தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஏப்ரல் 01, 2011

தமிழ் மணமும்,ஏப்ரல் முட்டாளும்!

ஓர் இனிய பாடல்,பல ஆண்டுகட்கு முன் படித்தது.என் நினைவில் நின்ற அளவில் எழுதுகிறேன்----

“வஞ்சியேன் என்றவன்றன் ஊருரைத்தான் யானுமவன்

வஞ்சியான் என்றதனால் வாய்நேர்ந்தேன் -வஞ்சியான்

வஞ்சியேன்,வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்

வஞ்சியாய்,வஞ்சியர் கோ”


தலைவி தன் தோழியைப் பார்த்துக் கூறுவதாக அமைந்த பாடல்.

”பெண்ணே!,அவன் என்னைச் சந்தித்தபோது அவன் வஞ்சி நாட்டைச் சேர்ந்தவன் என்று

சொல்வதற்காக,வஞ்சியேன் என்று சொன்னான்.நானும் அவன் வஞ்சிக்க மாட்டேன் என்று

சொல்வதாக எண்ணிச் சம்மதித்தேன்.ஆனால்,வஞ்சியேன் என்று சொல்லிச் சொல்லியே

அந்த வஞ்சி நாட்டுத் தலைவன் என்னை வஞ்சித்து விட்டான்.”


அவளுடன் கலந்து அவளைப் பிரிந்து சென்ற அவன் திரும்ப வராத நிலையில் தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.

என்ன சொல் நயம்?.அந்த வஞ்சியேன் என்ற சொல்லில் என்ன சொற்சிலம்பம்? அவன்

தன்னை ஏமாற்றி விட்டுச் சென்று விட்டான் என்பதை எவ்வளவு சுவைபட உரைக்கின்றாள்?

பாடலில் அழகான தமிழ்மணம் கமழ்கிறதல்லவா?!

(தலைப்பின் பாதி நியாயப்படுத்தப் பட்டு விட்டது!)

தலைவன் ,தலைவியைஏப்ரல் 1ஆம் தேதி சந்தித்திருக்க வேண்டும்.அவளிடம் அவன் பொய்

சொல்லாமலே அவளை முட்டாளாகி விட்டான்! அவன் வஞ்சிக்க மாட்டேன் என்று

சொல்லவில்லை,வஞ்சி நாட்டைச் சேர்ந்தவன் என்றுதான் சொன்னான்.தன் சொல் நயத்தில்

அவளை ஏப்ரல் முட்டாளாக்கி விட்டான்!

(தலைப்பின் மறுபாதியும் நியாயப் படுத்தப் பட்டு விட்டதல்லவா?!)

(தமிழ் மணம் பற்றிப் படித்துவிட்டு தமிழ்மணத்தில் வாக்களிக்காமல் போகாதீர்கள்!)

27 கருத்துகள்:

  1. பாட்டு ரசிகன் கூறியது...

    //நடக்கட்டும்..//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  2. பாட்டு ரசிகன் கூறியது...

    // பிரபல பதிவரின் மறைக்கப்பட்ட உண்மைகள்..!

    தெரிந்துக்கொள்ள பின்தொடருங்கள்..
    http://ungaveetupillai.blogspot.com/2011/03/blog-post_1491.html//

    இதோ!

    பதிலளிநீக்கு
  3. Pranavam Ravikumar a.k.a. Kochuravi கூறியது...

    //அப்படியே ஆகட்டும்!//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  4. ஆஹா..... புலவரே ...உம் தமிழுக்கு நாம் அடிமையானோம்.
    இனி சென்னைக்காதலராகிய தாங்கள் தமிழ் காதலர் என்று அறியப்படுவீர்கள்.
    வாழ்க நின் தமிழ் தொண்டு.
    தமிழ் காதலர் வாழ்க! வாழ்க!!

    பதிலளிநீக்கு
  5. ஹி..ஹி..ஹி.. எதிர்பாரத திருப்பு முனையில் காமெடி. ஹி..ஹி... கலக்கல் தல..!!

    பதிலளிநீக்கு
  6. தலைவன் ,தலைவியைஏப்ரல் 1ஆம் தேதி சந்தித்திருக்க வேண்டும்.அவளிடம் அவன் பொய்

    சொல்லாமலே அவளை முட்டாளாகி விட்டான்! அவன் வஞ்சிக்க மாட்டேன் என்று

    சொல்லவில்லை,வஞ்சி நாட்டைச் சேர்ந்தவன் என்றுதான் சொன்னான்.தன் சொல் நயத்தில்

    அவளை ஏப்ரல் முட்டாளாக்கி விட்டான்!


    .....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... நல்ல ஆராய்ச்சி.

    பதிலளிநீக்கு
  7. கக்கு - மாணிக்கம் சொன்னது…

    // ஆஹா..... புலவரே ...உம் தமிழுக்கு நாம் அடிமையானோம்.
    இனி சென்னைக்காதலராகிய தாங்கள் தமிழ் காதலர் என்று அறியப்படுவீர்கள்.
    வாழ்க நின் தமிழ் தொண்டு.
    தமிழ் காதலர் வாழ்க! வாழ்க!!//

    சென்னை பித்தன்,சென்னைக் காதலனாகி,இப்போது தமிழ்க் காதலனா!எப்போதும் காதல் கூடவே இருக்கிறது!
    என்றும் உங்களுக்காகத் தமிழ்தொண்டாற்ற விரும்புவோம்!
    மிக்க நன்றி மாணிக்கம்!

    பதிலளிநீக்கு
  8. பிரவின்குமார் கூறியது...

    // ஹி..ஹி..ஹி.. எதிர்பாரத திருப்பு முனையில் காமெடி. ஹி..ஹி... கலக்கல் தல..!!//

    நன்றி பிரவின்குமார்!

