சில நாட்களுக்கு முன் மகனால் சரியாக நடத்தப்படாத ஒரு தாய் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்.ஆனால் இன்று, இறந்து விட்ட தன் தாய்க்காக ஒரு கோவில் கட்டிய ஒரு அன்பு மகனின் கதை--கதையல்ல நிஜம்.
2007ஆம் ஆண்டு 64 வயதில் காலமான தனது தாயின் மீது அபரிமித அன்பு கொண்ட ,துறையூரைச் சேர்ந்த சுரேஷ் குமார்,தன் தாயின் நினைவாக ஐந்து கோடிச் செலவில் ஒரு நினைவாலயம் கட்டியிருக்கிறார். 30000 சதுர அடியில் கட்டப்பட்ட அந்த நினைவாலயத்தில், அவரது தாயின் 64 படங்கள் உள்ளன.அந்தப் படங்கள் உடைந்த வளையல் களாலும், தீக்குச்சிகளாலும்,மணிகளாலும் உருவாக்கப்பட்டவை.அவரின் அஸ்தி எல்லா நதிகளிலும் தூவப்பட்ட பின்,அந்த ஆலயத்தில் உள்ள அத்தாயின் வெண்கலச்சிலையின் கீழ் 64 அடி ஆழத்தில் புதைக்கப் பட்டதாம்.64 அடி உயர ஒரு ஸ்தூபி கட்டிடத்தின் முன் உள்ளது.அந்த இடத்தின் மொத்த அளவு 2.5 ஏக்கர்.
தனது சொந்த சேமிப்பில் அந்தக் கோவில் கட்டப்பட்டதாகவும், தாய் மீது உள்ள அவரது அன்பை பணத்தால் அளவிட முடியாது என்றும் சுரேஷ் குமார் சொல்கிறார்.
ஒரு இடுகாட்டின் அருகில் கட்டப்பட்ட அந்த நினைவாலயத்தில் இடு காட்டுக்கு, வரும் மக்கள் நீராடுவதற்காக ஒரு 7 நட்சத்திரக் குளியலறை இருக்கிறதாம்.(அப்படி என்றால் என்ன?)
அது தவிர ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்த ஒரு பெரிய கூடமும் உள்ளதாம்-இலவசமாகக் கிடைக்கும்.
உங்களில் பலர் கேட்கலாம்”5 கோடியைச் செலவழித்து,ஒரு நினைவாலயம் கட்டுவதற்குப் பதில்,தாயின் பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம்,ஏழை மாணவர்கள் கல்விக்கும்,ஆதரவற்ற முதியோரின் வாழ்வுக்கும், உதவலாமே,அது மேலும் சிறப்பாக இருக்குமே “என்று.
நீங்கள் அறிவு பூர்வமாகச் சிந்திக்கிறீர்கள்.அவரின் தாயன்பு அவரை உணர்ச்சி பூர்வமாகச் சிந்திக்க வைத்து விட்டது.
அவரது அன்புக்குத் தலை வணங்குவோம்!
இப்படிப்பட்ட ஒரு மகனைப் பெற அத்தாய்—
எந்நோற்றாள் கொல்?
(செய்தி:இந்தியாவின் நேரங்கள்-2-11-2011)
(செய்தி:இந்தியாவின் நேரங்கள்-2-11-2011)
நல்ல பகிர்வு.. அம்மாவுக்காக ஒரு கோவில் - புதிய தகவல்... பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதேடிக் கண்டுபிடித்து ஓர் அருமையான பதிவைத் தந்துள்ளீர்கள் .அந்தத் தாயன்பை மதிக்கும் உள்ளத்துக்கு என் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .....
பதிலளிநீக்குபாசம் பக்தி அன்பு இவை காட்டாமலே புரிந்து கொள்ளப் படும் உண்மையாக இருந்தால்...
பதிலளிநீக்குநீ ஒரு பறவையை நேசிக்கிறாய் என்றால் அதை பறக்க விடு, அது திரும்பி உன்னிடமே வந்தால் உன் பாசம் உண்மையானது.. எனக்கு பிடித்த வாசகம்
புதிய தகவலுடன் நல்லதோர் பகிர்வு..
பதிலளிநீக்குநல்லதொரு மகனாக நடந்து கொண்டார். த.ம.3
பதிலளிநீக்குபெருமைப்பட வேண்டிய செயல்...
பதிலளிநீக்குஇன்று எத்தனை மகன்கள் இப்படி இருக்கிறார்கள்.?????
அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா...
அன்பு மகனின் கதை--கதையல்ல நிஜம்./
பதிலளிநீக்குஅன்புக்குத் தலைவணங்குவோம்!
நானும் படித்தேன்...
பதிலளிநீக்குஅவரது அன்புக்குத் தலை வணங்குவோம்...
அருமை ஐயா,அருமை!விஜய்,அஜீத் கட்டவுட்டுகளுக்கு பால் ஊத்தாம அம்மாவுக்குக் கோயில் கட்டியிருக்காரே ஒரு பிள்ளை?அறக்கட்டளையை பால் ஊத்துறவங்ககிட்ட சொல்லி ஆரம்பிக்கட்டும்.
பதிலளிநீக்குஅன்புக்குமுண்டோ அடைக்குந் தாள்! உலகில் வித்தியாசமான மனிதர்கள் அவர்கள் உணர்வுகளுக்குத் தலை வணங்குவோம். இதில் ஆச்சரியப் பட ஏதுமில்லை. நல்ல தகவல் சகோதரா. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
அரிய தகவலைபதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்
த.ம 6
நெகிழ்வு! தாயைத் தெய்வமாக வணங்குதல் தவறில்லை. அவளுக்காக கோயில் கட்டுவதிலும் தவறில்லை. அவரது தாய் கொடுத்துவைத்தவர் தான்!
பதிலளிநீக்குபெருமிதம்...
பதிலளிநீக்குஅந்த மகனின் தாயன்புக்கு தலைவணங்கு கின்றேன்
பதிலளிநீக்கு‘தாயிற் சிறந்த கோயிலும் இல்லை’ என்பார்கள். பெற்ற தாய் நினைவாக அவருக்கு கோவில் கட்டிய திரு சுரேஷ் குமார் போற்றப்படவேண்டியவர். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅவரது அன்புக்குத் தலை வணங்குவோம்! பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் ஐயா,
பதிலளிநீக்குநலமா?
வித்தியாசமான முறையில் தாயன்பினை வெளிப்படுத்தியிருக்கும் சுரேஷ் அவர்களை நாமும் வாழ்த்துவோம்!
அம்மா என்றழைக்காத உயிரில்லையே....
பதிலளிநீக்குதாயின் காலடியில் சுவர்க்கம்...
மற்றவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒருவர் செயலில் காட்டியிருப்பது, புல்லரிக்கச் செய்கிறது.
@வெங்கட் நாகராஜ்
பதிலளிநீக்குநன்றி.
@அம்பாளடியாள்
பதிலளிநீக்குநன்றி.
@suryajeeva
பதிலளிநீக்குநன்றி.
@suryajeeva
பதிலளிநீக்குஅருமையான வாசகம்.
@அமைதிச்சாரல்
பதிலளிநீக்குநன்றி.
@ராஜி
பதிலளிநீக்குநன்றி.
@மகேந்திரன்
பதிலளிநீக்குநன்றி.
@இராஜராஜேஸ்வரி
பதிலளிநீக்குநன்றி.
@ரெவெரி
பதிலளிநீக்குநன்றி.
@Yoga.S.FR
பதிலளிநீக்குநன்றி.
@kavithai (kovaikkavi)
பதிலளிநீக்குநன்றி.
@Ramani
பதிலளிநீக்குநன்றி.
@கணேஷ்
பதிலளிநீக்குநன்றி.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
பதிலளிநீக்குநன்றி.
@K.s.s.Rajh
பதிலளிநீக்குநன்றி.
@வே.நடனசபாபதி
பதிலளிநீக்குநன்றி.
@மாய உலகம்
பதிலளிநீக்குநன்றி.
நிரூபன்
பதிலளிநீக்குவணக்கம் நிரூ!
நன்றி.
@சைதை அஜீஸ்
பதிலளிநீக்குநன்றி.
நல்ல பகிர்வு சார்...
பதிலளிநீக்கு@ஜ.ரா.ரமேஷ் பாபு
பதிலளிநீக்குநன்றி.
நல்ல உள்ளம் அவருக்கு ,அவரை வயிற்றில் சுமந்ததற்கு அவரது அம்மாவை நெஞ்சில் சுமக்கிறார் .
பதிலளிநீக்குத.ம 12
பெருமகன் !
பதிலளிநீக்குநன்றி ஐயா என்னுடைய பதிவிற்கு வந்து கருத்து சொன்னதற்கு.
பதிலளிநீக்குதங்களுடைய பதிவுகளிலிருந்து நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன் ஐயா,தொடர்ந்து வருகிறேன். நன்றி.
பதிலளிநீக்குதாய் தான் தெய்வம்
பதிலளிநீக்குஇன்று என் வலையில்
பதிலளிநீக்குதலை, தளபதி மற்றும் புத்தர்
நல்ல மகன்..நல்ல செய்தி..நன்றி ஐயா.
பதிலளிநீக்குகாசு இருந்தது, மனம் இருந்தது.. செய்யட்டும். அதைத்தவிர சிறப்பாகச் சொல்ல ஏதுமில்லை.
பதிலளிநீக்குஏழு நடசத்திரக் குளியலறைகளில் முதுகு தேய்த்துவிட அசல் ஆட்கள் உண்டு.
தாய்பாசம் வாழ்க....!!! ஆச்சர்யமான செய்தியா இருக்கே...!!!
பதிலளிநீக்குதாய்க்காக ஒரு கோவில் கட்டிய மகனை பாராட்ட வார்த்தைகள் இல்லை!!!!
பதிலளிநீக்குஅன்பு என்பதே உணர்ச்சிதான்.அங்கே அறிவுக்கு வேலை இல்லை.
பதிலளிநீக்கு@M.R
பதிலளிநீக்குநன்றி.
@koodal bala
பதிலளிநீக்குநன்றி.
@RAMVI
பதிலளிநீக்குநன்றி.
"என் ராஜபாட்டை"- ராஜா
பதிலளிநீக்குநன்றி.
@செங்கோவி
பதிலளிநீக்குநன்றி.
@அப்பாதுரை
பதிலளிநீக்குநன்றி.
@MANO நாஞ்சில் மனோ
பதிலளிநீக்குநன்றி.
@shanmugavel
பதிலளிநீக்குநன்றி.
தாயிற்சிறந்ததொரு கோயில் இல்லை வாசு
பதிலளிநீக்கு