ஒரு குட்டிக் கதை!
கருடன் ஒரு சிட்டுக் குருவியினிடம் மிகவும் அன்புடன் இருந்தது.
ஒரு நாள் வைகுண்டத்தின் வாசலில்,கருடன் அக் குருவியிடம் பேசிக் கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த எமன்,சிட்டுக் குருவியைப் பார்த்துச் சிறிது தயங்கி நின்று விட்டு,வைகுண்டத்துக்குள் சென்று விட்டான்.
கருடன் யோசித்தது”எமன்,குருவியைப் பார்த்துத் தயங்கி நின்றான் என்றால்,நிச்சயம் குருவியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது.நான் குருவியைக் காப்பாற்ற வேண்டும்”
பின்னர் கருடன் குருவியைத் தூக்கிக் கொண்டு வெகு தொலைவில் இருக்கும் மலைக் குகையில் விட்டு வந்தது.வைகுண்ட வாயிலில் அமர்ந்து கொண்டது.
எமன் வெளியே வந்தான்.குருவியை காணாமல் திகைத்தான்.கருடனிடம் கேட்டான்”இங்கிருந்த சிட்டுக் குருவி எங்கே?”
கருடன் வெற்றிச் சிரிப்புடன் கூறியது”உங்கள் பார்வையிலிருந்து,குருவியின் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து கொண்ட நான் வெகு தொலைவில் உள்ள ஒரு மலைக் குகையில் அதை விட்டு வந்தேன்.இனி என்ன செய்வீர்கள்?”
யமதர்மன் நகைத்தான்”நன்று,நன்று!குருவியை இங்கு பார்த்ததும் நான் திகைத்தேன்.இன்னும் சிறிது நேரத்தில்,தொலைவில் உள்ள மகைக் குகையில் இதன் மரணம் நிகழ வேண்டுமே ,ஆனால் இது இங்கே இருக்கிறதே என்று.ஆனால் சரியான நேரத்தில் குருவி அங்கு சென்று சேர்ந்து விட்டது!நன்றி கருடனாரே!”
கருடன் செயலற்று அமர்ந்தது.
ஆம்,மரணம் என்பது எந்த நேரத்தில் எங்கு எப்படி நடக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப் பட்டு விட்ட ஒன்று.
சின்னக் குயில் சித்ராவின் பேரிழப்பைப் பற்றிப் படித்தபோது இந்தக் கதைதான் நினைவில் வந்தது.
பல ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பொக்கிஷத்தை,வேற்று மண்ணில், ஏதோ ஒரு வீட்டின் நீச்சல் குளத்தில் பறி கொடுக்க நேர்ந்த அந்தச் சோகத்தை யாரால் அளவிட முடியும்?
எதற்காக அங்கு சென்றார்களோ,அதுவே இன்னும் நிறைவேறாத நிலையில்,இந்த இழப்பு .
அப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் படாமல் இருந்திருந்தால்?
சித்ரா அந்நிகழ்ச்சிக்குப் போகாமலோ அல்லது குடும்பத்துடன் போகாமலோ இருந்திருந்தால்?
நீச்சல் குளம் இல்லாத ஒரு வீட்டில் தங்கியிருந்தால்?
இந்தக் கேள்விகளுக்கு விடைதான் இந்தக் கதை.
தவமிருந்து பெற்ற குழந்தையைப் பறி கொடுத்து விட்டுக் கதறும் அந்தத்தாய்க்கும், தந்தைக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூறுவதை தவிர வேறேன்ன செய்ய முடியும் நம்மால்?
இறைவா!அவர்களுக்கு மன ஆறுதலை,மன அமைதியைக் கொடு!
அவர்களுக்கு எது நல்ல மருந்தாக அமையும் என்பது உனக்குத்தெரியும்.
அந்த வரத்தை விரைவில் அளி!
அது வரை அவர்களுக்காக நாமும் பிரார்த்திப்போம்!
பி.சுசிலாவின் குரலைப்போல அனைவரும் சின்னக்குயில் சித்ராவின் குலில் இனிமையிலும் மயங்கியவர்கல்தான்.
பதிலளிநீக்குசெய்தி படித்தபோது மிக்க வேதனயைதான் இருந்தது. எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருக்கும் அந்த தாய்க்கு ஏன் இந்த கொடுமை?
அந்த குடும்பத்திற்காக நானும் பிரார்த்திக்கிறேன்...
பதிலளிநீக்குஇறைவனின் காலக்கணக்கு நமக்குப் புரிவதே இல்லை..படித்ததும் மனது கனத்தது..நல்ல கதைத் தேர்வு..அவர் சீக்கிரம் இந்த இழப்பிலிருந்து மீண்டு வர பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குஎப்படிங்க இப்படியெல்லாம்..