    பதிலளிநீக்கு
  9. Chitra கூறியது...
    //.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... நல்ல ஆராய்ச்சி.//

    தலைப்பு யோசித்து வைத்தாகி விட்டது!வேறென்ன செய்ய!
    நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  10. அருமையான சொற்சிலம்பம் தமிழ் மணக்கிறது....

    பதிலளிநீக்கு
  11. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    //அருமையான சொற்சிலம்பம் தமிழ் மணக்கிறது..//
    நன்றி மனோ!
    (ஓட்டு எங்கே?)

    பதிலளிநீக்கு
  12. எப்போதோ படித்த அல்லது கேட்ட மிக இனிமையான பாடலை நினைவுபடுத்தியதற்கு நன்றி. அதனை வெகு அழகாக தமிழ்மணத்துடனும் ஏப்ரல் முதல்தேதியுடனும் இணைத்துப் பரிமாறியிருக்கும் உங்கள் சாமர்த்தியம் பாராட்டவைக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. அருமையான பாடல்.. அருமையான ஒப்புமை.. பகிர்வுக்கு சன்றி..

    பதிலளிநீக்கு
  14. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //அருமையான பாடல்.. அருமையான ஒப்புமை.. பகிர்வுக்கு சன்றி..//

    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  15. FOOD கூறியது...

    //தமிழ் மணம் தக தகவென ஜொலிக்குதே!//

    நன்றி!

    பதிலளிநீக்கு
  16. Amudhavan கூறியது...

    //எப்போதோ படித்த அல்லது கேட்ட மிக இனிமையான பாடலை நினைவுபடுத்தியதற்கு நன்றி. அதனை வெகு அழகாக தமிழ்மணத்துடனும் ஏப்ரல் முதல்தேதியுடனும் இணைத்துப் பரிமாறியிருக்கும் உங்கள் சாமர்த்தியம் பாராட்டவைக்கிறது.//

    பட்டப் படிப்புப் படிக்கும்போது தமிழ் விரிவுரையாளர் சொன்ன பாடல்.நினைவில் நின்றது.பகிர்ந்தேன்.
    நன்றி அமுதவன்!

    பதிலளிநீக்கு
  17. FOOD கூறியது...

    //தமிழ் மணம் பற்றிப் படித்துவிட்டு தமிழ்மணத்தில் வாக்களிக்காமல் போகாதீர்கள்!//
    அழகா சொல்லீட்டீஙக.அப்படியே ஓட்டு போட்டுட்டேன்.//

    மீண்டும் நன்றி!

    பதிலளிநீக்கு
  18. தமிழின் மணத்தினை முகர்ந்தேன் – வாக்களித்தேன்!!! நல்ல பாடல் – ஏப்ரல் 1 ஸ்பெஷல் நன்றாகவே இருந்தது.

    பதிலளிநீக்கு
  19. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //தமிழின் மணத்தினை முகர்ந்தேன் – வாக்களித்தேன்!!! நல்ல பாடல் – ஏப்ரல் 1 ஸ்பெஷல் நன்றாகவே இருந்தது.//
    நன்றி வெங்கட் நாகராஜ்!

    பதிலளிநீக்கு
  20. தேடக் கிடைக்காத பாடல்களை தேடிப் பிடித்து எமக்காக வழங்கும் தங்களுக்கு நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
  21. சிவகுமாரன் கூறியது...

    //தேடக் கிடைக்காத பாடல்களை தேடிப் பிடித்து எமக்காக வழங்கும் தங்களுக்கு நன்றிகள் பல//
    நன்றி சிவகுமாரன்!

    பதிலளிநீக்கு
  22. உங்கள் பதிவு ஏப்ரல் 1 ந்தேதி வந்தாலும் அதில் தமிழ் மணம் கமழ்ந்தது உண்மை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  23. பசு, தென்னை மரம், மாணவன், கட்டுரை - பழைய நினைவு நிழலாடுகிறது!
    உங்கள் ஆர்வம் எனக்கும் இருந்தது, விளைவு இதோ:
    அஞ்சாநெஞ்சனின் அதிரடி வியூகம்! மருத்துவர், கேப்டன், சிங்கம், ஆற்காட்டார் மற்றும்...?


    தலைப்புக்கும் மேட்டருக்கும் இப்போல்லாம் திருமணம் கூட நடப்பதில்லை! They are just living together, that's it! இதைப்பற்றிய என் பதிவை இங்கே பாருங்கள்: தலைப்பு, மேட்டரு... தனிக்குடித்தனம்!

    பதிலளிநீக்கு
  24. வே.நடனசபாபதி கூறியது...
    //
    உங்கள் பதிவு ஏப்ரல் 1 ந்தேதி வந்தாலும் அதில் தமிழ் மணம் கமழ்ந்தது உண்மை. வாழ்த்துக்கள்!//

    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  25. மனம் திறந்து... (மதி) கூறியது...

    // பசு, தென்னை மரம், மாணவன், கட்டுரை - பழைய நினைவு நிழலாடுகிறது!
    உங்கள் ஆர்வம் எனக்கும் இருந்தது, விளைவு இதோ:
    அஞ்சாநெஞ்சனின் அதிரடி வியூகம்! மருத்துவர், கேப்டன், சிங்கம், ஆற்காட்டார் மற்றும்...?

    தலைப்புக்கும் மேட்டருக்கும் இப்போல்லாம் திருமணம் கூட நடப்பதில்லை! They are just living together, that's it! இதைப்பற்றிய என் பதிவை இங்கே பாருங்கள்: தலைப்பு, மேட்டரு... தனிக்குடித்தனம்! //

    நன்றி மதி!பதிவுகளை அவசியம் பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு