”ஏண்டா பேமானி!நீ என்ன பெரிய பருப்பா(பிஸ்தாவா,----------வா)!49(ஓ) விலே ஓட்டுப் போடறே!-----------,வெளில வா,வகுந்துடறேன்”
இப்படி,இது போன்ற,தொலைபேசி அழைப்புகள் எனக்கும் வர ஆரம்பித்திருக்கும்; நான் 49(ஓ) வின் கீழ் ஓட்டுப் போட்டிருந்தால்!
ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்றால்,காரணம் இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் படித்த ஒரு செய்தியே!சரவணகுமார் என்ற ஒருவர் சென்ற தேர்தலில்,அவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்,,49(ஓ) வின் கீழ் வாக்களித்த பின்,அன்றே, பல அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், இந்த முறை வாக்களிக்கப் போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.
எனவே 49(ஓ) வை மறந்து விட்டேன்!
வாக்களிக்காமல் இருப்பதில் உடன்பாடில்லை.
காலை 9 மணிக்கெல்லாம் வாக்குச் சாவடி சென்று,45 மணித்துளிகள் வரிசையில் நின்று,வாக்களித்து விட்டு வந்தேன்!
பாருங்கள் அத்தாட்சி!(சத்தியமாக என் விரல்தான்).
நான் என் ஜனநாயகக் கடமையைச் செய்துவிட்டேன்! நீங்கள்?
விரலில் அவர்கள் மை வைத்தார்கள்.
நெற்றியில் நானே பட்டையாய் நாமம் போட்டுக் கொண்டேன்.(இதுதானே இன்றைய நிலை)
எல்லா அரசியல் வாதிகளும் சேர்ந்து மக்களுக்குப் போடும் நாமம் வாழ்க!
49 ஓ போட பிளாக்ல வழி இல்லையே..
பதிலளிநீக்குஎன்னவோ தெரியவில்லை சிரிப்பாய்தான் வருகிறது. நானும் போட்டாச்சு. 49 - O போடுவதில் சிறப்பு ஒன்றுமில்லை. அது ஒரு வேஸ்ட்.அதனை ரகசியமாக செய்ய இயலாததால் இதுபோன்ற மிரட்டல்கள். இதை வேண்டுமென்றேதான் பொதுவாக வைத்துள்ளனர்.
பதிலளிநீக்குகாலை 9 மணிக்கெல்லாம் வாக்குச் சாவடி சென்று,45 மணித்துளிகள் வரிசையில் நின்று,வாக்களித்து விட்டு வந்தேன்!
பதிலளிநீக்குபாருங்கள் அத்தாட்சி!(சத்தியமாக என் விரல்தான்).
...Super!
சி.பி.செந்தில்குமார் கூறியது...
பதிலளிநீக்கு//49 ஓ போட பிளாக்ல வழி இல்லையே..//
என்னங்க இது அநியாயம்!பதிவில் 49(ஓ) வை உபயோகப் படுத்த ணும்னு சொல்கிறார்!நிறையப் பேர் சாபத்துக்கு ஆளாகப் போறீங்க!
பின்னூட்டத்தில் விருப்பமில்லை என்று எழுதினால் முடிந்தது!
(blogதானே,black இல்லயே!)
நன்றி,சி.பி.எஸ்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
பதிலளிநீக்கு// என்னவோ தெரியவில்லை சிரிப்பாய்தான் வருகிறது. நானும் போட்டாச்சு. 49 - O போடுவதில் சிறப்பு ஒன்றுமில்லை. அது ஒரு வேஸ்ட்.அதனை ரகசியமாக செய்ய இயலாததால் இதுபோன்ற மிரட்டல்கள். இதை வேண்டுமென்றேதான் பொதுவாக வைத்துள்ளனர்.//
தேர்தல் என்பதே வெறும் நகைச்சுவையாய்ப் போய் விட்டதோ!
நன்றி கக்கு!
Chitra சொன்னது…
பதிலளிநீக்கு//காலை 9 மணிக்கெல்லாம் வாக்குச் சாவடி சென்று,45 மணித்துளிகள் வரிசையில் நின்று,வாக்களித்து விட்டு வந்தேன்!
பாருங்கள் அத்தாட்சி!(சத்தியமாக என் விரல்தான்).
...Super!//
நன்றி சித்ரா!
உங்க வேலையை செஞ்சுட்டிங்க சார், ஆனா சரியாய் செஞ்சீங்களான்னு உங்களுக்கு மட்டும் தான் தெரியும், ஆனா நீங்களே ஒத்துக்கிறீங்க சரியாய் செய்யலேன்னு, அப்பா தப்பு உங்களுடையது தானே !!?? (நீங்க உங்களுக்கே நாமம் போட்டதை சொன்னேன்)
பதிலளிநீக்குகையில இருக்கிற மை, பட்டை நாமம் போல அழகா போஸ் குடுத்துருக்கு....
