தொடரும் தோழர்கள்

ஞாயிறு, நவம்பர் 13, 2011

மரணம் எங்கு நிகழும்?எப்படி நிகழும்?


அப்பா! நான் விமானப் படையில் சேர ஆசைப்படுகிறேன்”-மகன்’

”ஐயோ! வேண்டாம் .உன்னை அங்கு அனுப்பி விட்டு நாங்க கவலைப் பட்டுக் கொண்டே இருக்க முடியாது.” பெற்றோர்

இன்னுமோர் காட்சி.

”சார்!இந்த இடம் ரொம்ப நல்ல இடம்.வதியான குடும்பம்.பிக்கல் பிடுங்கல் கிடையாது.பையன் ஆர்மியில் மேஜரா இருக்கான். பொண்ணுக்குப் பொருத்தமா இருப்பான்.” தரகர்.

”வேண்டவே வேண்டாம்.உயிருக்கு உத்திரவாதமில்லாத உத்தியோகம்”
பெற்றோர்.

இதுபெரும்பான்மையான இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சி.

ஜாதகப் பொருத்தம் பார்த்துதான் கல்யாணம் செய்யப் போகிறார்கள். பையனுக்கு தீர்க்காயுள் ஜாதகமா,தோஷங்கள் எதுவும் இல்லையா என்பதெல்லாம் பார்க்கத்தான் போகிறார்கள்.ஆயினும் ஒரு பயம்.இந்த மாதிரிப் பணிகளில் ஆபத்து அதிகமே  என்று.உயிருக்கு உத்திரவாதம் இல்லையே என்று.

உயிருக்கு உத்திரவாதம் எங்கேயிருக்கிறது ?

சமீபத்திய ஒரு சோக சம்பவம்.

அந்த இளஞன் தனது 16வது வயதில் விமானப் படையில் சேர்ந்தான்.

1999 இல் கார்கில் போரில் கலந்து கொண்டான்.

ராமேஸ்வரத்தில் சுனாமியின்போது நிவாரண உதவி செய்த பிரிவில் இருந்தான்,பல உயிர்களைக் காத்தான்.

மும்பாயில் 26-11-2008 இல் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் போது அங்கு N.S.G. கமாண்டோவாகப் பணி புரிந்தான்.

2010 இல் ணி ஒய்வு பெற்றுத் திரும்பி வந்தான்.   

இந்த ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி சென்னையில்  ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தான்.

எங்கு உயிருக்கு உத்திரவாதம் இல்லையென அஞ்சுகிறோ,அங்கு வரவில்லை மரணம்.

அது காத்துக் கொண்டிருந்து  சென்னையில் ஒரு சாலை விபத்து வடிவில்.

மரணம் எங்கு எந்த வடிவில் வரும் என்பது யாருக்குத் தெரியும்?

இது பற்றிய ஒரு குட்டிக் கதை ஒன்று என் பழைய பதிவில் சொல்லியிருந்தேன்.

”ஊழிற் பெருவலி யாவுள?”

55 கருத்துகள்:

  1. உங்களுடைய முந்தைய பதிவில் சொல்லியுள்ளது போல “”ஆம்,மரணம் என்பது எந்த நேரத்தில் எங்கு எப்படி நடக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப் பட்டு விட்ட ஒன்று.” நம்மால் அதை மாற்ற இயலாது. சிந்திக்க வைத்த பதிவு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. அது காத்துக் கொண்டிருந்து சென்னையில் ஒரு சாலை விபத்து வடிவில்.// ஆமாம் அய்யா, போன வாரம் கூட ஒரு ஆசிரியை மழை அன்று கழிவுநீர் தொட்டியில் விழுன்ம்து இறந்து விட்டதாக செய்தித் தாளில் படித்தேன்..

    பதிலளிநீக்கு
  3. ஆம், மரணம் எப்போது நிகழும் என்று யாருக்குத் தெரியும்?

    பதிலளிநீக்கு
  4. உண்மை... எங்கே எப்படி என்பதெல்லாம் எழுதியவன் கையில்...

    பதிலளிநீக்கு
  5. ஒரு நாணயத்தை சுண்டி போட்டாலே சரியாக தலை விழுமா பூ விழுமா என்று சொல்வது கடினம்..
    தினம் தினம் எத்தனை நாணயம் சுண்டி போடப் படுகிறது என்று கணக்கு பாருங்கள்..
    எத்தனை பூ விழும் எத்தனை தலை விழும் என்று கணிக்க முடியுமா?
    செத்த பிறகும் வாழ்வது தான் வாழ்க்கை... அதற்க்கு வழி தேட உங்கள் பதிவு வழிகோலும்

    பதிலளிநீக்கு
  6. இதெல்லாம் சும்மா சால்ஜாப்பு சொல்றதுபா.
    ஜாதகம் தோசம் அல்லாமே நம்மல நாமே ஏமாத்துக்ரதுக்குதான்பா. இன்னா நட்க்குனுமோ அது கரீட்டா அந்த டைத்லே டக்குனு நடக்கும். அக்ஆன்.
    ஃபிர்அவ்ன் ராஜா, புத்ஸா பொரந்த கொயந்தயாலே தனக்கு டர்ர்ர்னு தெரிஞ்சு அல்லா பிஞ்சுங்களையும் கொல்றான். பிற்கால இன்னா நடக்குது. தன் வீட்லேயே வளர்ர கொயந்தயாலேயே தனக்கு ஆப்பு வச்சிக்கிறான், வாத்தியாரே! அத்னால, கிஷ்ண பரமாத்மா சொல்றார் பார்... எத்து நட்க்குதோ அது நட்ந்தே தீரும்.
    அத்னாலெ, டோண்ட் வர்ரீ...பீ ஹாப்பிபா

    பதிலளிநீக்கு
  7. பிறக்கும் போதே எழுதப்பட்ட சாசனம் மரணம் ஒன்றுதான்....!!!

    பதிலளிநீக்கு
  8. சாலையில் மரணமடைந்த வீரனுக்கு அஞ்சலிகள்....!!!

    பதிலளிநீக்கு
  9. உண்மைதான் ஐயா ,நல்ல கருத்து

    த.ம 5

    பதிலளிநீக்கு
  10. மரணத்துக்கு மருந்து இல்லை. சொல்லிவிட்டு மரணம் வருவதில்லை. அதனால்தான் பாரதியார், ”அச்சந் தவிர்” என்று அறிவுறுத்தினார். சென்னைப் பித்தன் செய்தியைச் சொல்லும் விதமும், கருத்தும் அவரைத் தமிழ் மணத்தில் இரண்டாம் இடத்தில் வைத்திருக்கின்றது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. மிகச் சரியான கருத்து
    பாம்பு கடிச்சு புழைச்சவனும் இருக்கான்
    செருப்பு கடிச்சு செத்தவனும் இருக்கான்
    ஊழிற் பெருவலி யாவுள

    பதிலளிநீக்கு
  12. ஆம்...எங்கே எப்படி என்பதெல்லாம் எழுதியவன் கையில்...

    பதிலளிநீக்கு
  13. அன்புடன்-மணிகண்டன் கூறியது...

    // வாஸ்தவமான பதிவு சார்..//
    நன்றி மணிகண்டன்.

    பதிலளிநீக்கு
  14. வே.நடனசபாபதி கூறியது...

    //உங்களுடைய முந்தைய பதிவில் சொல்லியுள்ளது போல “”ஆம்,மரணம் என்பது எந்த நேரத்தில் எங்கு எப்படி நடக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப் பட்டு விட்ட ஒன்று.” நம்மால் அதை மாற்ற இயலாது. சிந்திக்க வைத்த பதிவு. வாழ்த்துக்கள்!//
    நன்றி சபாபதி அவர்களே.