பதிலளிநீக்குகலக்குறீங்க தல...
வாழ்த்துக்கள்..
கக்கு - மாணிக்கம் சொன்னது…
பதிலளிநீக்கு// எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருக்கும் அந்த தாய்க்கு ஏன் இந்த கொடுமை?//
இதே நினைவுதான் என் மனதிலும் மாணிக்கம்.இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை இறைவன் அவர்களுக்கு அருளட்டும்!
நன்றி!
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//அந்த குடும்பத்திற்காக நானும் பிரார்த்திக்கிறேன்...//
அப்படியே!
நன்றி மனோ!
செங்கோவி கூறியது...
பதிலளிநீக்கு//அவர் சீக்கிரம் இந்த இழப்பிலிருந்து மீண்டு வர பிரார்த்திப்போம்.//
அதுவே அனைவர் பிரார்த்தனையும்!
நன்றி செங்கோவி!
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
பதிலளிநீக்கு//எப்படிங்க இப்படியெல்லாம்..
கலக்குறீங்க தல...//
பெரியவர்கள் எல்லாவற்றையும் கதை மூலம் சொல்லியிருக்கிறார்கள்.
நன்றி சௌந்தர்!
பாவம்... அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..
பதிலளிநீக்கு!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
பதிலளிநீக்கு//பாவம்... அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்//
நன்றி,கருன்!
படைத்தவன் மேல் கோபப்பட வேண்டியதாயிற்று:(
பதிலளிநீக்குகுரலும் இனிமை, மதிப்பிற்குரிய சித்ரா அவர்களுக்கு இந்த துயரம் வந்திருக்க கூடாது..
துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
நிகழ்காலத்தில்... சொன்னது…
பதிலளிநீக்கு//துயரத்தில் பங்கெடுக்கிறேன்.//
நம்மால் முடிந்தது அதுதானே!
நன்றி!
கருத்துள்ள கதை.
பதிலளிநீக்குசின்னக்குயில் சித்ராவிற்கும் அவரது கணவருக்கும் காலம் தான் மருந்திடவேண்டும். அவர்கள் மன நிம்மதி அடைந்திட பிரார்த்தனைகளுடன்....
படிக்கும்போதே மனசு வலித்தது
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ் சொன்னது…
பதிலளிநீக்கு//கருத்துள்ள கதை.
சின்னக்குயில் சித்ராவிற்கும் அவரது கணவருக்கும் காலம் தான் மருந்திடவேண்டும். அவர்கள் மன நிம்மதி அடைந்திட பிரார்த்தனைகளுடன்....//
காலன் தந்த வலிக்குக் காலம் தான் மருந்திட வேண்டும்!
நன்றி வெங்கட்!
மனசு வலிக்கும் செய்திதான்!
பதிலளிநீக்குநன்றி கஸாலி!
இறைவா!அவர்களுக்கு மன ஆறுதலை,மன அமைதியைக் கொடு!
பதிலளிநீக்குஅவர்களுக்கு எது நல்ல மருந்தாக அமையும் என்பது உனக்குத்தெரியும்.
அந்த வரத்தை விரைவில் அளி!
அது வரை அவர்களுக்காக நாமும் பிரார்த்திப்போம்!
...Amen.
குழந்தைகள் நீச்சல் குளத்தில் விளையாடும் போது, பெரியவர்களின் மேற்பார்வையில் இல்லாமல் இருந்தது வருத்தமாக இருக்கிறது. அப்படி இருந்து இருந்தால், உடனே யாராவது காப்பாற்றி இருந்து இருக்க முடியுமே.
பதிலளிநீக்குChitra சொன்னது…
பதிலளிநீக்கு// அது வரை அவர்களுக்காக நாமும் பிரார்த்திப்போம்!
...Amen.//
அவ்வாறே!
Chitra கூறியது...
பதிலளிநீக்கு// குழந்தைகள் நீச்சல் குளத்தில் விளையாடும் போது, பெரியவர்களின் மேற்பார்வையில் இல்லாமல் இருந்தது வருத்தமாக இருக்கிறது. அப்படி இருந்து இருந்தால், உடனே யாராவது காப்பாற்றி இருந்து இருக்க முடியுமே.//
சிறிது மனநலம் பாதிக்கப் பட்ட குழந்தை என அறிகிறேன்;எனவே கூடுதல் கவனம் தேவை.எப்போதும் அவர்களுடன் செல்லும் வேலைக்காரப் பெண் இம்முறை செல்லவில்லையாம்!அதுவே விதி!
வருகைக்கும் கருத்துகும் நன்றி சித்ரா!