பதிலளிநீக்கும்ம்ம் ஜனநாயக கடமைய செஞ்சாச்சி...
பதிலளிநீக்குஇனி எவன்[ள்] வந்து உலையை அடிச்சி மடியில கொட்டிக்க போறாங்களோ....
பதிலளிநீக்குஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…
பதிலளிநீக்குஉங்க வேலையை செஞ்சுட்டிங்க சார், ஆனா சரியாய் செஞ்சீங்களான்னு உங்களுக்கு மட்டும் தான் தெரியும், ஆனா நீங்களே ஒத்துக்கிறீங்க சரியாய் செய்யலேன்னு, அப்பா தப்பு உங்களுடையது தானே !!?? (நீங்க உங்களுக்கே நாமம் போட்டதை சொன்னேன்).
யாருக்குப் போட்டாலும் நமக்கு நாமம்தான்!
நன்றி ரமேஷ் பாபு!
49 ஓ -வில் உள்ள பிரச்சனையே இது ரகசியமாய் இல்லாதது தான். இந்த வசதியை கொண்டு வந்தவர்கள் ஓட்டு போடும் இயந்திரத்திலேயே ஒரு பட்டனில் இந்த வசதியை வைத்திருந்தால் இது போன்ற பிரச்னை வராது. ஆனால் இதை செய்ய மாட்டார்கள். சென்ற தில்லி தேர்தலிலேயே இதைப் பற்றி மின்னஞ்சல் மூலம் தேர்தல் அலுவலகத்தில் சொல்லி இருந்தோம் நானும் எனது நண்பர்களும். ஒரு முடிவும் எடுக்கவில்லை.
பதிலளிநீக்குMANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//கையில இருக்கிற மை, பட்டை நாமம் போல அழகா போஸ் குடுத்துருக்கு....//
அட! ஆமாம்!என்ன கலைக் கண் உங்களுக்கு!
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு// ம்ம்ம் ஜனநாயக கடமைய செஞ்சாச்சி...//
கடமையைக் கண்ணியத்தோடும், கட்டுப்பாடோடும் செய்து விட்டேன்!
நன்றி மனோ!
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//இனி எவன்[ள்] வந்து உலையை அடிச்சி மடியில கொட்டிக்க போறாங்களோ....//
அதுக்குத்தான் நமக்கு நாமமே!
வெங்கட் நாகராஜ் சொன்னது…
பதிலளிநீக்கு//49 ஓ -வில் உள்ள பிரச்சனையே இது ரகசியமாய் இல்லாதது தான். இந்த வசதியை கொண்டு வந்தவர்கள் ஓட்டு போடும் இயந்திரத்திலேயே ஒரு பட்டனில் இந்த வசதியை வைத்திருந்தால் இது போன்ற பிரச்னை வராது. ஆனால் இதை செய்ய மாட்டார்கள். சென்ற தில்லி தேர்தலிலேயே இதைப் பற்றி மின்னஞ்சல் மூலம் தேர்தல் அலுவலகத்தில் சொல்லி இருந்தோம் நானும் எனது நண்பர்களும். ஒரு முடிவும் எடுக்கவில்லை.//
செய்ய மாட்டார்கள்!ஓட்டுப் போடாமல் இருந்தாலாவது,கள்ள ஓட்டுப் போட்டு விடலாம்!49(ஓ) வில் ஒரு பிரயோசனமுமில்லையே!
நன்றி வெங்கட்!
கலக்கல் அய்யா
பதிலளிநீக்கு49 0 வா..அடங்கப்பா
பதிலளிநீக்குவிரலில் வைப்பர் மையால் பொட்டு!- ஆங்கு
பதிலளிநீக்குவைத்திடல் நாமே வைத்துக்கொள்ளும் வேட்டு!!
நம்ம சைடும் வந்து படிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க>>> அன்புடன் காத்திருக்கிறோம்!!
http://sagamanithan.blogspot.com/
ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
பதிலளிநீக்கு//கலக்கல் அய்யா//
நன்றி சதீஷ்குமார்!
ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
பதிலளிநீக்கு//49 0 வா..அடங்கப்பா//
போட்டு விட்டுத் தப்ப முடியுமா!
சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் கூறியது...
பதிலளிநீக்கு// விரலில் வைப்பர் மையால் பொட்டு!- ஆங்கு
வைத்திடல் நாமே வைத்துக்கொள்ளும் வேட்டு!!
நம்ம சைடும் வந்து படிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க>>> அன்புடன் காத்திருக்கிறோம்!!
http://sagamanithan.blogspot.com///
அருமையாச் சொல்லிட்டீங்க!
