தொடரும் தோழர்கள்

வியாழன், நவம்பர் 24, 2011

ஈத்துவக்கும் இன்பம்!


”ஊருணி நீர்நிறைந் தற்றே  உலகவாம்
பேரறி வாளன் திரு.”   ---   (திருக்குறள்)

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளனின் செல்வம்  ஊரார் நீர் உண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது .  (முனைவர்.மு.வ.)

ஆம்.அக்குளத்து நீர் பலரின் தாகம் தீர்க்கப் பயன்படுகிறது.அதில் நீர் இருக்குமளவும் அக் குளம் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

 கொடுப்பது சிறந்தது.கொடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.ஆனால் இதிலும் பல கேள்விகள் எழுகின்றன.

அவை.......

கேள்வி.1)எப்போது கொடுக்க வேண்டும்?

மகாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி. யாசகம் கேட்டு வந்த ஒருவனை தர்மபுத்திரன் மறு நாள் வருமாறு சொல்கிறான்.அதைக் கேட்டு பீமன் மகிழ்ந்தானாம் தன் அண்ணன் மரணத்தை வென்று விட்டான் என!ஏனென்றால் நாளை உயிருடன்   இருப்போம் என்ற நம்பிக்கையில் அல்லவா அவன் நாளை வரச் சொன்னான்! தருமனுக்கும் புரிந்தது.

எனவே நாளைக்காகக் காத்திருக்க வேண்டாம்.இன்றே,இப்போதே நல்ல நேரம்தான், கொடுப்பதற்கு.

கேள்வி.2)எவ்வளவு கொடுக்க வேண்டும்?
  
ராணா பிரதாப்,போரில் தோற்று அனைத்தையும் இழந்து நம்பிக்கையற்று இருந்த நேரத்தில் ,அவரது அமைச்சர் ஒருவர் தன் செல்வம் முழுவதையும்  ராணாவிடம் அளிக்க,அதை வைத்து ராணா படை திரட்டி,மீண்டும் போர் தொடுத்து வென்றாராம்.

எனவே பதில்”இயன்ற   அளவு கொடுங்கள்”

கேள்வி.3)என்ன கொடுப்பது?

பணம் மட்டுமல்ல.உங்களால் இயன்றது ,கொடுப்பது,ஒரு பூவாக இருக்கலாம்; புன்னகையாக இருக்கலாம்.

என்ன,எவ்வளவு கொடுக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல;எப்படிக் கொடுக்கிறீர்கள் என்பது முக்கியம்!

எதைக் கொடுத்தாலும் அது முழு மனதுடன் கொடுக்கப்பட வேண்டும்.

திருமூலர் அழகாகச் சொல்வார்---

"யாவர்க்கு மாம்இறை வற்கொரு  பச்சிலை
 யாவர்க்கு மாம்பசு வுக்கொரு  வாயுறை
 யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
 யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே"


நான் திருப்பூரில் வங்கி மேலாளராக இருந்தபோது ஒரு வாடிக்கையாளர் சொன்னதை நான் மறக்க மாட்டேன்.அவர் கேட்ட கடனை நான் கொடுக்க வில்லை.ஆனால் அவர் சொன்னார்”நீங்கள் கடன் கொடுக்க வில்லை   என்று  எனக்கு வருத்தமேயில்லை.இயலாது என்பதையும் நீங்கள் சிரித்த முகத்துடன் சொன்னீர்கள்”.



(மேலும் சில கேள்விகளும் பதில்களும் நாளை)

51 கருத்துகள்:

  1. பீமன் சொன்னது பீதியைக் கிளப்பினாலும் உண்மை தான்.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான இன்ப செய்திகள் .. பகிர்வுக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு
    புராண சரித்திரம் இலக்கியம் என அனைத்தையும்
    ஒரு பொருளுக்குள் கொணர்ந்து அதையும்
    சுவாரஸ்யமாக சொல்லிச் செல்லும் விதம்
    அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 3

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் ஐயா,
    நலமாக இருக்கிறீங்களா?

    கொஞ்சம் பிசியாகிட்டேன் அல்ல!
    நிறையவே பிசியாகிட்டேன்!
    அதனால் தான் வலைப் பக்கம் வர முடியலை.

    கொடை பற்றி ஒரு அனுபவஸ்தனின் அழகிய உணர்வுகளை மீட்டிப் பார்க்கும் நல்லதோர் பதிவினை வாழ்வில் கண்ட சம்பவங்களோடு தந்திருக்கிறீங்க.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கருத்துக்கள். ஈத்துவக்கும் இன்பத்தை (என்னாலியன்ற) சிறு சிறு உதவிகள் மூலம் நான் பெற்றுள்ளேன். கடைசிப் பாராவில் சொல்லியிருந்த அனுபவ விஷயம் அற்புதம். அருமையான பகிர்விற்கு நன்றி செ.பி.சார்...

    பதிலளிநீக்கு
  6. ஒன்றும் நன்றே செய்
    நன்றும் இன்றே செய்
    இன்றும் இப்போதே செய்
    அதையும் இன்முகத்தோடே செய்
    என்பதை புராணங்களில் ஆரம்பித்து உங்கள் அனுபவத்தில் முடித்தது, மிகவும் அருமை

    பதிலளிநீக்கு
  7. அண்ணே.. ஒரு ஆலோசனை.. உங்கள் தளத்தில் பலர் தமிழ் மணம் ஓட்டு போட்டு இண்ட்லி ஓட்டுபோடத்தெரியாமல் சென்றிருக்கிறார்கள்.. ஒரு டிஸ்கி போட்டு இண்ட்லியில் ஓட்டு போடும் புதிய முறையை விளக்கி விடுங்கள்

    பதிலளிநீக்கு
  8. செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு , என்று நம்மவாத்யார் வள்ளுவரும் இதைத்தான் சொல்லியிருக்கார்.

