பல மாதங்களுக்கு முன் படித்ததொரு செய்தி!
முப்பது வயதான ஒரு ஆண்,தன் மனைவியை உடலுறவுக்கு அழைத்து,அவள் மறுக்கவே,ஸ்கிப்பிங்க் கயிற்றால் அவள் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு,உயிரற்ற அந்த உடலுடன் உறவு கொண்டுள்ளான்.
என்ன ஒரு வக்கிரம்?
மன நல மருத்துவர்கள் சொல்கிறார்கள் இது ஒரு விதமான மன நோய் என்று.அதற்கான ஆங்கிலப் பெயர்-'necrophilia'.
ஆனால் வள்ளுவர் இது போன்ற ஒரு செயலை ஒரு உவமையாக உபயோகப்படுத்தி,வேறு ஒரு செயலை இதனுடன் ஒப்பிடுகிறார்--
“பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.”
பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யான தழுவுதல்,இருட்டறையில், தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.
வள்ளுவர் உபயோகிக்கும் சொற்களைப் பாருங்கள்-
பொருட்பெண்டிர்-பொருளுக்காக தங்களையே விலையாக்கும் பெண்கள்;விலை மாது என்று சொல்வதன் சரியான தமிழ்ப் பதம்
பொய்ம்மை முயக்கம்-ஆடவருடன் கூடும் போது அவள் கட்டித் தழுவும் தழுவலானது,செற்கையானது.
ஆடவரை மகிழச்செய்ய அவள் காட்டும் உணர்ச்சி வெளிப்பாடுகள்-உச்சத்தைதொடுவதாகக் காட்டும் உணர்ச்சிகள்,பொய்யானவை,நடிப்பு.
ஏதில் பிணம் –தொடர்பு இல்லாத, முன்பேஅறியாதபிணம்-
தெரிந்தவர்களாக,உறவினர்களாக இருந்தால் பிணத்தைக் கட்டிப் பிடித்து அழுவது நடக்கக் கூடியதே.;அந்த உணர்ச்சி வேறாக இருந்தாலும்.ஆனால் தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைக் கட்டிப் பிடிப்பது என்பது,அருவருப்பு ஏற்படுத்தும் ஒரு செயல். பொருட்பெண்டிர் முயக்கமும் அது போன்றதே.பிணத்துக்கும் உனர்ச்சிகள் இல்லை1
ரத்தினச் சுருக்கமாகப் பொட்டில் அறைந்தது போல் சொல்லி விட்டார் அல்லவா?
இக்காலத்தில் இளையவர்கள் உணரவேண்டிய அறவுரை,அறிவுரை. அது சரி, பொங்கலும் அதுமாய் என்ன ஒரே நீதி போதனை? ஓஹோ.....புரிந்து கொண்டேன்....// நான் பேச நினைபதெல்லாம் // ...நீங்கள் தான் பேசவேண்டும்.
பதிலளிநீக்குநல்ல விஷயங்கள். எப்போது சொன்னால் என்ன ?
தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.
எதனுடன் எதை ஒப்பிடுகிறீர்கள்.
பதிலளிநீக்குதயவு செய்து யோசிங்கள்!
வள்ளுவன் சொல்லாத கருத்தே இல்லையே குறளில்... எத்தனையோ புதையல்கள் அதனுள் புதைந்து... இதுவும் அதற்கு ஒரு சான்று...
பதிலளிநீக்குமிக்க நன்றி குறள் விளக்கத்துடன் கூடிய செய்திக்கு...
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
கக்கு - மாணிக்கம் அவர்களே,
பதிலளிநீக்குமனதில் தோன்றிய குறளை எழுதினேன்!இது அறிவுரை என்ற்றால், அது அய்யன் வள்ளுவனையே சாரும்.
என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ஜீரோ கூறியது...
பதிலளிநீக்கு//எதனுடன் எதை ஒப்பிடுகிறீர்கள்.
தயவு செய்து யோசிங்கள்!/
அந்த செய்தியில் பிணத்துடன் உடலுறவு கொண்டது மட்டுமே இங்கு கருதப்பட்டது-அவன் மனவியைக் கொன்றது அல்ல!அதைப் படிக்கையில் நினைவுக்கு வந்த குறள் அது.பொய்ம்மை முயக்கத்தில் உண்மையான உணர்ச்சிகள் ஏதும் இல்லை;அது ஒரு உயிரற்ற உடலைத் தழுவுவது போலத்தான் என்பதே அய்யன் வள்ளுவன் கருத்து!
தவறென எண்ணினால் பொறுத்தருள்க!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தஞ்சை.வாசன் ,
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி,
தங்களுக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபொங்கல் வாழ்த்துக்கு நன்றி, இனியவன்!உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்!(உங்கள் ஊரில் காணும் பொங்கல் உண்டா?!)
பதிலளிநீக்கு// ரத்தினச் சுருக்கமாகப் பொட்டில் அறைந்தது போல் சொல்லி விட்டார் அல்லவா?//
பதிலளிநீக்குஉண்மைதான். எடுத்துக்காட்டுக்கு நன்றி.
இன்று ஒரு அருமையான குறள் தெரிந்து கொண்டேன்.எனக்கு இந்த நாளின் இது முக்கியமான நிகழ்வாகி விட்டது. நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நடனசபாபதி அவர்களே!
பதிலளிநீக்குவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,சிவகுமாரன்!
பதிலளிநீக்குவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நடனசபாபதி அவர்களே!
பதிலளிநீக்குஒப்பீடு பொருந்தவில்லையே சார்?
பதிலளிநீக்குசொல்ல வந்த கருத்து நன்றே.
பின்னூட்டங்களை இப்போ தான் படித்தேன்; ஏற்கனவே ஜீரோவும் நீங்களும் இதைப் பற்றி எழுதிவிட்டீர்கள். அவசரப்பட்டு பின்னூட்டம் இட்டேன் போல.
பதிலளிநீக்குஅப்பாதுரை ஐயா!
பதிலளிநீக்குதிரும்பவும் சொன்னதில் தவறேயில்லை! உங்களைப் போன்றோரின் கருத்துக்கள்தான் எனது எதிர் வரும் பதிவுகளுக்கு வழிகாட்டும்!
மிக்க நன்றி!