இப்பவே செய்கிறேன்!
நாம் வைத்துள்ள நம்பிக்கை நமது அரசியல் சூழலை நிச்சயம் மாற்றும்.
பதிலளிநீக்குஜோதிஜி சொன்னது…
பதிலளிநீக்கு//நாம் வைத்துள்ள நம்பிக்கை நமது அரசியல் சூழலை நிச்சயம் மாற்றும்.//
கட்டுண்டோம்,பொறுத்திருப்போம்,காலம்மாறும்!
நன்றி ஜோதிஜி!
நானும் வந்துட்டேன் .. எலக்ஷன் டூட்டியில் இருப்பதால் பின்னூட்டம் இடமுடியவில்லை..
பதிலளிநீக்கு!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு// நானும் வந்துட்டேன் .. எலக்ஷன் டூட்டியில் இருப்பதால் பின்னூட்டம் இடமுடியவில்லை..//
அதிக வேலைப்பளு இருந்தும், வருகை தந்தமைக்கு நன்றி,கருன்!
//விரலில் அவர்கள் மை வைத்தார்கள்.
பதிலளிநீக்குநெற்றியில் நானே பட்டையாய் நாமம் போட்டுக் கொண்டேன்.(இதுதானே இன்றைய நிலை)//
நம் இயலாமையை ,வேதனையை மிகவும் ஹாஸ்யமாக கூறி உள்ளீர்கள் .. இம்முறை சில சிறிய மாறுதல்கள் கண்கூடாக தெரிந்தது ..நாமம் போடும் அரசியல்வாதிகளின் நெற்றியில் மக்கள் நாமம் போடும் காலம் சிறுது காலத்தில் மலரும் என்பது உறுதி ... காரணம் ஒட்டு போடும் தகுதியை லட்சோப லட்சம் மக்கள் புதிதாக பெற்றிருப்பதும் பெறப்போவதும் தான் .
இவர்களை எளிதில் ஏமாற்ற இயலாது ! வாசுதேவன்
நானும் எனது குடும்பத்தாரும் காலையில் 7.30 மணிக்கே சென்று வாக்களித்து எங்கள் ‘ஜனநாயக கடமையை’ஆற்றிவிட்டோம். அந்த வாக்கு சாவடியில் எங்கள் குடும்பத்தின் முதல் வாக்கே எங்களுடையதுதான்.
பதிலளிநீக்குஇன்றைய செய்தி. நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி என்ற ஊரில் அநேகம் பேர் 49(ஓ) வின் கீழ் வாக்களித்திருக்கிறார்களாம்!
Vasu கூறியது...
பதிலளிநீக்கு//விரலில் அவர்கள் மை வைத்தார்கள்.
நெற்றியில் நானே பட்டையாய் நாமம் போட்டுக் கொண்டேன்.(இதுதானே இன்றைய நிலை)//
// நம் இயலாமையை ,வேதனையை மிகவும் ஹாஸ்யமாக கூறி உள்ளீர்கள் .. இம்முறை சில சிறிய மாறுதல்கள் கண்கூடாக தெரிந்தது ..நாமம் போடும் அரசியல்வாதிகளின் நெற்றியில் மக்கள் நாமம் போடும் காலம் சிறுது காலத்தில் மலரும் என்பது உறுதி ... காரணம் ஒட்டு போடும் தகுதியை லட்சோப லட்சம் மக்கள் புதிதாக பெற்றிருப்பதும் பெறப்போவதும் தான் .
இவர்களை எளிதில் ஏமாற்ற இயலாது ! //
நல்ல காலம் பிறக்குது,நல்ல காலம் பிறக்குது!!
நன்றி வாசு!
@அருள்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி!
வே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு// நானும் எனது குடும்பத்தாரும் காலையில் 7.30 மணிக்கே சென்று வாக்களித்து எங்கள் ‘ஜனநாயக கடமையை’ஆற்றிவிட்டோம். அந்த வாக்கு சாவடியில் எங்கள் குடும்பத்தின் முதல் வாக்கே எங்களுடையதுதான்.
இன்றைய செய்தி. நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி என்ற ஊரில் அநேகம் பேர் 49(ஓ) வின் கீழ் வாக்களித்திருக்கிறார்களாம்!//
மசினகுடிக்காரர்கள் பாராட்டப் பட வேண்டியவர்களே!நீங்களும்தான், வாக்களிப்பதில் உங்கள் வேகத்துக்கு!
நன்றி சபாபதி!
49 ஓ ஓட்டுப்போடுகிறேன் என்று சொன்னவுடன் , ஏஜெண்டுகள் ஒரு மாதிரியாக பார்த்திருப்பார்களே...
பதிலளிநீக்கு49ஓ-வில் போட்டுவிட்டு பூத் ஏஜெண்ட்களைத் தாண்டி வருவதே கஷ்டம் தான்!
பதிலளிநீக்குபாரத்... பாரதி... கூறியது...
பதிலளிநீக்கு//49 ஓ ஓட்டுப்போடுகிறேன் என்று சொன்னவுடன் , ஏஜெண்டுகள் ஒரு மாதிரியாக பார்த்திருப்பார்களே...//
செங்கோவி கூறியது...
//49ஓ-வில் போட்டுவிட்டு பூத் ஏஜெண்ட்களைத் தாண்டி வருவதே கஷ்டம் தான்!//
இதற்கு ஒரே வழி,49(ஓ) தேர்வையும்,மின்னணு எந்திரத்தில் சேர்ப்பதுதான்!
வருகைக்கு நன்றி
பாரதி
செங்கோவி
49 ஓவுக்கு தனி ப்ட்டன் வைக்கக் கோரி பீயூசிஎல் மக்கள் சிவில் உரிமை சங்கம் ஏழு வருடம் முன்பே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. தனக்கு அது சம்மதமே என்று தேர்தல் ஆனையம் உடனே தெரிவித்தது. ஆனால் பிஜேபி காங்கிரஸ் அரசுகள் பதில் தராமல் வழக்கை இழுத்தடித்தன. சில மாதம் முன்புதான் காங்கிரஸ் அரசு தான் 49 ஓவை ஆதரிக்க வில்லையென்று கோர்ட்டில் தெரிவித்தது. நீதிபதி இந்த வழக்கை அரசியல் சட்ட நீதிபதிகள் பெஞ்ச்தான் முடிவு செய்யவேண்டுமென்று கூறி அதற்கு அனுப்பியுள்ளார். பெஞ்ச் இன்னும் வழக்கை எடுத்துக் கொள்ளவில்லை. இதுதான் தற்போதைய நிலை. ஞாநி
பதிலளிநீக்குFOOD கூறியது...
பதிலளிநீக்கு//தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சார். நானும் ஜன நாயக கடமை முடித்து வந்துடேன்.//
இக் கர ஆண்டில் “பூமியானது பூர்ணமாக மழை,பயிர்,தானியம் இவைகளோடு செழித்து இருக்கும்”
அதாவது ‘உணவு உலகம்’ சிறப்பாக இருக்கும்!வாழ்த்துகள்!
நன்றி!
@ gnani ,
பதிலளிநீக்குவிரிவான தகவலுக்கு நன்றி,ஞாநி அவர்களே!
காத்திருப்போம்,எப்போதும் போல்!
வருகைக்கு நன்றி!
நீங்கள் கூறுவது போல நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் நாமம் என்பது தான் நிதரிசனம்! இந்தத் தேர்தலில், தமிழ்நாடு முழுவதற்கும் ஒரு பத்தாயிரம் 49-0 விழுந்திருக்குமா? நாலரைக் கோடி ஓட்டில் இது எத்தனை விழுக்காடு-என்ன பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்கிறீர்கள்? அதைவிட வேடிக்கை, பெரும்பாலான தேர்தல் அதிகாரிகளுக்கே 49-0 பற்றி ஏதும் தெரியாது என்பதுதான்.(இந்து தினசரியில் தேர்தலுக்கு மறுநாள் வந்த ஆசிரியருக்குக் கடிதங்களைப் பாருங்கள்). இதற்கெல்லாம் ஓரே தீர்வு அந்த வசதியை அதே கருவியில் இணைப்பது மட்டுமே.
பதிலளிநீக்குR.S.KRISHNAMURTHY கூறியது...
பதிலளிநீக்கு// இதற்கெல்லாம் ஓரே தீர்வு அந்த வசதியை அதே கருவியில் இணைப்பது மட்டுமே.//
உண்மை!ஞானி அவர்களின் பின்னூட்டம் பார்த்தீர்களா?
நன்றி!
49 ஓ வை போட்டவர்களுக்கும் நக்சலைட்டுகளுக்கும் தொடர்பு இருக்குமா என்று கூட தான் கணக்கு எடுத்தார்கள் காவல்துறையினர் ...
பதிலளிநீக்குsuryajeeva கூறியது...
பதிலளிநீக்கு// 49 ஓ வை போட்டவர்களுக்கும் நக்சலைட்டுகளுக்கும் தொடர்பு இருக்குமா என்று கூட தான் கணக்கு எடுத்தார்கள் காவல்துறையினர் ...//
எதுவும் நடக்கும் இங்கே!
நன்றி சூர்யஜீவா!