தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜனவரி 02, 2011

மீண்டும் ஒரு காதல் கதை!

"என்னங்க,கொஞ்சம் பாத்துங்க;நேத்து ரொம்ப வலிச்சுருச்சுங்க"
"ஏண்டா,கண்ணம்மா,நேத்தே சொல்லலை.ரொம்ப வலிச்சுதா?சொல்லிருந்தா பாத்துச் செஞ்சிருப்பேன் இல்ல?"
"எப்படிங்க?எவ்வளவு பிரியத்தோட நீங்க வந்து செய்யறீங்க?இந்த மாதிரிப் புருஷன் கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கணும்."
"சரிடா,இன்னிக்கும் வலிச்சா சொல்லு.பேசாம இருந்திடாதே"
------
------"ஆ!வலிக்குதுங்க."
"இரு,இரு,இங்கதானே,------இப்ப எப்படி இருக்கு?"
"ஹம்மா--இதம்மா இருக்குங்க"
"இன்னிக்கு இன்னும் ரெண்டு தடவை செஞ்சுடலாம்."
கீழே விழுந்ததால் சுளுக்கிய தன் மனைவியின் காலைத் தன் மடியில் வைத்து அன்புடன் எண்ணை தடவி நீவிக் கொண்டிருந்த கணவன்,அவள் காலை மெதுவாகக் கீழே வைத்துவிட்டுக் கை கழுவ எழுந்தான்.
"காதல் என்பது ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளுதல்; ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல்.சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.ஒருவருக்காக ஒருவர் வாழ்தல்"

"உடம்பொடு உயிரிடைஎன்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு"----(குறள்)

(இது தலைப்பு மாற்றப்பட்ட மீள்பதிவு)

11 கருத்துகள்:

  1. வே.நடனசபாபதி கூறியது...

    //இது கதை அல்ல.காதை!!!//
    ஒரே வரியில் எவ்வளவு சொல்லி விட்டீர்கள்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  2. முதல் வருகைக்கு நன்றி தாராபுரத்தான் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. குட்டிக்கதை நல்ல கதை... தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,தோழி பிரஷா!

    பதிலளிநீக்கு
  5. விட்டுக்கொடுத்தல், ஒருவர் மனதை மற்றொருவர் புரிந்துக்கொள்ளுதல், மற்றவர் மீது உண்மையான அன்பு செலுத்துதல் சாகாத காதலுக்கு உதாரணமாய்... சாகும் வரை வாழ்வு ஆனந்தமாய்...

    மீண்டும் ஒரு காதல் கதை மீண்டும் படிக்க தூண்டியது...

    பதிலளிநீக்கு