //முதலில் ஆட்டோ வரும், பின்பு 108 ஆம்புலன்ஸ் வரும்..//
    நல்லாப் பீதியைக் கிளப்பறாங்கப்பா! வருகைக்கு நன்றி பாரதி!

    பதிலளிநீக்கு
  10. //அய்யா பாரதி! தருமன் செயலைப் பொறுக்க முடியாமல்,’சிச்சீ” என்ற நீ,இன்று இங்கு இருந்தால் என்ன சொல்வாய் அய்யா?//

    'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்'
    என்று அன்றே பாடிவிட்டான்.

    பதிலளிநீக்கு
  11. நடனசபாபதி அவர்களே!இப்பதிவை நான் ’நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்றுதான் முடித்திருந்தேன். வெளியிடுமுன் அதை ஏனோ நீக்கி விட்டேன்.அதையே நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்!great men think alike! வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  12. மன்னனின் கடமையை அழகா சொன்னீர்கள்...

    இங்கே மன்னரில்லையே.. திருடும் கூட்டமல்லவா?.

    பதிலளிநீக்கு
  13. பயணமும் எண்ணங்களும் கூறியது...

    //மன்னனின் கடமையை அழகா சொன்னீர்கள்...

    இங்கே மன்னரில்லையே.. திருடும் கூட்டமல்லவா?.//
    ஆம்,சகோதரி!நமது குமுறலை நம் எழுத்தில் காட்டுவதைத் தவிர வேறென்ன செய்ய?
    நீண்ட விடுப்புக்குப் பின் வந்திருக்கிறீர்கள்!வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  14. “”நாட்டு மாந்த ரெல்லாம்-தம்போல்
    நரர்க ளென்று கருதார்
    ஆட்டு மந்தை யாமென்-றுலகை
    அரச ரெண்ணி விட்டார்.//

    அப்படி நினைக்கப்போய்தான் இப்படி ஆட்சி நடைபெறுகிறது ஒரு முடிவை நோக்கி.

    பதிலளிநீக்கு
  15. இனியவன் கூறியது.
    //அப்படி நினைக்கப்போய்தான் இப்படி ஆட்சி நடைபெறுகிறது ஒரு முடிவை நோக்கி.//
    ’முடிவை நோக்கி’ என்று நீங்களே சொல்லி விட்டீர்களே!அந்த ’முடிவை ’இந்த ஆட்டு மந்தைகள்’தான் அளிக்க வேண்டும்!
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,இனியவன்.

    பதிலளிநீக்கு
  16. சிவகுமாரனை பாட்டெழுதச் சொல்லி ஒதுங்கியிருப்பான்.

    பதிலளிநீக்கு
  17. அப்பாதுரை கூறியது...

    //சிவகுமாரனை பாட்டெழுதச் சொல்லி ஒதுங்கியிருப்பான்.//
    பலே பாண்டியா!மிக மிகச் சரியாகச் சொன்னீர்கள்!
    சிவகுமாரன்!பாரதி அழைப்பது கேட்கவில்லையா?!
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அப்பாதுரை அவர்களே!

    பதிலளிநீக்கு
  18. விடுங்க சார்,கலைஞரே சொல்லிட்டார் அவர் மக்கள் நலனுக்காகத்தான் அப்படி செய்தாராம்.

    பதிலளிநீக்கு
  19. இனியவன் கூறியது...
    //விடுங்க சார்,கலைஞரே சொல்லிட்டார் அவர் மக்கள் நலனுக்காகத்தான் அப்படி செய்தாராம்.//
    ’மக்கள்’ நலமேதான்!
    நன்றி இனியவன்.

    பதிலளிநீக்கு