தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஏப்ரல் 22, 2011

பயணமும் எண்ணங்களும்!

சில பயணங்கள் நம் நினவில் தங்கி விடுகின்றன;எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவை நம் நினைவை விட்டு மறைவதில்லை.காரணம் அப்பயணங்களின் போது நமக்கு ஏற்படும் அனுபவங்கள்;நாம் சந்திக்கும் வித்தியாசமான மனிதர்கள்.என் வாழ்க்கையில் பல பயணங்கள் என்னால் மறக்க முடியாதவை.ஆனால் இங்கு நான் பகிர்ந்து கொள்ளப் போவது இரு இரயில் பயணங்கள் மட்டுமே.நான் சந்தித்த வித்தியாசமான மனிதர்களே காரணம்.

முதல் பயண அனுபவம்;அப்போது நான் டில்லியில் பணி புரிந்துவந்தேன்.ஒரு முறை விடுப்பில் சென்னை வந்து கொண்டிருந்தேன் என்னுடன் என் அம்மாவும். எப்போதும் போல் பயணத்தில் சாப்பிடுவதற்காக வீட்டில் செய்து கொண்டு வந்த சப்பாத்தி,புளி, தயிர் சாதங்கள்.காலை உணவு,பின் மதிய உணவு சாப்பிடும் போது கவனித்தேன்.எங்கள் பெட்டியில் பயணம் செய்த ஒருவர் யாருடனும் பேசாமல் எதுவும் சாப்பிடாமல் வந்ததை. அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.அவர் வேளாங்கண்ணிக்கு வேண்டுதலுக்காகச் செல்வதாகக் கூறினார்.நான் எங்கள் உணவைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னபோது பணிவாக மறுத்து விட்டார்.

மதிய நேரத்தில் ரயில் நாக்பூரை அடைந்தது.கீழே இறங்கி இரண்டு ஐஸ்கிரீம் வாங்கினேன்.ஒன்றை என் அம்மாவிடம் கொடுத்தேன்.இன்னொன்றைச் சாப்பிடும் முன் அந்த நபரைப் பார்த்தேன்."சாப்பிடுகிறீர்களா " என்று கேட்ட படியே அவரிடம் அதை நீட்டினேன்.அது வரை ஒன்றுமே சாப்பிடாமல் வந்த அவர் அதை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தார்-ஆர்வமாக,அவசரமாக. மீண்டும் ஒர் ஐஸ்கிரீம் வாங்குமுன் ரயில் புறப்பட்டு விட்டது.என் அம்மாவுக்குக் கூட வருத்தம்-அந்த ஐஸ்கிரீமை நான் சாப்பிடவில்லையே என்று.ஆனால்,அந்த ஐஸ்கிரீமைச் சாப்பிட்டிருந்தால்,என் வயிறு மட்டும்தான் குளிர்ந்திருக்கும்;ஆனால் இப்போது என் மனமும் குளிர்ந்து விட்டது.சென்னை வந்து சேர்ந்த பின் என்னருகில் வந்த அவர்"ஐயா,உங்கள் நலனுக்காக நான் மாதாவிடம் பிரார்த்தனை செய்வேன்"எனச் சொல்லிச் சென்றார்.

இந்தப் பயணத்தை எப்படி மறக்க முடியும்?



நினைவில் நிற்கும் இன்னொரு பயணமும் இது போல, வித்தியாசமான ஒருவரைப் பற்றியது.இதுவும் விடுப்பில் சென்னை வந்து திரும்பிய ஒரு பயணம்.பூனாவுக்குப் பயணித்துக் கொண்டிருந்தேன்.வழக்கம் போல் கட்டுச் சாதம் வகையறாக்கள். நாங்கள் சாப்பிடும்போது எங்களுடன் பயணம் செய்த ஒரு இளம்பெண் எதுவும் சாப்பிடாமல் வந்தாள்.நாங்கள் அளித்த உணவை மறுத்து,அன்று விரதம் என்றும் பழம் தவிர வேறெதுவும் சாப்பிட மாட்டேன் என்றும் கூறினாள்.அன்று முழுவதும் அப்பெண் சாப்பிட்டது ஒரே ஒரு ஆப்பிள் மட்டுமே.கல்லூரியில் 'மாஸ் கம்யூனிகேஷன்' பட்ட மேற்படிப்புப் படிக்கும் ஒரு பெண் ,அவ்வாறு விரதம் இருந்தது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ரயில் காலை 4 மணி அளவில் பூனாவை அடைந்தது.அந்த இருட்டில் அந்தப் பெண்ணைத் தனியாக அனுப்புவது சரியாகத் தோன்றவில்லை.அப்பெண் இருந்த ஹாஸ்டல் எங்கள் வீட்டைத் தாண்டிதான் இருந்தது.எங்களுடன் அப்பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்றோம். எங்கள் வீட்டில் விடியும் வரை தங்கி விட்டுப் பின் செல்லலாம் என நான் சொன்னேன்.அந்தப் பெண் எங்களைக் கவலைப்பட வேண்டாமென்றும்,போய்ச் சேர்ந்தவுடன் தொலைபேசுவதாகவும் கூறினாள். சொன்னது போலவே 20 நிமிடங்களில் அவள் ஃபோன் வந்து விட்டது. என்னால் மறக்கமுடியாத பெண் .அதனால் மறக்க முடியாத பயணம்.

"நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையும்,நிலத்தில் யாருக்கும் அஞ்சாதநெறிகளும், திமிர்ந்த ஞானச்செருக்கும்" மட்டுமன்றி நமது அடிப்படை கலாசாரத்தை, நம்பிக்கைகளையும் பேணிக் காக்கும் ஒரு வித்தியாசமான புதுமைப் பெண்.செய்யும் செயல் எதையும் ஈடுபாட்டுடன் செய்யும் அந்தப் பெண்ணுக்குச் சரியான பெயர்தான்

.--"ச்ரத்தா".

37 கருத்துகள்:

  1. நல்ல உதவும் மனப்பானமி உங்களுக்கு..

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. பயணமும் எண்ணங்களும் , என் பழைய ஐடி நியாபகம் வந்தது.. என் வாழ்க்கைப்பயணத்தை குறித்தே அது..

    இது ரயில் பயணம்.. அருமை

    பதிலளிநீக்கு
  3. கலாச்சாரத்தை பாதுகாப்பவள் "வித்யாசமான பெண்" என்று சொல்லப்படும் அளவிற்கு இன்றைய நிலைமை உள்ளது. என்னம்மா தேவி ஜக்கம்மா..உலகம் தலைகீழா சுத்துதே நியாயமா?

    பதிலளிநீக்கு
  4. அருமையான பகிர்வு நன்றி

    பதிலளிநீக்கு
  5. எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

    // நல்ல உதவும் மனப்பானமி உங்களுக்கு..

    வாழ்த்துகள்//
    நன்றி சாந்தி!

    பதிலளிநீக்கு
  6. எண்ணங்கள் 13189034291840215795 கூறியது...

    //பயணமும் எண்ணங்களும் , என் பழைய ஐடி நியாபகம் வந்தது.. என் வாழ்க்கைப்பயணத்தை குறித்தே அது..

    இது ரயில் பயணம்.. அருமை//
    இடுகைத்தலைப்பு உங்களிடமிருந்து கடன் வாங்கியதுதான்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  7. ! சிவகுமார் ! கூறியது...

    //கலாச்சாரத்தை பாதுகாப்பவள் "வித்யாசமான பெண்" என்று சொல்லப்படும் அளவிற்கு இன்றைய நிலைமை உள்ளது. என்னம்மா தேவி ஜக்கம்மா..உலகம் தலைகீழா சுத்துதே நியாயமா?//
    பழமையும் புதுமையும் கலந்த ஒரு கலவையல்லவா?எனவே வித்தியா சமான பெண்!
    நன்றி சிவகுமார்!

    பதிலளிநீக்கு
  8. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    //அருமையான பகிர்வு நன்றி//
    நன்றி சதீஷ்!

    பதிலளிநீக்கு
  9. வித்தியாசமான பகிர்வு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. பகிர்வுக்கு நன்றி...

    தளம் வித்தியாசமாக இருக்கிறது..
    இன்னும் அழகுப்படுத்துங்கள்..

    பதிலளிநீக்கு
  11. கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
    கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

    http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  12. பயணங்கள் மறக்க படுவது இல்லைதான் இல்லையா....

    பதிலளிநீக்கு
  13. என்னிடமும் இப்பிடி வித்தியாசமான பயண அனுபவம் இருக்கிறது....

    பதிலளிநீக்கு
  14. உதவும் எண்ணம கொண்ட உங்களுக்கு ஒரு சல்யூட் தல....

    பதிலளிநீக்கு
  15. ஒவ்வொரு பயணத்திலும் நாம் சந்திக்கும் வித்தியாசமான மனிதர்கள்…. நமக்கும் விதவிதமாய் அனுபவங்கள்… நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  16. இராஜராஜேஸ்வரி கூறியது...

    //வித்தியாசமான பகிர்வு. வாழ்த்துக்கள்.//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  17. பாட்டு ரசிகன் கூறியது...

    //பகிர்வுக்கு நன்றி...

    தளம் வித்தியாசமாக இருக்கிறது..
    இன்னும் அழகுப்படுத்துங்கள்..//
    வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி,பாட்டு ரசிகன்!

    பதிலளிநீக்கு
  18. பாட்டு ரசிகன் கூறியது...

    //கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
    கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

    http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html//
    கேட்டு விட்டுப் பதில் எழுதுகிறேன்!

    பதிலளிநீக்கு
  19. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //பயணங்கள் மறக்க படுவது இல்லைதான் இல்லையா....//
    உண்மை மனோ!

    பதிலளிநீக்கு
  20. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //என்னிடமும் இப்பிடி வித்தியாசமான பயண அனுபவம் இருக்கிறது....//
    எடுத்து விடுங்க,ரசிப்போம்!

    பதிலளிநீக்கு
  21. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //உதவும் எண்ணம கொண்ட உங்களுக்கு ஒரு சல்யூட் தல....//
    மிக்க நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  22. FOOD கூறியது...

    //ஆனால்,அந்த ஐஸ்கிரீமைச் சாப்பிட்டிருந்தால்,என் வயிறு மட்டும்தான் குளிர்ந்திருக்கும்;ஆனால் இப்போது என் மனமும் குளிர்ந்து விட்டது.//
    //உண்மையில் உங்கள் செயல் பாராட்ட வேண்டிய ஒன்று.//
    அன்புக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  23. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //ஒவ்வொரு பயணத்திலும் நாம் சந்திக்கும் வித்தியாசமான மனிதர்கள்…. நமக்கும் விதவிதமாய் அனுபவங்கள்… //
    ஆம்,வெங்கட்,பயணங்கள் என்றுமே சுவாரஸ்யமானவை
    //நல்ல பகிர்வு.//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  24. சில பயணங்களில் சில மனிதர்கள்? நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  25. பகிர்வுக்கு நன்றி அண்ணே

    பதிலளிநீக்கு
  26. வே.நடனசபாபதி சொன்னது…

    //சில பயணங்களில் சில மனிதர்கள்? நல்ல பதிவு.//
    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  27. விக்கி உலகம் கூறியது...

    // பகிர்வுக்கு நன்றி அண்ணே//
    நன்றி விக்கி!

    பதிலளிநீக்கு
  28. சில பயணங்களில் ஏற்படும் அனுபவங்கள் மறக்கமுடியதவைகளாக அமைந்து விடுவதுண்டு ! ஒரு முறை குருவாயூர் ஒரு திருமணத்திற்கு செல்லலும் போதும் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் என்னால் மறக்கமுடியாதது .... !!!! நல்ல பதிவு . பிறருக்கு உதவும் போது ஏற்படும் மகிழ்ச்சியை அழகாக விவரித்து உள்ளீர்கள் . வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  29. Vasu கூறியது...

    //ஒரு முறை குருவாயூர் ஒரு திருமணத்திற்கு செல்லலும் போதும் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் என்னால் மறக்கமுடியாதது .... !!!! //
    எனக்குத்தெரியுமே!எப்படி மறக்க முடியும்!
    //நல்ல பதிவு . பிறருக்கு உதவும் போது ஏற்படும் மகிழ்ச்சியை அழகாக விவரித்து உள்ளீர்கள் . //
    நன்றி வாசு!

    பதிலளிநீக்கு
  30. Rathnavel கூறியது...

    // நல்ல பதிவு.//
    நன்றி ரத்னவேல் அவர்களே!

    பதிலளிநீக்கு
  31. பயணங்கள் எப்போதும் நல்லனுபவங்களூடே படிப்பினையைத் தருகின்றன...அதிலும் ரயில் பயணம் சுகமானது...சுவையானது...

    பதிலளிநீக்கு
  32. Lakshminarayanan கூறியது..
    //பயணங்கள் எப்போதும் நல்லனுபவங்களூடே படிப்பினையைத் தருகின்றன...அதிலும் ரயில் பயணம் சுகமானது...சுவையானது...//
    உண்மையே!
    நன்றி லட்சுமிநராயணன்,அவர்களே!

    பதிலளிநீக்கு
  33. R.S.KRISHNAMURTHY கூறியது...

    //நல்ல பதிவு!//
    நன்றி!

    பதிலளிநீக்கு