ஜப்பானின் பிரதமர் மோரி அவர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்திக்கும்போது அவருடன் ஆரம்பத்தில் ஓரிரு வார்த்தைகளாவது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதற்காக அவருக்குப் பயிற்சியளிக்கப் பட்டது.பயிற்சியளித்த மொழிபெயர்ப்பாளர்கள் அவரிடம் கூறினர்”நீங்கள் ஒபாமாவைச் சந்தித்ததும் ’எப்படியிருக்கிறீரகள்(how are you) என்று கேளுங்கள்.அதற்கு அவர் ‘நான் நன்றாக இருக்கிறேன்;நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்’ என்றுதான் சொல்வார்.உடனே நீங்கள்”நானும்தான்” என்று சொல்ல வேண்டும்.அதற்குப் பின் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் ” என்று.
ஆனால்,சந்திப்பின் போது மோரி,ஒபாமாவைப் பார்த்துத் தவறுதலாக ”நீங்கள் யார்?”(who are you) என்று கேட்டு விட்டார்.ஒபாமா சிறிது திகைத்துப் பின் ”நான் மிச்செல்லின் கணவன்” என்று நகைச்சுவையாகக் கூறி நகைத்தார்.
உடனெ மோரி”நானும்தான்” என்று கூறி நகைக்க ஒபாமா பேச்சு மூச்சற்றுப் போனார்!
------------------------
இதைச்சொல்லும்போது திரு.காமராசர் பற்றிச் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
சில வெளிநாட்டுத் தலைவர்கள் சென்னை வந்தபோது”who is the chief minister?” என்று கேட்க,திரு காமராசர்” I is the chief minister “என்று சொன்னதாக ஒரு செய்தி உண்டு.என் நண்பன் ஒருவன் இதையே சிறிது நீட்டி,”are you?” என்று அவர்கள் ஆச்சரியத்துடன் கேட்க,காமராசர் அவர்கள்” I are” என்று சொன்னதாகச் சொல்வான்!
ஆனால் ஆங்கிலம் தெரியாத காமராசர் ஒரு சிறந்த ஆட்சியாளராகத் திகழ்ந்தார்.மிகச் சிறந்த அமைச்சர்களைக் கொண்ட ஒரு அமைச்சரவை அவர் கீழ் இயங்கியது.அவர், தேர்தலின் போது,மக்கள் நல்லாட்சிக்குத்தான் முக்கியத்துவம்
அளிப்பார்கள் என்று எண்ணியதுதான் தவறு.
ஆனால்,வார்த்தை ஜாலங்களிலும்,அடுக்கு மொழிகளிலும் மயங்கிய தமிழக மக்கள்,அவரைத் தூக்கி எறிந்து விட்டு, தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தினர்.
ஜெயகாந்தனின் வார்த்தைகளில்”நாப்பறை கொட்டி நாடாள வந்து விட்டனர்”
சூரியன் உதித்து விட்டான்.
ஆனால் இன்னும் விடியவில்லை!
----------------------
கவுஜ(ஹைக்கூ மன்னிக்க)
தொலைந்து போயிற்று
அதுவும் ஆனந்தமே
இதயம்!
---------------------------
ஜப்பான் பிரதமரின் ஆங்கிலம் அருமை. இதன் காரணமாக ஒபாமா குடும்பத்தில் குழப்பம் ஒன்றும் வரவில்லையே.
பதிலளிநீக்குவந்திருக்காது என்று நம்புவோம்!
பதிலளிநீக்குநன்றி,இனியவன்.
//மோரி”நானும்தான்” என்று கூறி நகைக்க ஒபாமா பேச்சு மூச்சற்றுப் போனார்!//
பதிலளிநீக்குஹஹாஹா.................
//சூரியன் உதித்து விட்டான்.
பதிலளிநீக்குஆனால் இன்னும் விடியவில்லை!//
nice
காமராசர் படிக்காத மேதை. அவர் மக்களை படித்தவர், மக்களின் வறுமையை படித்தவர், கேள்வி ஞானம் மூலம் ஹிந்தி, ஆங்கிலம் பயின்றவர், என்றும் எம் மரியாதைக்கு உரியவர்.
பதிலளிநீக்குதொலைந்து போயிற்று
பதிலளிநீக்குஅதுவும் ஆனந்தமே
இதயம்!
ahaa...
@THOPPITHOPPI,
பதிலளிநீக்குவருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி!
பாரத்... பாரதி... கூறியது...
பதிலளிநீக்கு//சூரியன் உதித்து விட்டான்.
ஆனால் இன்னும் விடியவில்லை!//
//nice//
நன்றி.
பாரத்... பாரதி... கூறியது...
//காமராசர் படிக்காத மேதை. அவர் மக்களை படித்தவர், மக்களின் வறுமையை படித்தவர், கேள்வி ஞானம் மூலம் ஹிந்தி, ஆங்கிலம் பயின்றவர், என்றும் எம் மரியாதைக்கு உரியவர்.//
100 விழுக்காடு உடன் படுகிறேன்.அவர் தேர்தலில் தோற்ற அன்று செயலற்று நின்றவன் நான்.
நன்றி
பாரத்... பாரதி... கூறியது...
தொலைந்து போயிற்று
அதுவும் ஆனந்தமே
இதயம்!
//ahaa...//
நன்றி!
பரல்கள் அருமை.. ஜப்பான் ஜோக் அருமை. ஹகூ அழகு . காமராஜருக்கு உண்மையில் ஆங்கிலம் ஓரளவுக்கு நன்றாகத் தெரியும் அன்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்கு//அவர் தேர்தலில் தோற்ற அன்று செயலற்று நின்றவன் நான்.//
பதிலளிநீக்குகாமராஜர் தோல்வியுற்றதை திமுகவினர் சந்தோஷத்துடன், அண்ணாவிடம் போய் சொன்னபோது எரிந்து விழுந்தாராம். " இன்னொரு தமிழன் டில்லியில் இத்தனை செல்வாக்குடன் விளங்குவதற்கு எத்தனை காலம் பிடிக்கப்போகிறதோ, அவர் தோல்வி நமக்கெல்லாம் மகிழ்ச்சி தருகிற தோல்வி இல்லை" என திரு இராராமிடம் சொன்னதாக சொல்வார்கள். எனவே அவர் தோல்வி அனைவருடைய தொல்வியும்தான்.
//பரல்கள் அருமை.. ஜப்பான் ஜோக் அருமை.//
பதிலளிநீக்குநன்றி சிவகுமாரன்.
//ஹகூ அழகு .//
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி!
நன்றி
//அவர் தோல்வி அனைவருடைய தொல்வியும்தான்.//
பதிலளிநீக்குஉண்மைதான்.
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,நடனசபாபதி அவர்களே!