    பதிலளிநீக்கு
  9. எவ்வளவு கொடுக்க வேண்டும்? என்பதை மகாகவி பாரதி அருமையாய் சொல்லுவார்.
    “நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்,
    நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்,
    அதுவுமற்றவர் வாய் சொல் அருளீர்”
    என்று.
    நல்ல பதிவு.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. எல்லா கருத்துக்களுக்கும் சரியான மேற்கோள்களோடு அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் சார்.

    பதிலளிநீக்கு
  11. ஈத்துவக்கும் இன்பத்தை மிக
    அழகாக சொல்லியுள்ளீர்!

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  12. ஈகையின் மகத்துவத்தை
    அழகாக விளக்கியிருக்கிறீர்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
  13. நான் திருப்பூரில் வங்கி மேலாளராக இருந்தபோது ஒரு வாடிக்கையாளர் சொன்னதை நான் மறக்க மாட்டேன்.அவர் கேட்ட கடனை நான் கொடுக்க வில்லை.ஆனால் அவர் சொன்னார்”நீங்கள் கடன் கொடுக்க வில்லை என்று எனக்கு வருத்தமேயில்லை.இயலாது என்பதையும் நீங்கள் சிரித்த முகத்துடன் சொன்னீர்கள்”.//

    இதை வச்சி ஒரு தனி பதிவே போடலாம் தல, கடன் ஏன் கொடுக்கப்படவில்லை என்று, நாங்களும் தெரிஞ்சிக்குவோம் இல்லையா...வீடு கட்ட எப்படி லோன் வாங்குவது என்று இப்போதும் எனக்கு புரியவில்லை....!!!

    பதிலளிநீக்கு
  14. சந்தோசத்துலையே பெரிய சந்தோசம் மற்றவங்களை சந்தோசப் படுத்தி பார்ப்பதுதான் இல்லையா தல...?

    பதிலளிநீக்கு
  15. ரொம்ப எளிமையா எல்லோருக்கும் புரியிற மாதிரி சொல்லி இருக்கீங்க ஐயா..

    பதிலளிநீக்கு
  16. நீங்கள் கடன் கொடுக்க வில்லை என்று எனக்கு வருத்தமேயில்லை.இயலாது என்பதையும் நீங்கள் சிரித்த முகத்துடன் சொன்னீர்கள்”.

    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  17. சிறப்பாக எளிமையாக புரியும் படி இருக்கு பாஸ்

    பதிலளிநீக்கு
  18. சரியான மேற்கோள்களோடு அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்
    ...

    பதிலளிநீக்கு
  19. @சி.பி.செந்தில்குமார்
    எனக்கே தெரியாதே!ஹி,ஹி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  20. @MANO நாஞ்சில் மனோ
    முயற்சி செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. கொடுப்பதற்கு இலக்கியங்களில் இருந்து நீங்கள் கொடுத்துள்ளவை அருமை.

    பதிலளிநீக்கு
  22. @ரெவெரி
    spam க்குப் போகவில்லை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  23. மிக அருமையான பகிர்வு...

    இது ஒரு மின்னஞ்சல் மூலம் வந்திருந்தது. நானும் தமிழ்ப்படுத்தி வெளியிட எண்ணியிருந்தேன். பாதி தான் எழுதி வைத்திருக்கிறேன்.. ஆனாலும் என்னை விட நீங்கள் அழகாய் பதிவு செய்திருப்பதால் நான் செய்யப்போவதில்லை.... சரியா....

    பதிலளிநீக்கு
  24. என்றும் எங்களுடன் சிரித்த முகத்துடன் பழகும் நீவீர் வாழ்க பல்லாண்டு.

    பதிலளிநீக்கு
  25. திருக்குறளில் ஆரம்பித்து மகாபாரதம் ,திருமந்திரம் , வரலாறு என்று சுற்றி இறுதியில் அனுபவத்தில் முடித்து அசத்தி விட்டீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  26. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //மிக அருமையான பகிர்வு...

    இது ஒரு மின்னஞ்சல் மூலம் வந்திருந்தது. நானும் தமிழ்ப்படுத்தி வெளியிட எண்ணியிருந்தேன். பாதி தான் எழுதி வைத்திருக்கிறேன்.. ஆனாலும் என்னை விட நீங்கள் அழகாய் பதிவு செய்திருப்பதால் நான் செய்யப்போவதில்லை.... சரியா....//
    ஓகே.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  27. ! சிவகுமார் ! கூறியது...

    //என்றும் எங்களுடன் சிரித்த முகத்துடன் பழகும் நீவீர் வாழ்க பல்லாண்டு.//
    அன்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. சிவகுமாரன் கூறியது...

    //திருக்குறளில் ஆரம்பித்து மகாபாரதம் ,திருமந்திரம் , வரலாறு என்று சுற்றி இறுதியில் அனுபவத்தில் முடித்து அசத்தி விட்டீர்கள். அருமை.//
    நன்றி சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு