தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஏப்ரல் 05, 2011

’திக்,திக்’ மணித்துளிகள்!!

இது நடந்தது ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்!

அப்போது நான் தலைநகர் தில்லியில் ஒரு முக்கியமான வங்கிக்கிளையில் மூத்த மேலாளராகப் பணி புரிந்து வந்தேன்.

அது ஒரு முதன்மை மேலாளர் (chief manager) கிளை.நான் நிர்வாகத்தைக் கவனிக்கும் மூத்த மேலாளராக இருந்தேன்.

ஒரு நாள்,காலை மணி 11 இருக்கும்.மு.மே.என் அறைக்கு வந்தார்.என்னிடம் சொன்னார்”திரு.x அவர்கள் (அரசின் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் நபர்) தனது பாதுகாப்புப் பெட்டகச் சேவைக்காக வருகிறார்.அவர் வந்ததும் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்க வேண்டும்.ஏற்பாடு செய்யுங்கள்”என்று.

நானும் அவர் சொன்ன ஏற்பாடுகளைச் செய்தேன்.

அரை மணி நேரத்தில் சைரன் அலற அவர் வந்தார்.மு.மே .மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றார்.அவரைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.நான் என் அறையில் சென்று அமர்ந்து விட்டேன்.அங்கிருந்தே கவனித்துக் கொண்டிருந்தேன்!

லாக்கர் அதிகாரி,மு.மே.யின் அறைக்குச் சென்று அந்த வி.ஐ.பி.யை அழைத்துச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து அந்த நபர் திரும்ப மு.மே.யின் அறைக்குள் நுழைந்தார்.சில விநாடிகளில் மு.மே.என்னை அழைத்தார்.நான் அவர் அறைக்குச் சென்றேன்.

மு.மே.பேயறைந்தது போலக் காணப்பட்டார்.சொன்னார்”சாரின் லாக்கரில் அவர் வைத்திருந்த எதுவுமே இல்லையாம்.போலீஸில் புகார் தர வேண்டும் என்று சொல்கிறார்.”குரலில் ஒரு நடுக்கம்.

நான் அந்த நபரைப் பார்த்துக் கேட்டேன்”உங்களுக்கு வேறு வங்கியில் லாக்கர் இருக்கிறதா? ”
அவர் பொறுமையின்றிப் பதிலளித்தார்.” ஆம்.ஆனால் அங்கு நான் இவற்றை வைக்கவில்லை .எனக்கு நிச்சயம் தெரியும்.நேரத்தைக் கடத்தாமல் போலீசை அழையுங்கள்!”

குரலில் அதிகாரம்! திமிர்!

நானே அருகில் இருந்த காவல் நிலையம் சென்றேன்.அந்த அதிகாரிக்கு வங்கிக் கணக்கு உண்டு.எனக்கு நன்கு தெரிந்தவர்.வாருங்கள் என என்னை வரவேற்றார்.

அவரிடம் சொன்னேன்.”திரு.X அவர்கள் வங்கிக்கு வந்திருக்கிறார்கள்.அவர் லாக்கரில் வைத்திருந்த பொருள்களைக் காணவில்லையாம். புகார் கொடுக்க விரும்புகிறார்.அழைக்கிறார், வாருங்கள்”

“கடவுளே இது என்ன பிரச்சினை “ என்று சொன்னபடியே அவர் என்னுடன் வந்தார்.

அந்த நபர் போலீஸ் அதிகாரியிடம் விவரத்தை சொல்லி விட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்!

அவர் போனபின்,போலீஸ் அதிகாரி,என்னைப் பரிதாபமாகப் பார்த்து விட்டு மீண்டும் வருவதாகச் சொல்லிச் சென்று விட்டார்.

மு.மே. இது பற்றித்தகவல் தருவதற்கும், ஆலோசனைக்கும்,மண்டல அலுவலகம் சென்று விட்டார்!

30 நிமிடங்கள் கழிந்தன:தொலைபேசி அழைத்தது:எடுத்தேன்!’

”மு.மே இருக்கிறாரா”குரல்

“இல்லை நான் மூத்த மேலாளர் பேசுகிறேன்”

“நான் திரு x அவர்களின் செயலர் பேசுகிறேன்.அவர் லாக்கர் பற்றித் தன் மனைவியிடம் கேட்க ,அவர்,பொருள்கள் மற்றொரு வங்கி லாக்கரில் இருப்ப தாகவும் ,இந்த லாக்கர் கணக்கை முடித்து விடலாம் என்றும் கூறி விட்டார்.எனவே புத்தகத்தை அனுப்பினால் கையொப்பமிட்டுச் சாவியையும் திருப்பி அனுப்பி விடுவார்”

“சரி”

அந்தப் பெரிய மனிதரிடமிருந்து வருத்தம் தெரிவித்து ஒரு வார்த்தை இல்லை!

குறைந்தபட்சம்,தானே செய்தியை வங்கிக்குச் சொல்ல வேண்டும் என்கிற நாகரிகம் இல்லை!

தொலைபேசியை வைத்தேன்!லாக்கர் அதிகாரியைக் கூப்பிட்டு செய்தியைச் சொன்னேன்!வங்கியில் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்!

மு.மே.அவர்களுக்கு தொலைபேசி மூலம் செய்தி சொன்னேன்.

காவல் நிலையம் சென்று செய்தியைச் சொன்னேன்.

காவல் அதிகாரியும் கவலை நீங்கியவராகச் சொன்னார்”இந்தச் செய்திக்காக நான் உங்களுக்குத் தேநீர் தர வேண்டும்.அமருங்கள்.அருந்தி விட்டுப் போகலாம்”

எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும்,அந்த சில மணித்துளிகளை மறக்க முடியுமா?
பெரிய பதவியில் இருந்தும் அடிப்படை மனித நாகரீகம் கூட இல்லாத அவரை மறக்க முடியுமா?

இப்படியும் மனிதர்கள்!

.

29 கருத்துகள்:

  1. பெரிய பதவியில் இருந்தும் அடிப்படை மனித நாகரீகம் கூட இல்லாத அவரை மறக்க முடியுமா?


    ..... மற்றவர்கள் நிலையை குறித்த கவலை இல்லாத குணம். :-(

    பதிலளிநீக்கு
  2. இப்படியும் மனிதர்கள்! -- இருக்கிறார்களே என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நல்லாருக்கு

    பதிலளிநீக்கு
  4. நம்ம லைஃப் ல இருந்து மேட்டர் எடுத்து போடும்போது அதுக்கு தனி சுவை..பிறர் அனுபவங்களை படிக்கும் போது வரும் சுவை

    பதிலளிநீக்கு
  5. இது போன்ற நாய்களுடன் நான் பணிபுரிந்திருக்கிறேன், பொதுத்துறையில் இருந்த போது. இன்னொரு கேவலமான குணம், மற்றவர் நேரத்தை எடுத்துக்கொள்வதர்க்கு கொஞ்சமும் அஞ்சாதவர்கள். When we report to them, they will call for some work and நாள் முழுக்க காக்க வைத்துவிட்டு, கடைசியில் ஒன்றுமில்லை. போய்வாருங்கள் என்பார்கள். இவர்களுக்கெல்லாம் கடவுள் நல்ல கூலி கொடுப்பான்!

    பதிலளிநீக்கு
  6. Chitra சொன்னது…

    // பெரிய பதவியில் இருந்தும் அடிப்படை மனித நாகரீகம் கூட இல்லாத அவரை மறக்க முடியுமா?

    ..... மற்றவர்கள் நிலையை குறித்த கவலை இல்லாத குணம். :-(//

    அதுதான் typical indian bureaucracy!
    எப்படி மறப்பது இவர்கள் செயலை!
    நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  7. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //இப்படியும் மனிதர்கள்! -- இருக்கிறார்களே என்ன செய்ய?//
    என்ன செய்ய?அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்!

    பதிலளிநீக்கு
  8. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //கலக்கல் பதிவு.//
    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  9. அய்யா உங்களுக்கு நேர்ந்தது மிகவும் வருத்ததிற்குரியது. ஆனால் அடிப்படை நாகரிகம் பற்றி பேசும் நீங்கள் செயலலிதா கும்பலை ஆதரிப்பது எப்படி என்று புரியவில்லை.

    "கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு"

    திரு மு.வரதராசனார் உரை:

    செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.

    நன்றி!

    பதிலளிநீக்கு
  10. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    // ரொம்ப நல்லாருக்கு//
    நன்றி சதீஷ் குமார்!

    பதிலளிநீக்கு
  11. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    // நம்ம லைஃப் ல இருந்து மேட்டர் எடுத்து போடும்போது அதுக்கு தனி சுவை..பிறர் அனுபவங்களை படிக்கும் போது வரும் சுவை//

    இந்தமாதிரி அனுபவங்களை நினைவு கூரும்போது,கொஞ்ச நேரம் கடந்த காலத்துக்கே போய் விடுகிறோம்!

    பதிலளிநீக்கு
  12. vrsh-a சொன்னது…

    //இது போன்ற நாய்களுடன் நான் பணிபுரிந்திருக்கிறேன், பொதுத்துறையில் இருந்த போது. இன்னொரு கேவலமான குணம், மற்றவர் நேரத்தை எடுத்துக்கொள்வதர்க்கு கொஞ்சமும் அஞ்சாதவர்கள். When we report to them, they will call for some work and நாள் முழுக்க காக்க வைத்துவிட்டு, கடைசியில் ஒன்றுமில்லை. போய்வாருங்கள் என்பார்கள். இவர்களுக்கெல்லாம் கடவுள் நல்ல கூலி கொடுப்பான்!//
    உங்களுக்கு நேரடி அனுபவம் இருக்கிறது!இது போன்றவர்களையெல்லாம் மாற்ற முடியாது!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  13. அருள் கூறியது...

    //அய்யா உங்களுக்கு நேர்ந்தது மிகவும் வருத்ததிற்குரியது. ஆனால் அடிப்படை நாகரிகம் பற்றி பேசும் நீங்கள் செயலலிதா கும்பலை ஆதரிப்பது எப்படி என்று புரியவில்லை.//

    நான் எழுதியிருப்பது நான் சம்பந்தப்பட்ட ஒரு நேரடி அனுபவம்;ஜெ பற்றி நீங்கள் சொல்வது பொது வாழ்க்கையில் அவர் நடத்தை பற்றி.இரண்டுக்கும் தொடர்பில்லை.எப்படியிருப்பினும்,இன்றைய கால கட்டத்தில்,better of the evils என்ற அடிப்படையில் பலர் ஜெயை ஆதரிக்கிறார்கள் என்பதே உண்மை!
    வருகைக்கு நன்றி அருள்!

    பதிலளிநீக்கு
  14. //காவல் அதிகாரியும் கவலை நீங்கியவராகச் சொன்னார்”இந்தச் செய்திக்காக நான் உங்களுக்குத் தேநீர் தர வேண்டும்.அமருங்கள்.அருந்தி விட்டுப் போகலாம்//

    யப்பா போலீசு தேநீர் தர்றான்களா பார்த்து ஆபீசர்....

    பதிலளிநீக்கு
  15. //நான் அந்த நபரைப் பார்த்துக் கேட்டேன்”உங்களுக்கு வேறு வங்கியில் லாக்கர் இருக்கிறதா? ”//

    இதுதான் அனுபவம் என்பது, நானும் இதேதான் நினச்சேன்....

    பதிலளிநீக்கு
  16. //எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும்,அந்த சில மணித்துளிகளை மறக்க முடியுமா?
    பெரிய பதவியில் இருந்தும் அடிப்படை மனித நாகரீகம் கூட இல்லாத அவரை மறக்க முடியுமா?

    இப்படியும் மனிதர்கள்!//

    என்னாது நாகரீகமா....??? அது கிலோ என்ன விலை..?? அதுவும் யாருகிட்டே எதிர் பார்க்குறீங்க ம்ஹும்.....!!!!

    பதிலளிநீக்கு
  17. MANO நாஞ்சில் மனோ கூறியது...


    //யப்பா போலீசு தேநீர் தர்றான்களா பார்த்து ஆபீசர்....//
    அவர் மிக நல்லவர்! ஒரு பெரிய பிரச்சினையிலிருந்து வெளிவந்த மகிழ்ச்சி அவருக்கு!

    பதிலளிநீக்கு
  18. //நான் அந்த நபரைப் பார்த்துக் கேட்டேன்”உங்களுக்கு வேறு வங்கியில் லாக்கர் இருக்கிறதா? ”//

    //இதுதான் அனுபவம் என்பது, நானும் இதேதான் நினச்சேன்.... //
    அனுபவம் !

    பதிலளிநீக்கு
  19. MANO நாஞ்சில் மனோ கூறியது...


    என்னாது நாகரீகமா....??? அது கிலோ என்ன விலை..?? அதுவும் யாருகிட்டே எதிர் பார்க்குறீங்க ம்ஹும்.....!!!!
    அதுவும் சரிதான்!
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  20. இப்படியும் மனிதர்கள்! -- இருக்கிறார்களே என்ன செய்ய?பிறர் அனுபவங்களை படிக்கும் போது வரும் சுவை

    பதிலளிநீக்கு
  21. போளூர் தயாநிதி சொன்னது…

    //இப்படியும் மனிதர்கள்! -- இருக்கிறார்களே என்ன செய்ய?பிறர் அனுபவங்களை படிக்கும் போது வரும் சுவை//
    வருகிக்கும் கருத்துக்கும் நன்றி தயாநிதி!

    பதிலளிநீக்கு
  22. நானும் இப்படிப்பட்ட வாடிக்கையாளர்களை சந்தித்திருக்கிறேன். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  23. நான் இப்போது சென்னையில் இருப்பதால்....மூன்று நான்கு தினங்களுக்கு வாக்குகள் மட்டுமே...பின்னூட்டமிட முடியாது.....மன்னிக்கவும் நண்பர்களே....

    --

    பதிலளிநீக்கு
  24. வே.நடனசபாபதி கூறியது...

    //நானும் இப்படிப்பட்ட வாடிக்கையாளர்களை சந்தித்திருக்கிறேன். நல்ல பதிவு.//
    நன்றி சபாபதி!

    பதிலளிநீக்கு
  25. ரஹீம் கஸாலி கூறியது...

    //நான் இப்போது சென்னையில் இருப்பதால்....மூன்று நான்கு தினங்களுக்கு வாக்குகள் மட்டுமே...பின்னூட்டமிட முடியாது.....மன்னிக்கவும் நண்பர்களே.//

    வாக்குரிமை உங்கள் ஜனநாயகக் கடமை!
    நன்றி கஸாலி!

    பதிலளிநீக்கு
  26. FOOD கூறியது...

    // இந்த அனுபவம் இன்றளவும் மறக்க வில்லை உங்களுக்கு. விந்தை மனிதர்களால் நொந்த கதை.//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  27. நிறைய அதிகாரிகள் இது போலத் தான் இருக்கிறார்கள். தவறு தன்மேல் இருந்தாலும் அடுத்தவரைக் குறை கூறிவிட்டு அதற்காக வருந்தவும் மாட்டார்கள். தில்லி இன்னும் மாறவில்லை என்பதும் வருத்தம் விளைவிக்கிறது.

    பதிலளிநீக்கு
  28. வெங்கட் நாகராஜ் சொன்னது…

    // தில்லி இன்னும் மாறவில்லை என்பதும் வருத்தம் விளைவிக்கிறது.//
    மாறியும் மாறாத தில்லி?!
    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு