தொடரும் தோழர்கள்

வியாழன், ஏப்ரல் 07, 2011

ஞானம் பிறந்தது!

நேற்று வலையில் மேய்ந்து கொண்டிருந்த நேரம்.

என் அம்மா(வயது 92) திடீரென்று கேட்டார்கள்.

“ஏண்டா ஏதோ ஆடிட்டரைப் பார்க்கணும்னு சொல்லிண்டிருந்தயே,பாக்கலியா!”

“போகணும்மா”-நான்.

“ரெண்டு நாள் முன்னாலே சுதா அவளோட ஜாதகத்தைப் பாக்கச் சொன்னாளே, பாத்துட்டயா?”

”பாக்கறேம்மா”

”பழைய சட்டை,பேண்டெல்லாம்,ஏதோ இல்லத்துலே கொடுக்கணும்னு சொன்னியே,குடுக்கலையா?”

”குடுக்கணும்மா”

”என்னவோ போ!கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும்,கிழவியைத்தூக்கி மணையில வைன்னு எப்பப் பாத்தாலும்,கம்ப்யூடர் முன்னாலயே உக்காந்திருக்கே!பேசக் கூட ஒனக்கு நேரமில்ல!”
அம்மாவின் பேச்சு என்னை யோசிக்க வைத்தது

ஞானம் பிறந்தது!

புதிய சிந்தனைகளோ,தத்துவங்களோ பிறக்கவில்லை ஞானத்தினால்.என்னைப் பற்றிய சில முடிவுகள் எடுக்க உதவியது ஞானம்!

சிந்தனை பறக்கும்போது, நான் இப்போதெல்லாம் என் நேரத்தை எப்படிச் செலவழிக்கிறேன் என்று யோசித்தேன்!

திகைத்தேன்.

தினம் சராசரி ஆறு மணி நேரம் கணினி முன் அமர்ந்து பொழுது போக்குகிறேன்!

இதன் விளைவு—

முன்பெல்லாம் நிறைய புத்தகங்கள் படித்து வந்தேன்.அது நின்று விட்டது.

தினமும் ஒரு மனிநேரமாவது நான் கற்றுக்கொண்ட வேத பாடங்களை மீண்டும் திரும்பப் படித்து வந்தேன்;அது இல்லாமல் போயிற்று!

கணினி முன் அமர்ந்தாலும்,பிறர்க்கு உபயோகமாக ammas.com இல் சோதிட ஆலோசனைகள் அளித்து வந்தேன்!அது முழுவதும் நின்று போயிற்று!

நல்ல பாடல்களை தரவிறக்கம் செய்தும்,குறுந்தகடுகள் மூலமும் ரசித்துக் கொண்டிருந்தேன்;அதற்கும் நேரமில்லை!

வலைப் பதிவுப் பழக்கத்தின் அடிமையானதன் விளைவுகள் இவையெல்லாம்!

மூன்று ஆண்டுகளில் 86 இடுகைகள்;ஆனால் இந்த ஆண்டின் மூன்று மாதங்களில் 46 இடுகைகள்!

இந்தப் புள்ளி விவரம் முழுக் கதையையும் சொல்லி விடுகிறது.

ஆனால் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றவன்.
எந்நேரமும் வீட்டில் இருப்பவன்.பரவாயில்லை!

இன்று பதிவுலகில் இருக்கும் 99 விழுக்காடு பதிவர்கள் இளைஞர்கள்—மாணவர்கள்,பணியில் இருப்பவர்கள்,தொழில் செய்பவர்கள் என்று பலர்.

காலை எழுந்து,கடன்களை முடித்துக் குளித்துச் சாப்பிட்டு விட்டு அலுவலகம் சென்றால் திரும்பி வரும்போது இரவாகி விடும்.வந்து சாப்பிட்டு விட்டுக் கணினி முன் அமர்ந்து விட்டால் நீங்கள் எவ்வளவு நேரம் உங்கள் குடும்பத்துக்காகச் செலவிட முடியும்?

எல்லோரும் அப்படி என்று நான் சொல்லவில்லை.ஆனால் அநேகர் அது போல் இருக்கிறார்கள்!நான் எப்போது வலையைத் திறந்தாலும் பலர் அங்கேயே இருக்கிறார்கள்.

யோசியுங்கள்!

எந்த அளவு தரமான நேரம் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் செலவழிக்கிறீர்கள் என்று!

பதிவு எழுத வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.ஆனால் இதில் நேர மேலாண்மை அவசியம் என்று சொல்கிறேன்.

உங்கள் சிந்தனைகளுக்கு ஒரு வடிகால் தேவையே.அது ஒரு அளவுக்குள் இருக்கட்டும்!


எனவே கடுமையான சில முடிவுகளை எடுத்துள்ளேன். அவை:-

வலைப்பதிவில் மேய்வதற்கான அதிக பட்ச நேரம்,தினம் ஒரு மணி!

வாரத்திற்கு ஒரு இடுகை மட்டுமே-இங்கும்,அங்கும்---சில நேரம் குறைவாகவும்!

படிப்பு ,இசை கேட்டல் இவற்றுக்காகவும் தினம் நேரம் ஒதுக்குதல்.

இன்னும் பல சின்னசின்ன முடிவுகள்!

இவை இன்று முதல் அமுலுக்கு வருகின்றன!

சொன்னதைச் செய்வோம்!

செய்வதையே சொல்வோம்! :-) (^_^)

32 கருத்துகள்:

  1. பாட்டு ரசிகன் கூறியது...

    // பிறக்கட்டும்.. பிறக்கட்டும்...//

    :-) நன்றி!

    பதிலளிநீக்கு
  2. பாட்டு ரசிகன் கூறியது...

    // வடையா...//
    நாஞ்சில் மனோ மாதிரி சொன்னால்,வடை பஜ்ஜி ,போண்டா--எல்லாமே!

    பதிலளிநீக்கு
  3. நான் டிவி பார்க்கும் நேரத்தை ஒதுக்கி தான் பதிவுகள் பக்கம் வருகிறேன். என் வேலை மற்றும் கடமைகள் செய்ய வேண்டிய நேரத்தில் அல்ல. ஒரு கட்டுப்பாடு இருப்பதன் அவசியத்தை நானும் உணர்ந்து இருக்கிறேன்.

    Best wishes for you to keep up your promise. :-)

    பதிலளிநீக்கு
  4. நன்றாக சொன்னீர்கள். அதனால்தான் நான் ஒவ்வொரு திங்களிலும் 5 அல்லது 6 பதிவுகளுக்கு மேல் வெளியிடுவது இல்லை. தங்களின் மேலான கருத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. //காலை எழுந்து,கடன்களை முடித்துக் குளித்துச் சாப்பிட்டு விட்டு அலுவலகம் சென்றால் திரும்பி வரும்போது இரவாகி விடும்.வந்து சாப்பிட்டு விட்டுக் கணினி முன் அமர்ந்து விட்டால் நீங்கள் எவ்வளவு நேரம் உங்கள் குடும்பத்துக்காகச் செலவிட முடியும்?//

    நிறைய [[சில]] பேர் டியூட்டி நேரத்துலே பதிவு, பேஸ்புக் வேலையை முடித்து விடுகிறோம் தல....நான் முழுவதும் வேலை நேரத்தில்தான் பதிவு போடுகிறேன் அதற்க்கு என் முதலாளி சப்போர்ட் பண்ணுவார் ஆனால் வேலையும் சும்மா அசத்தலா செய்து முடிச்சிருவேன் இடையே...

    பதிலளிநீக்கு
  6. உங்களின் ரசனை மிகு எழுத்துக்கு நான் ரசிகன்...ம்ம்ம்ம் உங்கள் தனிப்பட்ட முடிவுக்கு உங்கள் எழுத்தை மிஸ் பண்ணுறேன்...ஓகே....வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  7. 100%உண்மை. யோசிக்க வேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  8. Chitra கூறியது...

    // நான் டிவி பார்க்கும் நேரத்தை ஒதுக்கி தான் பதிவுகள் பக்கம் வருகிறேன். என் வேலை மற்றும் கடமைகள் செய்ய வேண்டிய நேரத்தில் அல்ல. ஒரு கட்டுப்பாடு இருப்பதன் அவசியத்தை நானும் உணர்ந்து இருக்கிறேன்.

    Best wishes for you to keep up your promise. :-)//
    that is exactly what i mean chitra-time management.as long as your blogging does not eat into your quality time,good!
    i felt that of late i was neglecting some other important work on account of my concentration in blogs!
    i will continue blogging,of course, with less number of entries.
    but once i sort things out,i will be back with a bang with good wishes of friends like you!
    thank you!

    பதிலளிநீக்கு
  9. வே.நடனசபாபதி கூறியது...

    // நன்றாக சொன்னீர்கள். அதனால்தான் நான் ஒவ்வொரு திங்களிலும் 5 அல்லது 6 பதிவுகளுக்கு மேல் வெளியிடுவது இல்லை. தங்களின் மேலான கருத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டுகிறேன்.//
    உங்கள் புரிதலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // நிறைய [[சில]] பேர் டியூட்டி நேரத்துலே பதிவு, பேஸ்புக் வேலையை முடித்து விடுகிறோம் தல....நான் முழுவதும் வேலை நேரத்தில்தான் பதிவு போடுகிறேன் அதற்க்கு என் முதலாளி சப்போர்ட் பண்ணுவார் ஆனால் வேலையும் சும்மா அசத்தலா செய்து முடிச்சிருவேன் இடையே...//
    பாஸ் அமைவதெல்லாம்,பகவான் கொடுத்த வரம்!வேலை முடிந்தால் அவருக்கு மகிழ்ச்சிதானே!

    பதிலளிநீக்கு
  11. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // உங்களின் ரசனை மிகு எழுத்துக்கு நான் ரசிகன்...ம்ம்ம்ம் உங்கள் தனிப்பட்ட முடிவுக்கு உங்கள் எழுத்தை மிஸ் பண்ணுறேன்...ஓகே....வாழ்த்துகள்....//
    மனோ!நான் எழுதுவதையே நிறுத்தப் போவதில்லையே! எண்ணிக்கையைக் குறைக்கப் போகிறேன்;அவ்வளவே!
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  12. HVL கூறியது...

    //100%உண்மை. யோசிக்க வேண்டிய விஷயம்.//

    முதன்முறை வருகை தந்திருக்கிறீர்கள்.நன்றி!

    பதிலளிநீக்கு
  13. ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது போடுங்கள்..

    பதிலளிநீக்கு
  14. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது போடுங்கள்..//

    கருன்!நான் இப்போது எண்ணி யிருப்பது நேரத்தைச் சரியாகப் பகிர வேண்டும் என்பதே!எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கான நடை முறைக்குக் கொண்டு வந்து விட்டால்,அதிகம் பதிவிட முடியும்;என் விருப்பமும் அதுவே!
    அன்புக்கு மிக நன்றி!

    பதிலளிநீக்கு
  15. மிகச்சரி.
    இன்னொருவரும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார்.
    இது புலிவால்.

    பதிலளிநீக்கு
  16. FOOD கூறியது...

    // நல்ல சிந்தனை. நானும் பின் பற்ற முயல்கிறேன்.//
    எப்போது உங்களுக்கு வேறு முக்கியமானவற்றைப் புறக்கணிக்கிறோமோ என்ற சந்தேகம் வருகிறதோ,அப்போது கட்டாயம் செய்ய வேண்டியதுதான்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  17. அப்பாதுரை கூறியது...

    //மிகச்சரி.
    இன்னொருவரும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார்.//
    பலருக்கு இந்தச் சிந்தனை இருக்கக் கூடும்!

    //இது புலிவால்.//
    ரத்தினச் சுருக்கமாய்,விளக்கி விட்டீர்கள்!
    நன்றி அப்பாதுரை!

    பதிலளிநீக்கு
  18. நல்ல பிறப்பு இந்த ஞானம். எல்லோருக்கும் வருவதில்லை இந்த ஞானமும் :)

    பதிலளிநீக்கு
  19. வெங்கட் நாகராஜ் சொன்னது…

    //நல்ல பிறப்பு இந்த ஞானம். எல்லோருக்கும் வருவதில்லை இந்த ஞானமும் :)//

    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  20. சரிதான், ஆனால் ஒரு நாளைக்கு ஒருமணி மட்டுமே கம்ப்யுட்டரில் உட்காரப்போவதாக சொல்வது ..........முடியாது. மேலும் நேரம் எடுத்துக்கொள்ளும். என்னிடம் உள்ள ஒரு பழக்கம். எப்போதுமே எந்த வேலையையும் தள்ளிபோடவே மாட்டேன். சின்ன வேலை,பெரிய வேலை என்றெல்லாம் தரம் பிரித்தால் மோசம்தான். முதலில் அதனை முடித்து விடுவதால் இதுபோன்ற சிக்கல்கள் வர வாய்ப்பில்லை. வேலை இருந்தால் அதனை முடித்துவிட்டால் பிறகு நாம் என்ன செய்தாலும் மனசும் லேசாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  21. கக்கு - மாணிக்கம் கூறியது...

    // சரிதான், ஆனால் ஒரு நாளைக்கு ஒருமணி மட்டுமே கம்ப்யுட்டரில் உட்காரப்போவதாக சொல்வது ..........முடியாது.//
    முதல்நாளே கடினமாகத்தான் இருக்கிறது!

    என் பணிகளை முன்னுரிமை அடிப்படையில்,ஒழுங்கு படுத்தி,பதிவுக்கும் உரிய நேரம் ஒதுக்குவேன்!
    உங்கள் ஆதரவு இருக்கும்போது வானமே எல்லை!

    பதிலளிநீக்கு
  22. பதிவு எழுத வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.ஆனால் இதில் நேர மேலாண்மை அவசியம் என்று சொல்கிறேன்.//

    மிக அவசியமான கருத்து..

    நானும் எல்லாரிடமும் அலுவல் நேரம் பின்னூட்டம் இடவேண்டாம் என வலியுறுத்தி வருகிறேன்..

    ஓய்வு பெற்றவர்கள், வீட்டிலிருப்பவர்கள் என்றால் பரவாயில்லை.. இது ஒரு அடிக்ஷன் தான் . சந்தேகமேயில்லை..:)

    ஞானம் எமக்கும்..

    பதிலளிநீக்கு
  23. எண்ணங்கள் 13189034291840215795 கூறியது...

    // ஓய்வு பெற்றவர்கள், வீட்டிலிருப்பவர்கள் என்றால் பரவாயில்லை.. இது ஒரு அடிக்ஷன் தான் . சந்தேகமேயில்லை..:)

    ஞானம் எமக்கும்..// :-}
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  24. பெரியவங்க சொன்னா அந்த பெருமாளே சொன்ன மாதிரின்னு சொல்லுவாங்க...முயற்சிக்கிறேன் அய்யா..பகிர்தலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  25. டக்கால்டி கூறியது...

    //பெரியவங்க சொன்னா அந்த பெருமாளே சொன்ன மாதிரின்னு சொல்லுவாங்க...முயற்சிக்கிறேன் அய்யா..பகிர்தலுக்கு நன்றி//

    பெருமாளின் ஆசிகள் உங்களுக்கு!
    முயற்சி திருவினையாக்கும்!
    நன்றி டக்கால்டி!

    பதிலளிநீக்கு
  26. அப்பாடா . செ.பி. சார் நான் ஏன் அடிக்கடி வலைப்பக்கம் வருவதில்லைன்னு புரிஞ்சு என்னை மன்னிச்சுட்டாரு

    பதிலளிநீக்கு
  27. சிவகுமாரன் கூறியது...

    //அப்பாடா . செ.பி. சார் நான் ஏன் அடிக்கடி வலைப்பக்கம் வருவதில்லைன்னு புரிஞ்சு என்னை மன்னிச்சுட்டாரு//

    பாராட்ட வேண்டும் சிவகுமாரனை!

    பதிலளிநீக்கு
  28. போளூர் தயாநிதி கூறியது...

    //நன்றாக சொன்னீர்கள்.//

    நன்றி தயாநிதி!

    பதிலளிநீக்கு