இன்று மாலை இந்தியாவின் எல்லாத்திரை அரங்குகளும் காலியாக இருக்கும்!
சென்னைக் கடற்கரையில் வெறும் காற்று மட்டும் இருக்கும்;வாங்க மனிதர்கள் இருக்க மாட்டார்கள்.
இந்தியர்கள் அனைவரின் பிரார்த்தனைகள் இரண்டு.
1)இந்தியா உலககோப்பையை வெல்ல வேண்டும்
2)அதை விட முக்கியமாக ஆனால் அதற்குத் துணையாக,சச்சின்சதம்-சத சதம்-அடிக்க வேண்டும்!
எல்லோரின் எண்ணமும் நிறைவேறி,கிரிக்கெட் கடவுள் சதமடிக்க,எல்லாம் வல்ல கடவுள் அருள் புரிய வேண்டும்!
பிரார்த்திப்போம்!
சச்சின் பற்றிப் பிரபலங்களின் கருத்து.
“என் மகன் சச்சின் டெண்டுல்கராக வளர வேண்டும் என் விரும்புகிறேன்---லாரா(மே.இ.)
நாங்கள் இந்திய கிரிக்கெட் அணியிடம் தோற்கவில்ல.சச்சின் டெண்டுல்கர் என்ற மனிதரிடம் தோற்றோம்!----மார்க் டெய்லர்(ஆஸ்).
இந்தியாவில் பறக்கும் ஒரு விமானத்தில் சச்சினுடன் சேர்ந்து பயணம் செய்தால்,எங்களுக்கு எந்தக் கெடுதியும் நேராது!---ஹஷீம் அம்லா(தெ.ஆ)
அவருக்கு அந்த ’லெக் க்ளான்ஸ்’ ஆடுவதற்கு,ஒரு கைத்தடி போதும்!--வக்கார் யூனஸ்(பாக்)
உலகில் இரண்டு விதமான பேட்ஸ்மென் இருக்கிறார்கள்—1)சச்சின் டெண்டுல்கர் 2)மற்ற பேட்ஸ்மென்!—ஆண்டி ஃப்லவர்(ஜிம்பா)
நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன்.அவர் இந்தியாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் no.4. பேட்ஸ்மேன் ஆக விளையாடுகிறார்!—மேத்யூ ஹேடன்(ஆஸ்தி)
சச்சின் பேட் செய்யும்போது நான் என்னையே பார்க்கிறேன்!—பிராட்மேன்(ஆஸ்தி)
நீங்கள் செய்ய நினைக்கும் குற்றங்களைச் சச்சின் பேட் செய்யும்போது செய்யுங்கள்!ஏனென்றால்,அப்போது கடவுளும்,அந்தபேட்டிங்கைப் பார்ப்பதில்
ஆழ்ந்திருப்பார்!(ஒரு ஆஸ்திரேலிய ரசிகர்)
எனக்குக் கிரிக்கெட் தெரியாது;ஆயினும் நான் சச்சின் ஆட்டத்தைப் பார்க்கிறேன்.அது எனக்குப் பிடிக்கும் என்பதால் அல்ல;அவர் ஆடும்போது என் நாட்டின் உற்பத்தித் திறன் ஏன் 5 விழுக்காடு குறைகிறது என்று அறிந்து கொள்ள!(ஒபாமா)
கிரிக்கெட்டாய நம:
சச்சின் போற்றி போற்றி!
கிரிக்கெட் சுரம் உங்களையும் விட்டுவைக்களையா?
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குநாம் வெற்றி பெறுவோம்..
பதிலளிநீக்கு!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு//கிரிக்கெட் சுரம் உங்களையும் விட்டுவைக்களையா?//
104 degree!!
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள்..//
இந்தியாவுக்கு!சச்சினுக்கு!
நன்றி!
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு//நாம் வெற்றி பெறுவோம்..//
121 கோடி உள்ளங்கள் அதையே சொல்கின்றன!
நன்றி கருன்!
இன்னைக்கு கிரிக்கெட்டா நடத்துங்க...நடத்துங்க
பதிலளிநீக்குரஹீம் கஸாலி சொன்னது…
பதிலளிநீக்கு// இன்னைக்கு கிரிக்கெட்டா நடத்துங்க...நடத்துங்க//
இரண்டு பேர் சேர்ந்தால் இன்று பேசுவதே கிரிக்கெட் பற்றித்தான் கஸாலி!
நன்றி!
//நீங்கள் செய்ய நினைக்கும் குற்றங்களைச் சச்சின் பேட் செய்யும்போது செய்யுங்கள்!ஏனென்றால்,அப்போது கடவுளும்,அந்தபேட்டிங்கைப் பார்ப்பதில்
பதிலளிநீக்குஆழ்ந்திருப்பார்!(ஒரு ஆஸ்திரேலிய ரசிகர்)//
மிக அழகாக தொகுத்துள்ளீர்கள். எனக்கு கிரிகெட் மீது இருந்த அந்த Infatuation மறைத்து பல வருடங்களாகிறது.சினிமாவைப்போல இந்த கிரிகெட்டும் இந்தியர்களை அடிமை படுத்தி வைத்துள்ளதில் எனக்கு உடன் பாடு இல்லை. தேவையை விட மிக மிகமிக மிக அதிகமாகவே நாம் இவைகளை தூக்கி சுமந்து கொண்டாடுகிறோம்.
எனக்கும் கிரிக்கெட்டுக்கும் ஏணி வச்சாலும் எட்டாதுப்பா...ஆளை விடுங்க, நீங்க கொண்டாடுங்க...
பதிலளிநீக்குஎனக்கு நமது தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு முதன்மை இடம் தராமல்கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தருகிறோமே என்ற வருத்தம் உண்டு.
பதிலளிநீக்குஆனாலும் இந்தியா இன்று வெற்றி பெறவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் தில்லி சாலைகளில் இன்று ஒன்றிரண்டு வாகனங்களே இருக்கின்றன! கிரிக்கெட் மோகம் ஏதோ தில்லியில் கர்ஃப்யூ போல ஆக்கிவிட்டது :)
பதிலளிநீக்குஎன்னம்மோ போங்க. இதையே நம்பி பரிச்சையில் தோற்றவர்களை நிறைய பேர்களை எனக்குத் தெரியும்.
பதிலளிநீக்கு@ கக்கு - மாணிக்கம்
பதிலளிநீக்குநானும் முன்பு போல் எல்லா ஆட்டங்களையும் விடாமல் பார்ப்பதில்லை! ஆனால் நேற்று-உலகக்கோப்பை இறுதியாட்டம்.விட முடியுமா!1983 காலண்டரில் மட்டுமல்ல,கிரிக்கெட்டிலும் திரும்ப வந்து விட்டது!
நன்றி மாணிக்கம்!
@MANO நாஞ்சில் மனோ
பதிலளிநீக்குஎன்ன மனோ! பார்க்கிறவர்கள் எல்லாம் கிரிக்கெட் முழுதும் தெரிந்தவர்களா என்ன?
கொண்டாடிட்டோமில்லே!
நன்றி!
FOOD
பதிலளிநீக்குவென்றது இந்தியா!
நன்றி !
@வெங்கட் நாகராஜ்
பதிலளிநீக்குசென்னையிலும் அதே நிலைதான் நாகராஜ்!
(தினமும் 10 மணிக்குப் படுக்கும் நானே நேற்றுப் படுக்கும்போது 12 மணி!)
நன்றி!
@ஜோதிஜி
பதிலளிநீக்குவருத்தப்பட வேண்டிய செய்தியே!இங்கு பெற்றோர்களின் பொறுப்பு அதிகமாகிறது!
நன்றி ஜோதிஜி!
அனைவரின் பிரார்த்தனைகளும் பலித்து,இந்தியா 28 ஆண்டுகள் கழித்துக் கோப்பையை வென்று விட்டது!
பதிலளிநீக்கு(ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஒரு கோடி பரிசு!)
இந்தியா வென்றதில் மகிழ்ச்சி
பதிலளிநீக்கு@தோழி பிரஷா
பதிலளிநீக்குஆம்!நன்றி !
சச்சினை ரசிக்க இன்னும் கூடுதல் காரணங்கள்... சச்சினை பிடிக்காதவர் யாரேனும் உண்டா என்ன??
பதிலளிநீக்குஇங்கே கொஞ்சம் வாங்களேன்!
கொஞ்சம் இங்கும் வாங்களேன்!
http://sagamanithan.blogspot.com/