    பதிலளிநீக்கு
  15. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    அது காத்துக் கொண்டிருந்து சென்னையில் ஒரு சாலை விபத்து வடிவில்.// //ஆமாம் அய்யா, போன வாரம் கூட ஒரு ஆசிரியை மழை அன்று கழிவுநீர் தொட்டியில் விழுன்ம்து இறந்து விட்டதாக செய்தித் தாளில் படித்தேன்..//

    நன்றி கருன்.

    பதிலளிநீக்கு
  16. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //ஆம், மரணம் எப்போது நிகழும் என்று யாருக்குத் தெரியும்?//
    உண்மையே.

    பதிலளிநீக்கு
  17. வெங்கட் நாகராஜ் கூறியது...

    // உண்மை... எங்கே எப்படி என்பதெல்லாம் எழுதியவன் கையில்...//
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  18. suryajeeva கூறியது...

    // ஒரு நாணயத்தை சுண்டி போட்டாலே சரியாக தலை விழுமா பூ விழுமா என்று சொல்வது கடினம்..
    தினம் தினம் எத்தனை நாணயம் சுண்டி போடப் படுகிறது என்று கணக்கு பாருங்கள்..
    எத்தனை பூ விழும் எத்தனை தலை விழும் என்று கணிக்க முடியுமா?
    செத்த பிறகும் வாழ்வது தான் வாழ்க்கை... அதற்க்கு வழி தேட உங்கள் பதிவு வழிகோலும்//
    மிகச் சரி.
    நன்றி சூரியஜீவா.

    பதிலளிநீக்கு
  19. விதி வலியது. அருமையான யதார்த்தமான கருத்து ஐயா.

    பதிலளிநீக்கு
  20. சைதை அஜீஸ் கூறியது...

    //இதெல்லாம் சும்மா சால்ஜாப்பு சொல்றதுபா.
    ஜாதகம் தோசம் அல்லாமே நம்மல நாமே ஏமாத்துக்ரதுக்குதான்பா. இன்னா நட்க்குனுமோ அது கரீட்டா அந்த டைத்லே டக்குனு நடக்கும். அக்ஆன்.
    ஃபிர்அவ்ன் ராஜா, புத்ஸா பொரந்த கொயந்தயாலே தனக்கு டர்ர்ர்னு தெரிஞ்சு அல்லா பிஞ்சுங்களையும் கொல்றான். பிற்கால இன்னா நடக்குது. தன் வீட்லேயே வளர்ர கொயந்தயாலேயே தனக்கு ஆப்பு வச்சிக்கிறான், வாத்தியாரே! அத்னால, கிஷ்ண பரமாத்மா சொல்றார் பார்... எத்து நட்க்குதோ அது நட்ந்தே தீரும்.
    அத்னாலெ, டோண்ட் வர்ரீ...பீ ஹாப்பிபா//
    நன்றி அஜீஸ்.

    பதிலளிநீக்கு
  21. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //பிறக்கும் போதே எழுதப்பட்ட சாசனம் மரணம் ஒன்றுதான்....!!!//
    ஆம் மனோ.நன்றி.

    பதிலளிநீக்கு
  22. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //சாலையில் மரணமடைந்த வீரனுக்கு அஞ்சலிகள்....!!!//
    நானும்.

    பதிலளிநீக்கு
  23. K.s.s.Rajh கூறியது...

    //யதார்த்தமான பதிவு//
    நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  24. M.R கூறியது...

    // உண்மைதான் ஐயா ,நல்ல கருத்து

    த.ம 5//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  25. சீராசை சேதுபாலா கூறியது...

    // மரணத்துக்கு மருந்து இல்லை. சொல்லிவிட்டு மரணம் வருவதில்லை. அதனால்தான் பாரதியார், ”அச்சந் தவிர்” என்று அறிவுறுத்தினார். சென்னைப் பித்தன் செய்தியைச் சொல்லும் விதமும், கருத்தும் அவரைத் தமிழ் மணத்தில் இரண்டாம் இடத்தில் வைத்திருக்கின்றது. வாழ்த்துகள்.//
    நன்றி சீராசை சேதுபாலா.

    பதிலளிநீக்கு
  26. ! ஸ்பார்க் கார்த்தி ! கூறியது...

    // நல்ல விழிப்புணர்வு பதிவு//
    நன்றி கார்த்தி.

    பதிலளிநீக்கு
  27. ! ஸ்பார்க் கார்த்தி ! கூறியது...

    //sabaas//
    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. Ramani கூறியது...

    //மிகச் சரியான கருத்து
    பாம்பு கடிச்சு புழைச்சவனும் இருக்கான்
    செருப்பு கடிச்சு செத்தவனும் இருக்கான்
    ஊழிற் பெருவலி யாவுள//
    நன்றி ரமணி.

    பதிலளிநீக்கு
  29. விக்கியுலகம் கூறியது...

    // அண்ணே சரியா சொன்னீங்க!//
    நன்றி விக்கி.

    பதிலளிநீக்கு
  30. ரெவெரி கூறியது...

    //ஆம்...எங்கே எப்படி என்பதெல்லாம் எழுதியவன் கையில்...//
    நன்றி ரெவரி.

    பதிலளிநீக்கு
  31. Marana Neram theriyaatha varai thaan namakku nimmathi Sago.
    Arumaiyana pathivu.
    Vote potachu. TM 10.

    பதிலளிநீக்கு
  32. கே. ஆர்.விஜயன் கூறியது...

    // விதி வலியது. அருமையான யதார்த்தமான கருத்து ஐயா.//
    வாங்க விஜயன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  33. மகேந்திரன் கூறியது...

    // யதார்த்தமான பதிவு ஐயா....//
    நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  34. துரைடேனியல் கூறியது...

    //Marana Neram theriyaatha varai thaan namakku nimmathi Sago.
    Arumaiyana pathivu.
    Vote potachu. TM 10.//

    நன்றி துரைடேனியல்.

    பதிலளிநீக்கு
  35. போரை விட சாலை விபத்துதான் அதிகப்பேரை கொல்கிறது.

    பதிலளிநீக்கு
  36. நெருநல் ஒருவன் இன்றிலையெனும் பெருமையுடைத்து இவ்வுலகு. அழகாக விளக்கிச் சொல்லிய பதிவு. மிக ரசித்தேன் ஐயா. (என் ப்ளாக்கில் இன்று (14.11.11)குழந்தைகள் தினப் பதிவில் உங்களை இணைத்துள்ளேன். வருக...)

    பதிலளிநீக்கு
  37. ஒருவர் எப்பொழுது இறக்கப்போகிறார் என்று தெரிந்துவிட்டால், உலகில் என்னவெல்லாம் நடக்கும் ?

    குடும்பங்களில் அமைதி கூடுமா ? வாரிசுச் சண்டைகள் குறையுமா ? இல்லை , அதிகரிக்குமா ?

    மருத்துவச் செலவுகள் குறையுமா ? அதிகரிக்குமா ?

    மனித வாழ்க்கையிலே இருக்கும் ஒரே சஸ்பென்ஸ் மரண நிகழ்வின் நேரம் தான்.
    அதையும் பிடுங்கிவிடாதீங்க கடவுளே !!
    உங்களது கருடன், குருவி கதை பரீட்சித் மஹாராஜா கதையை நினைவுபடுத்தியது.
    ஆக,
    தேகம் அனித்யம்.
    மரணம் நிச்சயம்.
    சிவனை மறவாதிரு மனமே.

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  38. மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா .மரணம் வரும்போது வரும்
    ஆனால் எப்படிவரும் எப்ப வரும் என்று சொல்ல முடியாது .
    அழகிய பகிர்வுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் ......

    பதிலளிநீக்கு
  39. FOOD கூறியது...

    // மிக சரியான பகிர்வு//
    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  40. for those who would like to know how long will they be living,
    kindly log on to
    www.deathclock.com

    subbu rathnam

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் ஐயா, நலமா?
    மரணம் பற்றிய நிலையினை உரைக்கும் யதார்த்தப் பதிவு.

    பதிலளிநீக்கு