பதிலளிநீக்குதன் மழலை செல்வதை இழந்து வாடும் சின்னகுயில் அவர்களுக்கு இழப்பை தாங்கும் சக்தியை வழங்கும் படி வேண்டுகிறேன் .. நாம் பிறக்கும் போதே நம் இறுதி பயணத்தின் நேரம் நிர்ணயிக்கபட்டுவிடுகிறது என்பதை தான் சிட்டுகுருவி கதை உணர்த்துகிறது . இறைவன் தான் மிகவும் விரும்புகிறவர்களை மிகக்குறைந்த வயதினிலே தன்னிடம் அழைத்து கொள்வான் என்று கேள்வி பட்டுள்ளேன். வாசுதேவன்
பதிலளிநீக்குகுரலும் இனிமை, சித்ரா அவர்களுக்கு இந்த துயரம் வந்திருக்க கூடாது..
பதிலளிநீக்குநெகிழ்ச்சியான விஷயத்தை கதையின் மூலம் எடுத்துரைத்ததற்கு நன்றி!
பதிலளிநீக்குஇந்த கதையை வேறு ஒரு வடிவில் படித்திருக்கிறேன். சித்ராவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
பதிலளிநீக்கு///பல ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பொக்கிஷத்தை,வேற்று மண்ணில், ஏதோ ஒரு வீட்டின் நீச்சல் குளத்தில் பறி கொடுக்க நேர்ந்த அந்தச் சோகத்தை யாரால் அளவிட முடியும்?//
பதிலளிநீக்குஆம், ஒரு மரணத்தின் வலியை யாரால் பகிர்ந்து கொள்ள முடியும்.
சித்ராவின் சோகத்தில் உங்கள் பதிவோடு நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.
Vasu கூறியது...
பதிலளிநீக்கு//இறைவன் தான் மிகவும் விரும்புகிறவர்களை மிகக்குறைந்த வயதினிலே தன்னிடம் அழைத்து கொள்வான் என்று கேள்வி பட்டுள்ளேன். //
அப்படிச் சொல்லி மன ஆறுதல் பெறட்டுமே!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாசு!
போளூர் தயாநிதி கூறியது...
பதிலளிநீக்கு//குரலும் இனிமை, சித்ரா அவர்களுக்கு இந்த துயரம் வந்திருக்க கூடாது..//
விதி வலியது!
நன்றி தயாநிதி!
! சிவகுமார் ! கூறியது...
பதிலளிநீக்கு//நெகிழ்ச்சியான விஷயத்தை கதையின் மூலம் எடுத்துரைத்ததற்கு நன்றி!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,சிவகுமார்!
பாலா கூறியது...
பதிலளிநீக்கு// இந்த கதையை வேறு ஒரு வடிவில் படித்திருக்கிறேன். சித்ராவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.//
ஒரே கருத்து,கதை பல!
நன்றி பாலா!
பாரத்... பாரதி... கூறியது...
பதிலளிநீக்கு//ஆம், ஒரு மரணத்தின் வலியை யாரால் பகிர்ந்து கொள்ள முடியும்.
சித்ராவின் சோகத்தில் உங்கள் பதிவோடு நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.//
அனைவரின் அனுதாபங்களும், அவருக்கும் அவர் குடும்பத்துக்கும்!
நன்றி பாரதி!
If God Himself cannot bear the separation from this child for just 8 years, how can poor mortals like Chitra and her husband bear this for the rest of their lives! I have NO CLUE, whatsoever...! :(((
பதிலளிநீக்குமனதை பாதித்த நிகழ்வை கதையின் மூலம் விளக்கியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குதிருமதி சித்ரா அவர்கள் இந்த சோகத்திலிருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
@மனம் திறந்து... (மதி)
பதிலளிநீக்குyes.god loves those who die young!
who are we to pass judgement on his decisions!
thank you mathi!
@வே.நடனசபாபதி
பதிலளிநீக்குஎல்லோரும் பிரார்த்திப்போம்!
நன்றி!
சித்ரா அவர்களின் துயர் யாராலும் துடைக்க முடியாதது. துடைக்க வேண்டிய அந்தக் கடவுளே இந்தப் பாதகத்தைச் செய்து விட்டானே! கவியரசின் ‘காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்’ என்பதை நம்பி வாழ்க்கையைத் தொடருவோம்.
பதிலளிநீக்கு@ R.S.KRISHNAMURTHY நம்பிக்கைகள்தானே வாழ்க்கை!
பதிலளிநீக்குநன்றி!
பொருத்தமான கதையைக் கையாண்டு உள்ளீர்கள். என்ன செய்வது, சில சமயம் இப்படி நேர்ந்து விடுகின்றது. அன்னாருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் என் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்கு